Friends Tamil Chat

ஞாயிறு, 31 மார்ச், 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 31st March - 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் பண்ணவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

வைத்தியமானதை பைத்தியம் என்று

புத்தியீனர் சிலர் பிதற்றுகின்றனர் -அது என்ன?

விடை: சிலுவையைப் பற்றிய உபதேசம் – 1 கொரி 1:18.

====================================
 அண்ணன் தம்பி இரண்டு பேர்

மூத்தவன் காட்டில் இருப்பான்

இளையவன் வீட்டில் இருப்பான்

பிந்தியவன் ஏமாற்ற

முந்தியவன் ஏமாறுவான் -அவர்கள் யார்?

விடை: ஏசா, யாக்கோபு – ஆதி 27:1-37.

====================================
 ஏ.பி.சி.டி படிப்போரே

ஏக்,தோ,தீன், படிப்போரே

இதனை முதலில் படியுங்கள்

இகத்தினை வாழச் செய்யுங்கள் -அது என்ன?

விடை: நன்மை – ஏசா 1:17,18.

====================================
 பிரதர் தினகரன் பாடினாரு

ஃபாதர் பெர்க்மான்ஸ் ஆடினாரு

நேச ரோஜா நகைக்க

இஸ்ரவேல் ராஜா பாடியே ஆடினாரு -அவர் யார்?

விடை: தாவீது ராஜா – 2 சாமு 6:16.

====================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 29 மார்ச், 2013

29th March 2013 - இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாதையும் பாடுகளும்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 29-ம் தேதி - வெள்ளிக் கிழமை
இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாதையும் பாடுகளும்
....

அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டுபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். - (யோவான் 19:16-18).

.

பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் வீட்டிலிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட இயேசுகிறிஸ்து அங்கு நியாயம் விசாரிக்கப்படுகிறார். பிலாத்து அவரிடம் குற்றம் ஒன்றையும் காணாமல் அவரை விடுதலையாக்க தீர்மானித்த பொது யூதர்கள் அவரை சிலுவையில் அறைய சொல்லி சத்தமிட்டபடியால், அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். எருசலேமில் இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்த பாதை 14 நிலையங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இது சிலுவை பாதை அல்லது Via Dolorosa என்றழைக்கப்படுகிறது.

.
1. பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தல். (யோவான்

19:16). இப்போது பிலாத்துவின் அரண்மனையில் அரபிய பெண்களுக்கு

பாடம் சொல்லி கொடுக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து

முதலாம நிலையம் ஆரம்பிக்கப்படுகிறது.
.
2. இயேசுவின் மேல் சிலுவை சுமத்தப்படுகிறது. இங்கு ரோம போர்ச்சேவகர்,

அவரை வாரினால் அடிப்பித்து, முள்ளுகளினால் ஒரு முடியை உண்டு

பண்ணி, அவர் சிரசின்மேல் வைத்து, விசப்பான அங்கியை உடுத்திய இடம்

(யோவான் 19:1-2)
.
3. இயேசுகிறிஸ்து முதன் முறையாக சிலுவையின் பாரம் தாங்காமல் கீழே

விழுகிறார்.
.
4. இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியாள் தன் மகன் சிலுவை சுமந்து

செல்வதை காண்கிற இடம். இதில் ஒரு சிறிய ஆலயத்தை

கட்டியிருக்கிறார்கள்.
.
5. சிரேனே ஊரானாகிய சீமோனை சிலுவையை சுமந்து கொண்டு வரும்படி

அதை அவன் மேல் வைத்தார்கள் (லூக்கா 23:26).
.

6. வெரோனிக்கா என்னும் சகோதரி இயேசுவின் முகத்தை தன்னிடம் இருந்த

துணியால் துடைத்த இடம். அந்த துணியில் இயேசுவின் முகம்

பதிந்திருப்பதாக கூறப்படுகிறது.
.
7. இயேசுகிறிஸ்து இரண்டாம் முறையாக கீழே விழுகிறார்.
.
8. எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல்,

உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று

இயேசுகிறிஸ்து சொன்ன இடம். (லூக்கா 23:27-31).
.
9. இயேசுகிறிஸ்து மூன்றாம் முறையாக கீழே விழுகிறார்.
.
மேற்கண்ட ஒன்பது நிலையங்களும் சந்தடி நிறைந்த பாலஸ்தீனியரின்

கடைவீதிகளுக்கு நடுவே இருக்கிறது.
.
10-14 நிலையங்கள் Holy Sepulchre என்னும் பெரிய ஆலயத்தின் உள்ளே

அமைந்துள்ளது.
.
10. இயேசுகிறிஸ்து உடுத்தியிருந்த துணி உரியப்படுகிறது.
.
11. இயேசுகிறிஸ்து சிலுவையில் ஆணிகளால் கடாவப்படுகிறார்.
.
12. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி மரிக்கிறார். இயேசுகிறிஸ்து

சிலுவையில் தொங்கி இருந்த கொல்கதா மலையின் பெரிய கற்பாறை ஒரு

பெரிய கண்ணாடியில் மூடப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

பக்கத்தில் இயேசுகிறிஸ்துவின் தாயார் மரியாளின் இருதயத்தை ஒரு

பட்டயம் ஊடுருவி இருப்பதைப் போன்று சிலையில் வடிக்கப்பட்டிருக்கிறது.

இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்குவதை போன்று பிரத்யேகமாக

செய்திருக்கிறார்கள்.
.
13. இயேசுவின் சரீரம் சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறது. யோசேப்பு

அந்த சரீரத்தை பிலாத்துவினிடத்தில் கேட்டு பெற்று கொள்கிறான்

(யோவான் 19:38). இவை அங்கு படங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த

படத்தில் சிறு சிறு தூதர்களும் தங்கள் கண்களை ஒரு துணியால்

துடைத்தபடி பறந்து செல்லும் காட்சி மனதை உருக்க வைக்கும். அங்கு

பக்கத்திலேயே நிக்கோதேமு வெள்ளைப்போளமும் கரிய போளமும் கலந்து,

இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை சுகந்த வர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றி

கட்டின இடம் உள்ளது (யோவான் 19:40)
.
14. இயேசுகிறிஸ்துவின் சரீரம் ஒரு புதிய கல்லறையில் வைக்கப்படுகிறது. -

(யோவான் 19:41).
.
இந்த 14 நிலையங்களையும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மதியம்

மூன்று மணிக்கு Franciscans எனப்படும் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக

வருகிறார்கள். இயேசுகிறிஸ்து கூறின ஏழு வார்த்தைகளும் இந்த 14

நிலையங்களில் அடங்கி விடுகிறது. இந்த சிலுவை பாதை சரியானது

அல்ல, மற்ற ஒரு பாதை உண்டு என்றும் கூறப்படுகிறது. எது

எப்படியாயிருந்தாலும், இயேசுகிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றது

உண்மை, அவர் கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டது

உண்மை, அவருடைய பாடுகள் அத்தனையும் உண்மை! தம் ஜீவனை அந்த

கொடிய குரிசில் பிதாவினிடம் அர்ப்பணித்து மரித்ததும் உண்மை,

அப்படியே மூன்றாம் உயிரோடெழுந்ததும் உண்மை! ஆமென்

அல்லேலூயா!.
.
இயேசுகிறிஸ்துவின் சரீரம் வைக்கப்பட்ட இடம் வேறு இடம் என்று

எருசலேமிலே வேறு ஒரு இடத்திற்கு கூட்டி செல்கிறார்கள். அங்கு

கபாலஸ்தலம் என்னும் இடத்திற்கு இயேசுகிறிஸ்து சிலுவையை சுமந்து

செல்கிறார் (யோவான் 19:17) என்பதை வெளிப்படுத்தும்படியாக கபாலம்

போன்ற ஒரு மலை இங்கு உள்ளது. மற்றும், அவர் சிலுவையில்

அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில்

ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது

(யோவான் 19:41) என்பதை குறிக்கும் வகையில் ஒரு தோட்டமும் உள்ளது.

இந்த இடத்தை பார்த்தால் இதுதான் சரியான இடமோ என்று தோன்றும்.

இந்த இடம் Garden Tomb என்றழைக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவன்

சரீரத்தை வைத்த இடத்தை குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், ஒன்று மட்டும்

சத்தியம், இயேசுகிறிஸ்து இரண்டு இடத்திலும் இல்லை. அவர் சாவை

வென்று உயிரோடு எழுந்தார். ஆமென் அல்லேலூயா!
.



ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

என் இயேசு குருசை சுமந்தே

என் நேசர் கொல்கதா மலையின் மேல்

நடந்தே ஏறுகின்றார்

இந்த பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்

சொந்தப்படுத்தி ஏற்று கொண்டார்

நேசிக்கின்றாயோ இயேசுநாதரை

நேசித்து வா குருசெடுத்தே


ஜெபம்
எங்களைஅதிகதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். எங்களுக்காக பாவமறியாத இயேசுகிறிஸ்து கொடிய குருசை சுமந்து, போர் சேவகர்களால் வாரினால் அடிக்கப்பட்டு, நிந்தையை சுமந்தவராக கொல்கதா மலையின் மேல் ஏறி, சிலுவையில் அறையப்பட்டு, தம் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி அந்த கோர குருசிலே மரித்தாரே, எங்கள் பாவங்கள் அல்லவோ அவரது சரீரத்தில் ஆணிகளை கடாவ வைத்தது, எங்கள் பாவங்கள் அல்லவோ அவரை இந்த பாடுகளை சகிக்க வைத்தது. எங்களை மீண்டும் ஒரு விசை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறோம் தகப்பனே, எங்களை மன்னித்து உம்முடைய பிள்ளைகளாய் ஏற்று கொள்வீராக. இயேசுகிறிஸ்துவின் பாடுகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த பாடுகளினாலே எங்களுக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுத்தீரே உமக்கு நன்றி. அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமாகிறோமே அதற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் பாடுகளை சிந்திக்கிற ஒவ்வொருவரையும் இரட்சித்தருளும்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 28 மார்ச், 2013

28th March 2013 - மனத்தாழ்மை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 28-ம் தேதி - வியாழக் கிழமை
மனத்தாழ்மை
....

மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். - (பிலிப்பியர் 2:3).

.
மனத்தாழ்மை ஒவ்வொரு கிறிஸ்தவனையும் அலங்கரிக்க வேண்டிய பண்பு. நாம் மெய்யாகவே தாழ்மையுள்ளவர்களாயிருந்தால், புறக்கணிப்புகள், உபத்திரவங்கள், காட்டிக்கொடுக்கப்படுதல், புயல்காற்றுகள் இவை ஒன்றும் நம்மை கலக்கமடைய செய்ய முடியாது. தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையளிக்கிறபடியினால் அவருடைய கிருமை நம்மை சூழ்ந்து கொள்ளும். இதை ஒரு அம்மையார் சிறிய உதாரணத்துடன் விளக்குகிறார்.

.

.
ஒரு பெரிய கர்வாலி மரமும் சிறிய புல்லும் பற்றிய ஒரு சிறுகதை உண்டு.

அக்கர்வாலி மரம் தன்னருகில் வளர்ந்து வந்த சிறிய புல்லை நோக்கி, 'ஓ

அற்பப்புல்லே, நீ எவ்வளவு பெலனற்றதும், நிலையற்றதும்

சிறியதுமாயிருக்கிறாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு

உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கிறேன்' என்று அடிக்கடி பெருமையடித்துக்

கொண்டது. தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள அந்த

புல்லுக்கு ஒன்றுமில்லாதிருந்தபடியால் அது எப்போதும் அமைதியாகவே

இருக்கும். ஒரு நாள் ஒரு பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த

கர்வாலி மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும், நேராக நிமிர்ந்து

நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில்

விழுந்து விட்டது.
.

.
புயல் காற்று ஓய்ந்தபோது, கர்வாலி மரம் புல்லுக்கு என்ன நேர்ந்தது என்று

அறியும்படி மெதுவாக அதனை எட்டிப்பார்த்தது. புல் எப்போதும் போல்

தழைத்து நின்று கொண்டிருந்தது. அதை கண்ணுற்று வியப்படைந்த

கர்வாலிமரம், 'ஓ, சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே

அப்பலத்த புயற்காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய

அற்பப்புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப்புயலை சமாளிக்க

முடிந்தது?'என்று கேட்டது. அதற்கு அந்தப்புல் புன்முறுவுலுடன், 'அது

மிகவும் எளிதானது. காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை

குனிந்து கொள்வேன். அப்பொழுது அவை எனக்கு எந்த பிரச்சனையையும்

உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும்' என்று பதிலளித்தது,
.

.
தாழ்மை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம்

மற்றவரை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் மெய்யான மனத்தாழ்மையை

கற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு ஆவியின்

அடித்தளத்திலும் பெருமை நிறைந்திருக்கிறது. நம்மை யாராகிலும்

தரக்குறைவாய் பேசி அவமதிக்கும்போது நம் மனம் புண்படுமாயின்,

உண்மையில் புண்படுத்தப்பட்டிருப்பது நம்முடைய பெருமையே ஆகும்.
.

.
நாம் ஆழமாக புண்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று சொல்வோமாகில்

நம்மில் ஆழமான பெருமை இருக்கிறது என்றே பொருள். இருப்பினும் நாம்

அதை ஒத்துக் கொள்ள மனதற்றவர்களாயிருக்க கூடும். அதுவும்

பெருமையினிமித்தமே. மாறாக தாழ்மை நம் இருதயத்தில் தங்குமேயானால்

நிச்சயமாகவே தேவனுக்கு பிரியமற்ற அநேக காரியங்களிலிருந்து நாம்

தப்பிக்க முடியும். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.

தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிப்பதால் எப்போதும்

தாழ்மையையே தரித்துக் கொள்ள தேவன் நமக்கு கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!

.

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை

வாழ்நாளெல்லாம் அது போதுமே

சுகமுடன் தம் பெலமுடன்

சேவை செய்ய கிருபை தாருமே

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, தாழ்மையுள்ளவர்களுக்கு நீர் கிருபை அளிப்பதால், நாங்கள் எங்களை உம்முடைய சமுகத்தில் தாழ்த்துகிறோம் ஐயா. பெருமை எங்களுக்குள் வந்துவிடாதபடி, எங்களை எப்போதும் தாழ்த்த கிருபை தாரும். மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் என்ற வசனத்தின்படி மற்றவர்களை எங்களிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணும்படி தாழ்ந்த சிந்தையை எங்களுக்கு தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 27 மார்ச், 2013

27th March 2013 - கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 26-ம் தேதி - புதன் கிழமை
கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி
...

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். - (2 கொரிந்தியர்4:4).

.
ஒரு மனிதர் பார்வையற்றோர் தங்கி இருந்த இடத்தை காணும்படி சென்றிருந்தார். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை ஒன்று இருந்தது. அந்த மனிதர், அந்த பார்வையற்றோர் எப்படி பல்வேறு அலுவல்களை செய்ய அந்த நெருக்கடியான மற்றும் விரைவு வண்டிகள் செல்லும் நெடுஞ்சாலைகளை கடக்கின்றனர் என்பதை பார்த்து வியந்தார். மேலும் அவர்களை பார்த்து, 'எப்படி உங்களால் இந்த வாகன நெருக்கடி மிகுந்த சாலைகளில் விபத்திற்கு பயப்படாமல் இவ்வளவு தைரியமாய் கடக்கமுடிகிறது?' என்று கேட்டார். உடனே பார்வையற்றோரில் ஒருவர் சாதுரியமாக பதில் சொன்னார், 'இதுவரை விபத்துகளில் அகப்பட்டோரில் பார்வையில்லாதவர்கள் யாரும் உண்டா? பெரும்பாரும் பார்வையுள்ளவர்கள்தான் விபத்தில் மாட்டிக் கொண்டு அங்கவீனத்தையோ, உயிரிழப்பையோ சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்கள் பார்வையுள்ளவாகளாக இருந்தாலும், அவசர புத்தியே என்பது தெளிவாகிறது' என்றார். அதைக் கேட்ட அந்த மனிதர் அப்படியே அசந்து போனார்.

.

.
யோவான் எழுதின சுவிசேஷம் 9ம் அதிகாரம் முழுவதும் பிறவிக்குருடனை

பற்றியதே! அதில் சரீரப்பிரகாரமாக கண்பார்வையடைந்த பிறவிக்குருடன்,

ஞானப்பார்வையும் அடைந்தவனாக, 31ஆவது வசனத்தில் 'பாவிகளுக்கு

தேவன் செவிகொடுக்கிறதில்லை.. ஒருவன் தேவ பக்தியுள்ளவனாக இருந்து

அவருக்கு சித்தமானதை செய்தால் அவனுக்கு செவிகொடுப்பார்' என்று

சொல்வதைக் காண்கிறோம்.
.

.
ஆனால் அந்த நாட்களில் பரிசேயரும், வேத பாரகரும் இயேசுவே இரட்சகர்

என்ற உண்மையை உணராத அளவிற்கு அவர்களுடைய மனக்கண்கள்

குருடாக்கப்பட்டிருந்தன. ஆகவே பாவத்திலிருந்தும், அவர்கள் விடுதலை

பெற முடியவில்லை. 'அப்பொழுது இயேசு: காணாதவர்கள்

காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும்

நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அவருடனேகூட

இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும்

குருடரோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள்

குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று

சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலை நிற்கிறது என்றார்' (யோவான்

9:39-41). இதில் கிறிஸ்துவின் பார்வையில், பார்வையற்றோராய்

இருப்பவர்கள் தங்கள் பாவத்தை உணராதவர்களே ஆவார்கள்.
.

.
பிரியமானவர்களே, சரீரபிபரகாரமாக குருடாயிருந்தாலும் சரி, மனக்கண்கள்

குருடாக்கப்பட்டிருந்தாலும் சரி, இருதயத்தில் சுத்தமுடையவர்களே

பாக்கியவான்கள். அவர்களே தேவனை தரிசிக்க முடியும். பாவத்தை

மறைத்து வைத்தால் அவன் வாழ்வடைய முடியாது. அவற்றை அறிக்கை

செய்து விட்டுவிட்டால் மட்டுமே தேவ இரக்கத்தை பெற முடியும்.
.

.

'தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின்

ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு,

இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக்

குருடாக்கினான்' (2 கொரிந்தியர் 4:4) என்ற வார்த்தையின்படி இந்நாட்களில்

அநேகருடைய மனக்கண்களை இப்பிரபஞ்சத்தின் தேவன் என்னப்படும்

சாத்தான் குருடாக்கி வைத்திருக்கிறான். அவர்கள் கிறிஸ்துவின் மகிமையான

சுவிசேஷமாகிய அவரே வழி, சத்தியம், ஜீவன் என்கிற உண்மைகளை

உணராதபடி குருடாயிருக்கிறார்கள். அவர்களை ஒளியினிடத்திற்கு

அழைத்தாலும் வரமுடியாதபடி, உணராதபடி குருடர்களாயிருக்கிறார்கள்.

அவர்கள் சடுதியாய் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
.

.
தங்கள் பாவ வாழ்க்கையை விட்டு, குருட்டாட்டமான நம்பிக்கைளை விட்டு,

கண் திறக்கப்பட்டவர்களாக, கிறிஸ்துவை இரட்சகராக காண்பவர்களாக

ஒவ்வொருவரும் மாற வேண்டுமே என்கிற ஆத்தும பாரத்தோடு நாம்

ஒவ்வொருநாளும் ஜெபிக்க வேண்டும். கிறிஸ்துவின் மகிமையான

சுவிசேஷத்தை ஒளியை இவர்கள் காண வேண்டும். பிரகாசமான ஒளியாகிய

கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நித்திய ஜீவனை

இவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விடாமல் ஜெபிக்க

வேண்டும்.
.

.
நாமும் கூட நம் மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருந்தால், பாவ

வாழ்க்கையிலே ஜீவித்துக் கொண்டிருந்தால் இந்த நாளில் நானே

உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்று சொன்ன கிறிஸ்துவின்

ஒளியினிடத்திற்கு வந்து விடுவோமாக. அவரிடமிருந்து பிரகாசமான

ஒளியை பெற்று அவருக்கே சாட்சியாக வாழ நம்மை அர்ப்பணிப்போமாக.

ஆமென் அல்லேலூயா!

.
உம்மோடு இருக்கணுமே – ஐயா

உம்மைப்போல் மாறணுமே

லகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து

வெளிச்சம் கொடுக்கணுமே

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, இந்த பிரபஞ்சத்தின் தேவனான சத்துருவானவன் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளியை காணக்கூடாதபடி குருடாக்கியிருக்கிற மனக்கண்களை திறக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் கிறிஸ்துவே தேவனென்று அறிந்து, அவருடைய பிரகாசமான ஒளிக்குள் வந்து விடும்படி ஜெபிக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரமான மக்கள் அந்த ஒளியை பெறாதபடி, அறியாதபடி அழிந்து கொண்டிருக்கிறார்களே, அவர்கள் கிறிஸ்துவை அறிந்து மனம் திரும்பும்படி கிருபை செய்யும். இன்னும் கண்ணிருந்தும் குருடராக பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் கூட மனம் திரும்பி கர்த்தரிடம் வந்து விடுமாறு ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 26 மார்ச், 2013

26th March 2013 - தேவனே நமக்கு கேடகமானவர்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 26-ம் தேதி – செவ்வாய்க்கிழமை
தேவனே நமக்கு கேடகமானவர்
...

அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். - (சஙகீதம் 144:2).

.
1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்வெளி ஊர்தி கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த ஊர்தியில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.

.

அந்த விண்வெளிகலம் பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த ஊர்தியிலிருந்து கிடைத்தது. அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.

.

இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.

.

நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர். ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!

.

பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.

.

வேதத்தில் யோசேப்பும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தார். அவருடைய சகோதரர்கள் அவரை தூக்கி ஒரு குழிக்குள் போட்டு விட்டார்கள். யாருடனும் அவருக்கு தொடாபில்லாமல் போய் விட்டது. அவர் போட்ட சத்தங்கள் யார் காதிலும் கேட்கவில்லை. பின்னர் அவரை முன்பின் தெரியாத வியாபாரிகளிடம் விற்று போட்டார்கள். அவர் அநேக பாடுகளினூடே சென்றார். ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தினார். யோசேப்பு எதிர்பாராத உயர்வு அவருடைய வாழ்க்கையில் வந்தது.

.

ஒருவேளை நீங்களும் Black Hole என்று சொல்லப்படும் கடும் பாடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் படும் பாடுகளை அறிவார் யாரும் இல்லையோ? நீங்கள் கூப்பிடும் சத்தம் கர்த்தருக்கும் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களோ? உங்கள் வாழ்க்கை உங்களையும் மீறி போய் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ? தேவன் என்னை கைவிட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களோ? Black Hole அனுபவம் உங்களை தனிமையாக்கிற்றோ?

.

நம்முடைய தனிமை மற்றும் துன்பமான நேரங்களில் நம்மை விட்டு தேவன் தூர போனார் என்று நாம் நினைத்தாலும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவன் நம்மை விட்டு விலகாமல் நம் கூடவேதான் இருக்கிறார். நம்மை காக்கும் கேடகமாக நம்மை சுற்றிலும் இருக்கிறார். உங்களுக்கு ஏற்படும் அக்கினி போன்ற சோதனைகளிலும் உங்களை சுற்றி கேடகமாக அவர் உங்களை காத்து கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் அவரோடு இன்னும் ஆழமான உறவு வைத்து கொள்ள அவர் உங்களுக்கு இந்த பிரச்சனைகளை அனுமதித்திருக்கலாம். அவரையே பற்றி கொள்ளுங்கள். நீங்கள் கர்த்தருடைய பிள்ளையாயிருந்தால், ஒன்றை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை விட்டு விலகுவதேயில்லை என்று. யோபுக்கு அநேக துன்பங்கள் வந்தது, பிரச்சனைகள் வந்தது, ஆனால் ஒரு நாள் வந்தது, பிரச்சனைகள் மாறிப்போனது. இரட்டிப்பான நன்மைகள் யோபுவை வந்தடைந்தது. உங்கள் கண்ணீரையும், புலம்பலையும் காண்கின்ற தேவன் ஒருவர் உண்டு. அதற்கு பதில் கொடுக்கிறவரும் அவரே. அவரை பற்றி கொள்ளுங்கள். அவர் உங்களை மறப்பதில்லை! அவரே நமக்கு கேடகமும் நம்மை விடுவிக்கிறவருமானவர். ஆமென் அல்லேலூயா!

.

பயப்படாதே வலக்கரத்தாலே

பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்

பாசம் என்மேல் நீர் வைத்ததினால்

பறிக்க இயலாதெவருமென்னை

...

உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்

தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்

அக்கினியின் மதிலாக

அன்பரே என்னைக் காத்திடுமே


ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுக்கு கேடகமாக, அக்கினியின் மதிலாக எங்களை பாதுகாக்கிற உமது தயவிற்காக உமக்கு நன்றி. எங்களுக்கு வரும் பிரச்சனைகளினால் எல்லாரும் எங்களை கைவிட்டார்கள், என் தேவன் கூட என்னை மறந்தார் என்று நினைக்கும் நேரங்களிலும் நீர் எங்களுடனே எப்போதும் கூடவே இருக்கிற தேவன் என்பதை நினைத்து உம்மை சார்ந்து ஜீவிக்க எங்களுக்கு பெலனை தருவீராக. பிரச்சனைகளை மாற்றுவீராக. யோபை போலவும், யோசேப்பை போலவும் உயர்த்துவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
..

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 25 மார்ச், 2013

25th March 2013 - இருதய கடினம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 25-ம் தேதி - திங்கட் கிழமை
இருதய கடினம்
...

'குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்'. - (எரேமியா 18:4).

.

ஒரு குயவன் ஒரு மண்பாண்டத்தை வனைகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அப்படி செய்யும்போது, அவன் கையில் இருக்கும் களிமண் ஈரமாகவும், பதமாகவும் இருந்தால்தான் அவன் நினைத்த பாண்டமாக வனைய முடியும். அதே களிமண் இறுகிப்போய் காய்ந்து போய்விட்டால் அதை அவனால் வனைய முடியாது. அதை தூக்கி எறியத்தான் வேண்டும்.

.
அதைப்போலத்தான் நம் இருதயமும் கர்த்தருடைய வழிகளில் நடக்கும்படி உணர்வுள்ளதாகவும், ஆவியானவர் சொல்லுகிற பேசுகிற காரியத்திற்கு கேட்கும் வகையில் இருந்தால் நம்மோடு கர்த்தர் பேசுவதை நம்மால் உணர முடியும். நாம் பாவம் செய்யும்போதும், கர்த்தர் சொல்லும் காரியத்திற்கு செவிகொடாமல் போகும்போதும், பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் கண்டித்து உணர்த்துவதை நம் இருதயம் உணர்வுள்ளதாக இருந்தால் அதை நிச்சயமாக உணர முடியும். ஆனால் இருதயம் கடினப்பட்டு போய் விட்டால் ஆவியானவர் என்னதான் பேசினாலும், கடிந்து கொண்டாலும், அதை கேட்கும் தகுதியை நாம் இழந்து போய் விடுவோம்.
.
'கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது' (யாத்திராகமம் 7:22) என்றுப் பார்க்கிறோம். ஆரம்பத்தில் தேவனுடைய ஜனத்தை விடாதபடி அவனுடைய இருதயம் கடினப்பட ஆரம்பித்தது. ஆனால் தொடர்ந்து அவன் கடினப்பட கடினப்பட அவனிடமிருந்த கிருபை எடுத்துக்கொள்ளப்பட்டு, '..கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்..' (யாத்திராகமம் 9:12) என்ற வார்த்தையின்படி தேவனே அவனுடைய இருதயத்தை கடினப்படுத்தினார். ஆரம்பத்தில் நாம் அவருடைய வார்த்தையை கேட்காதபடி கடினப்படுத்த ஆரம்பிக்கும்போது, கர்த்தர் நாம் திரும்பி வந்து விட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். ஆனால் தொடந்து நாம் நம் இருதயத்தை கடினப்படுத்தினோமானால், அவருடைய கிருபை நம்மை விட்டு எடுபட்டுப்போய் விடும் நிலைமைக்கு சென்று விடுவோம்.
.
பிரியமானவர்களே, கிருபையின் காலத்தில் வாழும் நமக்கு தேவன் கிருபையாய் நாட்களையும், ஜீவனையும் கூட்டிக் கொடுத்து, நாம் அவருடைய எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டு அவரிடம் வந்து விடுமாறு அழைக்கிறார். ஆனால் அந்த சத்தத்தை கேட்காதபடி, 'பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்' (சங்கீதம் 58:4) என்ற வார்த்தையின்படி நாம் நம் செவியை அடைத்துக் கொண்டு நம் இருதயத்தை கடினப்படுத்தினோமானால், ஒரு நாள் வரும், யாரும் உதவி செய்யமுடியாத நிலைமை ஏற்படும். தன் இருதயத்தை மீண்டும் மீண்டும் கடினப்படுத்தின பார்வோனின் நிலையைக் குறித்து நாம் அறிவோம். ஆகவே நாம் ஜாக்கிரதையாய் நம் இருதயங்களை கடினப்படுத்தாதிருப்போம். 'இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்' (சங்கீதம் 95:8)
.
இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். அவருடைய வருகைக்கான அறிகுறிகள் அதிகமாய் நடந்துக் கொண்டிருக்கின்ற இந்த காலத்தில் நாம் நம் இருதயங்களை கடினப்படுத்தாதபடி, தேவையற்ற வைராக்கியங்களை புறம்பே தள்ளிவிட்டு, மன்னிக்க வேண்டியவர்களுக்கு மன்னித்து, கர்த்தருடைய சத்தத்திற்கு செவிக்கொடுத்து, அவருடைய மணவாட்டி சபையாக மாற நம்மை ஒப்புக் கொடுப்போம். தேவன் கிருபையாக நம்மை ஏற்றுக் கொண்டு அவரோடு நம்மை சேர்த்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!

.

உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்

புது ஆவியாலே நிரப்பிடுமையா

என் புகலிடமே என் புது பெலனே

உந்தன் சாயலாக மாற்றுமே

உந்தன் மார்பினில் சாய்ந்திடுவேன்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் இருதயம் எப்போதும் நீர் சொல்லும் வார்த்தைகளுக்கு கேட்கும்படியான மனப்பான்மையோடும், பக்குவத்தோடும், உணர்வுள்ளதாகவும் இருக்கட்டும் ஐயா. எந்த நிலையிலும் நாங்கள் எங்கள் இருதயத்தை கடினப்படுத்தி, உமக்கு பிரியமில்லாதவர்களாக மாறிப் போய் விடாதபடி, உணர்வுள்ள இருதயத்தை தாரும் தகப்பனே. கர்த்தருடைய வருகை சீக்கிரமாய் இருப்பதால் எப்போடும் நாங்கள் உம்மோடும், மற்ற அனைவரோடும் சமாதானமாய் ஜீவிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.