ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். - மாற்கு-11:24. 17th February to 21st February 2014 எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி உமது சித்தத்தின்படி உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் ஐயா. தயவாய் செவி சாய்த்து விண்ணப்பங்களை கேட்பீராக. பதிலை தருவீராக. . சகோதரி ஆலிஸ் டயானா அவர்களின் மாமா மாரடைப்பினால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதால், தேவன் தாமே அவரை சுகமாக்கும்படியாக ஜெபிக்கிறோம். பரிபூரண விடுதலை பெற்று உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்வீராக. . ஓமனில் இருக்கும் சகோதரி வித்யா பத்மினி அவர்கள் ஒரு லெக்சரராக, தன்னுடைய மூன்று பிள்ளைகளோடு அந்த தேசத்தில் இருப்பதாலும், கணவர் இந்தியாவில் இருப்பதாலும் தேவன் தாமே அவருக்கும் ஓமனில் நல்ல வேலை கிடைத்து, குடும்பமாக ஒன்று சேர்ந்து வாழ கிருபை செய்வீராக. சகோதரி கர்த்தருக்கு சாட்சியாக அந்த தேசத்தில் வாழவும், அநேகரை கர்த்தருக்குள் கொண்டு வரும் கருவியாக அவர்களை நீர் எடுத்து பயன்படுத்தவும் ஜெபிக்கிறோம். . சகோதரன் ஆல்பர்ட் அவர்களின் வேலை மிகவும் கடினமாக இருக்கிறபடியால், தேவன் அவருக்கு இரங்கும்படியாக ஜெபிக்கிறோம். தன் வேலையினிமித்தமாய் மிகவும் வருத்தத்தில் இருக்கும் அவருக்கு தேவன் தாமே இரங்கி, அவருடைய வேலையை இலகுவாக்கி தரும்படியாக ஜெபிக்கிறோம். . சகோதரன் அற்புதராஜ் அவர்களின் நண்பர் சங்கர மூர்த்தி அவர்களுக்கு சிறுநீரக குழாயில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு, டாக்டர்களாலும் சரிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், தேவன்தாமே அவரை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். நீர் அற்புதங்களை செய்கிற தேவன் என்பதை அவர் காணும்படி, ஒரு அற்புதத்தை அந்த சகோதரனின் வாழ்வில் செய்வீராக. நீரே தேவன் என்பதை அறிந்து அவர் உமக்கு சாட்சியாக மாறும்படி அவர் வாழ்வில் பெரிய அற்புதத்தை செய்வீராக. .
போதகர் மோகன்தாஸ் அவர்களின் இருபத்தாறு வயதுடைய ஒரே புதல்வன், எம்பிஏ முடித்தவர், மூன்று சகோதரிகளுக்கு பிறகு பிறந்தவர், போதகரும், அவருடைய மனைவியும் நீலகிரியில் ஊழியக்காரியமாக சென்றிருந்தபோது, கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி சென்னையிலிருந்து வரும் வழியில் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி, இடத்திலேயே நித்திரை அடைந்து விட்டபடியால், போதகருக்கும், அவருடைய மனைவிக்கும் தேவன்தாமே உலகம் கொடுக்க முடியாத ஆறுதலினால் நிரப்பும்படியாக ஜெபிக்கிறோம். நாங்கள் என்ன சொல்லி, ஆறுதல் அளிக்க முடியும் தகப்பனே, தேவனே சகலவித ஆறுதல்களின் தேவன், நீரே ஆறுதலை தர முடியும். உம்மையே பற்றிக் கொள்ளவும், சமாதானத்தினால் நிரப்பப்படவும் ஜெபிக்கிறோம். தொடர்ந்து உம்முடைய ஊழியத்தில் நிலைத்திருந்து, அநேகருக்கு ஆறுதலைக் கொடுக்கும் கருவியாக அவர்களை பயன்படுத்துவீராக. வருகிற மே மாதம் நடக்க இருக்கிற சம்மர் கேம்பிலும் தேவரீருடைய கரம் கூட இருந்து வழிநடத்தும்படியாக ஜெபிக்கிறோம். தேவன் நம்முடைய ஜெபங்களை கேட்டு, சகோதரன் இம்மானுவேல் ஏஞ்சலோ அவர்களின் வேலையிடத்தில் அவருடைய படிப்பிற்கேற்ற வேலையில்லாததால் மிகவும் சிரமப்படுவதாகவும், அதற்காக ஜெபிக்கவும் ஜனவரி 30-ம் தேதி கேட்டு எழுதியிருந்தார். நாமும் அதற்காக ஜெபித்தோம். நேற்று அவர் மகிழ்ச்சியோடு, தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, அவருடைய கஷ்டமான வேலையிலிருந்து அவர் படித்த வேலைகிடைக்க கிருபை செய்தார் என்று எழுதியிருக்கிறார். தொடர்ந்து அதைவிட சற்று இலகுவான வேலை தனக்கு கிடைக்கும் என்று விசுவாசிப்பதாக எழுதியிருப்பதால், தேவன் நம் ஜெபங்களை கேட்டு பதில் கொடுத்ததற்காக அவரை துதிப்போமா? . எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி உமது சித்தத்தின்படி உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் ஐயா. தயவாய் செவி சாய்த்து விண்ணப்பங்களை கேட்பீராக. பதிலை தருவீராக. . சகோதரன் சேவியர் அவர்களுக்கு அவருடைய வேலையிடத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் மாறி, அவருடைய வேலையிடத்தில் அவருடைய நிலையில் அவருடைய வேலை அவருக்கு திரும்ப கிடைக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம். சுமுகமாக தன் வேலையிடத்தில் வேலை செய்யும்படியாகவும், மேலதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம். . சகோதரி பிளோரா மார்கரேட் அவர்களின் கடனெல்லாம் சீக்கிரமாய் அடைபடவும், அவர்களுக்கும், அவர்களுடைய கணவருக்கும் அவர்களுடைய படிப்பிற்கேற்ற நல்ல வேலை கிடைக்கும்படியாகவும், அவர்கள் பிரச்சனையில்லாமல் குடும்பத்தை நடத்தவும் தேவன் கிருபை செய்வீராக. செழிப்பை கட்டளையிடுவீராக. . பாவத்தில் ஜீவிக்கிற ஆரானும், சாரோனும் இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம். அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தேவரீருடைய கரம் அவர்களை தொடர்ந்து பிடிப்பதாக. இரட்சிக்கும் கரம் அவர்களை இரட்சிப்பதாக. பாவ வழியில் இருந்து திருந்தி, உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும். . சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பதால் தேவன் தாமே இரங்கி அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே, தேவன் அவர்கள் வாழ்வில் நலமானதை செய்வீராக. அதன் மூலம் முழுக்குடும்பமும் கர்த்தரே தேவன் என்று அறியும்படியாக தேவன் பெரிய காரியத்தை செய்தருளும். . சகோதரி காருண்யா எலிசபெத் அவர்களின் தகப்பனார், அவர்கள் வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர், சர்க்கரை வியாதியினால் கால் யானைக்கால் போலாகி விட்டது என்றும், கண்ணில் கேட்டரேக்ட் ஆபரேஷன் செய்தும் கண் சரியாக தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறபடியால், தேவன் தாமே அவர்களை தொட்டு சுகப்படுத்தும்படியாய ஜெபிக்கிறோம். கண் பார்வை தெளிவாக தெரியும்படியாக ஜெபிக்கிறோம். சர்க்கரை அளவு இரத்தத்தில் குறையவும், அவர் பரிபூரண சுகத்தை பெறவும் ஜெபிக்கிறோம். சகோதரிக்கும் ஒரு வேலை சீக்கிரமாய் கிடைக்க கிருபை செய்வீராக. குடும்பத்தின் தேவைகளை சந்திப்பீராக. உம்மையன்றி யாரிடத்தில் செல்ல முடியும் தகப்பனே, நீரே யெகோவா யீரே, தேவைகளை சந்திப்பவர், அந்த குடும்பத்தில் பெரிய காரியங்ளை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். . சகோதரி ஜீவப்பிரியா அவர்கள் இந்த நாளில் செல்ல இருக்கும் இன்டர்வியூவில் உம்முடைய சித்தம் சகோதரியின் வாழ்வில் நிறைவேற ஜெபிக்கிறோம். தைரியமாய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும், அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்கவும் ஜெபிக்கிறோம். சகோதரன் ஜெபஸ்டின் அவர்களுடைய வாழ்வின் தேவைகளை தேவன் சந்திப்பீராக. அவர் உம்மை முதலாவது தேடவும், உம்முடைய நீதியையும் பெற்று, பின் நீர் தருகிற ஆசீர்வாதங்களை பெற தேவன் கிருபை செய்வீராக. . சகோதரி துளசியின் சகோதரன் பால முரளி அவர்களுக்கு நான்கு மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால், தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும், குடும்பத்தையும் பராமரிக்கும்படியாக அவருக்கு அவருடைய படிப்பிற்கேற்ற வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் நீரே தேவனென்று அறிய கிருபை செய்தருளும். . சகோதரி யமுனா கேரலின் வேலைக்காக அப்ளை செய்யும் இடங்களில் இன்டர்வியூவில் பாஸ் பண்ணினாலும், ஏதோ தடையினாலே அது கிடைக்காமற் போகிற படியினால், தேவன் தாமே எல்லா தடைகளையும் மாற்றுவீராக. தடைகளை தகர்க்கிறவராகிய நீர் யமுனாவிற்கு முன்பாக போய் எல்லா தடைகளையும் மாற்றி, மகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்வீராக. தேவன் செய்யப் போகிற தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம். . பஹ்ரெயினில் இருக்கிற சகோதரன் மனுவேல், கர்த்தரை விட்டு பின்வாங்கி இருக்கிற நிலையிலிருந்து மாறி, இந்த நாளின் செய்தியின்படி, கலப்பையில் கைவைத்து பின்னிட்டு பார்க்காதபடி, கர்த்தருக்குள் வளர கிருபை செய்யும். தினமும் வேதம் வாசித்து, ஜெபித்து ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற கிருபை செய்யும். இலங்கையில் இருக்கும் சகோதரன் வரத சீலன் அவர்களின் சகோதரியின் மகன் 28 வயதாகியும் பொருத்தமான தொழில் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதால், தொடர்ந்து தினமும் விசுவாசத்தோடு ஜெபித்து வரும் அவருக்குப் பொருத்தமான தொழில் ஒன்றை தேவன் தாமே கட்டளையிட்டுத்தர வேண்டுமாறு ஜெபிக்கிறோம். மிகவும் அப்பாவித்தனமான அவர் எவராலும் ஏமாற்றப்பட்டு விடாமல் கர்த்தர் காத்தருள வேண்டுமெனவும் ஜெபிக்கிறோம். அவருடைய மன வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம். . சகோதரன் வினோத் அவர்கள் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பாவ செயல்களில் ஈடுபட்டு, இப்போது கர்த்தரை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்று வசனம் கூறுகிறதே, ஆனால் இவர் தன்னுடைய பாவங்களினால் தீங்கும், பொல்லாப்பும் தன்னை தொடருவதாக எழுதியிருக்கிறாரே, எல்லா தீங்கையும், பொல்லாப்பையும் கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கட்டி அப்புறப்படுத்துகிறோம். அவர் இன்னும் அதிகமாக கர்த்தரை பற்றிக் கொண்டு, வேதத்தை வாசித்து, ஆவிக்குரிய வாழ்வில் பெலப்பட உம்மிடம் ஜெபிக்கிறோம். . சகோதரி ரோசலின் அவர்களின் ஸிஸ்டர் இன் லா ரோஸி அவர்களுக்கு ஒன்பது மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என்று எழுதியிருக்கிறார்களே, அவர்களுக்கு அவர்கள் உழைத்த மாதங்களின் சம்பளம் உடனே கிடைக்க தேவன் கிருபை செய்வீராக. யார் யார் கண்களில் தயவு கிடைக்க வேண்டுமோ, அவர்களின் கண்களில் தயவு கிடைத்து, அவர்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட ஜெபிக்கிறோம். . சகோதரன் யோகநாதன் அவர்களின் மகள் கேசியா காலேஜில் சீனியர்களினால் ரேகிங் செய்யப்படுவதாக எழுதியிருப்பதால், அந்த மாதிரியான செய்கைகள் எல்லா காலேஜ்களிலும் நிறுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் இப்படியான காரியங்கள் நடைபெறுவதை தேவன் தாமே நிறுத்தும்படியாக ஜெபிக்கிறோம். உமது மகள் இதனால் எந்த பாதிப்பிற்குள்ளாகாதபடி தேவன் காத்துக் கொள்ளும்படியாக ஜெபிக்கிறோம். . சகோதரி எஸ்தர் அவருடைய கணவர் மோசஸ் அவர்கள் இற்ற மதத்திலிருந்து கர்த்ரை ஏற்றுக் கொண்டபடியால், அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களை எப்படியாவது திரும்ப தங்களுடைய மதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று மந்திரங்களை செய்கிறதாக சகோதரி எழுதியிருக்கிறபடியால், இஸ்ரவேலுக்கு விரோதமான மந்திரமும் இல்லை, யாக்கோபுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை என்கிற வாக்கியம் இவர்களின் வாழ்வில் நிறைவேறும்படி ஜெபிக்கிறோம். எந்த மந்திரவாதமும் இவர்களை தொடாதபடி காத்துக் கொள்ளும். இவர்களுடைய மகள் முன்பு நன்கு படிப்பவள், இப்பொழுது படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று சொல்வதால், இரண்டு பிள்ளைகளையும் நீர் பொறுப்பெடுத்துக் கொள்ளும்படி ஜெபிக்கிறோம். அவர்களுடைய உறவினர்கள் யாவரும், நீரே தேவன் என்பதை அறிந்துக் கொள்ள அவர்களின் கண்களை திறந்தருளும். சகோதரி அன்டினி விக்டோரியா அவர்களின் ஸிஸ்டர் இன் லா ரெபேக்காவிற்கு ஒரு நல்ல வேலையை தேவன் தாமே கட்டளையிடும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய படிப்பிற்கேற்ற நல்ல வேலையைத்தந்து ஆசீர்வதிப்பீராக. . சகோதரன் சுனில் ஹெர்பர்ட் அவர்களின் சர்டிபிகேட்கள் புதிய கம்பெனியில் செக் பண்ணுவதால், எல்லாம் சரியாக இருக்கவும், சரி செய்து, அந்த கம்பெனியில் அவர் ஞானத்தோடு வேலை செய்யவும், உமகு கிருபை அவரோடு இருக்கவும் ஜெபிக்கிறோம். . கத்தாரில் நர்சாக பணிபுரியும் இருக்கும் சகோதரி இளவரசி ராஜேஸ்அவர்களின் கணவர் பயோ மெடிகல் எஞ்சினியராக இருப்பதால், அவருக்கும் அங்கு வேலை கிடைத்து, இருவரும் ஒன்றாக அந்த நாட்டில் வாழும்படியாக, தேவன் கிருபை செய்வீராக. அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிப்பீராக. கர்ப்பிணியாக இருக்கும் சகோதரியையும், அவர்களுடைய இரண்டு வயது பிள்ளையையும் ஆசீர்வதிப்பீராக. . சகோதரி சூரியபிரபா ரவிக்குமார் அவர்களின் கணவர் சவுதி அரேபியாவில் இருப்பதால், அவர்களும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் தங்கள் தகப்பனோடு இணைய வேண்டும் என்று ஜெபிக்க கேட்டிருப்பதால், சகோதரிக்கும் ஒரு நல்ல வேலை கிடைத்து, அவர்களும் தன் கணவரோடு இணையும்படியாக வழிகளை திறக்கும்படியாக ஜெபிக்கிறோம் தகப்பனே. . சகோதரி இந்திரா விஸ்வநாதன் அவர்களின் வேலையிலும், அவர்களுடைய கணவரின் வேலையிலும் அதிக குழப்பங்கள் இருப்பதால், நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று எழுதியிருப்பதால், தேவன் தாமே அவர்களுடைய வேலை இடத்தில் உள்ள பிரச்சனைகளை மாற்றி, சுமுகமான நிலைமை ஏற்பட செய்வீராக. அதிக கடன் பிரச்சனையில் இருக்கும் அவர்களுக்கு கடன்களை எல்லாம் அடைக்கும்படியாக வழிகளை திறந்தருளும். செழிப்பை கட்டளையிடுவீராக. உம்மையே பற்றிக் கொண்டு, ஆசீர்வாதத்தை பெற கிருபை செய்யும். குழந்தை பாக்கியத்தை கொடுத்து, ஒரு அற்புதத்தை தேவன் அவர்கள் குடும்பத்தில் செய்ய வேண்டுமாறு ஜெபிக்கிறோம். . சகோதரன் ஜஸ்டின் ராஜ் அவர்கள் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி எழுத இருக்கிற ரெயில்வே பிரமோஷன் பரிட்சையில், நன்கு எழுதி, அவர் விரும்புகிற பிரமோஷன் கிடைக்க கிருபை செய்யும். அதற்கென்று இப்போதிருந்தே நன்கு ஆயத்தம் செய்யவும், நன்கு பரிட்சை எழுதவும் கிருபை செய்யும். |