Friends Tamil Chat

புதன், 31 டிசம்பர், 2014

31st Dec 2014 – கனியுள்ள ஜீவியம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 டிசம்பர் மாதம் 31-ம் தேதி - புதன் கிழமை
கனியுள்ள ஜீவியம்
...............

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். - (லூக்கா 13:8-9).

.

இந்த வருடத்தின் ஆரம்பத்தை காண செய்த நம் அன்பின் தேவன் இந்த வருடத்தின் முடிவையும் காண செய்த அவரது மட்டில்லாத கிருபைக்காக அவரை முழு இருதயத்தோடும் ஸ்தோத்தரிப்போம். எத்தனையோ வாலிபர்கள், சிறுவயதுடையோர், நம்மை காட்டிலும் பலவான்களாக இருந்த அநேகர் நம்மோடு இந்த நாட்களை காணவில்லை. ஆனால் தேவன் நமக்கு அந்த கிருபையை பாராட்டி, நம்மை போஷித்து, பராமரித்து, பாதுகாத்து இந்நாள் வரை நம்மை நடத்தி வந்த அவருடைய கிருபைகளுக்காக அவரை துதிப்போமா?

.

நாளைக்கு நாம் இந்த வருடத்தை கடந்த வருடம் என்று சொல்ல போகிறோம். இந்த வருடம் நம்மில் அநேகருக்கு ஒரு வேளை ஆசீர்வாதம் நிறைந்த வருடமாக இருந்திருக்கலாம், தேவன் நமக்கு நிறைவாய் கொடுத்த வருடமாக இருந்திருக்கலாம், ஒரு சிலருக்கு இந்த வருடம் தங்கள் உயிருக்குயிரானவர்களை இழக்க கொடுத்த வருடமாக இருந்திருக்கலாம், அல்லது எத்தனையோ காரியங்களை இழந்த வருடமாக இருந்திருக்கலாம். ஆனால் நம்மை இதுவரைக்கும் வழி நடத்தி வந்து, நமக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்து, அரவணைத்து வந்தவர் நம் இரக்கங்களின் தேவனல்லவோ!

.

நம் உலக காரியங்களில் நம்மை ஆசீர்வதித்த நம் தேவனுக்கு எத்தனை உண்மையாக நாம் ஆவிக்குரிய காரியங்களில் இருந்தோம் என்றால் அது மிகவும் குறைவாகத்தான் இருக்கும். நமக்கு நேரம் போதாது என்பதே நாம் எப்போதும் கூறும் மன்னிப்பின் காரியமாக இருக்கிறது. நாம் இன்னும் ஆவிக்குரிய காரியங்களில் நம் கவனத்தை அதிகமாக திருப்புவதில்லை, நாம் அவருக்குரிய நேரத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

.

இயேசுகிறிஸ்து ஒரு உவமையை சொல்கிறார், 'அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 13:6-9). இந்த இடத்தில் ஒரு அத்திமரம் திராட்ச தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது, அது கனியை கொடுக்கும் என்றுதான் அந்த மரம் அங்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது பெரிய மரமானபோது, மூன்று வருஷங்கள் கழித்து, எஜமான் வந்து அதில் கனியை தேடினான். ஆனால் அதில் ஒரு கனியையும் அவன் காணவில்லை. அவனுக்கு கோபம் வந்து, 'இந்த மரம் திராட்ச தோட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தும் கனியை கொடுக்கவில்லையே, இதை ஏன் இங்கு வைக்கவேண்டும், இதை வெட்டி போட்டால் இது இருக்கும் நிலமாவது நமக்கு கிடைக்கும், சும்மா இடத்தை அடைத்து கொண்டு இருக்கிறது' என்று கூறுகிறான். அதற்கு தோட்டக்காரன் சொன்ன பதில், 'ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம்' என்று சொன்னான்.

.

ஆம், தேவனுடைய கிருபையின்படி, நமக்கு அவர் இன்னும் ஒரு வருடத்தையும் கூட்டி கொடுத்து, நமக்கு அவருடைய வார்த்தைகளை கிருபையாக சொல்லி கொடுத்து, வசனத்தின் மூலம் நம்மோடு பேசி, நாம் எப்படியாவது அவருக்கு கனி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய வாஞ்சையை நிறைவேற்றுவோமா? வருகிற வருடத்தில் அவர் நமக்கு எருபோட்டு, தண்ணீர் பாய்ச்சி நம்மை வளர்க்கும் போது, எஜமான் வந்து கனியை நம்மிடத்தில் தேடும்போது நாம் அவருக்கு விருப்பமான கனியை கொடுக்கத்தக்கதாக கனியுள்ள வாழ்க்கையை வாழ்வோமா?

.

'ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது' (யோவான் 15:5) என்று இயேசுகிறிஸ்து சொன்னாரே, அவரில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்கும் வாழ்க்கையை வாழும்படியாக நாம் புது வருடத்தில் புது தீர்மானத்தை எடுப்போமா? நமக்கு வாழ்வு கொடுத்த தேவனுக்கு புதிய வருடத்தில் அவருக்கு நம்மால் இயன்ற கனியுள்ள வாழ்க்கை வாழ அவருக்கு அர்ப்பணிப்போம்.

.

சென்ற வருடத்தில் கனியற்ற வாழ்வை வாழ்ந்த நம்மில் அநேகருக்கு இந்த புதிய வருடத்தில் கனியுள்ள வாழ்க்கை வாழும்படி தேவன் நம்மை கொத்தி எருபோட்டு, தண்ணீர் பாய்ச்சும்படி நம்மை விட்டு கொடுப்போம். அப்போது அவரில் நிலைத்திருந்து புதிய வருடத்தில் அதிக கனிகளை கொடுக்க தேவன் நமக்கு கிருபை செய்வார். ஆமென் அல்லேலூயா!

.

கனியில்லாத மரத்தை போல

நான் வாடி நின்றேனே

பரனேசு தம் கிருபையாலே

கனி தர செய்திட்டாரே

.

நான் கூப்பிட்ட நாளில் தானே

இயேசு சுவாமி செவி கொடுத்தாரே

நா வரண்ட வேளையிலே

ஜீவன் தந்திட்டாரே

.

ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே, இந்த வருடம் முழுவதும் தேவரீர் எங்களுக்கு பாராட்டின மட்டற்ற கிருபைகளுக்காக உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறோம் தகப்பனே. எங்களை போஷித்து, பராமரித்து, பாதுகாத்து வழிநடத்தின தயவுள்ள கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். இந்த வருடம் முழுவதும் நீர் எங்களிடத்தில் எதிர்ப்பார்த்த கனியுள்ள ஜீவியம் எங்களில் காணப்படாதிருந்திருக்குமேயானால், தயவாய் எங்களுக்கு மன்னித்து, வரப்போகிற புதிய வருடத்தில் நாங்கள் கர்த்தரில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்கிற ஜீவியத்தை செய்ய எங்களுக்கு கிருபை பாராட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

30th December 2014 - கர்த்தரே மெய்யான தெய்வம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 டிசம்பர் மாதம் 30-ம் தேதி - செவ்வாய் கிழமை
கர்த்தரே மெய்யான தெய்வம்
...

ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே

தெய்வம் என்றார்கள். - (1இராஜாக்கள் 18:39).

.

வாடச்மேன் நீ என்னும் அற்புத ஊழியரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் சீனாவில் ஆயிரக்கணக்கான வீட்டு சபைகளை நிறுவும்படி கடினமான பாதையில் ஊழியம் செய்தவர். ஒரு சமயம் மேஹ்வா என்னும் தீவில் கர்த்தருடைய ஊழியத்தை வைராக்கியமாய் செய்து வந்தார்.

.

அத்தீவின் கிராம மக்கள் ஜனவரி 11ம் தேதி தாங்கள் வழிபடும் கடவுளுக்கு பெரிய பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த கிராம மக்கள் மிகுந்த பெருமையுடன், 'கடந்த 286 வருடங்களாக இந்த பண்டிகை நாளில் மழை பெய்ததில்லை' என வாட்ச்மேனிடம் கூறினர். அப்போது அவருடன் வந்திருந்த சக ஊழியரான கியோசிங் லீ என்ற வாலிபன் சற்றும் தாமதியாமல், ' நான் உறுதியாகக் கூறுகிறேன், எங்கள் தேவனே உண்மையான தேவன். அவர் இந்த ஜனவரி 11ம் நாள் மழை வரச் செய்வார்' என சவால் விடுத்தார். அதற்கு அந்த தீவு மக்களும் 'அப்படி மழை பெய்தால் நாங்கள் அனைவரும் இயேசுவே தெய்வம் என்று ஏற்றுக் கொள்கிறோம்' என்றனர்.

.

கியோசிங் பேச்சைக் கேட்ட வாட்ச்மேன் நீ சற்றே திகைத்தார். 'ஏன் தேவையில்லாமல் இப்படி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும்' என மனதில் சற்று தடுமாற்றினாலும் மனதை தளரவிடாமல், தைரியத்துடன் ஜெபிக்க ஆரம்பித்தார். 'தகப்பனே, நாங்கள் எங்கள் எல்லையை மிஞ்சிவிட்டோமோ என்று எண்ணுகிறோம். ஆனாலும் உம்முடைய நாமத்திற்கு நீரே மகிமையை வரப்பண்ணும்' என குழுவாக கூடி ஜெபித்தனர்.

.

ஜனவரி 11ம் தேதியும் வந்தது. காலை தொடங்கி மதியம் வரை நல்ல மழை பெய்தது. கிராமத் தலைவரும் கிராம மக்களும் ஊழியர்களிடம் வந்து, 'பண்டிகை நாளை தவறாக மாற்றி சொல்லி விட்டோம். எங்களுக்கு பண்டிகை நாள் ஜனவரி 14ம் தேதிதான். அன்று மழை பெய்தால் பார்க்கலாம்' என்று கூறினர்.

.

மீண்டும் தொடர்ச்சியாக வாட்ச்மேன் நீயும் மற்றவர்களும் ஊக்கமாக ஜெபித்தார்கள். ஜனவரி 14ம்தேதியும் கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதனைக் கண்ட அந்த கிராமமே மனமாற்றமடைந்து கர்த்தரே தெய்வம் என்று ஏற்றுக் கொண்டது. பின்பு அங்கு ஒரு திருச்சபையும் நிறுவப்பட்டது.

.

இதேப் போன்று ஒரு நாள் எலியா தீர்க்கதரிசி கர்த்தரை விட்டு பினவாங்கிப் போய், பாகால்களை வணங்கின இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகவும் பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாகவும் கர்த்தரே தேவன் என்று முழக்கமிட்டு, 'நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன், அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்' (24ம் வசனம்).

.

அதன்படியே 'தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலி;ன் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்' (26ம் வசனம்). பதில் கொடுக்காத, கொடுக்க முடியாத தேவர்களை பார்த்து நாள் முழுவதும் கூப்பிட்டும் அவர்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.

.

'அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்' (36-37 வசனங்கள்) என்று எலியா தீர்க்கதரிசி சுருக்கமான ஆனால் கருத்துள்ள ஒரு ஜெபத்தை செய்தபோது, 'அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள் (38-39வசனங்கள்)அல்லேலூயா!

.

பிரியமானவர்களே, நாம் மறுபடியும் நம் தேவனே உண்மையான தெய்வம் என்று நிரூபிக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறோம். எலியாவின் தேவன் எங்கே என்று கேட்டு, விசுவாசத்தில் விரக்தி அடைந்தவர்களாக இந்த நாட்களில், அற்புதம் எங்கே நடைபெற போகிறது என்று அலுத்துப் போனவர்கள் உண்டு. அற்புதம் செய்யும் கர்த்தர் இன்றும் ஜீவிக்கிறார் ஆனால் நாம் ஒரு எலியாவைப்போல ஒரு வாட்ச்மேன் நீயைப்போல எழும்பினால் நம்மைக் கொண்டு தாம் ஒருவரே உண்மையுள்ள தேவன் என்று நிரூபிக்க கர்த்தரும் காத்திருக்கிறார்.

.

ஆனால் நாம் எலியாவைப் போலவும் வாட்ச்மேன் நீயைப் போல கருத்துள்ள ஜெபத்தையும், விசுவாசத்தையும் உடையவர்களாக மாறாவிட்டால் இப்போதிருக்கிற சூழ்நிலையில் நாம் விழுந்துப் போவோம்.

.

கர்த்தருடைய வார்த்தையையும், அவரே உண்மையான தெய்வம் என்பதையும் நாம் ஆணித்தரமாக அறியாதிருந்தால், விசுவாசியாதிருந்தால், பணத்தைக் கொடுத்து மதத்தை மாற்றும் கூட்டத்திற்கு ஒருவேளை இணங்கிப் போய் விட நேரிடும். ஆனால் வைராக்கியமாக எங்கள் தேவனே தேவன் என்று நிரூபிக்கிறவர்களாக, கர்த்தருக்காக நிற்கிறவர்களாக மற்றவர்களுக்கு சவால் விடுகிறவர்களாக நாம் மாறினால் மதத்தை மாற்றுகிறவர்களும் மனம் மாறி, கர்த்தரை ஏற்றுக் கொள்வார்கள். அவரே தெய்வம் என்று அறிவார்கள். விசுவாசத்தில் உறுதிப்படுவோமா? கர்த்தரே தேவன் என்று அறிக்கை செய்து அவருக்காக வாழ்வோமா? அவரே உண்மையான தெய்வம்! ஆமென் அல்லேலூயா!

.

எலியாவின் தேவன் நம் தேவன்

வல்லமையின் தேவன் நம் தேவன்

தாசர்களின் ஜெபம் கேட்பார்

வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

.

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்

என்றே ஆர்ப்பரிப்போம்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்

என்றே ஆர்ப்பரிப்போம்

.

வானங்களை திறந்தே வல்ல தேவன்

அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்

என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, நீரே மெய்யான தேவன் என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம் தகப்பனே. ஆனால் இன்னும் அந்த பெரிய, நிச்சயமான உண்மையை அறியாதபடி, மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருக்கிற ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் தகப்பனே. அவர்களும் நீரே தேவன் என்று அறியும்படி அவர்களின் கண்களை திறந்தருளும் தகப்பனே. இந்த நாட்களில் நீரே தேவன் என்று நிரூபிக்கும் எலியாக்களையும், வாட்ச்மேன் நீக்களையும் எழுப்பும். நீரே தேவன் என்பதை முழங்கி, ஆர்ப்பரிக்கட்டும். அப்போது அதைக் காணும் மற்றவர்கள் இரட்சிக்கப்படுவார்களே. தேவனே எழுப்புதலை எங்கள் தேசத்தில் அனுப்புவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 29 டிசம்பர், 2014

29th Dec 2014 - எதை தெரிந்தெடுப்பீர்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 டிசம்பர் மாதம் 29-ம் தேதி - திங்கட் கிழமை
எதை தெரிந்தெடுப்பீர்கள்?
..............

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - யோவான் 10:10.

.

ஒரு பணக்கார வாலிபன், மரித்து, பரலோக வாசலண்டை போனபோது, அங்கு பரிசுத்த பேதுரு நின்று அந்த வாலிபனிடம், 'நாங்கள் இங்கு ஒரு புதிய தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். பரலோகத்திற்கு செல்வதா அல்லது நரகம் செல்வதா என்று நீங்களே தீர்மானிக்கலாம்' என்றார். அப்போது அந்த வாலிபன், 'ஓ! இவ்வளவுதானே, நான் பரலோகத்திற்கு செல்லவே விரும்புகிறேன்' என்றுக் கூறினான். அப்போது பேதுரு, அப்படி தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல, அதற்கு முன்பு நரகத்தில் ஒரு நாளும், பரலோகத்தில் ஒரு நாளும் செசவழிக்க வேண்டும். அதன்பின், நீ முடிவெடுக்கலாம் என்றுக் கூறினார்.

.

முதலில், அவன் நரகத்திற்கு அனுப்பப்பட்டான். அங்கு போனவுடன், அருமையான ஒரு தோடடம் இருந்தது. அங்கு அவனுடைய பழைய நண்பர்களும், அவனோடு கூட வேலை செய்தவர்களும், அவனை வரவேற்று, பழைய கதைகளைப் பேசி, சந்தோஷமாய் நேரத்தைக் கழித்தார்கள். சாத்தானையும் அவன் சந்தித்தான். சாத்தானும் நல்ல மனிதனாகவே காணப்பட்டான். இரவில் நல்ல சாப்பாடு பரிமாறப்பட்டது. நேரம்போனதே தெரியாமல், அந்த நாள் முடிவடைந்தது. அடுத்த நாள் அவன் பரலோகத்திற்கு சென்றான். அங்கும், நாள் நன்றாகவே இருந்தது. மேகங்களில் மேல், பறந்தும், பாட்டுகளைப் பாடியும் அந்த நாள் முடிவடைந்தது.

.

அடுத்த நாள், பேதுரு வந்து அவனிடம், 'நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்?' என்றுக் கேட்டபோது, அந்த வாலிபன், ''பரலோகம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நரகத்தில் நான் என் நேரத்தை நன்கு செலவழித்தேன். ஆகவே நான் நரகத்திற்குச் செல்லவே விரும்புகிறேன்'' என்றுக் கூறினான். அப்படிச் சொன்னவுடன் அவன் நரகத்திற்கு உடனே அனுப்பப்பட்டான். அங்கு போனவுடன், முந்திய நாள் பார்த்ததைப்போல எந்த தோட்டமும் இல்லை. அழுக்கும் பூச்சிகளும், அருவருப்பான துர்நாற்றமும் வீசியது. அவனுடைய நண்பர்கள் கிழிந்த அழுக்கு உடைகளை அணிந்து, அசுத்தமாய் இருந்தனர். அவர்களை குட்டிப் பிசாசுகள் துரத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தன. அப்போது அவன் அங்கு வந்த சாத்தானிடம்,'' ''எனக்கு ஒன்றும் புரியவில்லை, நேற்று நான் வந்தபோது என் நேரம்போனதே தெரியாமல், சந்தோஷமாய் கழித்தேன், நல்ல சாப்பாடு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக இருக்கிறதே'' என்றுக் கேட்டதற்கு சாத்தான், வஞ்சக சிரிப்புடன், 'நேற்று உன்னை நாங்கள் இங்கு வருவதற்கு தெரிந்தெடுத்தோம். இன்று நீ எங்களில் ஒருவன்' என்று அலட்சியமாக சொல்லிவிட்டு, சாட்டையினால் அடித்து, வேலை செய்யும்படி விரட்டினான்.

.

இந்தக் கதை கற்பனையாக இருந்தாலும் சாத்தான் மக்களை தன் பக்கம் இழுப்பதற்காக பாவத்தையும் உலகத்தின் கவர்ச்சிகளையும் மிகவும், அழகாக காட்டி, இதுவே நல்லது என்று ஆத்துமாக்கள் நினைக்கும்படியாக அவர்களை மயக்கி தன் பக்கம் இழுக்கிறான். ஆனால், அவர்கள் உண்மையான சாமாதானத்தையும், சந்தோஷத்தையும் இயேசுகிறிஸ்துவின் தனிப்பட்ட உறவின் மூலமும், அவருடைய இரத்ததத்தினால் கழுவப்பட்டாலொழிய கிடைக்காது என்பதையும் மறைத்து பாவத்தை மிகவும் அருமையாக கவர்ச்சிகரமாக காட்டுகிறான். அவனுடைய தந்திரத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரும் வெளியே வருவது மிகவும் கடினம். சிக்கிக் கொள்ளாதபடி நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். சாத்தான் தனக்கு கொஞ்ச காலம்தான் உண்டென்று அறிந்து, தன்னால் இயன்ற வரை ஆத்துமாக்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காக உலக சந்தோஷங்ளை காட்டி, அதுதான் வாழ்க்கை என்பதைப் போல் அவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறான். கிறிஸ்துவுக்கு விரோதமாக வாழ்வதும், பாவங்களை செய்வதிலுமே சந்தோஷம் இருப்பதைப் போல் அவன், செய்கிற காரியங்களில் ஆத்துமாக்கலும் இழுப்புண்டு பாவத்தை தண்ணீரைப போல குடிக்கிறார்கள்.

.

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள் (நீதிமொழிகள். 16:25) என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுகிறது. நம்முடைய வழிகள் அல்ல, நம்முடைய ஞானம் அல்ல, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமும், அவரே தேவனென்று அறிக்கையிட்டு, அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதுமே நம்மை பரலோகம் சேர்க்கும். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று அப்போஸ்தலர் 4:12ல் வேதம் நமக்கு தெளிவாக கூறுகிறது. ஆகவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்போம். இரட்சிப்பை இலவசமாக பெற்றுக் கொள்வோம். அவருக்கென்று வாழ்வோம். சாத்தானின் தந்திரங்களை முறியடிப்போம். அவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். ஆனால் கிறிஸ்துவோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார். அவரை நம்புவோம். அவருக்குள் வாழ்வோம் பாலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம். ஆமென் அல்லேலூயா!

.

கல்வாரியின் அன்பினையே

கண்டு விரைந்தோடி வந்தேன்

கழுவும் உம் திரு இரத்தத்தாலே

கறை நீங்க இருதயத்தை

.
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்துகிற நல்ல தகப்பனே, இந்த நாளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிசாசானவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறதை நாங்கள் அறிந்து அவனுடைய தந்திரங்களுக்கு தப்பி ஜீவிக்க ஒவ்வொரு நாளும் எங்களுக்குக் கிருபைச் செய்யும். எங்கள் பாவங்களை உம்முடைய சமுகத்தில் அறிக்கையிடுகிறோம். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எங்கள் பாவங்களை நீக்கி சுத்திகரிக்கிறதற்காக நன்றி. உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை எங்கள் உள்ளத்தில் அழைக்கிறோம். அவரை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறோம். நீர் எங்களை உம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்வதற்காக நன்றி. எங்கள் பாவங்களை மன்னித்ததற்காக நன்றி பரலோக இராஜ்ஜியத்திற்கு எங்களை பாத்திரவான்களாக மாற்றியதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 28 டிசம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:   28th டிசம்பர்  2014

.
1) “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று 

....சொல்லலாமே' என்று வாசிப்பதெங்கே?
.
2) தகப்பனுடம் மகளும் ஒரே சமயம் சுட்டெரிக்கப்பட்டது எங்கே?
.
3) மரிக்கிறதற்கு முன்னே தனக்குச் சொந்த கல்லறை உண்டாக்கி

   வைத்த ராஜா யார்?
.
4) இஸ்ரவேல் சேனைகளால் கொல்லப்பட்ட மீதியானியரின் ஐந்து

  ராஜாக்கள் யார்? யார்?

.
5) “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்

    என்று சொல்வீர்கள்' என்று வாசிப்பதெங்கே?
.
===========================================
.
உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து

தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர்

சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs.

- Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?  எந்த அதிகாரத்தில்?

   எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================
இந்த சம்பவம் என்ன?

=====================================================
.
கடந்த  வார கேள்வி பதில்கள்:   21 டிசம்பர் 2014
.
1)  தன் வேலைக்காரன் உருவக் குத்தினதினால் செத்துப்போன ராஜா யார்?
.
சரியான விடை : அபிமெலேக்கு - நியாயாதிபதிகள் - 9:53-54.
.
2) தகப்பனையும் அவன் பிள்ளைகளையும் மரத்திலே தூக்கிக்கொன்று போட்டார்கள். அவர்கள் யார்?
.
சரியான விடை :  ஆமானும் அவன் பத்து பிள்ளைகளும்

- எஸ்தர் 7:10 , 9:6-,14,25
.
3) தகப்பனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டப்பட்ட

   பிள்ளைகள் யார்?
.
சரியான விடை : சிதேக்கியாவின் குமாரர், - 2இராஜாக்கள் 25:1-7,
.
4) தன் ஒரே மகளை பொருத்தனையினிமித்தம் சர்வாங்க

   தகனபலியாக செலுத்தினவன் யார்?
.
சரியான விடை : யெப்தா - நியாயாதிபதிகள் - 11:29-40
.
5) எகிப்பியன் கையிலிருந்த ஈட்டியை பறித்து அவன்

   ஈட்டியினாலே அவனைக் கொன்று போட்டவன் யார்?
.
சரியான விடை : பெனாயா - 2சாமுவேல் 23:21.
.

======================================================
.
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே

உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.
.

1) Sis.M.Vijayarani Manonmani.. 2) Sis. Sobitha Lawrence..
.
3) Sis.Chandralekha Martin...4) Dr.I. Dinaharan..5)Bro.S.Rajesh
.
6) Bro.R.Silas..7)Sis.Sheela Rajesh..8) இரா. தமிழ்மணி
.
9) Bro.K.Naveen Prabhakaran..10)Bro.L.Samuel George
.
11)Miss.G.stella..12)Bro.Prabhu Johnson..13)Mrs.Christy Mohan
.
14)Bro.J.Bright Christopher..15)Mrs.Sudha Kirubanandhan
.
16)Sis.S.Beena Lawrence..17) Mrs. Kala Simon..18)Bro.Jaskiru John
.
19)Sis. Anita Priyakumar...20)Bro.Victor Jayakaran..
.
21) சகோதரி சரஸ்வதி....  22)Bro. K.Elayaraja..24)Ms.S. Rahel
.
25)Mrs.B.Jeyaseeli Jawahardoss..26)Miss.V.Rajeswari@Deborah
.
27)Sis. Sudha William..
.
2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி மனதை காத்து கொண்டிருந்தபோது கர்த்தருடைய தூதன் வந்து நின்றான் கர்த்தருடைய மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்தது . தேவதூதன் எல்லோருக்கும் சந்தோஷத்தை உண்டாகும் நற்செய்தி அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் . - லுக்கா 2: 8-14.
.
.

வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1) Sis.M.Vijayarani Manonmani..2) Sis.Sobitha Lawrence
.
3) Sis.Chandralekha Martin..4)Dr.I.Dinaharan..5)Bro.S.Rajesh
.
6) Bro.R.Silas..7)Sis.Sheela Rajesh..8)இரா. தமிழ்மணி..
.
9) Bro.K.Naveen Prabhakaran..10)Bro.L.Samuel George
.
11)Miss.G.stella..12)Bro.Prabhu Johnson..13)Mrs.Christy Mohan
.
14)Bro.J.Bright Christopher..15) Sis. Kamini David..
.
16)Mrs.Sudha Kirubanandhan,,17) Sis.S.Beena Lawrence..
.
18)Mrs.Kala Simon..19)Mrs.S.Merlin Jayakumar..
.
20)Bro.Jaskiru John..21)Sis. Anita Priyakumar
.
22)Bro.Victor Jayakaran..23)சகோதரி சரஸ்வதி.
.
24)Bro.K.Elayaraja..25)Ms.S.Rahel..26) Mrs.B.Jeyaseeli Jawahardoss
.
27)Miss.V.Rajeswari@Deborah..28)Sis. Sudha William..
.
===================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

புதன், 24 டிசம்பர், 2014

24th December 2014 – ஜெயங் கொடுக்கும் தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 டிசம்பர் மாதம் 24-ம் தேதி - புதன் கிழமை
ஜெயங் கொடுக்கும் தேவன்
..................

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். - (1 கொரிந்தியர் 15:57).

.

ஒரு விவசாயியும் அவருடைய நண்பரும் காட்டில் வாத்துக்களை பிடிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்தனர், அவர்கள் தங்கள் பேச்சை கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விவசாயியின் நண்பர், 'நீர் எப்போதும் உமக்கும் சத்துருவுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் கூறுகிறீரே, நான் ஒரு கிறிஸ்தவன் கூட இல்லை. ஆனால் எனக்கு அந்த மாதிரி போராட்டங்கள் எதுவுமே இல்லையே' என்றுக் கூறினார். அதற்கு அந்த விவசாயி சொனனார், 'நாம் இப்போது வேட்டையாடப் போகிறோம், அதில் இரண்டு வாத்துக்கள் அடிபட்டு ஒன்று இறந்துப் போகிறது, மற்றது தப்பி ஓடப் பார்க்கிறது, இதில் எதை நீர் பின்தொடருவீர்' என்றுக் கேட்டார். அதற்கு நண்பர், 'தப்பியோடப் பார்ப்பதைத்தான், ஏனென்றால், இறந்துக் கிடப்பதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமே!' என்றுக் கூறினார். அப்போது விவசாயி, 'சாத்தானுக்கு தெரியும், நீர் இறந்துப் போன வாத்து என்று' என்றுக் கூறினார்.

.

கர்த்தருடைய வழிகளில் நடக்கிறவர்களை குறிவைத்து, சாத்தான் எப்போதும் தாக்குதல்களை அனுப்பிக் கொண்டே இருப்பான். ஏனென்றால் நாம் கர்த்தருக்கு என்று எதையும் செய்ய துணிந்தவர்கள் என்றும், இவர்களை விட்டு வைத்தால் உலகத்தையே கலக்கிவிட்டு வந்துவிடுவார்கள் என்றும் அவனுக்குத் தெரியும், அந்த பயத்தினால், அவன் நம்மோடு போராடிக் கொண்டே இருப்பான்.

.

ஆனால் அவன் என்றும் தோற்றுப் போனவன். அவன் ஒரு நாளும் நம்மை ஜெயங் கொள்வதில்லை. நாம் போராடி அவனை மேற்க் கொள்வோம். ஏனென்றால் ஜெயக்கிறிஸ்து நம் பக்கம் இருக்கிறார்.

.

'நான் கர்த்தரை விசுவாசித்து, அவருடைய வழிகளில் நடக்கிறேன். ஆனால் எனக்கு எத்தனை சோதனைகள், எத்தனை பாடுகள்' என்றுச் சொல்லுகிறீர்களா? யோபு தன் காலத்தில் வாழ்நதவர்களிலே தேவனே மெச்சிக் கொள்ளும் அளவு நீதிமானாய் வாழ்ந்தான். அவனையும் சாத்தான் விட்டு வைக்கவில்லை. அவனுக்குரிய எல்லாவற்றையும் தேனுடைய அனுமதியோடே பறித்துக் கொண்டான். ஆனால், கடைசி வெற்றி யாருக்கு? நிச்சயமாக யோபுவிற்குத்தான். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். - (யோபு 42:12,13). ஆகவே சோர்ந்துப் போகாதீர்கள்! வெற்றி நமக்குத்தான்! நீங்கள் இழந்துப் போன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள், ஆமென்! தேவன் நம்பட்சத்தில் இருக்கும் போது நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? – (ரோமர் 8:31).

.

ஆனால் நம்முடைய போராட்டம், நாம் காண்கிற மனிதர்களோடு அல்ல, வசனம் சொல்கிறது, 'ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு' - (எபேசியர் 6:12). நாம் காண்கிற மக்கள் அல்ல நம் எதிரிகள். அவர்களுக்கு பின்னாக இருந்து கிரியை செய்கிற பிசாசின் தந்திரங்களே நமக்கு எதிரிகள். நாம் சாதாரண மனிதர்களோடே சண்டையிட்டு, வழக்காடி எந்தப் பிரயோஜனமுமில்லை. ஆனால் அவர்கள் நமக்கு எதிராக வரும் போது, அவர்களுக்கு பின்னாக கிரியை செய்கிற அந்தகார சக்திகளை இயேசுவின் நாமத்தில் நாம் கடிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு முன்பாக அல்ல, மனதில் கடிந்துக் கொள்ள வேண்டும். நம் ஜெபங்களில் கடிந்துக் கொண்டு ஜெபிக்க வேண்டும். இயேசுவின் நாமத்தில் உள்ள வல்லமையால் அவைகள் தோற்கடிக்கப்பட்டு; பறந்தோடிக் போகும்.

.

எந்த பெரிய போராட்டம் என்றாலும் இறுதி வெற்றி நமக்கே! ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்று சோர்ந்துப போகாதிருங்கள்! இயேசுவின் நாமம் என்கிற பெரிய ஆயுதம் நம் கைகளில் உண்டு. அதற்கு மேலாக எந்த அதிகாரமும் இல்லை எந்த வல்லமையும் இல்லவே இல்லை. ஆமென் அல்லேலூயா!

.

அந்தகார வல்லமைகளை

தேவ பெலத்தால் முறியடிப்பேன்

இயேசுவின் நாமம் எந்தன் பாதுகாப்பு

பயமில்லை வெற்றி எனக்கே

என்றும் பயமில்லை வெற்றி எனக்கே

.

ஜெபம்
எங்களை கைகளை போருக்கும் எங்கள் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற எங்கள் கன்மலையாகிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திம்.
நாங்கள் சத்துருவோடே செய்யும் போராட்டங்களில் எங்களுக்கு எப்போதும் வெற்றியை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கொடுப்பதற்காக உமக்கு நன்றி. தோற்றுப் போன சத்துருவோடு நாங்கள் செய்யும் போராட்டங்களில், எங்களுக்கு என்றும் வெற்றி உண்டு என்பதை அறிந்து அதைக் கொடுக்கிற எங்கள் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்களை செலுத்துகிறோம்.

எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

23rd December 2014 தந்தேன் என்னை இயேசுவே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 டிசம்பர் மாதம் 23-ம் தேதி - செவ்வாய் கிழமை
தந்தேன் என்னை இயேசுவே
...

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. - (சங்கீதம் 143:10).

.
லண்டன் மிஷனெரி சங்கத்தை சேர்ந்த ஆங்கிலேய மிஷனெரி ஒருவர் கொடைக்கானலில் தங்கியிருந்து ஊழியம் செய்து வந்தார். இவர் ஒரு முறை பிரயாணமாக தன் குதிரையில் வத்தலகுண்டு வந்திருந்தார். தன் வேலைகளை முடித்துவிடடு திரும்புமுன் வத்தலக்குண்டில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டப்பின்னர், இலையை போட்டுவிட்டு கையைக் கழுவும்படி சென்றார்.

.

அப்பொழுது அவர் சாப்பிட்டு விட்டு போட்ட இலையில் மீதியிருக்கும் உணவு துணிக்கைகளை ஒரு பையன் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதைக் கண்ட மிஷனெரி உடனடியாக அப்பையனுடைய இரண்டு கைகளையும் தடுத்து அந்த உணவகத்தில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.

.

பின்பு அந்தப்பையனைப் பார்த்து, 'தம்பி உன் வீடு எங்குள்ளது? உன் பெற்றோர் என்ன செய்கிறார்கள்?' எனக் கேட்டார். 'எனக்கு யாருமே இல்லை ஐயா, வீடும் எனக்கு கிடையாது' என அப்பையன் கூறினான். அதைக் கேட்ட மிஷனெரி 'என்னுடன் வருகிறாயா? என்னுடன் தங்கியிருக்க உனக்கு விருப்பமா?' எனக் கேட்டவுடன் அப்பையனும் அதற்கு இசைந்து அவருடன் சென்று கொடைக்கானலில் தங்கினான்.

.

சில வருடங்கள் கடந்தோடின. அந்த சிறுபையன் வாலிபனாகி வி;ட்டான். அதன் மத்தியில் அந்த மிஷனெரிக்கு பணியிட மாறுதலாக திரும்ப லண்டன் வரும்படி அழைப்பு வந்தது. லண்டன் கிளம்ப ஆயத்தமான மிஷனெரி தான் பராமரித்து வந்த அந்த வாலிபனிடம், 'தம்பி நான் நீண்ட தூரம் பயணம் போகிறேன். இனிமேல் நீயும் நானும் சந்திப்போம் என்பது மிகவும் அரிது. நான் போனபின்பு நீ என்ன செய்யப் போகிறாய்? உன் எதிர்காலத்திட்டம் என்ன?' எனக் கேட்டார். கண்களில் கண்ணீர் துளிகள் நிரம்ப அவ்வாலிபன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துத் தான் எழுதிய பின்வரும் பாடலை பாடினாராம்,

.

தந்தேன் என்னை இயேசுவே

இந்த நேரமே உமக்கே

.

இப்பாடலை பாடி பின்பு மிஷனெரியைப் பார்த்து 'என்னை மீட்டு எனக்கு புது வாழ்வைக் கொடுத்த இயேசுவுக்கே என் எதிர்காலம்' எனக் கூறினாராம்.

.

பிரியமானவர்களே, நாம் இந்த வருடத்தின் முடிவிற்கு வந்து விட்டோம். இந்த வருடம் முழுவதும் நம்மை நடத்தி வந்த வழிகளை நினைத்துப் பார்த்தால் கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நம் தேவைகளை அதிசயமாய் சந்தித்தாரே! நம் கண்ணீரை துடைத்தாரே! வியாதியில் நம் வியாதிப்படுக்கையை மாற்றிப் போட்டாரே! ஒவ்வொரு நாளும் நம்மை அதிசயங்ளை காணச் செய்த தேவன் அல்லவா?

.

நமக்கு இன்னும் எத்தனையோ நன்மைகளை செய்த தேவனுக்கு நாம் என்ன சொல்லி துதிக்கப் போகிறோம்? ஒன்றுமில்லாமையிலிருந்து அந்த சிறுவனை ஒரு மகனைப் போல தத்தெடுத்து அந்த மிஷனெரி வளர்த்து ஆளாக்கியதுப் போல ஒன்றுமில்லாமையிலிருந்து நமக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்கள்தான் எத்தனை எத்தனை! அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நாம் இந்நாளில் இந்த நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்றால், நாம் தேவனை, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காகவல்லவா!

.

அந்த வாலிபனைப் போல நம்மையே கர்த்தருக்கு அர்ப்பணிப்போமா? தந்தேன் என்னை இயேசுவே என்று அவரிடம் நம்மையே கொடுப்போமா? அவருக்காக வாழ்வோமா? அப்படி நம்மையே அவருக்கு கொடுக்கும்போது அவர் நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

.

தந்தேன் என்னை இயேசுவே

இந்த நேரமே உமக்கே

உந்தனுக்கே ஊழியம் செய்ய

தந்தேன் என்னை தாங்கியருளும்

.

உந்தன் சித்தமே செய்வேன்

எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்

எந்த இடம் எனக்கு காட்டினும்

இயேசுவே அங்கே இதோ போகிறேன்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே இந்த வருடத்தின் கடைசி நாட்களை நாங்கள் சுகத்தோடு பெலத்தோடு காண செய்த உமது மட்டில்லா கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். இந்த வருடம் முழுவதும் எங்களை காத்தீரே, வழிநடத்தினீரே, அதிசயங்களை காணச் செய்தீரே உமக்கே நன்றி ஐயா. தொடர்ந்து உமக்காக ஜீவிக்க கிருபை தாரும். எங்களையே உம்மிடம் அர்ப்பணிக்கிறோம் தகப்பனே, எங்களை எடுத்து பயன்படுத்தும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.