Friends Tamil Chat

ஞாயிறு, 30 நவம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 30 நவம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

குறிப்பு : அன்பு வாசகர்களே, வெகு சிலரே வேதாகம கேள்வி

பதில்களுக்கு பதில் எழுதுகிறார்கள். நாங்கள் பல ஆயிரங்களுக்கு

இதை அனுப்புகிறோம் ஆனால் குறைந்தது 25 அல்லது 30 பேர்

தான் இதில் பங்கு கொள்கிறார்கள். ஆகையால்  இந்த

வாரத்திலிருந்து (ஞாயிற்றுக்கிழமை) வாக்குதத்த வசனம் மட்டும்

அனுப்பலாம் என்று தீர்மானித்து உள்ளோம்.

.
கடந்த  வார கேள்வி பதில்கள்:  23 நவம்பர் 2014.
.
1)  ஊர் ஊராகத் திரிந்து கர்த்தரிடம் திரும்புங்கள் என்று

சொன்னவர்கள் யார்?
.
சரியான பதில் : எசேக்கியாவின் அஞ்சல்காரர் - 2 நாளாகமம் 30:6-10.
.
2)  அந்தியோகியாவிலே சஞ்சரித்து, கர்த்தருடைய வசனத்தை

    உபதேசித்து பிரசங்சித்துக் கொண்டிருந்த இருவர் யார்? யார்?
.
சரியான பதில் : பவுல், பர்னபா  - அப்போஸ்தலர் 15:35
.
3)  பரஸ்திரீயின் குமாரன் ஆனாலும் விசுவாச வீரண் - இவன் யார்?
.
சரியான பதில் : யெப்தா  - நியாயாதிபதிகள் 11:32
.
4)  விசுவாசத்தினால் வராத யாவும் என்ன என்கிறார் பவுல்?
.
சரியான பதில் : பாவம்  - ரோமர் 14:23
.
5)  உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகுமென்று அறிவித்தவன் யார்?
.
சரியான பதில் : அகபு - அப்போஸ்தலர் -11:28.
.
2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ,

பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு

ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம்
 

போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத்

தகனபலியிட்டான். – ஆதியாகமம் 22 :13.
=======================================
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக,
.
1)  Sis. Sobitha Lawrence…………….2) Bro. Victor Jayakaran (only 4 correct)
.
3) Mrs. Annie Smiley Paules……4) Sis M.Vijayarani Manonmani (only 4 Correct)
.
5) Sis. Kamini David (Only 4 correct) …6) Mrs. Christy Mohan….

.

7) சகோ. இரா. தமிழ்மணி (only 4 Correct)
.
8) Mrs. Hannah Ezekiel…9) சகோ. எட்வின் D. சுந்தர்…

.

10) Mrs. Chandralekha Martin
.
 11) Br. L. Samuel George…12) Sis. Beaulah (only 4 correct)..13) Sis. Shoba sunil
.
 14) திருமதி. அமுதா டேவிட். (only 4 Correct)…15) Mrs. Santhi Justin…

.

16) Bro. Jebaveerasingh J..17) Mrs.Ida Shakila Joshua (Only 3 Correct)

.

18) சகோதரி சரஸ்வதி…19) Mrs. Joy Mabel Kennedy
.
 20) Miss.J.Sharon Rachel Mahima…..21) Mrs. Sudha Kirubanandhan…

.

22) Mrs. Vincy R..23) Mrs. Judithara.J (only 4 Correct)..24) Mrs. Pearl Charles

,
====================================================

,
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1)  Sis. Sobitha Lawrence ….2) Bro. Victor Jayakaran….3) Bro. K. Solomon David
.
4) Mrs. Annie Smiley Paules..5) Sis M.Vijayarani Manonmani…6) Sis. Kamini David
.
7) Mrs. Hannah Ezekiel…8) Mr. C.Vijay Amirtharaj…..9) சகோ. எட்வின் D. சுந்தர்
.
10) Mrs.  Chandralekha Martin….11) Br. L. Samuel George…12) Sis. Beaulah….
.
13) Mr.Moses Jaikumar…….14) Sis. Shoba sunil……15) திருமதி. அமுதா டேவிட்
.
16) Mrs. Santhi Justin…..17) Bro. Jebaveerasingh J….18) Mrs.Ida Shakila Joshua
.
19) சகோதரி சரஸ்வதி………20) Mrs. Joy Mabel Kennedy….

.

21) Miss.J.Sharon Rachel Mahima
.
22) Mrs. Sudha Kirubanandhan…..23) Bro. J.Venkatesh……….24) Mrs. Vincy R….
.
25) Mrs. Judithara.J……………..26) Mrs. Pearl Charles…..
.
=========================================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 28 நவம்பர், 2014

29th November 2014 – மரண நாள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 நவம்பர் மாதம் 28-ம் தேதி - வெள்ளிக்கிழமை
மரண நாள்
.................

ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை. - (பிரசங்கி 8:8).

.

ஒரு அரசன் மரண தருவாயிலிருந்த தனக்கு பிரியமான அமைச்சரை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவரிடம், "நீர் அமைச்சராயிருந்தபோது எனக்கு அநேக நன்மையான ஆலோசனைகள் கூறினீர். ஆகையால் நீர் இப்போது எதை கேட்கிறீரோ அதை தருகிறேன்" என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர், "அரசே, நான் சாவதற்குமுன் ஒரு நாள் எனக்கு கூட்டி தர வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அரசர், 'என்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட எந்த காரியத்திலும் நீர் எதை கேட்டிருந்தாலும் நான் அதை உமக்கு கொடுத்திருப்பேன், என்னால் இயலாத காரியத்தை கேட்கிறீர், மன்னிக்கவும், என்னால் அதை தர முடியாது' என்று கூறினார்.

.

ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை என்று வேதம் நமக்கு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. நாம் யாவரும் ஒரு நாளில் மரிக்கவே போகிறோம். ஆனால் அதை குறித்த பயம் தான் மற்ற எல்லா பயங்களிலும் அதிக கடினமானது. கொடுமையானது. நாம் அதை விரும்புகிறோமோ இல்லையோ, ஒரு நாள் நாம் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். நாட்டை ஆளுகிற பெரிய அரசனானாலும், ஒன்றுமே யில்லாத ஆண்டியானாலும் ஒரு நாள் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். அதை பணத்தை கொடுத்து நிறுத்த முடியாது.

.

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27) என்று வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரிக்கவே வேண்டும். ஆனால் மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. அநேக மதங்கள் வித்தியாசமாய் போதிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் என்ன போதிக்கிறது? நாம் உலகில் வாழ்வது, நிரந்தரமல்ல, ஆனால் மறுமையில் வாழ்வதே நிரந்தரம் என்று போதிக்கிறது. அதாவது நாம் இந்த பூலோகத்தை விட்டு, தேவனோடு என்றும் வாழும்படியாக நித்திய ஜீவனை பெற்றவர்களாக என்றென்றும் வாழுவோம் என்று வேதம் கூறுகிறது.

.

அநேக பரிசுத்தவான்கள், இந்த பூமியில் அரதேசியும் பரதேசிகளுமாயிருந்து வாழ்ந்து, பரம தேசத்தை தங்களுக்கென்று சுதந்தரித்து கொண்டார்கள். 'இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே' - (எபிரேயர் 11:13-16). சரி, இவர்களெல்லாரும் எந்தவித பயமுமின்று தைரியமாய் மரணத்தை எதிர்கொண்டு மரித்தது எப்படி? தேவன் அவர்களுக்கென்று ஒரு நகரத்தை பரலோகத்தில் ஆயத்தபடுத்தியிருந்தபடியால், அவர்கள் அதை ஆவலோடு வாஞ்சித்து, மரித்தார்கள்.

.

ஓவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். நிச்சயமாக நம் உறவினர், இரத்தகலப்பானோர் மரிக்கும்போது, அது மிகவும் வேதனையுள்ளதுதான். ஆனால் நமக்கு நிச்சயமான ஒரு நம்பிக்கை உண்டு. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை நாம் திரும்ப காண்போம் என்ற திட நம்பிக்கை உண்டு.

.

மட்டுமல்ல, உயிரோடு இருக்கிற நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் மரணத்திற்கு பின் நிச்சயமாக நாம் அவருடன் இருப்போம். கிறிஸ்துவுக்குள் நாம் இல்லாதிருந்தால் அந்த நம்பிக்கை நமக்கு இல்லை. மரணத்திலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக, பயமில்லாதவர்களாக இருக்க வேண்டுமென்றால் கிறிஸ்துவை ஏற்று கொள்ளவே வேண்டும். மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் நம்பிக்கை இல்லை, இல்லவே இல்லை.

.

கிறிஸ்து நமக்குள் இருந்தால் இன்று நாம் மரித்தாலும் நான் கிறிஸ்துவோடு இருப்போம், நாம் மரிக்காவிட்டால் கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் என்கிற ஆணித்தரமான ஒரு நம்பிக்கை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்போது மரணத்தை குறித்த பயம் நமக்கு ஒருபோதும் இராது. அநேக பரிசுத்தவான்களை போல நாமும் மகிழ்ச்சியோடு அதை எதிர்கொள்வோம். அப்போது நாமும் மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று சவாலிட்டு கூற முடியும். ஆமென் அல்லேலூயா!

.

அழிவுக்கு உரிய இவ்வுடல் - ஒருநாள்

அழியாமை அணிந்து கொள்ளும் - 2

சாவுக்கு உரிய இவ்வுடல் ஒருநாள்

சாகாமை அணிந்து கொள்ளும் - 2

பயமில்லையே மரண பயமில்லையே

ஜெயம் எடுத்தர் இயேசு

ஜெயம் எடுத்தார் மரணமே உன் கூர் எங்கே?

பாதாளமே உன் ஜெயம் எங்கே?

.
ஜெபம்
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்களுக்காக ஒரு இடத்தை பரலோகத்தில் ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கிற உம்முடைய குமாரனாகிய கிறஸ்துவுக்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம். நாங்கள் மரிக்கும்போது எங்களுக்கு நிச்சயமான ஒரு நம்பிக்கையாக நித்திய ஜீவனை நீர் எங்களுக்கு கொடுத்தபடியால் உம்மை துதிக்கிறோம். இன்று மரித்தாலும் நாங்கள் கிறிஸ்துவோடு இருப்போம் என்கிற மகிமையான நம்பிக்கைக்காக உம்மை துதிக்கிறோம். நம்பிக்கையற்ற கல்லறை நோக்கி ஆயிரமாயிரமாய் சென்று கொண்டிருக்கிற கிறிஸ்துவை ஏற்று கொள்ளாத ஆத்துமாக்களுக்காக உம்மை நோக்கி வேண்டி கொள்கிறோம். அவர்களும் கிறிஸ்துவை ஏற்றுகொண்டு நித்திய ஜீவனை பெற்று கொள்ள கிருபை செய்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
குறிப்பு

pray1another

அன்பு வாசகர்களே, வேதாகம கேள்வி - பதில் போட்டி - இன்று கடைசி நாள், பதிலை அனுப்புங்கள்.தேவன் தாமே வானத்தின் பலகணிகளை திறந்து ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 27 நவம்பர், 2014

27th November 2014 – அலங்கோலத்திலிருந்து அலங்காரம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 நவம்பர் மாதம் 27-ம் தேதி - வியாழக்கிழமை
அலங்கோலத்திலிருந்து அலங்காரம்
...................

அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். - (ஏசாயா 61:4).

.

ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு. அதில் பல அறைகள் இருப்பினும் ஒரு அறை மட்டும் மிகவும் விசேஷமானது. அவ்வீட்டைப் பார்வையிட செல்லும் ஓவியரெல்லாம் அவ்வறை சுவர்களில் ஏதாகிலும் ஒரு ஓவியத்தை வரைந்து செல்வது வழக்கம். ஒரு காலத்தில் அவ்வறை மிக நேர்த்தியாக கட்டப்பட்டு அழகிய வர்ணம் பூசப்பட்டதாய் இருந்தது. ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சோடா குடிநீர் சேமிப்பு கலம் வெடித்து அதன் அழகிய சுவரெல்லாம் கறைபட்டு போயின.

.

அங்கு தங்கியிருந்த பிரபல ஓவியர் சர்.எட்வின் லாண்ட்சீர் என்பவர் அந்த கறைகளை பார்த்தபோது அவை நிலையாக நிற்கும் கறைகள் போல் அவருக்கு தோன்றின. பின் அவர் தன் கலைத்திறனால் அந்த கறைகளை விலைமதிக்க முடியாத ஒர் ஓவியமாக மாற்றிவிட்டார். அதில் அவர் ஒரு நீர்வீழ்ச்சியின் பின்னணி காட்சியை வரைந்தார். அதிலுள்ள பாறைகளும், மரங்களும் அவற்றிற்கிடையில் கெம்பீர தோற்றத்துடன் நிற்கும் ஒரு அழகிய ஆண்மானும் காண்போருக்கு உண்மை காட்சியைப் போல தோற்றமளித்தன். இந்த ஓவியம் ஸ்காட்லாந்தின் சிறந்த மலைக்காட்சி ஓவியங்களில் ஒன்றாக விளங்குகிறது. அன்று அலங்கோலமான கறை இன்று ஆயிரக்கணக்கானோரை தன் பக்கம் இழுக்கும் ஒரு அழகிய காட்சியாய் விளங்குகிறது.

.

ஒரு காலத்தில் நமது ஆவிக்குரிய வாழ்வும் நன்கு வளர்ச்சியடைந்த தேவனுடைய கண்களுக்கு அழகானதாக காணப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதோ நற்சுபாவங்கள், நல்ல பழக்கவழக்கங்கள், மிகச்சிறந்த ஆவிக்குரிய அனுபவங்கள் எல்லாம் மறைந்து பாவ கறை படிந்து அலங்கோலமாய் காணப்படுகிறதோ? முந்தின நாட்களில் என்னில் காணப்பட்ட உன்னத அனுபவங்கள் மீண்டும் துளிர்ப்பது சாத்தியம் தானா? நான் இழந்து போயிருக்கும் ஜெப ஜீவியம் என்னில் புதுப்பிக்கப்படுமோ, எனற அங்கலாய்போடு காண்ப்படுகிறீர்களோ? உங்கள் ஆத்துமா தொய்ந்து போய் உள்ளதோ? சோர்ந்து போகாதீர்கள்!

.

ஓன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர், ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்த பூமியை சீர்படுத்தினவர் நம் தேவன். அவர் உங்களில் சீர்குலைந்து கிடக்கும் அனைத்து மேன்மையான அனுபவங்களையும் மீண்டும் உருவாக்க வல்லமையுள்ளவர். அவரே உங்களது முந்தின சீரை பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாக செய்வார். அவர் அலங்கோலத்தை அலங்காரமாகவும், தோல்வியை ஜெயமாகவும், துக்கத்தை சந்தோஷமாகவும் மாற செய்கிறவர். வறண்ட ஆவிக்குரிய ஜீவியத்தை தண்ணீர் தடாகமாவும், நீரூற்றாகவும் மாற்றி மிகுதியாய் செழிக்க செய்கின்றவர்.

.

பிரியமானவர்களே, நீங்கள் இழந்து போன அவிக்குரிய வாழ்வை எண்ணி சோர்ந்து போகாமல், உங்களை புதுப்பித்து உயிர்ப்பிக்க கூடிய சர்வ வல்லவரின் கரங்களில் இன்றே ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களை மீண்டும் அலங்கரித்து அநேகருக்கு ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாற்றுவார். ஆமென் அல்லேலூயா!

.

வறண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே

அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

எல்லாமே உம்மால் ஆகும்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த வேளையிலும் வறண்ட நிலத்தை போல காணப்படுகின்ற என் வாழ்க்கையை உம்முடைய அற்புத கரத்தில் ஒப்படைக்கிறேன் தகப்பனே, ஒரு நாளில் ஆவிக்குரிய வாழ்வில் ஜொலித்த என் வாழ்வில், ஜெபத்தில் வல்லமையாய் இருந்த வாழ்வில் தற்போது காணப்படுகிற எல்லா அலங்கோலத்தையும் மாற்றி அலங்காரமாய் மாற்றுவீராக. ஓன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கினவரே, கோணலானவைகளை செவ்வையாக்குகிற தேவனே என் வாழ்விலும் காணப்படுகின்ற கோணலான காரியங்களை எல்லாம் செம்மைப்படுத்தும்படியாக என்னை ஒப்புக்கொடுக்கிறேன் தகப்பனே. ஆதியில் கொண்டிருந்த அன்பை நான் விட்டுவிடாதபடிக்கு உம்மையே உறுதியாய் பற்றிகொள்கிறேன். நம்பிக்கை இழந்த என்னுடைய வாழ்வை புதிதாய் மாற்றி, கனி கொடுக்கிற வாழ்வை திரும்ப தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 26 நவம்பர், 2014

26th November 2014 – வெள்ளியை போல புடமிடுகிறவர்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 நவம்பர் மாதம் 26-ம் தேதி - புதன் கிழமை
வெள்ளியை போல புடமிடுகிறவர்
.........

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். - (மல்கியா 3:3).

.

ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்தை குறித்து போதித்து கொண்டிருந்தபோது, அதில் பங்கெடுத்த சில சகோதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ளியை சுத்திகரிப்பான் என்றும், அந்த காரியம் எப்படி தேவனோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறது என்றும் பார்க்க தோன்றியது. அதன்படி ஒரு சகோதரி, தான் போய் தட்டானுடைய இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு, அடுத்த வாரம் அதை குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள போவதாக சொல்லி போனார்கள்.

.

அதன்படி, ஒரு வெள்ளி தட்டானை கண்டுபடித்து, அவர் எப்படி அதை சுத்திகரிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டு ஒரு நாளை குறித்து, அதன்படி அங்கு போனார்கள். தான் எதற்காக அப்படி கேட்கிறார்கள் என்பதை அந்த மனிதரிடம் எதுவும் சொல்லாமல், அவர் செய்வதை பார்க்க ஆரம்பித்தார்கள்.

.

அவர்கள் பார்த்து கொண்டிருந்தபோது, அந்த தட்டான் தன் கையிலிருந்த வெள்ளியை எடுத்து, நெருப்பில் காட்ட ஆரம்பித்தார். அப்போது அவர் சொன்னார், 'இந்த வெள்ளி, நெருப்பின் நடு மையத்தில் வைத்து, சூடு காட்டப்பட வேண்டும். ஏனென்றால், நடுவில்தான் நெருப்பின் அதிகபட்சம் சூடு இருக்கும், அப்படி காண்பித்தால்தான், வெள்ளியிலிருக்கிற அழுக்கு எல்லாம் மாறும்' என்று கூறினார்.

.

அப்போது அந்த சகோதரி 'அவர் உட்கார்ந்து' என்ற இடத்தை நினைவு கூர்ந்து, அந்த தட்டானிடம், "நீர் உட்கார்ந்து தான் அதை நெருப்பில் காட்ட வேண்டுமா" என்று கேட்டதற்கு, அவர், "ஆம், அந்த வெள்ளி நெருப்பில் காட்டி முடியும்வரை நான் இங்கு உடகார்ந்து தான் ஆக வேண்டும், மட்டுமல்ல என் கண்கள் அதன் மேலேயே இருக்க வேண்டும், ஒரு நிமிடம் அதிக நேரம் இந்த வெள்ளி நெருப்பில் இருந்தாலும், அது ஒன்றுமில்லாமற் சேதமாகி போய் விடும்" என்று கூறினார். அதை கேட்ட அந்த சகோதரி, சற்று நேரம் அமைதலாய் இருந்த பின், 'நீர் எப்படி இந்த வெள்ளி சுத்தமாயிற்று என்று அறிவீர்' என்று கேட்டதற்கு, அவர், 'அது மிகவும் சுலபம், என் சாயல் அதில் தெரியும்' என்று கூறினார்.

.

ஓ! எத்தனை உண்மை! நம் தேவன் எத்தனை அருமையானவர்! நீங்கள் ஒரு வேளை நெருப்பின் நடுவில் போடப்பட்ட வெள்ளியை போல இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்னால் தாங்க முடியாத வேதனைகளும் சோதனைகளும் என்னை சூழ இருக்கிறது என்று துவண்டு போயிருக்கிறீர்களா? தேவன், உங்களை உட்கார்ந்து, வெள்ளியை புடமிடுகிறது போல புடமிட்டு கொண்டிருக்கிறார். அவர் புடமிட்டு முடியுமட்டும் அவருடைய கண்கள் உங்கள் மேலேயே இருக்கிறது, மட்டுமல்ல, உங்கள் அசுத்தங்களும், குறைகளும் மாறி போய் அவருடைய சாயல் உங்களில் தெரியும்வரை நீங்கள் புடமிடப்படுகிறீர்கள். மனம் சோர்ந்து போக வேண்டாம், என்னால் தாங்க முடியாத அளவு பாடுகள் இருக்கிறதே என்று மனம் துவள வேண்டாம். நெருப்பின் நடு மையத்தில் காட்டப்பட்ட வெள்ளி எப்படி தூய்மையாய் மாறுகிறதோ அப்படி நீங்களும் தூய்மையாய் மாறுவீர்கள், 'அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்'.

.

ஆம் கர்த்தர் நம்மை ஆசாரியர்களாகவும் இராஜாக்களாகவும் அழைத்திருக்கிறபடியால், நாம் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தருக்கு, சுத்தமான இருதயத்திலிருந்து, துதிபலிகளை காணிக்கையாய் அவருக்கு செலுத்தும்படியாகவும், அவர் நம்மை புடமிட்டு கொண்டிருக்கிறார். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள். அவர் புடமிட்டு முடியும்போது, நாம் மிகவும் தூய்மையை அவருக்கே சொந்தமானவர்களாக இருப்போம். ஆமென் அல்லேலூயா!

.

முட்களுக்குள் மலர்கின்றதோர்

மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்

என்னையுமே தம் சாயலாய்

என்றென்றும் உருவாக்குவார்

.

கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்

கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்

இரட்டிப்பான பங்கை பெற

இரட்சகர் அழைத்திடுவார்

.

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, நாங்கள் சுத்தமாய் மாற வேண்டும் என்பதற்காக, நாங்கள் உம்முடையவர்களாக வேண்டும் என்பதற்காக சோதனைகளையும் பாடுகளையும் எங்களுக்கு அனுமதிக்கிறவரே உமக்கு நன்றி, நீர் சோதித்து முடித்த பிறகு நாங்கள் சுத்தமாய் விளங்குவோமே, அதற்காக உமக்கு ஸ்தோத்திரம், நாங்கள் தாங்க முடியாத அளவு சோதிக்காமல், எங்கள் மேல் உமது கண்களை வைத்து, சரியான நேரத்தில் எங்களை விடுவித்து பாதுகாக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் அவைகளை தாங்கி கொள்ள எங்களை பெலப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 25 நவம்பர், 2014

25th November 2014 - தகப்பனின் வற்றாத அன்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 நவம்பர் மாதம் 25-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
தகப்பனின் வற்றாத அன்பு
................

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. - (1 யோவான் 4:10).

.

ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அந்த பிள்ளையும் அந்த தகப்பனிடம் அன்புடன் வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அவர் அந்த பிள்ளையை பார்த்து, 'நீ இன்று வெளியில் விளையாட போக வேண்டாம்' என்று கூறினார். அவள் தினமும் தன் தோழிகளோடு விளையாடுவது வழக்கமாக இருந்தது. அவளும் தன் தகப்பனிடம் சரி என்று கூறிவிட்டு, தன் அறையில் வேறு ஏதாவது செய்யலாம் என்று அமர்ந்தாள். அப்படி அவள் அமர்ந்த போது, அவளுடைய தோழிகள் விளையாடும் சத்தம் கேட்டது. அவளால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. சற்று நேரம் பார்த்தாள். அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை, சரி, தகப்பன் வேலைக்கு போயிருப்பார், நான் விளையாடுவது அவருக்கு எங்கே தெரிய போகிறது என்று நினைத்து, விளையாட சென்று, நன்கு விளையாடிவிட்டு, எல்லாருக்கும் பை சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அப்போதுதான் அவளுடைய மனதில் வேதனை ஆரம்பித்தது, தன் தகப்பனின் சொல்லிற்கு கீழ்ப்படியவில்லை என்று, அதையே நினைத்து சென்று கொண்டிருந்தபோது, முன்னால் மாட்டப்பட்டிருந்த படத்தை காணாமல், போய் இடித்து, அது அந்த படம் கீழே விழுந்து, நொறுங்கி போனது, அவளுக்கும் தலையில் நல்ல அடி!

.

அவள் இருதயத்தில் தகப்பனுக்கு கீழ்ப்படியவில்லை என்ற துக்கம், தலையின் வேதனை வேறு, வேகமாக தன் அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து, விசும்ப ஆரம்பித்தாள். அப்போது அந்த வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண், 'நீ போய் உன் அப்பாவை பார், நடந்ததை சொல்' என்று கூறினாள். ஆனால் அந்த பிள்ளையோ, ஷநான் எப்படி என தகப்பனின் முகத்தில் விழிப்பேன், நான் அவர் சொல்லை கேட்கவில்லையே' என்று அழ ஆரம்பித்தாள். அதற்கு அந்த பணிப்பெண், 'உன் தகப்பனின் அன்பு நீ செய்கிற காரியத்தை பொறுத்தா இருக்கிறது? நீ அவருடைய மகள் அல்லவா?' என்று கூறினாள். அதனால் தைரியமுற்று, அந்த பிள்ளை தன் தகப்பனிடம் சென்று, 'அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்' என்று அவருடைய கரத்தை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அவளுடைய தந்தை, 'மகளே, நீ என் சொல்லை கேளாமல், விளையாட போனதும் தெரியும், விளையாடிவிட்டு, வரும் வழியில் மாட்டப்பட்டிருந்த படத்தில் மோதி, தலைக்கு அடிபட்டதும் தெரியும், நீ வருவாய் என காத்திருந்தேன், அந்த வலிக்கு தடவி கொடுக்கலாம் என்று, ஆனால் நீ என்னிடம் வரவேயில்லை' என்று கூறினார். 'அது எப்படி உங்களுக்கு தெரியும், நீங்கள் வேலைக்கு போகவில்லையா?' என்று அந்த பிள்ளை கேட்டாள். அதற்கு தந்தை 'இன்று நான் உன்னுடன் நேரத்தை செலவழிப்பதற்காக விடுமுறை போட்டேன், ஆனால், நீ விளையாட போய் விட்டாயே' என்று கூறி, 'மகளே, நீ என்னுடைய மகள், ஆகையால் நீ தவறு செய்தாலும் நீ என்னிடம் வரும்போது, நான் உன்னை மன்னித்து, உன்னை ஏற்று கொள்வேன். ஆனால் நீ தான் நான் ஏற்று கொள்வேனோ மாட்டேனோ என்று தயங்கி என்னிடம் வராமல் போனாய்' என கூறினார். அப்போது மகள், அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு, ஷநன்றி அப்பா' என கூறி முத்தமிட்டாள்.

.

நம்முடைய தேவனும் அப்படித்தான், அவர் நம்மேல் அன்புகூருவது நாம் செய்கிற நல்ல காரியங்களுக்காகவோ, அவருக்காக நாம் படுகிற பாடுகளுக்காகவோ அல்ல, நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் மாத்திரமே அவர் நம்மேல் அன்பு கூறுகிறார். 'கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' - (யோவான் 1:12) என்று வேதம் நமக்கு கூறுகிறது. விசுவாசமுள்ளவர்களாய் கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள், இலட்சக்கணக்கில் இருந்தாலும் அத்தனைபேரும், அவருடைய பிள்ளைகளே. 'நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது'. ஒரு பிள்ளை தவறு செய்துவிட்டு வந்து ஒரு தகப்பனின் முன் நிற்கும்போது, எப்படி அந்த தகப்பன், அந்த பிள்ளையை மன்னித்து, ஏற்று கொள்கிறாரோ, அப்படியே நம் பரம தகப்பனும் நம்மை மன்னித்து ஏற்று கொள்வதற்கு தயை பெருத்திருக்கிறார். ஒரு பிள்ளை தவறு செய்வதால் அந்த பிள்ளை அந்த தகப்பனின் பிள்ளை இல்லை என்று ஆகிவிடுமோ? அதை போலவே நாம் தவறு செய்யும்போதும் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்கும்போது, அவர் தயவாய் மன்னித்து, நம்மேல் அளவற்ற அன்பு கூருகிறார். அவருடைய அன்பை போல வேறு அன்பு இந்த உலகத்தில் உண்டோ?

.

அவருடைய அன்பை உணராதவர்கள் அவரிடம் வருவதில்லை, அவர் நம்மேல் வைத்த அன்பு மாறாதது, நிலையானது, அளவில்லாதது, பாரபட்சம் இல்லாதது, அந்த அன்பை ருசித்து அதில் நிலைத்திருப்போமா?

.

அரபிக்கடல் வற்றினாலும்

இயேசு அன்பு கடல் வற்றாதம்மா

பசிபிக் கடல் வற்றினாலும்

இயேசு பாசக்கடல் வற்றாதம்மா

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்

பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, உம்முடைய அன்பு எத்தனை பெரியது ஐயா. அரபிக் கடல் கூட வற்றி போகலாம், பசிபிக் கடல் கூட வற்றி போகலாம், ஆனால் உம்முடைய அன்பு கடல் வற்றவே வற்றாதே, அந்த அன்பிற்காக உமக்கு நன்றி தகப்பனே! அந்த அன்பை நாங்கள் ருசிக்கும்படி எங்களுக்கு கிருபை பாராட்டியிருக்கிறீரே உமக்கு நன்றி! நாங்கள் தவறு செய்து வந்தாலும் கிருபையாய் எங்களை மன்னித்து எங்களை ஏற்று கொள்கிறீரே உம்முடைய தயவிற்காகவும், கிருபைக்காகவும் உமக்கு கோடாகோடி நன்றி ஐயா! அந்த அன்பில் நாங்கள் எந்நாளும் மூழ்கி இருக்கவும், அந்த அன்பில் நிலைத்திருக்கவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.........

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 24 நவம்பர், 2014

24th November 2014 ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 நவம்பர் மாதம் 24-ம் தேதி - திங்கட் கிழமை
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்
...

அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். - (1பேதுரு3:13-14).

.
ஒருஉழவன் தன் வயலில் தக்காளி விதைகளை விதைக்கும்போது, அதற்கு விதை விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, தினமும் அதன் வளர்ச்சியைக் கண்டு, அதற்கு தேவையானவற்றை செய்து, வெளி விலங்குகள் எதுவும் கடித்துப் போட்டு விடாதபடி சரிசெய்து காப்பான். அவன் அதை செய்வது அவனது பொழுதுபோக்கிற்காக அல்ல, தான் செய்ததன் விளைவு நல்ல ருசியுள்ள தக்காளிப் பழங்களை பெறுவதற்காகத்தான் அல்லவா?

.

அந்த உழவன் ஒன்றும் செய்யாமல், தக்காளிப் பழம் வேண்டும் என்றால், அது அவன் கையில் கிடைக்குமா? இல்லை, அதற்காக அவன் உழைக்க வேண்டும். விதைக்க வேண்டும், ஒரு நல்ல பழம் கிடைப்பதற்கு ஏற்றவாறு அவன் தன் வயலில் வேலை செய்ய வேண்டும்.

.

நாமும் அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். காத்திருக்கும் வேளையில் நாம் சும்மா எதையாவது செய்துக் கொண்டிருக்க சொல்லி நம் தேவன் நமக்கு சொல்லவில்லை. 'இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்' என்று எச்சரிக்கிறார். ஆம், நாம் மற்றவர்களைப் போல, எல்லா நாட்களைப் போல இதுவும் ஒரு நாள் என்று புதிய நாளை சொல்வதற்கல்ல, ஒவ்வொரு நாளும் கர்த்தர் நமக்கு கிருபையாக கொடுக்கிற நாட்கள் என்று அவற்றை ஜாக்கிரதையாக செலவழிக்க வேண்டும்.

.

அந்த உழவன் சும்மா இருந்தால் அவனுக்கு ஒன்றுமே கிடைக்காது, அதைப்போல கிறிஸ்தவர்களும் சும்மா இருந்தால் புதிய வானம், புதிய பூமியில் வாசம் செய்ய வேண்டிய பாக்கியம் கிடைக்காது. ஆனால் அதற்காக நாம் பரிசுத்தத்தை காத்து, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற காரியங்களில் உண்மையாக இருந்து, அவருடைய வருகைக்காக காத்திருப்போமானால் நிச்சயமாக நாமும் வாசம் செய்வோம்.

.

கர்த்தருடைய துணையில்லாமல் அனுதின ஜீவியத்தில் நாம் பரிசுத்தமாக வாழ முடியாது. அதற்காக அவரோடுள்ள ஐக்கியத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டும். ஜெபத்திலே, வேதம் வாசிப்பதிலே, மற்றவர்களோடு உள்ள நம் உறவிலே, கர்த்தருக்கு செய்யும் ஊழியங்களிலே நாம் அவரோடு ஐக்கியம் கொண்டிருப்பதை வெளிப்படுத்த வேண்டும்.

.

கர்த்தர் வருகையிலே கறையற்றவர்களாக, பிழையற்றவர்களாக சமாதானமாய் காணப்படத் தக்கதாக நம் வாழ்வு வாழ வேண்டும். அதற்கான பிரயாசத்தில் நாம் ஈடுபட வேண்டும். எந்த பிரயாசமும் இல்லாமல், பரலோக ராஜ்யம் மாத்திரம் நமக்கு வேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் நிச்சயமாக நமக்கு அது கிடைப்பது அரிது. நாம் செய்ய வேண்டியதை நாம்தான் செய்ய வேண்டும். கர்த்தர் மற்றவற்றை பார்த்துக் கொள்வார்.

.

நமது நம்பிக்கையே நாம் கர்த்தரோடு யுகாயுகமாய் வாழுவோம் என்கிற நித்திய ஜீவனைக் குறித்ததுதான். அதற்காக நாம் இந்த உலகத்தில் வாழும்போதே விழிப்புடன் இருந்து, கறையில்லாமல், குறையில்லாமல், பரிசுத்தமாய், ஜெபத்துடன் காத்திருப்போம். சிறந்ததை அவருக்கு கொடுப்போம். அவருக்காக நம்மால் இயன்றவரை உழைப்போம். அதற்கான பலனைக் கொடுக்க கர்த்தர் வருகிறார். ஆமென் அல்லேலூயா!

.

கறையில்லாமலே குற்றமில்லாமலே

கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

.

அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்

அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்

.

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்

கோணலானவை நேராகணும்

கரடானவை சமமாகணும்

.

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்

இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, புதிய வானங்களும், புதிய பூமியும் வருமென்று காத்திருக்கிற நாங்கள் எங்களை கறையில்லாமல், குறையில்லாமல் பரிசுத்தமாய் காத்துக் கொள்ள அதற்கான முயற்சியில் ஈடுபடவும், நீர் அதற்கு உதவவும் ஜெபிக்கிறோம். எந்த முயற்சியும் இல்லாமல் வீணாக நாட்களை செலவழிக்காதபடி, கர்த்தருக்கும் பிரயோஜனப்படுத்திக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.