Friends Tamil Chat

வெள்ளி, 30 மே, 2014

30th May 2014 - அன்புகூருவேன் இன்னும் அதிகமாய்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மே மாதம் 30-ம் தேதி - வெள்ளிக்கிழமை
அன்புகூருவேன் இன்னும் அதிகமாய்
.....................

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார் - (1 யோவான் 4:7,8).

.

ஒரு பெண் தன் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது, மூன்று வயதான மனிதர்கள், அங்கு திண்ணையில் அமர்ந்திருப்தை கண்டாள். அவர்கள் யார் என்று அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அவர்களை நோக்கி, 'நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பார்த்தால் பசியோடிருப்பவர்களை போல தெரிகிறது. உள்ளே வாருங்கள், வந்து ஏதாவது சாப்பிடுங்கள்' என்று கூறினாள். அப்போது அவர்கள், 'இந்த வீட்டின் மனிதர் உள்ளே இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அந்த பெண் இல்லை என்றதும், 'இல்லை, நாங்கள் உள்ளே வரமாட்டோம்' என்றார்கள். சாயங்காலமானபோது, கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பெண், நடந்ததை கூறினாள். அதற்கு அந்த கணவர், 'அவர்களை உள்ளே அழைத்து வா' என்று கூறினார். அந்த பெண் அழைக்க போனபோது, அந்த மனிதர்கள், 'நாங்கள் மூவரும் ஒன்றாக உள்ளே வரமுடியாது' என்றனர். அப்போது அந்த பெண் ஏன் என்று கேட்டதற்கு, 'இவருடைய பெயர் செல்வம், இவர் வெற்றி, என்பெயர் அன்பு. இவர்களில் யார் உள்ளே வர வேண்டும் என்று உன் கணவரிடம் பேசி முடிவெடுத்து விட்டு வா' என்று கூறினர். அந்த பெண் உள்ளே சென்று தன் கணவரிடம் கூறினபோது, அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, 'நாம் செல்வத்தை அழைப்போம். அப்போது நம் வீடு செல்வத்தினால் நிறையும்' என்று கூறினார். அதற்கு மனைவி, 'வெற்றியை அழைத்தால், செல்வம் தன்னால் வந்துசேரும்' என்று கூறினாள். அதை கேட்டு கொண்டிருந்த அவர்களுடைய மகன், 'அப்பா, அம்மா, நாம் அன்பை அழைத்தால், நம் வீடு அன்பால் நிறைந்திருக்குமே' என்று கூறினான். அதற்கு எல்லாரும் உடன்பட்டு, அன்பை உள்ளே அழைப்போம் என்று தீர்மானித்து, அந்த பெண் அந்த வயதானவர்ளிடம் போய், 'ஐயா அன்பு, நீங்கள் உள்ளே வாருங்கள்' என்று கூறினாள். அன்பு உள்ளே செல்ல எழுந்தார், அப்போது வெல்வமும், வெற்றியும் கூட உள்ளே வர ஆரம்பித்தனர். அதை கண்ட அந்த பெண், 'நான் அன்பைத்தானே அழைத்தேன், நீங்களும் வருகிறீர்களே' என்று கேட்டாள். அதற்கு அவர்கள் சொன்னார்கள், 'நீ செல்வத்தை மட்டும் அழைத்திருந்தால், செல்வம் மட்டும் உள்ளே வந்திருப்பார், வெற்றியை அழைத்திருந்தால் அவர் மட்டும் உள்ளே வந்திருப்பார், ஆனால், நீ அன்பை அழைத்ததால், நாங்கள் மூன்று பேரும் உள்ளே வருகிறோம், அன்பு எங்கே உண்டோ அங்கு செல்வமும், வெற்றியும் எப்போதும் உண்டு' என்றனர்.

.

அன்பானவர்களே, நாம் மற்றவர்களிடத்தில் எப்படி அன்புகூருகிறோம்? நம்மிடத்தில் அன்பு என்ற ஆவியின் கனி உண்டா? நம் சொந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்புகூருகிறோமா? நம் பெற்றோரிடத்தில் அன்பு கூருகிறோமா? நம் சக விசுவாசிகளிடத்தில் அன்பு கூருகிறோமா? அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று வசனம் கூறுகிறது. எத்தனை பேர் தங்கள சொந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு கூராமல், உலகத்திலுள்ள மற்றவர்களை நேசிக்கிறவர்களாக இருக்கின்றனர்! சிலர் வருஷகணக்கில் தங்கள் சகோதர சகோதரிகளிடத்தில் பேசாமல் இருக்கின்றனர். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1யோவான் 4:20) என்று வேதம் கேட்கிறது. ஆகவே நாம் நம் சொந்த சகோதரரிடத்திலும் சகோதரிகளிடத்திலும் அன்புகூருவோம்.

.

அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பு வரும்போது செல்வமும் ஆரோக்கியமும், வெற்றியும் உலக ஆசீர்வாதங்களும் நம்மை வந்து சேரும். முதலாவது தேவனிடத்திலும், பின்பு மற்றவர்களிடத்திலும் அன்புகூர வேண்டும். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார் (மாற்கு 12:29-31) என்று கூறினார். அன்புகூரும் போது, அதில் மற்ற கற்பனைகள் எல்லாம் அடங்கி யிருக்கிறது. அந்த பெரிதான தியாகமான அன்பால் நம் இருதயம் நிறைந்திருப்பதாக!

.

மனிதர் யாரிடமும் பாசம் சாட்டுவோம்

இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்

அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்

இராஜ பாதையை செம்மையாக்குவோம்

நம் இயேசுராஜாவே இதோ வேகம் வாராரே

அதி வேகமாய் செயல்படுவோம்

.
ஜெபம்
எங்கள் மேல் அன்புகூர்ந்து, எங்களை அளவில்லாமல் நேசிக்கும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்களும் மற்றவர்கள் மேல் அன்புகூர கிருபை செய்யும். அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான் என்ற வார்த்தையின்படி நாங்கள் மற்றவர்களிடத்தில் அன்புகூரவும், உம்மை அறிகிற அறிவில் வளரவும் கிருபை செய்யும். இந்த நாளில் ஹைட்டி என்னும் தேசத்தில், பூமி அதிர்ச்சியினால் பல்லாயிரக்கணக்கோர் மரித்து, வீடுகளை இழந்து தவிக்கிற இந்த நேரத்தில் அவர்களை உம்முடைய கிருபையுள்ள கரத்தில் ஒப்பு கொடுக்கிறோம். தங்களுக்கு பிரியமானவர்களை இழக்க கொடுத்த ஒவ்வொருவரையும் ஆற்றி தேற்றுவீராக. தங்களுடைய எல்லாவற்றையும் இழந்த தவிக்கிற அந்த ஏழை மககளுக்கு உதவிகள் சீக்கிரம் வரதக்கதாகவும் அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படவும் கிருபை செய்வீராக. இந்த குளிரான நேரத்தில் தங்க வீடு இல்லாமல், தண்ணீர் வசதிகளோ மின்சார வசதிகளோ இல்லாமல் தவிக்கிற அவர்களை கண்ணோக்கி பார்த்து அவர்களுக்கு தயவாய் இரங்கும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
............

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 29 மே, 2014

29th May 2014 - நடப்பதெல்லாம் நன்மைக்கே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மே மாதம் 29-ம் தேதி - வியாழக்கிழமை
நடப்பதெல்லாம் நன்மைக்கே
....................

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28).

.

ஒரு அரச அரண்மனையில் ஒரு மந்திரி இருநதார். அவர் எப்போதும் என்ன நடந்தாலும் 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறுவார். ஒரு முறை அந்த நாட்டின் அரசர், 'நீங்கள் என்ன எப்போதும் எல்லாம் நன்மைக்கே என்று கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'ஆம் நமது நன்மைக்கே எல்லாம் நடக்கிறது' என்று கூறினார். அதன்பின் இருவரும் வேட்டைக்காக காட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அரசர்; தன் வில்லை எய்யும்போது, தவறுதலாக அவர் விரலின் மேல் பட்டு, விரல் வெட்டுப்பட்டது. அப்போதும் அந்த மந்திரி, 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறினார். அதை கேட்ட அந்த அரசருக்கு கோபம் வந்தது, 'நான் என் கை வெட்டுப்பட்டு துடிக்கிறேன், நீர் என்ன இதுவும் நன்மைக்கே என்று கூறுகிறீர்' என்று கோபத்தோடு கூறி அவரை சிறையில் அடைத்தார். அப்போதும் அந்த மந்திரி 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறினார்.

.

சில நாட்கள் கழித்து, அந்த அரசர் மீண்டும் வேட்டைக்கு செல்லும்போது, கானகத்தில் வெகு தூரம் சென்று விட்டார். அவரை அங்கிருந்த காட்டுமிராண்டிகள் பிடித்து கொண்டுபோய் தங்கள் கடவுளுக்கு பலி செலுத்த இழுத்து கொண்டு போனார்கள். பலி செலுத்தும் அந்நேரத்தில் அவர் விரலிலிருந்த காயத்தை பார்த்துவிட்டு, 'ஓ, பழுதான பலிகளை எங்கள் கடவுளுக்கு செலுத்த கூடாது' என்று கூறி அந்த அரசரை விடுதலை செய்து விட்டுவிட்டார்கள். அந்த அரசர் விடுதலையானதும் நேரே சிறைசாலைக்கு போய், அந்த மந்திரியை விடுவித்து, 'நீங்கள் சொன்னது சரிதான், என் கையில் வெட்டுபட்டது நன்மைக்குதான். இல்லாவிட்டால் நான் நரபலியாகி இருப்பேன். சரி, நான் வெட்டுப்பட்டது நல்லதுதான். ஆனால் நீங்கள் அநியாயமாய் சிறையில் போடப்பட்ட போதும் எல்லாம் நன்மைக்கே என்று கூறினீர்களே, நீங்கள் சிறையில் இருந்தது எந்தவிதத்தில் நன்மை?' என்று கேட்ட போது, அந்த மந்திரி சொன்னார், 'நல்லவேளை நான் சிறையில் இருந்தேன், இல்லாவிட்டால், நான் உங்களோடு வேட்டைக்கு வந்திருப்பேன். உங்களுக்கு பதிலாக என்னை நரபலி செலுத்தி இருப்பார்கள்' என்று கூறினார்.

.

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் ஒவ்வொருவருக்கும், அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கும் சகலமும் ந்னமைக்கேதுவாகவே நடக்கிறது. சகலமும் என்று சொல்லும்போது, அது நன்மையான காரியங்களாய் இருக்கலாம், அல்லது தீமையான காரியங்களாய் இருக்கலாம், ஒருவேளை சந்தோஷமோ, துக்கமோ, இனிமையானதோ, கசப்பானதோ, எளிமையானதோ, கஷ்டமானதோ, சௌக்கியமானதோ, துன்பப்படுதலோ, வாழ்வோ, சாவோ எதுவாயிருந்தாலும் கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. சிலவேளை நாம் நம் வாழ்வில் வரும் துன்பமான காரியங்களை வைத்து, தேவனுக்கு என்மேல் அன்பேயில்லை, நான் ஏன் இந்த பாடுகள் பட வேண்டும் என்று புலம்பலாம். ஒருவேளை உங்கள் வேலையிடத்தில் நீங்கள் பாடுகளை சந்திக்க நேரலாம். உங்கள் குடும்பத்தில் வரும் பாடுகளினாலே நீங்கள் சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் ஒன்றை மனதில் வைத்து கொள்ளுங்கள். கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது.

.

யோசேப்பின் சகோதரர் கள்ளமில்லாத அந்த வாலிபனை, கொடிய குழியில் போட்டு அவனை கொல்ல நினைத்து, பின் அந்த பக்கமாய் எகிப்திற்கு தங்களுடைய சரக்குகளை விற்க சென்ற இஸ்மவேலரிடம் விற்று, அவர்கள் அவனை எகிப்தியன் ஒருவனுக்கு விற்றார்கள். அவன் அங்கு அநேக பாடுகள் பட்டு, பின் தேவனால் உயர்த்தப்பட்டு, பார்வோனுக்கு அடுத்த அதிகாரத்தில் இருக்கும்போது அவனுடைய சகோதரர்கள், அவனிடம் அவன்தான் யோசேப்பு என்று அறியாமல், அவனிடம் தங்கள் பஞ்சத்திற்காக தானியம் வாங்க எகிப்திற்கு சென்று அவனோடு பேசி கொண்டிருக்கையில், 'யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்' - (ஆதியாகமம் 45:4,5) என்று கூறுவதை காண்கிறோம். ஒருவேளை யோசேப்பின் சகோதரர் அவனை இஸ்மவேலரிடம் விற்றபோது, தன் எதிர்காலம், தன் கனவுகள் எல்லாம் அழிந்து போனது என்று யோசேப்பு நினைத்திருக்கலாம். இனி எனக்கு வாழ்வேது என்று நினைத்திருக்கலாம். ஆனால் ஒருநாள் வந்தது, அவன் எகிப்து முழுவதற்கும் அதிகாரியாக மாறி, தன் குடும்பத்தையும் தேசத்தையும் இரட்சிக்கும்படி தேவன் அவனை முன்பே அனுப்பினார் என்பதை அவன் அறிந்து இந்த வார்த்தைகளை தன் சகோதரரிடத்தில் கூறினான். தீமையையும் நன்மையாக மாற்றும் தேவன் நம் தேவன். ஆமென் அல்லேலூயா!

.

நீங்கள் இப்போது படும் பாடுகள் எல்லாம் ஒருநாள் நன்மையாக மாறுவதை காண்பீர்கள். இப்போது நாம் அதை உணராவிட்டாலும், பின் அதை அறியும்படி தேவன் கிருபை செய்வார். ஆகையால் மனம் தளராதிருங்கள். சோர்ந்து போகாதிருங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கர்த்தரிடம் எல்லாவற்றையும் ஒப்புகொடுத்துவிட்டு, அவருடைய செயலுக்காக காத்திருங்கள். கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவார்.

.

எல்லாம் நன்மையாக

என் இயேசு மாற்றிடுவார்

தாங்கொண்ணா துன்ப துயரங்கள்

தவிக்க வைக்கும் சூழ்நிலைகள்

எல்லாம் நன்மையாக

என் இயேசு மாற்றிடுவார்

.


ஜெபம்
எல்லாவற்றையும் நன்மையாக மாற்றி தரும் எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். எங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு துன்பமான அல்லது தீமையான காரியங்களையும் உம்மிடத்தில் அன்பு கூரும் எங்களுக்கு நன்மையாக மாற்றுவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்த வார்த்தைகளினாலே நீர் எங்களை ஆறுதல் படுத்துவதற்காக உமக்கு நன்றி. எங்கள் பாடுகளில் எங்களுடைய துக்கங்களில் நீர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவீர் என்ற விசுவாசத்தை எங்கள் இருதயங்களில் ஆழமாய் பதிய வைத்தருளும். நாங்கள் சோர்ந்து போகாதபடி நீர் எங்கள் விசுவாசத்தை கட்டி எழுப்புவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 28 மே, 2014

28th May 2014 – நீயோ கடன் வாங்காதிருப்பாய்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மே மாதம் 28-ம் தேதி - புதன் கிழமை
நீயோ கடன் வாங்காதிருப்பாய்
............

ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். - (உபாகமம் 28:12).

.

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவியும் நல்ல வேலையில் இருந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தந்தை ஆலயத்தில் பெரிய டீக்கன். பாடல்களை இயற்றி, கிறிஸ்மஸ் மற்றும் விழாக்காலங்களில் ஒரு குழுவாக சேர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வார்கள்.

.

ஆனால் அந்த தகப்பனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவர் சம்பாதிக்கும் சம்பளத்திற்கு போதுமானதாக இல்லை. ஆகவே பக்கத்தில் இருக்கும் கடையில் கடனுக்கு வாங்கி குடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மனைவி சண்டையிட்டு நிறுத்த பார்த்தார்கள். ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. கடனாக வாங்கியதை கொடுக்க முடியாத நிலை. அதற்காக வேறொரு கடையில் கடன் வாங்கி, இப்படி ஒரு முறை கடன் வாங்கி ருசித்த பின்பு, சுற்றிலும் இருக்கிற கடைகளில் கடன். அதை அடைக்க வேறொரு மக்களிடம் கடன், அதை அடைக்க சேட்டுகளிடம் கடன் என்று ஏகப்பட்ட கடன். ஊரிலே தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலை. காலை ஆறு மணிக்கு, சேட் தன் மோட்டார் பைக்கில் அந்த தெருவே கேட்கும்படி கடன் கேட்க வருவான். கொடுக்க முடியவில்லை என்றதும், நாலு பேருக்கு கேட்கும்படியாக, சத்தம் போடுவான். இவர்கள் கிறிஸ்தவர்கள். மற்ற புறஜாதியார் மத்தியில் எத்தனை அவமானம்! கடைசியில் அந்த தகப்பன், ஆலயத்தில் பெரிய பதவியில் இருந்தவர், அநேக தாலந்துகளை உடையவர், ஆலயத்தில் இசை கருவிகளை வாசித்தவர், விஷ மருந்து குடித்து மரித்து போனார். அவருடைய மனைவி, நான்கு குழந்தைகளையும் எல்லா இடத்திலும் கடன் வாங்கி, அநாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டு போய்சேர்ந்தார். என்ன ஒரு பரிதாபம்!

.

இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டிருக்கும் அநேகருடைய நிலைமை இதுதான்! கர்த்தருடைய வாக்குதத்தம் எல்லாம், ஆம் என்றும் ஆமென் என்றும் இருப்பது உண்மைதான். என்றாலும், இந்த கிறஸ்தவ குடும்பத்தில் அந்த வாக்குதத்தங்கள் பிரயோஜனப்படவில்லையே! ஏன், அதை அவர்கள் உரிமை பாராட்டி கொள்ளவில்லை. தங்கள் தேவன் யார் என்று அவர்கள் அறியவில்லை. தங்கள் இஷ்டத்திற்கு வாழ்ந்தார்கள். கர்த்தருடைய ஊழியத்தை செய்தார்கள், ஆனால், பேருக்கும் புகழுக்கும் செய்தார்களே ஒழிய, கிறிஸ்து அவர்கள் உள்ளத்தில் பிறக்கவேயில்லை! எத்தனை பரிதாபம்!

.

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும் (உபாகமம் - 28:2) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுத்தால் நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். நீ கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்காமல் போனால், நீ அநேகம் ஜாதிகளிடம் கடன் வாங்குவாய், அதை கொடுக்க உன்னால் முடியாமல் போகும். அந்த கிறிஸ்தவ தகபபனுக்கு கர்த்தர் எத்தனையோ முறை எச்சரித்திருப்பார், ஆனால் அவரோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதை கேட்காமல், தன் சுயநலத்திற்காக, சுய இன்பத்திற்காக சிகரெட்டுகளை வாங்கி ஊதி தள்ளினார். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்ளூ நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்ளூ அவன் தலைவனாயிருப்பான்ளூ நீ வாலாயிருப்பாய் (உபாகமம் - 28:43,44) என்ற கர்த்தரின் சாபம் அவருடைய வாழ்க்கையில் பலித்தது.

.

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் சுய இன்பத்திற்காக, உன் இச்சைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காக, கடன் மேல் கடன் வாங்கி கொண்டிருக்கிறீர்களோ? உன் குடும்பத்தை கண்ணீரில் மிதக்க விட்டு கொண்டிருக்கிறிக்கிறீர்களோ? இன்று கர்த்தர் உனக்கு கொடுக்கும் எச்சரிப்பின் சத்தத்தை கேட்பாயாக! உன் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி விடு. கர்;த்தரிடம் தஞ்சம் புகுந்து விடு, அப்போது அவர் நீ கையிட்டு செய்யும் காரியங்களை எல்லாம் ஆசீர்வதிப்பார்…

.

ஒரு சிலர், தங்கள் பெற்றோரை சந்தோஷபடுத்த வேண்டி, தங்களுடைய திராணிக்கு மேலாக அவர்களுக்கு கொடுத்து, பழக்கபடுத்துவார்கள். பெற்றோருக்கு கொடுப்பதை நான் ஒரு நாளும் தடுக்க மாட்டேன். வயதான பெற்றோரை தாங்குவது நமது கடமை. அதை செய்யாவிட்டால் கர்த்தரின் சாபம் நம்மேல் வரும். ஆனால் மகனோ, மகளோ வெளிநாட்டில் சம்பாதிக்கிறார்கள் என்று இங்கு சுகபோகமாய், தங்கள் சுய இச்சைகைளுக்காய், பிள்ளைகள் கஷ்டப்பட்டு சம்பாதித்து தங்களுக்கு அனுப்பும்; பணத்தை வீணாய் விரயம் செய்யும் பெற்றோர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆசை இச்சையை தீர்ப்பதற்காக, இந்த மகள், அல்லது மகன் பணத்தை அனுப்புவார்கள். சிலவேளை முடியாதபோது மற்றவர்களிடம் கடன் வாங்கி அவர்களுக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம்? ஞானமாய் சில காரியங்களை செய்ய வேண்டும். ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோமர் 13:8) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. கடனை வாங்கி பழக்கப்படாதிருங்கள். ஒருமுறை வாங்கினால் திரும்ப திரும்ப வாங்க தோன்றும். அதனுடைய முடிவோ விபரீதம்! அது ஒரு பொல்லாத வியாதி! ஆந்த வியாதியில் சிக்கி விடாதீர்கள்!

.

கர்த்தருக்கு கொடுங்கள். உங்கள் இயலாமையிலிருந்து கர்த்தருக்கு கொடுத்து பாருங்கள்! கர்த்தர் வானத்தின் பலகணிகளை திறந்து உங்களை ஆசீர்வதிப்பதை காண்பீர்கள். கர்த்தருக்கு கொடுக்கிறவர்கள் யாரும் மற்றவர் முன் தலைகுனிந்து நிற்க மாட்டார்கள். உங்களை கடனே இல்லாமல் கர்த்தர் அதிசயமாய் வழிநடத்துவார். உங்கள் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். ஆமென்! அல்லேலூயா!

.

சிங்க குட்டிகள் பட்டினி கிடக்கும்

ஆண்டவரை தேடுவோர்க்கு குறையில்லையே

குறையில்லையே ஆண்டவரை தேடுவோர்க்கு

குறையில்லையே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்முடைய வாக்குதத்தங்கள் எங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்படியாக எங்கள் வாழ்க்கை எல்லாவிதத்திலும் உமக்கு பிரியமானதாக இருக்க கிருபை செய்யும். நீயோ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்கிற வாக்குதத்தம் எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிறைவேறுவதாக. கடன் வாங்கி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும், அதிலிருந்து அவர்கள் வெளியேற தேவன் கிருபை செய்வீராக. உமக்கு கொடுத்து, அதனால் வரும் ஆசீர்வாதங்களை அளவில்லாமல் பெற்று கொள்ள தேவன் அவர்களுக்கு உணர்த்துவீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 27 மே, 2014

27th May 2014 – ஒருவரும் விரும்பாத மனிதன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மே மாதம் 27-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
ஒருவரும் விரும்பாத மனிதன்
.................

யோராம் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. - (2 நாளாகமம் 21:20).

.

ஒரு நண்பர் சமீபத்தில் தன்னுடைய மூத்த சகோதரன் மரித்து போனதாக கூறினார். நான் அவரிடம், 'ஐயோ எனக்கு தெரியாதே' என்று கூறினேன். அப்போது அவர் சொன்னார், 'நாங்கள் யாரிடமும் இதை அறிவிக்கவில்லை. அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் யாரையும் மதிக்கவில்லை, கவனிக்கவில்லை. இப்போது அவர் மரித்த போது யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை' என்றார். என்ன ஒரு பரிதாபமான சாவு!

.

வேதத்தில் இராஜாவாகிய யோராம் அப்படிதான் வாழ்ந்தான். அவன் ஆட்சிக்கு வந்தவுடன் தன் சகோதரர் யாவரையும் கொன்று போட்டான். 'யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்' (2 நாளாகமம் 21:4). மட்டுமல்ல, அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான். உண்மையான தேவனை விட்டு வழிவிலக செய்து, பாகால்களை வணங்கும்படி செய்தான். அவன் அரசாண்ட வருஷங்கள் மிகவும் மோசமானதாக, துன்பம் நிறைந்ததாக இருந்ததுடன், அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்.

.

என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அதைவிட பரிதாபம், அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான் என்று வேதம் கூறுகிறது. அவனை விரும்புவாரில்லாமல், தனிமையாக, மிகுந்த வேதனையோடு மரித்தான். ஏன் இந்த நிலைமை? அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் என்று வேதம் கூறுகிறது. அவன் தன்னையே முக்கியப்படுத்தி, தேவனுடைய கற்பனைகளை மீறி நடந்து, தான்தான் இராஜா என்று தேவனையும் மனிதரையும் மதியாதாபடி வாழ்ந்தபடியால் இந்த சோக முடிவு அவனுக்கு ஏற்பட்டது.

.

நாம் நம் வாழ்வில் கர்த்தரை முதலிடமாக வைத்திருக்கிறோமா? சிலர் கையில் பணம் வந்தவுடன், அவர்களுடைய நடையே மாறிவிடும், பேச்சே மாறிவிடும், மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். தாங்கள் இந்த உலகத்தையே ஆளுவதாக மனதில் ஒரு பெருமை வந்துவிடும். நாம் மரிக்கும்போது நம்மை குறித்து நன்மையான காரியங்களை கூறும்படி நாம் வாழ்க்கை வாழ்கிறோமா? இல்லாவிட்டால், அப்பாடா, போனான், உலகத்திற்கே பாரமாக இருந்தான். போனது நல்லது என்று கூறும்படி வாழ்கிறோமா?

.

நாம் வாழும்போது, கர்த்தருக்கு பிரியமான, மற்றவர்களுக்கு பிரயோஜனமான ஒரு வாழ்க்கையை வாழும்போது, நாம் மரிக்கும்போது மற்றவர்களால் ஐயோ இவர்கள் போய் விட்டார்களே, என்று கண்ணீர் விடும் நிலைமை ஏற்படும்.

.

ஒருவர் மரிக்கும்போதுதான் அவர்களுடைய உண்மையான வாழ்வு மற்றவர்களுக்கு தெரியும். என்கூட வேலை செய்யும் ஒருவர், 'இவர் மரித்தாரே, இவரை குறித்த எனக்கு நினைவு வரும்போதெல்லாம் நான் இப்படிப்பட்ட நண்பரை கொடுத்தாரே என்று கடவுளை துதிக்கிறேன். ஆனால் மற்ற மனிதரை பார்க்கும்போது, ஏன் இந்த மனிதர் இன்னும் உலகத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்' என்று கூறினார். நாம் வாழ்வது ஒருமுறைதான். அந்த வாழ்க்கையை தேவனுக்கு பிரியமுள்ளதாக வாழ்வதற்கு முயற்சிப்போம். மற்றவர்கள் கர்த்தரை துதிக்கும் அளவு நம்முடைய வாழ்க்கை இருக்கட்டும். தேவனே அவரை எடுத்துக் கொள்ளும் என்று முறையிடாதபடி நம் வாழ்க்கை அமையட்டும்.

.

வாழும் வாழ்க்கை ஒருமுறைதான்

வாழ்ந்திடுவோம் நாமும்

வானவர் இயேசுவுக்கு பிரியமாக

வாழுகின்ற மற்றவர்க்கு பிரயோஜனமாக -சீர்

வாழ்வு வாழ்ந்திட உங்களை வாழ்த்துகிறேன்

.

ஜெபம்
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, நீர் பிரியப்படும் வாழ்க்கை வாழவும், மற்றவர்கள் விரும்பும் வாழ்க்கை வாழவும் கிருபை செய்யும். இந்த உலகத்தில் நாங்க்ள கொண்டு வந்தது ஒன்றுமில்லை, கொண்டு போவதும் ஒன்றுமில்லை. ஆனால் எங்களை குறித்த நல்ல நினைவுகளை மற்றவர்களுக்கு நாங்கள் விட்டு செல்லதக்கதாக எங்கள் வாழ்க்கை அமைய கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 26 மே, 2014

26th May 2014 - மன்னிக்கும் மனப்பான்மை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மே மாதம் 26-ம் தேதி - திங்கட் கிழமை
மன்னிக்கும் மனப்பான்மை
....................

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (கலாத்தியர். - 5:15).

.

ஜெர்மன் நாட்டில் போபன்ஷோசன் என்ற இடத்தில் பழங்கால மடாலயம் ஒன்றுண்டு. இன்று அது சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடமாக உளளது. இங்குள்ள ஒரு அறையில் மான் கொம்புகள் இரண்டு ஜோடி இருப்பதை காணலாம். ஓன்றோடென்று பின்னப்பட்ட இரண்டு ஜோடி மான் கொம்புகள் இருப்பதைக் காணலாம். அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டுப்;பகுதியில் கிடைக்க பெற்றன. அநேகமாக இரண்டு மான்கள் ஒன்றோடொன்று முட்டி சண்டையிட்டபோது பிரிக்க முடியாதபடி கொம்புகள் சிக்கி கொண்டிருக்க கூடும். பின்பு சிக்கிய நிலையில் புல் மேயாதபடி தண்ணீர் குடிக்க முடியாதபடி அவ்விரண்டும் உயிர் இழந்திருக்க கூடும். அந்த மான்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து இரண்டும் சேர்ந்து புல் மேயவும், தண்ணீர் குடிக்கவும் முயற்சித்திருக்குமானால், ஒரு வேளை உயிர் பிழைத்திருக்கலாம். ஏன் கொம்புகளின் சிக்குண்ட நிலை கூட விடுபட்டிருக்கலாம். ஆனால் பரிதாபம் அவை மரித்து போயின.

.

இந்த மான்கள் இரண்டும் முட்டி மோதி சிக்குண்டு அழிந்தது போல இன்றைய சமுதாயத்தில் மனிதர்களுக்குள்ளும் இப்படிப்பட்ட சம்பவங்களை பார்க்கிறோம். பள்ளிகளில் மாணவர்களுக்குள் பிரச்சனை, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர்களுக்குள் பிரச்சனை, வீட்டிற்குள் கணவன் மனைவி, பிள்ளைகளுக்குள் பிரச்சனை என்று அடுக்கிகொண்டே போகலாம். இப்படி பிரச்சனை உருவாகும்போது, ஒருவர் மற்றவரை மன்னிக்க முடியாமல் கோபமும், சண்டைகளும் எழுகின்றன. அந்த சண்டை சச்சரவுகள் ஓய்ந்த பின்பும் ஒருவரையொருவர் மன்னிக்க முடியாமல் கசப்பிலே தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர்.

.

இப்படி இரு நபர்களுக்குள் கசப்புகள் இருக்கும்போது, ஒருவர் மற்றவர் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்று எதிர்பார்த்து காலத்தை கசப்புடனே கழிக்கின்றனர். இச்செய்தியை வாசிக்கும் அருமையானவர்களே, உங்களுக்கும் மற்ற யாருடனாவது பிரச்சனை பிரிவினை உண்டா? அந்த மான்களின் நிலையைப் போல நீங்களும் வாழ்க்கையில் சிக்குண்டு சமாதானத்தை இழந்து காணப்படுகிறீர்களா? இதற்கு ஒரு தீர்வு உண்டு. அது என்ன? பாதிக்கப்பட்ட நீங்கள் முதலாவது சென்று மற்ற நபரிடம் மன்னிப்பு கேட்டு பாருங்களேன். நீங்கள் ஒப்புரவாக விரும்புவது போல அந்த நபரும் ஒப்புரவாக வாஞ்சையாயிருப்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஒருவேளை அந்த நபர் சமாதானத்திற்கு உடன்பட மறுத்தாலும் அவரிடம் தாழ்ந்து போனதினால் உங்கள் இருதயம்; சமாதானத்தினால் நிரம்பும். பிறர் குற்றத்தை நான் மன்னித்தது போல ஆண்டவரே என்னையும் மன்னியும் என்று தைரியமாய் தேவனை நோக்கி ஜெபிக்கலாம். கொஞ்சகாலம் வாழப்போகும் இந்த பூமியில் பிறர் மேல் உள்ள கசப்புணர்வுகளை களைந்து மனதார மன்னித்து சமாதானத்தோடு வாழ பிரயாசமெடுப்போம்.

.

வேதாகமத்தில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை எப்படி தீர்ந்தது என்று பார்ப்போம். யாக்கோபு தன் சகோதரன் ஏசாவையும், தன்தகப்பனையும் ஏமாற்றி, ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு, தன் மாமனாகிய லாபானிடத்திற்கு ஓடி, அங்கு இருபது வருஷம் இருந்து விட்டு திரும்ப வீடு திரும்பும் நேரத்தில், தன் சகோதரனாகிய ஏசா தன்னை என்ன செய்வானோ என்று பயந்தவனாக செல்லும் நேரத்தில், 'என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்' என்று கர்த்தரிடம் பாதுகாவலை கேட்டு ஜெபித்து, 'அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, தன் வேலைக்காரனிடத்தில் கொடுத்து, இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல்' என்றான். பின்னர் அவன் ஏசாவை கண்டபோது, தான் தன் பிள்ளைகள், மனைவிகளுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள் (ஆதியாகமம் 32-33). இருவரும் ஒருவரையொருவர் மன்னித்து, சந்தோஷமாய் தங்கள் இடங்களுக்கு திரும்பி போனார்கள் என்று பார்க்கிறோம். ஒருவேளை ஏசா யாக்கோபை மன்னியாதிருந்திருந்தால், அந்த இடத்திலே தானே, யாக்கோபின் கோத்திரம் அழிந்திருக்கும். இஸ்ரவேலின் சந்ததி இல்லாமல் போயிருந்திருக்கும், கிறிஸ்து உலகிலே தோன்றாதபடி தடை ஏற்பட்டிருக்கும். தேவன் அப்படி நேரிடாதபடி, ஏசா யாக்கோபை மன்னிக்க கிருபை செய்தார்.

.

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஆனால் ஒருவரையொருவர் மன்னித்து வாழ்ந்தால், நிச்சயமாகவே செழிப்பீர்கள். நாம் ஒருவரையொருவர் மன்னித்து, சந்தோஷமாய் வாழ தேவன் தாமே கிருபை செய்வாராக!

.

சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்

மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

அன்பே பிரதானம் சகோதர

அன்பே பிரதானம்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை உமது பிள்ளைகளாக்கின நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் ஒருவரையொருவர் கடித்து பட்சிக்காதபடிக்கு, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறை உண்டானால், மற்றவர்களை மன்னிக்கும் மனப்பான்மையை எங்களுக்கு தருவீராக. கசப்பு உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதபடி, மற்றவர்களை மன்னிக்க எங்களுக்கு உதவி செய்யும். தேவரீர் எங்களை மன்னித்ததை நினைவு கூர்ந்து, மற்றவர்களை மன்னிக்க உதவிசெய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 25 மே, 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 25th May 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

குடு குடு பாட்டி

குனிந்து விழுந்து சிரித்தாள்

நிமிர்ந்து மேலே பார்க்க

கையிலே ஓர் தங்கக் கட்டி   -அவள் யார்?

 

விடை:சாராள். ஆதி 18:11-14; 21:1-3.

 

====================================

 

ஊமை ஊரைக் கெடுக்கும்

பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்

இவனோ மிகுந்த நன்மையைக் கெடுப்பான் -அவன் யார்?


விடை: பாவியான ஒருவன். பிர 9:18.

 

====================================

 

எண் கணித முறையில்

எண்ணற்ற பெயர்கள்

எப்படி மாற்றிப் பார்த்தாலும்

ஆண்டவர் பெயர் மாற்ற

புதிய பெயர் கிடைத்திடும்  -அவை என்ன?
 


விடை: எப்சிபா – பியூலா. ஏசா 62:2-4.

====================================
நன்றி: 'வேதாகம நண்பன்'

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 23 மே, 2014

23rd May 2014 - தேவன் நமது பட்சம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மே மாதம் 23-ம் தேதி - வெள்ளிக்கிழமை
தேவன் நமது பட்சம்
......

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?. - ( ரோமர் 8:31).

.

ஒரு கிறிஸ்தவ வாலிபன், புதிதாக ஒரு கம்பெனியில் இரவு வேலையில், ஒரு வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அவாவுடன், அந்த கம்பெனியில் சேர்ந்தான். அங்கு அவனோடு இருந்த மற்றவர்கள், அவனிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். அவன் கிறிஸ்தவனாக இருந்தபடியால், அவனை எள்ளி நகையாடி, அவனை அவமானப்படுத்தி கொண்டிருந்தனர். ஓவ்வொரு இடைவேளை நேரம் வரும்போதும் அவனை அப்படி துன்பப்படுத்திகொண்டிருந்தனர்.

.

ஒரு நாள் இரவு மிகவும் அவனை கலாட்டா பண்ணி, அவனை பரியாசம் செய்து, இயேசுகிறிஸ்துவை பற்றியும் ஏதோதோ சொல்லி வம்புக்கிழுத்தனர். அப்போது அவன் மிகவும் மனம் நொந்து சே, போ! இந்த வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானித்து இருக்கையில், ஒரு வயதான மனிதர், 'போதும் அவனை வம்புக்கிழுத்தது, அவரவர் உங்கள் வேலைகளை பாருங்கள்' என்று சத்தமிட்டார். உடனே மற்றவர்கள் அவனை விட்டு பின்வாங்கி, தங்கள் வேலைகளுக்கு திரும்பினார்கள். பின்னர் அந்த வயதான மனிதர் அந்த வாலிபனிடம் சொன்னார், 'நீ மிகவும் துன்ப நேரத்தில் இருப்பதை பார்த்தேன். நான் உன்னுடன் உன் பக்கத்தில் இருக்கிறேன் என்பதை நீ அறியவே நான் அப்படி மற்றவர்களிடம் சொன்னேன்' என்று கூறினார்.

.

ஒருவேளை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் கிறிஸ்துவை அறியாத மற்றவர்கள் மத்தியில் நீங்கள் மாத்திரம் தனியாக இருக்கலாம். மற்றவர்கள் உங்களை கிண்டல் கேலி செய்யலாம். அவர்கள் அநேகராயிருப்பதால் அவர்கள் ஜெயிப்பார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களோடு துணையாக இருக்க வேறு ஒரு விசுவாசியை உங்களுக்கு தேவன் அனுப்பபுவார். அப்படி அனுப்பாவிட்டாலும், தேவனே உங்கள் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் ஒரு நாளும் மறக்ககூடாது. மட்டுமல்ல அவருடைய தூத சேனைகளும் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறக்ககூடாது.

.

ஒரு முறை தேவ மனுஷனாகிய எலிசாவுக்கு விரோதமாக சீரியா ராஜா கோபங்கொண்டு அவரை கொல்லுவதற்கு 'அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்' (2 இராஜாக்கள் 6:14-17) என்று பார்க்கிறோம். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக யுத்தம் செய்வதற்கு தம்முடைய தூத சேனைகளையே அனுப்பி அவர்களை விடுவிக்கிறார்.

.

நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக தம்முடைய சொந்த குமாரனையே நமக்காக அனுப்பினவர், உங்களை தனியாக இருக்க விட்டுவிடுவாரா? ஒருபோதும் இல்லை! மனம் தளராதிருங்கள். நீங்கள் தனியே இல்லை. ஒரு முறை எலியா தீர்க்கதிரிசியும் அப்படிதான் சொன்னார், 'அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்' (1 இராஜாக்கள் 19:14). அப்போது தேவன் அவருக்கு சொன்னது, 'ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்' என்றார். - (1 இராஜாக்கள் 19:18). எலியா தீர்க்கதரிசி நினைத்தார், தான் மாத்திரம் தனியாக இருப்பதாக, தேவன் அவருக்கு வெளிப்படுத்தினார், 'நீ மாத்திரம் தனியாக இல்லையப்பா, இன்னும் ஏழாயிரம் பேர் உன்னோடு துணைக்கு இருக்கிறார்கள்' என்று அவரை தைரியப்படுத்தினார்.

.

அன்பு சகோதரனே சகோதரியே, நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டபின் ஒரு நாளும் நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். 'இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்' என்று கூறிய இயேசுகிறிஸ்து நம்மோடு கூட எனறும் இருக்கிறார். மட்டுமல்ல, உங்களோடு தேவனும், பரலோகத்தின் முழு சேனையும் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். நான் தனியாள், எனக்கு என்று யார் இருக்கிறார்கள் என்று ஒருபோதும் அதைரியப்படாதீர்கள். நீங்கள் வானத்தையும் பூமியையும் அண்ட சராசரத்தையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவனின் பிள்ளை என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ஆமென் அல்லேலூயா!

.

கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது

நமக்கு எதிராய் நிற்பவன் யார்?

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

கலங்கி தவிக்காதே

அவரே உன்னை ஆதரிப்பார்

அதிசயம் செய்வார்

.

ஜெபம்
எங்களை என்றும் தனியே விடாத எங்கள் நல்ல தகப்பனே, என்றென்றும் எங்களோடு இருப்பவரே உமக்கு ஸ்தோத்திரம். நீர் எங்களோடு இருக்கும்போது நாங்கள் எதை குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே. வானத்தின் சேனைகளும் எங்களோடு இருப்பதற்காக ஸ்தோத்திரம். எங்களுக்க விரோதமாக எழும்புகிறவர்களை நீர் எங்களுக்காக யுத்தம் செய்து எங்களை விடுவிக்கிறதற்காக உமக்கு நன்றி. நீர் எங்களோடு எப்போதும் இருக்கிறீர் என்று நீர் எங்களுக்கு கொடுத்த வாக்குதத்தத்திற்காக உமக்கு நன்றி. தனிமையை உணருகிற ஒவ்வொரு சகோதர சகோதரிகளையும் இந்த வார்த்தைகள் மூலம் ஆற்றி தேற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...........

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.