Friends Tamil Chat

செவ்வாய், 31 டிசம்பர், 2013

முன்னானவைகளை நாடு - 31st Dec 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 டிசம்பர் மாதம் 31-ம் தேதி - செவ்வாய்க் கிழமை
முன்னானவைகளை நாடு
.....

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். - (பிலிப்பியர் 3:13-14).

.

இன்று பழைய வருடத்தை முடித்து விட்டு நாளை நாம் புதிய வருடத்தில் காலடி எடுத்து வைக்க போகிறோம். எத்தனையோ பேர் இந்த புது வருடத்தை காண வேண்டுமென்று வாஞ்சித்தும் காணாமல் மண்ணுக்கு மண்ணாக போயிருக்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு கொடுத்த கிருபைகளுக்காக அவரை துதிப்போம்.

.

ஒருவேளை நாம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சில தீர்மானங்களை எடுத்திருப்போம். நான் கர்த்தருக்குள் இதை செய்ய வேண்டும், வேதத்தை அதிகமாய் வாசிக்கவேண்டும், ஜெபிக்க வேண்டும், இன்னும் கர்த்தருக்காய் ஊழியம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து கொஞ்ச காலம் அதை நிறைவேற்றி இருப்போம், ஆனால் நாளாக ஆக, வேலை பளு மற்றும் மற்ற காரணங்களினால், அதை நிறைவேற்றாமல் போயிருப்போம். வர போகும் புது வருடத்தில் நாம் எடுக்கிற தீர்மானங்களில் நிலைத்திருக்க புது வருடம் வருவதற்கு முன்பாகவே தீர்மானம் செய்வோம்.

.

நமக்கு இந்த வருடத்தில் தேவன் அநேக தருணங்களை கொடுத்து, கர்த்தருக்குள் வளர கிருபை செய்திருப்பார், ஆனால் அதை தட்டி கழித்திருந்தால், வரபோகும் புது வருடத்தில் கர்த்தருக்குள் வாழ முடிவெடுப்போம்.

.

இனிவரும் காலங்களில் சமாதானம் பூமியிலிருந்து எடுத்து போடப்படும். கர்த்தரின் வருகை சீக்கிரமாய் இருக்க போவதால், இந்நாட்களில் அக்கிரமம் தலைவிரித்தாடி கொண்டிருக்கிறது. நாட்களும் வேகமாய் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிசாசானவன் தனக்கு கொஞ்ச காலம் மாத்திரம் இருக்கிறதென்பதை அறிந்து, முழு பெலத்தோடு இக்கடைசி நாட்களில் மக்களை பாதாளத்திற்கு நேராக இழுத்து சென்று கொண்டிருக்கிறான். உலகத்தின் நிலைமை இன்னும் மோசமாகி கெணடிருக்கும் இந்நாட்களில், நாம் கர்த்தரை மாத்திரம் பிடித்து கொள்வோம்.

.

கர்த்தரை நாம் பிடித்து கொண்டால், எல்லா நன்மையான ஊற்றுக்கும் அவரே அதிகாரி. புது வருடத்தில் புது ஆசீர்வாதங்களும், புது வாக்குதத்தங்களும் வேண்டும் என்று நாம் வாஞ்சிக்கும் அதே வேளையில், நாம் கர்த்தரை பிடித்து கொண்டால் அவரே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்மைகளுக்கும் முற்றும் காரணர். அவர் நமக்குள் இருந்தால் எல்லா ஆசீர்வாதங்களும் நம்மை வந்தடையும். நாம் அவரை விட்டு விட்டால், நாம் எந்த இடத்திற்கு சென்று, ஜெபிக்க கேட்டு கொண்டாலும், அந்த ஆசீர்வாதம் நம்மை வந்தடையாது. வரபோகும் புது வருடத்தில் எல்லா நன்மையான ஊற்றுக்கும் காரணராகிய இயேசுகிறிஸ்துவை பற்றி பிடித்து கொள்வோம். நாம் எந்த விதத்திலும் குறைவுபட மாட்டோம்.

.

ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் (1 கொரிந்தியர் 5:8) என்ற வார்த்தையின்படி எல்லா துர்க்குணங்களையும் நாம் களைந்துவிட்டு ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின - (2 கொரிந்தியர் 5:17) என எல்லாவற்றையும் புதிதாக்கினவர்களாக நாம் புதிய வருடத்தில் பிரவேசிக்க தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக.

.

இந்த வருடத்திலும் நாம் தவறவிட்ட காரியங்களையும், நாம் இழந்த காரியங்களையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிராமல், புது வருடத்தில் புது நம்பிக்கையோடு பிரவேசிப்போம். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்ற பவுலின் வார்த்தைகளின்படி, இந்த வருடத்தின் கசப்பான, வருத்தமான, வேதனையான, துன்பமான, துக்கமான காரியங்களை நாம் மறந்து, புது வருடத்தில் நமக்கு முன்பாக வரப்போகிற நன்மையான காரியங்களை எதிர்நோக்கி, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருவோம். கர்த்தர் நம்மை எந்த வேளையிலும் கைவிடவே மாட்டார் என்பதை ஆணித்தரமாக நம் உள்ளத்தில் பதிய வைத்து, அவருடைய கரங்களை பிடித்தவர்களாக நாம் புது வருடத்தில் பிரவேசிப்போம். புது வருடம் நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமான வருடமாக இருக்கும் என விசுவாசித்து அந்த நம்பிக்கையோடே நாம் புது வருடத்திற்குள் பிரவேசிக்க தேவன்தாமே நமக்கு கிருபை செய்வாராக! புது வருடத்தில் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும்வரை தேவனுடைய மாறாத கிருபை நம்மை சூழ்ந்திருப்பதாக! அல்லேலூயா!

.

புதிய ஆண்டுக்குள் என்னை நடத்தும்

புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா

புது பெலனை தாரும் தேவா

ஜெபம்
எல்லா நன்மையான ஊற்றுக்கும் காரணராகிய எங்கள் நல்ல தகப்பனே, வருடத்தின் இந்த கடைசி நாட்களை நாங்கள் காணும்படி செய்த கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். இந்த பழைய வருடத்திலும் நீர் எங்களுக்கு பாராட்டின எல்லா கிருபைகளுக்காவும் உம்மை துதிக்கிறோம். நாங்கள் புது வருடத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக, எங்களுடைய பழைய பாவ வாழ்க்கை, துர்க்குணம், கசப்பான வாழ்க்கை எல்லாவற்றையும் நாங்கள் விட்டுவிட்டு உம்முடைய புது கிருபையோடு நாங்கள் புது வருடத்தில் பிரவேசிக்க உதவி செய்யும். எங்கள் ஆசீர்வாதங்களுக்கு ஊற்றாகிய உம்மை நாங்கள் பற்றி கொள்கிறோம். இந்த பழைய வருடத்தில், தவறவிட்ட தீர்மானங்களை புது வருடததில் நிறைவேற்ற எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

27th Dec 2013 - நமது வெற்றிக் கொடி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 டிசம்பர் மாதம் 27-ம் தேதி – வெள்ளிக்கிழமை
நமது வெற்றிக் கொடி
.....

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். – ஏசாயா. 40:31.

.
ஒரு உற்சாகமான வாலிபன் இல்லினோயிஸின் (Illinois) சட்டசபை தேர்தலில் நின்று வெகு சொற்ப ஓடடுகளை எடுத்து படுதோல்வியடைந்தான். மனம் சோர்வடையாமல், தன் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினான். ஆனால் அவனுடன்கூட இருந்து வியாபாரம் செய்தவன் அவனை ஏமாற்றியபடியால் பணமெல்லாம் செலவாகி, கடனை வாங்கி, அவற்றை செலுத்தி முடிக்க 15 நீண்ட வருடங்கள் ஆனது.

.

பின் அவர் வாழ்வில் வந்த ஒரு அழகிய பெண் வசந்தத்தைக் கொண்டு வருவாள் என்று எதிர்ப்பார்த்தார். அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தபோது அவளுக்கு மலேரியா காய்ச்சல் வந்து அவள் மரித்துப் போனாள். கடைசியாக, திரும்பவும் அரசியலில் நுழைந்து, மாநில அளவில் அவர் நின்று ஜெயித்தபடியால், அவருக்கு தேசிய அளவில் நிற்க வேண்டும் என்று தோன்றிற்று. ஆனால் அதுவோ அவருக்கு எட்டாதக் கனியாகத் தோன்றிற்று. ஆனால் இரண்டாவது முறையாக அவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் நின்று ஜெயித்தார். ஆனால் அவருக்கு போதிய அளவு அவையில் ஆதரவு இல்லாததால், இரண்டு வருடங்கள் கழித்து, வாஷிங்டனை விட்டே வெளியே செல்ல நேரிட்டது.

.

இத்தனை நடந்தும் அவர் மனம் சோர்ந்துப் போகவே இல்லை. திரும்பவும், அமெரிக்க பாராளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினராக போட்டியிட்டார். தோற்றுப் போனார். இரண்டாவது முறையாக நின்றும் தோற்றுப் போனார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஒரு நாள் தான் எப்படியும் வெற்றிப் பெறுவோம் என்று நம்பிக்கையோடு விடாது முயற்சி செய்தார். அவரது முயற்சி வீண் போகவில்லை. இறுதியாக வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் ஜனாதியதியாக நுழைந்தார். அவர் தான் கறுப்பர்களின் விடுதலைக்காக போராடிய அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) ஆவார். அவர் ஒரு சிறந்த கிறிஸ்தவராக இருந்தபடியால் ஒரு சிறந்த ஜனாதிபதியாக இன்று வரைப் போற்றப்படுகிறார்.

.

ஆம் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வியா? மனம் சோர்ந்துப் போகாதீர்கள். என்ன வாழ்க்கை என்று கசந்துக் கொள்ளாதிருங்கள். விடா முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்று இப்போது புகழ் பெற்று விளங்குகிறவர்கள் யாருக்கும் வெற்றி உடனே வந்து விடவில்லை, அவர்களுடைய விடா முயற்சியும், கர்த்தர் மேல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையுமே அவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். ஏசாயா 40:31 என்று வசனம் கூறுகிறது. கர்த்தர் எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். நாம் அவரை உறுதியாய் பற்றிக் கொண்டிருப்போமானால், தோல்வியைக் கண்டு துவள மாட்டோம். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று சங்கீதம் 37:5 -ல் வாசிக்கிறோம். நமது தேவன் யெகோவா நிசி, நம் ஜெயக் கொடியானவர். நமக்கு ஜெயத்தை தராமல் யாருக்கு ஜெயத்தை தரப் போகிறார்? கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கும்போது நாம் தோல்வியைக் கண்டு கலங்கத் தேவையில்லை. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் ரோமர் 8:28. ஆகையால் மனம் கலங்காதீர்கள். அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது. யெகோவாநிசியையே நோக்கிப் பார்ப்போம் வெற்றி நமக்குத்தான். அல்லேலூயா!

.

யெகோவாநிசி யெகோவாநிசி

எங்கள் கொடி வெற்றிக் கொடியே!

ஜெபம்

எங்கள் வெற்றிக் கொடியாகிய யெகோவாநிசியே, எங்களுக்கு வெற்றியை எப்போதும் தருகிறவரே, உம்மைத் துதிக்கிறோம். தோல்வியைக் கண்டு நாங்கள் சோர்ந்துப் போகாமல், உம்மையேப் பற்றிக் கொண்டு வெற்றியை சுதந்தரிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 26 டிசம்பர், 2013

26th Dec 2013 - கன்மலை உச்சிக்கு ஏறுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 டிசம்பர் மாதம் 26-ம் தேதி - வியாழக் கிழமை
கன்மலை உச்சிக்கு ஏறுவோம்
.....

அந்நாட்களிலே, இயேசு ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். - (லூக்கா 6:12).

.

ஒரு விமானத்தில் ஆப்ரிக்க கண்டத்திலிருந்து ஐரோப்பிய கண்டத்திற்கு ஒரு பெரிய பெட்டியில் விஷ பாம்புகளை அடைத்து வைத்து எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அதை அடைத்த மனிதன் அதை பூட்டுப் போட மறந்து விட்டான்.

.

விமானம் கீழே இருந்து மேலே எழும்பினபோது, பெட்டி திறந்து பாம்புகள் வெளிவர தொடங்கின. அது பயணிகள் இருக்கும் இடத்திற்கு வேகமாக ஊர்ந்து வர ஆரம்பித்தன. அதைக் கண்ட பயணிகள் சிலர் மயக்கமடைந்தனர். சிலர் அது மேலே வராதபடி உயரமான இடத்திற்கு செல்ல முயற்சித்தனர். பாம்புகளைப் பற்றி செய்தி விமான ஓட்டிக்கு தெரியப்படுத்தப்பட்டது. சிலரை பாம்பு கடித்து அவர்கள் உடனேயே மரித்தனர். விமான ஓட்டி மிகவும் பயந்தவராக, கண்ட்ரோல் அறையை அழைத்து, விஷயங்களை சொல்லி, 'எங்கு தரையிறக்க வேண்டும்' என்று பதட்டமாய் கேட்டார். கீழே இருந்த கண்ட்ரோலர், 'கீழே இறக்க வேண்டாம், ஒரு நிமிடம் தாரும், நான் யோசிக்க வேண்டும்' என்றார். ஒரு நிமிடம் என்பது ஒரு யுகமாக இருந்தது அவர்களுக்கு.

.

ஒரு நிமிடம் கழித்து அந்த கண்ட்ரோலர் 'எவ்வளவு உயரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்?' என்றுக் கேட்டார். அதற்கு விமானி, '4000 அடி உயரத்தில்' என்றுக் கூறினார். கண்ட்ரோலர் 'இன்னும் உயர போங்கள்' என்றார். விமானி போயும் ஒன்றும் நடக்கவில்லை, 'இன்னும் உயர இன்னும் உயர' என்று என்று கட்டளைக் கொடுத்துக் கொண்டே இருந்தார் கண்ட்ரோலர். கடைசியாக மிக உயரத்தில் சென்றபோது, பாம்புகள் செயலிழந்துப் போயின. அதை ஒரு பொம்மையை தூக்குவதுப் போல தூக்க முடிந்தது. பயணிகளில் ஒருவர், 'இந்த கருநாகம் என்னை எப்படி துரத்தியது, இப்போது அதை நான் எப்படி இலகுவாக தூக்குகிறேன்' என்றார். எல்லா பாம்புகளையும் மீண்டும் பெட்டியில் போட்டு அடைத்தப்பின் பெரிய பூட்டுப் போடப்பட்டது. மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு, ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் காக்கப்பட்டார்கள்.

.

பிரியமானவர்களே சாத்தானின் வல்லமைகளுக்கு நாம் தப்ப வேண்டுமானால் நாம் உயர செல்லத்தான் வேண்டும். இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன் நாம் இந்த உலகத்தில் கீழே இருக்கும் காலம் வரைக்கும் நம்மை உபத்திரவத்திற்குள்ளும், சோதனைக்குள்ளும் உள்ளாக்கி பாழ்ப்படுத்திக் கொண்டேதான் இருப்பான். ஆனால் நாம் நம்; ஜெபத்தில் கர்த்தரை நோக்கி உயரே செல்ல செல்ல அவன் செயலிழந்துப் போவான். அவனுடைய தந்திரங்களும், அஸ்திரங்களும் தேவனை நோக்கி மேலே மேலே போகிறவர்களிடம் பலிப்பதில்லை.

.

அந்நாட்களிலே, இயேசு ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார் என்று வேத வாக்கியம் கூறுகிறது. அவர் கீழேயே இருந்து ஜெபிக்கலாமே, ஏன் மலைக்கு சென்றார்? அங்கு யாருடைய தொந்தரவும் இல்லாமல், இராத்திரி முழுவதும் தேவனை நோக்கி ஜெபித்து, பெலத்தின் மேல் பெலத்தை பெற்றுக் கொண்டார்.

.

'நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ' (ஆதியாகமம் 19:17) என்று லோத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டதல்லவா? நாமும் அழியாதபடி கன்மலையாகிய கிறிஸ்துவினிடத்தில் ஓடிப்போய் விடவேண்டும். அவரை பற்றிக் கொள்ளும்போது, உலகத்தின் எந்த அழிவிற்கும், பிசாசின் எந்த சோதனைகளுக்கும் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.

.

நாம் ஒவ்வொரு நாளும் நமக்கு உதவி வரும் கன்மலையாகிய கிறிஸ்துவை நோக்கி ஜெபத்தில் முன்னேறி செல்வோமா? வருடத்தின் இறுதியில் வந்திருக்கிற நாம் இந்த வருடம் முழுவதும் எத்தனை நேரம் ஜெபத்தில் தரித்திருந்தோம் என்று பார்த்தோமானால் எத்தனை குறைவாய் காணப்படுவோம்? ஒருவர் எழுதினார், 'ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் ஜெபித்தால் ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு நாளைக்குத்தான் ஜெபித்திருப்போம்' என்று.

.

ஒவ்வொரு உலக காரியத்திற்கும் மணிக்கணக்கில் செலவழிக்கிற நாம், ஜெபத்திற்கு எத்தனை நேரம் செலவழிக்கிறோம்? நாம் எத்தனை நேரம் ஜெபித்தோம் என்பதை பொறுத்துதான் நாம் உலகத்தின் மீது ஜெயம் கொள்வது அமையும். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் கூட ஜெபிக்காமல் இருந்தால் எப்படி நாம் சாத்தானை ஜெயிக்க போகிறோம்? கர்த்தரிடம் சென்று பரலோகத்தில் நித்திய நித்தியமாய் சேவிக்கப் போகிறோம்? இந்த வருடத்தின் கடைசி நாட்களில் நிற்கிற நாம் நம்மையே ஒரு விசை ஆராய்ந்து ஜெபிப்பதற்கு நம்மை ஒப்புக் கொடுப்போமா? ஆமென் அல்லேலூயா! :

.

கன்மலை உச்சியில் ஏறிடுவேன்

கரங்களை உயர்த்தி நான் ஜெபித்திடுவேன்

மகிமையின் பிரசன்னம் என்னை மூடுமே

முகமுகமாய் நான் பேசிடுவேன்

.
அதிகாலையில் சீனாய் மலையினில்

என் ஆண்டவரோடு உலாவுவேன்

இந்நாளிலும் என் இயேசுவின் பாதம்

விழுந்து நான் தொழுகுவேன்

.

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும் நாங்கள் ஜெபத்தில் எத்தனை குறைவுப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்து, அப்பா எங்களுக்கு மன்னியும் என்று ஜெபிக்கிறோம். கன்மலை உச்சியில் மோசேயிடம் அதிகாலையில் தேவனை சந்திக்க ஆயத்தப்படு என்று சொன்னீரே, அதுப்போல கன்மலையாம் கிறிஸ்துவை சந்திக்க நாங்கள் எங்களை ஆயத்தப்படுத்தி, அவரோடு இணையும்போது சத்துருவின் ஆதிக்கங்களும், தந்திரங்களும் எங்களை பாதிக்காமல் அவற்றின் மேல் நாங்கள் வெற்றி எடுக்க கிருபை செய்கிறதற்காக உம்மை துதிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
..

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

24th & 25th Dec 2013 - பிசாசின் கிரியைகளை அழிக்க வந்த தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 டிசம்பர் மாதம் 24 & 25-ம் தேதி - செவ்வாய் & புதன் கிழமை
பிசாசின் கிரியைகளை அழிக்க வந்த தேவன்
....

பிசாசானவன்.. ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். - (யோவான் 8:44).

.

அப்போஸ்தலனாகிய யோவான் இயேசுகிறிஸ்து எதற்காக உலகத்தில் வெளிப்பட்டார் என்று கூறும்போது, பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே வெளிப்பட்டார் என்று கூறுகிறார். - (1 யோவான் 3:8).

.
அந்த பிசாசின் கிரியை ஏதோ ஒரு காலத்தில் மட்டுமல்ல, பிசாசின் கிரியை எல்லா மனிதர்களுக்குள்ளும் இயற்கையாக நிகழ்கிறது. அந்த செயல்பாடுள்ள ஒவ்வொரு மனிதர்களிடத்திலிருந்தும் வெளிப்படும் தவறான குணங்கள், விரும்பத்தகாத சுபாவங்கள், முரட்டாட்டமான இயல்புகள், தப்பிதமான பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவை அடையாளப்படுத்துகின்றன. கோபம், பொறாமை, எரிச்சல், விரோதம், கசப்பு, பொருளாசை, பெருமை, பழிக்குபழி போன்ற துர்க்குணங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்குள் பிசாசின் செயல்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. சமுதாயத்தில் நிலவும் அனைத்து தீவினைகளுக்கும் காரணம் தனி மனிதர்களின் இருதயம் பிசாசின் ஆளுகைக்கு உட்பட்டு, அவனுடைய பொல்லாத கிரியைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதினாலேயே.
.
எனவே மனிதனுக்குள் நடைபெறும் பிசாசின் கிரியைகளை அழிக்க இருதயத்திற்குள் ஒரு இரட்சகர் வரவேண்டிய தேவை உள்ளது. அவ்விதம் வந்து பாவத்தின் கட்டுகளையும், பிசாசின் கிரியைகளையும் அழித்து அவனை விடுதலையாக்க கிறிஸ்து உலகத்திற்கு வ்நதார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமது கனத்தையும், ஆராதனையையும், காணிக்கைகளையும், துதி ஸ்தோத்திரங்களையும் பெறுவதை பிரதான நோக்கமாக கொண்டு பூமிக்கு வரவில்லை. அவர் ஒரு விசேஷ செயலை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் செய்ய வந்தார். நமக்குள் இயங்கி கொண்டிருக்கும் பாவத்தின் ஆதிக்கத்தை அழித்து அப்புறப்படுத்தவே வந்தார்.
.
மருத்துவரை வரவேற்பதிலேயே முழு கவனம் செலுத்தி, சிகிச்சை பெறாமல் போன மக்களை போல நாம் இராமல், முதலாவது ஆண்டவரை நமக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறின்றி, நாம் செய்கின்ற அத்தனை வழிபாடுகளும், ஆராதனைகளும் பண்டிகை கொண்டாட்டங்களும் அர்த்தமற்றவைகளே. அவைகள் தேவனை பிரியப்படுத்தாமல், கோபப்படுத்தவே செய்யும். அன்று பஸ்கா பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடிய எருசலேம் மக்களை பார்த்து இயேசு கண்ணீர் விட்டார் - (லூக்கா 19:41). ஏனென்றால் பஸ்கா பண்டிகை என்பது விடுதலையை நினைவு கூரும் பண்டிகை. ஆனால் அந்த மக்கள் விடுதலையின்றி, விடுதலையை அளிக்கும் தேவனை குறித்தோ சிந்தியாமல் வெறும் பாரம்பரிய பணடிகை கொண்டாட்டத்தில் மூழ்கி போயிருந்தனர்.
.
அன்று எருசலேமை பார்த்து அழுத இயேசு இன்று நம்மை பார்த்து மகிழ முடியுமா? அவர் நமக்காக ஆயத்தமாக்கிய பாவ விடுதலையையும், இரட்சிப்பையும் பரிசுத்த வாழ்கையும் நாம் விரும்பி பெற்று கொண்டிருந்தால், அவர் நம்மையும், நம்முடைய ஆராதனைகளையும் கண்டு மகிழுவார். நாம் பாவத்தை குறித்தும் பரிசுத்த வாழ்கை குறித்தும் கவலைப்படாமல் இருப்போமானால் அவர் நம்மை பார்த்து கண்ணீர் விடத்தான் முடியும், இனியாவது கிறிஸ்து உலகிற்கு வந்ததன் நோக்கத்தை நம்மில் நிறைவேற கர்த்தருக்கு நம்மை ஒப்புகொடுப்போமா?

.

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பூலோகம் வந்தாரையா

மனுஷரை மீட்கவே பரலோகம் சேர்க்கவே

சிலுவையை சுமந்தாரையா

நான் தேடி போகவில்லை

என்னை தேடி வந்தாரையா

எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளுக்காக உம்மை துதிக்கிறோம். கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் ஒவ்வொருவரும் அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை அறிந்தவர்களாக தங்களுடைய இருதயத்தில் கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்களாக, பிசாசின் கிரியைகளை கிறிஸ்துவினால் தங்கள் இருதயங்களிலிருந்து அழித்தவர்களாக வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 23 டிசம்பர், 2013

23rd Dec 2013 - தகப்பனின் வாக்கு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 டிசம்பர் மாதம் 23-ம் தேதி – திங்கட்கிழமை
தகப்பனின் வாக்கு
....

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். – யோவான் - 16:33.

.
1989-ம் ஆண்டு ஆர்மேனியா (Armenia) தேசத்தில் நடந்த நான்கு நிமிடத்திற்கும் குறைவான பூமி அதிர்ச்சியில் (ரிட்சர் ஸ்கேலில் 8.2) – (Richter Scale) ஏறக்குறைய 30,000 மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது அங்கு இருந்த நிலைமையை சற்று சிந்தித்துப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பரிதாபமான நிலைமை என்று. எங்கு பார்த்தாலும் ஓலங்களும், தங்களுக்குரியவர்களை இழக்க கொடுத்த துயரத்தில் அழுகைகளும், உயிரோடு இருப்பவர்களை தேடிக் கொண்டிருந்த உறவினர்களும் என்று ஒரே துயரமான சூழ்நிலை. அதில் ஒரு தகப்பன் தன் மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளியை நோக்கி விரைந்தார். அங்கு பள்ளிக்கு பதிலாக அந்த இடத்தில் இடிபாடுகளோடுகூட கல்லும் மண்ணும் குவியலாக இருந்தது. அதைப் பார்த்த தகப்பனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மற்ற பெற்றோர் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியபடி தங்களது பிள்ளைகளின் பெயர்களை கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தத் தகப்பனோ தனது மகன் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இருந்த இடத்தை தேடி கண்டுபிடித்து, அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார். அவர் தன் மகனிடம் சொல்லியிருந்தார், தான் எப்போதும் தன் மகனுடன் இருப்பேன் என்றும் அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றும் வாக்கு பண்ணியிருந்தார்.

.

அவர் தோண்ட ஆரம்பித்தபோது, மற்ற பெற்றோர், 'கால தாமதமாகிவிட்டது, எல்லாரும் மரித்து விட்டனர், இனி ஒரு பிரயோஜனமில்லை' என்றுக் கூறி அவரை தடுத்தனர். அவரோ விடாமல் தோண்ட ஆரம்பித்தார். தீயணைப்பு படையினர் வந்து 'எங்கும் தீ பற்றி எரிந்து, வெடிக்கிறது, நீங்கள் எது செய்தும் பிரயோஜனமில்லை வீட்டுக்கு போய் விடுங்கள்' என்று கூறி அவரை எச்சரித்தனர். அவரோ விடாப்பிடியாக தோண்டிக் கொண்டே இருந்தார். கடைசியாக போலீஸ் படையினர் வந்து 'உங்கள் வேதனை எங்களுக்குப் புரிகிறது. இப்போது எந்தப் பயனும் இல்லை, போய் விடுங்கள்' என்று அவரை அந்த இடத்திலிருந்து இழுத்தனர். அவரோ தன் மகன்மேல் கொண்டிருந்த அன்பினால் தொடர்ந்து தோண்டிக் கொண்டே இருந்தார். 8மணி நேரம்.. 12.. 24.. 34 மணிநேரம் தொடர்ந்து ஓயாமல் தோண்டிக் கொண்டே இருந்தார். 38ஆவது மணி நேரத்தில் அவரது மகன் உதவிக்கு அழைக்கும் அழுகுரல் அவருக்கு கேட்டது. உடனே 'ஆர்மண்ட்' (Armond) என்று உரத்த சத்தமாக கூப்பிட்டு பார்த்தார். உடனே மகன், 'அப்பா நீங்களா! எனக்குத் தெரியும் என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், என் தகப்பன் உயிரோடு இருந்தால் என்னைக் காப்பாற்ற எப்படியும் வருவார் என்று, என் நம்பிக்கை வீண் போகவில்லை' என்று மிகுந்த சந்தோஷத்துடன் இடிபாடுகளின் மத்தியிலிருந்து பத்திரமாக தன் நண்பர்களுடன் மீட்டெடுக்கப்பட்டான்.

.

ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் மகனுக்கு கொடுத்த வாக்குக்காக போராடி தன் மகனை மீட்டெடுக்க முடியுமென்றால் நம் பரம தகப்பன் நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார், உலகத்தின் முடிவு பரியந்தம் நான உங்களுடனேகூட இருக்கிறேன் என்று. அவர் வாக்கு மாறாதவர். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கல்லும் மண்ணும் எது? கடன் என்னும் கல்லா? பாவகட்டுகள் என்னும் கல்லா? குற்ற உணர்ச்சி என்னும் கல்லா? பிரச்சனைகள் என்னும் கல்லா மண்ணா? எந்தக்கல்லையும் புரட்டித் தள்ளி விடுவிக்க தேவன் வல்லவராகவே இருக்கிறார். 2000 வருடங்களுக்கு முன்பு இயேசுகிறிஸ்துவின் கல்லறையை மூடியிருந்த கல்லை புரட்டித் தள்ளி, அவரை உயிரோடு எழுப்பின தேவன் இன்றும் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கற்களை மாற்றி உங்களை விடுவிக்கவும், தமது வாக்குதத்தங்களை நிறைவேற்றவும் அவர் வல்லவராகவே இருக்கிறார். அவரது வாக்குதத்தங்களை பற்றிக் கொண்டு அதை உரிமைக் கொளவோம். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். நமது பிரச்சனைகளாகிய கற்களிலிருந்து விடுபட்டு வெளியே விடுதலையோடு வருவோம். ஆமென் அல்லேலூயா!

.

மலைகள் பெயர்ந்து போகலாம்

குன்றுகள் அசைந்து போகலாம்

கன்மலையாம் கிறிஸ்து

கைவிடவே மாட்டார்


ஜெபம்

எங்களை நேசிக்கிற எங்கள் அன்பின் பரம தகப்பனே, வேதத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வாக்குதத்தங்களுக்காகவும் ஸ்தோத்திரம். அவைகளை உரிமை பாராட்டி எங்கள் வாழ்க்கையில் வெற்றிக் கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். உலகத்தின் முடிவு பரியந்தம் எங்களோடு இருப்பவரே உம்மையே நாங்கள் துதிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 22nd December 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

 இன்னிசை குயில் ஒன்று

இதய கீதம் இதமாய் பாடி

சகோதரனை வம்புக்கு இழுத்தது

இழுத்த வம்பால் கை

வெமுத்துக் கொண்டது -அவள் யார்?

 

விடை: மிரியாம். – எண் 12:1-10.

---------------------------------------------------------------------------

ஆஹா என்று ஆனந்தக் கூத்தாடி

ஓஹோ என்று ஒய்யார மரம் செய்து

ஐயோ என்று அலறிச் செத்தான்  -அவன் யார்?

 

விடை: ஆமான். எஸ்தர் 7:1-10.

---------------------------------------------------------------------------

குழிக்குள் போட்ட வெள்ளிக்காசுகள்

அந்நிய நாட்டிற்கு பயணமாகி

சிறையில் சிதறி சிங்காசனமானது  -அவன் யார்?

 

விடை: யோசேப்பு. ஆதி 41:38-44.

--------------------------------------------------------------------------
 

நன்றி: 'வேதாகம நண்பன்'

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 20 டிசம்பர், 2013

20th December 2013 - பரலோகமே நம் சொந்தமே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 டிசம்பர் மாதம் 20-ம் தேதி – வெள்ளிக்கிழமை
பரலோகமே நம் சொந்தமே
.....

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். - (யோவான் 14:2-3).

.
ஒரு வழிபோக்கன் ஒருவன் பிரயாணப்பட்டு, வெகு தூரமாய் சென்று கொண்டிருந்தான். இரவு நெருங்கி விட்டது. பகலெல்லாம் அவன் நடந்ததால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. எங்கேயாவது ஓய்வெடுத்தால் நலமாயிருக்கும் என்று அவன் எண்ணினான். சற்று தூரத்தில் ஒரு பெரிய வீட்டை கண்டான். அதன் பெரிய முற்றத்திலே பெரிய பெரிய திண்ணைகள் கட்டப்பட்டிருந்தன. வெளியில் வந்த வீட்டுக்காரரிடம் தன் பயணத்தை கூறி அன்றிரவு மட்டும் இந்த திண்ணையில் ஓய்வெடுத்து கொள்கிறேன் என்று கேட்டான். அதை கேட்ட கல்மனம் கொண்ட அந்த வீட்டுக்காரர், ' இது என்ன சத்திரமா? போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் தங்கி போகவா இதை கட்டி போட்டிருக்கிறோம்' என்று சாடினார். வழிபோக்கர் அமைதியாக, 'ஐயா இந்த பங்களாவை யார் கட்டியது?' என்று கேட்டார். 'என் தாத்தா கட்டினார். அதன்பின் என் அப்பா இதில் வாழ்ந்தார். இப்போது நான், எனக்கு பிறகு என் மகன் வாழ்வான்' என்று பெருமிதத்தோடு கூறினார். 'அப்படியானால் இது சத்திரம் தானே' என்று வழிபோக்கர் நாசுக்காக கூறினார்.

.

உலகம் ஒரு நாடக மேடை என்றார் ஒருவர். குறிப்பிட்ட காலம் வரை நமது கதாபாத்திரத்தை நடித்து விட்டு, செல்ல வேண்டியதுதான். இப்பூமியில் கோடி கோடியாய் செலவிட்டு, ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் கொஞ்ச காலம்தான் வாழமுடியும். இறந்த பிறகு ஆறடி நிலமும் தரமாட்டார்கள் பிள்ளைகள்! மகன் ஊதாரியோ, குடிகாரனோ, பெண்டாட்டிக்கு பின் திரிபவனோ யாராயிருந்தாலும் அவனுக்கு விட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும்.

.

இப்படிப்பட்ட நிலையற்ற உலகில் வாழும் நமக்கு இதன் பேரில் தான் எத்தனை பற்று! என் வீடு, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய வீடாக்கும்! என்று எத்தனை பெருமைகள்! ஒரு அடி அண்டைவீட்டுக்காரன் நமது நிலத்தில்; தவறி கட்டி விட்டான் என்றால் அப்பப்பா எத்தனை கோர்ட் ஏறி இறங்குகிறோம்! சரி நமது நிலம் தான். அதில் கட்ட அவனுக்கு உரிமை இல்லைதான். அதை நான் சொல்ல வரவில்லை. இந்த காரியங்கள் எதுவும் நிரந்தரமில்லை என்பதை தான் சொல்கிறேன். நமது ஆயுள் எத்தனை நாள் என்று நம்மில் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் நாம் ஒருவேளை வீட்டையே கட்டியிருக்க மாட்டோமாயிருக்கும்.

.

ஒரு சிலர் ஏதோ இந்த உலகம் தான் அவர்களுக்கு நிரந்தரம் என்பது போலவும், கையை கட்டி, வாயை கட்டி, சொத்து மேல் சொத்து சேர்த்து குவித்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பணம் சேருகிறதோ அவ்வளவு அதன் மேல் அவர்களுக்கு மயக்கமும், ஆசையும் ஏற்படுகிறது. பணம் அதிகதிகமாய் இருக்கிறவர்களை பாருங்கள், அவர்களுக்கு இன்னும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாஞ்சையே அதிகமாய் இருக்கும். 'பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே' - (பிரசங்கி 5:10) என்று வேதம் கூறுகிறது. திருப்தியடைய செய்யாத ஒன்றுக்காக அவன் இரவும் பகலும் போராடி கொண்டிருக்கிறான்.

.

ஆனால் கர்த்தருக்குள் வாழ்கிறவர்களுக்கு என்று இயேசுகிறிஸ்து ஒரு வீட்டை கட்டுவதற்கு சென்றிருக்கிறார். இந்த ஸ்தலத்தை அந்த வீட்டை ஆயத்தம் செய்த பிறகு நாம் அங்கு போய் என்றும் இருப்பதற்காக நம்மை அழைத்து செல்வார். அந்த வீடு மூட்டை பூச்சியோ, கரப்பானோ வந்து குடியிருக்காத இடம்! தண்ணீர் பஞ்சம் இல்லாத இடம், தூங்கும்போது வீட்டு கதவை தட்டி, விற்பவர்கள் தொல்லை இல்லாத இடம், வாடகை வீடென்றால், வீட்டில் தண்ணீர் ஒழுகுகிறது என்று எத்தனை முறை சொன்னாலும், வீட்டுக்காரன் சரிசெய்து தர மறுப்பது போல பாடுகள் இல்லாத இடம். நமக்கென்று இயேசுகிறிஸ்து கட்டியிருக்கிற இடம். அதை யாரும் கொள்ளை கொண்டு போக முடியாது. அந்த வீடு நிலையானது. யாராலும் அழிக்க முடியாதது. எந்த பூகம்பத்தாலும் அசையாதது, அதில் யுகயுகமாய் வாழ்வோம். அதையே நாம் நாடுவோமா?

.

அந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றால், நாம் கர்த்தருக்குள் வாழ வேண்டும். அங்கு செல்லும்படியான தகுதி நமக்கு இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, முழுக்கு ஞானஸ்நானம் எடுத்து, பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, பரிசுத்தமாய் வாழும்போது நாம் அந்த வீட்டுக்கு சொந்தம் கொள்ள முடியும். அப்படி வாழ்பவர்களையே, இயேசுகிறிஸ்து வரும்போது அழைத்து செல்வார். ஆமென் அல்லேலூயா!

.

பூமிக்குரியவையல்ல பூமிக்குரியவையல்ல

மேலானவைகளை என்றும் நாடிடுவோமே நாமும்

..

கொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லை

உண்ண உடுக்கவும் போதுமென்றே வாழ்வோம்

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, நாங்கள் இந்த பூமியில் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வீடுகளோ, எதுவும் எங்களுக்கு நிலையானது அல்ல தகப்பனே. ஆனால் பரலோக வாழ்வும், நித்திய ஜீவனும் எங்களுக்கு என்றும் நிலையானது. நாங்கள் பூமிக்குரியவைகளை அல்ல மேலானவைகளையே நாடும்படி, எங்களுக்கு உணர்த்தும். உலகத்துக்குரிய காரியங்களில் நாங்கள் ஈடுபட்டு, பரலோக காரியங்களை மறந்து போவோமானால் எத்தனை பரிதாபம் தகப்பனே! பரலோகத்துக்கடுத்த காரியங்களில் நாங்கள் வாஞ்சை வைத்து அதன்படி வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.