Friends Tamil Chat

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - 31st August 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:    31st August 2014

.
1)  முதன் முதலாக தேவனுக்கென்று பலிபீடம் கட்டி அவருடைய

    நாமத்தைத் தொழுது கொண்ட மனிதன் யார்? அவன் கட்டிய

     பலிபீடம் எந்தச் சமவெளியில் இருந்தது?

.
2)  பலிக்கென்று தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து வகையான உயிர்

    ஜந்துக்கள் எவை எவை?
.
3)  பென்யமீனுக்கு அவன் தாயார் இட்ட பெயர் என்ன?
.
 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய 

 பெயர்களை சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

  சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)

.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
கடந்த  வார கேள்வி பதில்கள்: 24th ஆகஸ்ட்  2014:
.
1) சாலொமோனின் தாய் பெயரென்ன? அவளுடைய முதல் புருஷன்

   பெயரென்ன?
.
சரியான பதில்:  பத்சேபாள், உரியா - (2 சாமுவேல் 12:24;                      

2 சாமுவேல் 11:26)
.
2)  கிதியோன் மீதியானியரை எத்தனைப் பேரைக் கொண்டு

முறியடித்தான்? அவர்களுடைய போர் ஆயுதங்கள் எவை?
.
சரியான பதில்: முன்னூறு பேரைக் கொண்டு முறியடித்தான்.  தீவட்டி,

எக்காளம், மண்பானை - நியாயாதிபதிகள் 7:7, 16)
.
3)  சாமுவேலுடைய குமாரரின்  பெயரென்ன? ஜனங்கள் அவர்கள்

நியாயாதிபதிகளாய் இராதபடிக்கு வெறுக்க காரணமென்ன?
.
 சரியான பதில்: யோவேல், அபியா பொருளாசைக்கு சாய்ந்து, பரிதானம்

வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். - 1 சாமுவேல் 8:3.
 

********************************************************************
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே

உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.  வேதத்தின்

இரகசியங்களை தேடிக் கண்டு கொள்வோம்.
.

1)  Bro. Kevin Macancy  .....  2)  Bro. Victor Jayakaran  ..... 3)  Mrs. Santhi Justin....
.
4) Sis. M.Vijayarani ............. 5)  Bro. R. Tamilmani  ..........  6) Sis. Kamini David...
.
7) Bro. Gertrude L Farnando...8) Sis. Alwis Deva Kirupa ..... 9) Sis. Ida Shakila

  Joshua....
.
10) Sis. Stella Rinola ....... 11)  Sis. Deepa Theodore .... 12)  Sis. Sudha Prem
.
13) Bro. A.Jesus Kumar ...14)  Bro. Selvanesan selvanesan.N...15) Bro. M.Melvin
.
16)  Bro. J. Hansy Jesus Kumar .... 17) Bro. L.Samuel George.....  

.

18) Sis. V. Rajeswari @ Deborah.... 19) Mrs.Archana Santhosh Kumar..

.

20) Sis. Sudha Kirubanandhan...21) Sis. Anusha

.
22) Sis. Vasanthi B ........... 23) Sis. J. Judi ........... 24) Sis. Hannah Ezekiel....
.
25) Miss.M.Jasmine Zion... 26)  Sis.  Stella Mercy..27)  Sis. Chandralekha Martin ..
.
28) Miss.J. Sharon Rachel Mahima ....29) Sis. Annie Smiley Paules ... ...............

.

30) Sis. Saraswathy Chinnadurai............31) Sis. Reena Paul..

.

 

.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

29th August 2014 ¬ - கர்த்தருடைய உக்கிரகத்தின் நாள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி - வெள்ளிக்கிழமை
கர்த்தருடைய உக்கிரகத்தின் நாள்
........

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார். - (செப்பனியா 1:18) .

.

ஒரு பணக்கார பெண் ஒரு வைத்தியரிடம் தன் கால் வலிக்காக பார்க்க சென்றிருந்தாள். அந்த வைத்தியர், 'உனக்கு முன் நான்கு பேர் இருக்கிறார்கள். நீ போய் உன் பேர் வரும் போது வா' என்று அனுப்பினார். அதற்கு அந்த பெண் 'நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உன்னை வேலையிலிருந்தே எடுத்து விட முடியும், ஏன் நான் கை நீட்டி உன்னை அடிக்கலாம், இந்த நாட்டின் சட்டப்படி யாராவது வைத்தியரை அடித்தால் 500 பணத்தை கட்ட வேண்டும் அதை ஒரு நிமிடத்தில் கட்டி நான் வெளியே வந்து விடுவேன்' என்று அகங்காரத்தோடு பேசினாள். அதற்கு அந்த வைத்தியர், 'நானும் உன்னை அடித்து, அதே 500 பணத்தை கட்டி வெளியே வந்துவிடுவேன்' என்று கூறினார். சில பணக்காரர்களுக்கு பணம்தான் தங்கள் பெலன், அது அவர்களை எப்போதும் காப்பாற்றும் என்று நம்பி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பணம் ஒன்றுமில்லாமற்போகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்களுடைய இருதயத்தில் அவர்களுடைய பொருள் அவர்களுக்கு அரணான பட்டணம் போலிருக்கிறது, அதனால் அதை கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிகரம் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயேசுகிறிஸ்து 'ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்' என்றார் - (லூக்கா 19:25).

.

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே சடிதியாய் அழிவு வரும். அப்போது மனிதருடைய வெள்ளியும் பொன்னும் அவர்களை தப்புவிக்கமாட்டாது. தங்கள் செல்வ பெருக்கினால் மகிழ்ந்து, உலகத்தில் உள்ள அத்தனை அக்கிரமங்களையும் செய்து கொண்டு, சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேல் அழிவு சீக்கிரமாய் வரும். 'ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்ந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும் கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்' (யாக்கோபு 5:1-3) என்று வேதம் எச்சரிக்கிறது. ஐசுவரியவான்களின் மேல் கர்த்தரின் நாளில் தீங்கு சடுதியாய் வரும்.

.

நம் தேவன் எரிச்சலின் தேவன். அவருடைய பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. கிருபையின் காலம் நிறைவடையும்போது, மனந்திரும்புதலின் காலமும் நிறைவடையும். 'உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்' (லூக்கா 21:34) என்று இயேசுகிறிஸ்து எச்சரித்தார்.

.

பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். யாரும் தப்ப முடியாது. மக்கள் தங்கள் தங்கள் வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு, கர்த்தரை மறந்து, தங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும்போது சடுதியாக முடிவு வரும். அவர்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் வரும். அப்போது யாரும் தப்ப முடியாது. ஒருவேளை அதிக பொருட்களை சேர்த்து வைத்ததினால், ஒரு மனிதன் தனக்குள்ளாக இப்படி சொல்லிக் கொள்வானேயானால், 'ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். - (லூக்கா 12:19-20).

.

நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கு கர்த்தருடைய நாள் என்று வந்தாலும் அவரை சந்திக்க நீங்கள் ஆயத்தமா? இன்று மரணம் நேரிட்டாலும் நான் கர்த்தரை சந்திப்பேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறதா? மரணத்தின் பின் மனம் திரும்புதல் இல்லை, இரட்சிப்பு இல்லை, எந்த நினைவும் அங்கு இல்லை. வாழ்ந்திருக்கும் இந்த நாளில் தானே அவருடைய இரட்சிப்பை பெற்று கொள்ள ஆயத்தமா? 'பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 6:15-17). பூமியின் ராஜாக்களிலரிருந்து அடிமைகள் வரைக்கும் அநேகர் தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ளவில்லை. ஆனால் மகாநாள் வந்தபோதோ அவர்கள் தங்களை ஒளித்து கொள்ள வகை தேடுகிறார்கள். ஆனால் தங்களை ஒளித்து கொள்ளவோ, மறைந்து கொள்ளவோ முடியாது. ஆகவே கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த நாட்களில் தானே, கிருபையின நாட்கள் நிறைவுபெறுமுன்னே, இரட்சிக்கப்படுவோம். அவரை தேடி அவரை பற்றி கொள்வோம். 'கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்' (செப்பனியா 1:14-15).

.

லௌகீக கவலைகளினாலும்

இலச்சை மிகுந்த வெறியினாலும்

எம் இதயம் பாரம் அடையாமல்

எச்சரிக்கையுடன் காத்திருப்போம்

இரவும் பகலும் விழிப்பாய்

இருதயம் நொறுங்கி ஜெபிப்போம்

கற்புள்ள கன்னிகையாக நாமும்

கர்த்தர் வருகைக்கு காத்திருப்போம்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். கர்த்தரின் மகா உக்கிரத்தின் நாள் சீக்கிரமாய் வருகிறபடியால், நாங்கள் எந்தவித லௌகீக கவலைகளினாலும், வெறியினாலும் பாரமடையாதபடிக்கு, எங்களை காத்து, எங்களை ஆயத்தபடுத்த கிருபை செய்யும். ஐசுவரியவான்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பது அரிது என்று சொன்னீரே ஐசுவரியத்தை நீர் எங்களுக்கு கொடுத்த நோக்கத்தை நிறைவேற்றி, அந்த ஐசுவரியத்தினால் உம்மை கனப்படுத்த உதவும் தகப்பனே. கர்த்தரின் கோபாக்கினை நாளிலே நாங்கள் பாடுகளை அனுபவிக்காதபடி, கிடைக்கப்பெற்றிருக்கிற இந்த கிருபையின் நாட்களில் உம்மை ஏற்றுக்கொண்டு, உம்முடைய வழிகளில் நடக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
குறிப்பு

pray1another

அன்பு வாசகர்களே, வேதாகம கேள்வி - பதில் போட்டி - இன்று கடைசி நாள், பதிலை அனுப்புங்கள்.தேவன் தாமே வானத்தின் பலகணிகளை திறந்து ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

28th August 2014 - தாறுமாறாக்கப்பட்ட பாஷை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி - வியாழக்கிழமை
தாறுமாறாக்கப்பட்ட பாஷை
.......

நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். - (ஆதியாகமம் 11:7-9)

.

நீங்கள் என்றாவது உலகில் எத்தனை பாஷைகள் உண்டென்று யோசித்திருக்கிறீர்களா? அவைகள் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? மொழி ஆராய்ச்சியாளர்கள் மொழிகள் எப்படி வந்தது என்று இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், ஒரு மொழி பேசும் குடும்பத்திலிருந்து தான் மற்ற மொழிகள் வந்திருக்க வேண்டும் என்று. அவர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால், வேதத்தில் நமக்கு தெளிவாக பாஷைகள் எப்படி வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதையே நாம் விசுவாசிப்போம். பூமியெங்கும் வழங்கின பாஷையை கர்த்தர் தாறுமாறாக்கினார் என்று வசனம் சொல்கிறது. அதற்கு முன் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது (வசனம் 1).

.

தேவன் ஏன் அதை தாறுமாறாக்கினார்? ஏனென்றால் மனிதன் கர்த்தருக்கு விரோதமாக எழும்பினபடியால், தேவன் அந்த காரியத்தை செய்தார். மனிதர்கள் ஒன்று சேர்ந்து தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து, செய்ய ஆரம்பித்த முதல் முரண்பாடான காரியமும் அதுதான். அவர்கள் ஒரு கோபுரத்தை மாத்திரம் கட்ட திட்டமிடவில்லை, அதற்கு மேலான ஒன்றை செய்ய ஆரம்பித்தார்கள். நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள் (வசனம் 4). இங்கு கர்த்தர் எங்கே? அவரை குறித்து அவர்கள் பயப்படாதபடி, அவர்களுடைய திட்டங்களில் அவர் இல்லாதபடி செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம், திரும்பவும் தேவ கோபாக்கினை வந்து, ஒரு வெள்ளம் வந்தால், வானளாவும் இந்த கோபுரத்தின்மேல் ஏறி தப்பித்து கொள்ளலாம் என்று. எப்படியாயினும், அவர்கள் தேவனில்லாதபடி தங்களுக்கென்று ஒரு ராஜய்த்தையும், தங்கள் பெயருக்கென்று ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். ஆகவே தேவன் இறங்கி வந்தார். அவர் அப்படி வந்து செய்திருக்காவிட்டால், அந்த மனிதர்கள், நோவாவின் காலத்தில் இருந்த பாவத்தைவிட அதிக பாவத்தை செய்து, தேவன் வேறு முறையில் உலகத்தை அழிக்கும்படியான நியாயத்தீர்ப்பை பெற்றிருப்பார்கள்.

.

கர்த்தர் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினபடியால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, புரிந்து கொள்ள கூடாதிருந்தது. அப்போது அவர்கள் அந்த கோபுரத்தை கட்டுவதை விட்டுவிட்டார்கள். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.

.

ஆனால், தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவருடைய திட்டத்தை நாம் பெந்தேகோஸ்தே நாளில் பார்க்கிறோம். 'அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்' (அப்போஸ்தலர் 2:3-6). வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்த வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அந்த இடத்திலே கூடி வந்திருந்தார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவரால் மேல்வீட்டறையிலே கூடியிருந்த 120 பேரும் வௌ;வேறு பாஷையிலே பேசினபோது, அங்கு வந்திருந்து அனைத்து மக்களும் எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் (வசனம்7). அவர்கள் தங்கள் மொழியில் அவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசினதை கேட்டபோது, ஆச்சரியப்பட்டார்கள். ஆம், தேவன், குழப்பத்தின் இடமாகிய பாபேலில் அவர்கள் ஒரே பாஷையை பேசினபோது, அதை தாறுமாறாக்கினவர், அவர்கள் தேவனை பற்றிக்கொள்ளாமல், தேவனுக்கு முதலிடத்தை கொடாமல், தங்களுக்கு பெயர் உண்டாக்கும்படி அவர்கள் செய்தபடியால், அந்த இடத்தில் பாஷையை தாறுமாறாக்கினவர், பெந்தேகோஸ்தே நாளில், அவர்கள் பேசின வார்த்தைகள் மற்றவர்கள் விளங்கி கொள்ளும்படி செய்தார். உலகில் உள்ள ஜனம் இரட்சிப்பை பெற்றுகொள்ளும்படி, அவர் அந்த நாளில் வெவ்வேறு பாஷைகளை பேச வைத்தார். அந்த நாளில் இரட்சிப்பின் செய்தியை பேதுரு எழுந்து நின்று அறிவித்தபோது, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா! பரலோகத்தின் பாஷை குழப்ப பாஷையல்ல, இரட்சிக்கும் பாஷையே!

.

கர்த்தருடைய இரட்சிப்பு எல்லா மொழி பேசும் மக்களுக்கும் உரியது. 'தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 5:9-10). ஆம் பரலோகத்தில் சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து வந்த ஜனங்கள் அல்லேலூயா என்று பாட்டுக்களை பாடுவார்கள். ஒவ்வொரு மொழிகளிலுமிருந்து தேவனுக்கு துதிகள் செலுத்தப்படும். ஆமென் அல்லேலூயா!

.

எல்லா ஜாதியார், எல்லா தேசத்தார்

எல்லா மொழியும் பேசும் மக்களாம்

ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு

ஆட்டுக்குட்டிக்கே மகிமை என்று

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

திரளாய் நிற்கும் யார் இவர்கள்

சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

.

ஜெபம்
எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய எங்கள் தகப்பனே, உம்மை துதிக்கிறோம். உலகத்தில் அநேக மொழிகள் இருந்தாலும் அத்தனை மொழிகளிலிருந்தும் மக்களை இரட்சிக்க சித்தம் கொண்ட எங்கள் தகப்பனே, உம்மை துதிக்கிறோம். எங்கள் தமிழ் மொழி பேசும் மக்களை உம்முடைய சமுகத்தில் கொண்டு வருகிறோம் தகப்பனே, பரலோகத்தை தமிழ் மொழி பேசும் மக்கள் நிரப்புவார்களாக. இன்னும் இரட்சிக்கப்படாத தமிழின மக்களை இரட்சிப்பீராக. ஒவ்வொரு மொழிபேசும் மக்களையும் இரட்சிப்பீராக. எங்கள் இந்திய தேசத்தில் காடுகளிலும் மலைகளிலும், பாஷை புரியாத மக்கள் மத்தியிலும், அவர்கள் பாஷைகளை படித்து, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 27 ஆகஸ்ட், 2014

27th August 2014 - முதலிடம் யாருக்கு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி - புதன் கிழமை
முதலிடம் யாருக்கு?
...........

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். - (மத்தேயு 6:33).

.

ஸ்காட்லாந்தை சேர்ந்த எரிக் லிடல் என்னும் வாலிபர்; தன்னை சீனாவுக்கு மிஷனெரியாக செல்ல அர்ப்பணித்திருந்தார்;. அவருக்கு பல சிறப்பு திறமைகளும் காணப்பட்டன. குறிப்பாக கால்பந்து வீரனாகவும், ஓட்டப்பந்தய வீரனாகவும் சிறந்து விளங்கினார். கால்பந்தில் ஸ்காட்லாந்து தேசிய அணியிலும், ஓட்டப்பந்தயத்தில் இங்கிலாந்திலும் பிரபலமாக திகழ்ந்தார். 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் எரிக் நிகழ்த்திய சாதனையை இங்கிலாந்தில் 35 வருடங்களுக்கு யாராலும் முறியடிக்க முடியவில்லை. 1924-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இவருக்கு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஓட்டப்பந்தயத்திற்கான தேர்வு ஓட்டம் ஒரு ஞாயிற்றுக் கிழமைக்கு குறிக்கப்பட்டிருந்தது. எரிக் ஞாயிற்றுகிழமை ஆராதனைக்கு செல்ல வேண்டும் என்பதால் ஓட மறுத்து விட்டடார். உலகின் புகழை சம்பாதிப்பதைவிட தேவனுக்கு கீழ்ப்படிவதே சால சிறந்தது என்பதே அவர் நன்கு அறிந்திருந்தார், மட்டுமல்ல, அதே ஞாயிற்றுகிழமையில் ஒரு ஆலயத்தில் பிரசங்கம் பண்ண ஒப்புக்கொண்டு அதை நிறைவேற்றினார். இவருடைய இச்செயலை தேவன் கனம் பண்ணினார். எப்படியெனில், மூன்று நாட்களுக்கு பின் நடந்த அந்த ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் சிறப்பாக வெற்றி பெற்று உலக சாதனை நிகழ்த்தினார். தம்மை கனம் பண்ணுகிறவர்களை கனம் பண்ணுகிற தேவனல்லவா நம் தேவன்!

.

தான் அர்ப்பணித்திருந்தபடியே சீனாவுக்கு மிஷனெரியாக சென்று மகிமையான ஊழியத்தை நிறைவேற்றினார். 1945ஆம் ஆண்டு மறுமைக்குள் பிரவேசித்தார். இவருடைய பெயர் பரலோகில் மட்டுமல்ல, இப்பூமியிலும் எல்லோராலும் கனப்படுத்தப்பட்டது.

.

இதை வாசிக்கிற நாம் நம் தேவனுக்கு எப்படி முதலிடம் கொடுககிறோம்? எத்தனை நாட்கள் சிறு சிறு காரியங்களை சாக்குபோக்காக காட்டி ஞாயிறு ஆராதனையை புறக்கணித்திருக்கிறோம்! சிலரது வாழ்க்கையில் இடறல்கள், போராட்டங்கள, பாடுகள், துன்பங்கள் வந்தாலொழிய மற்ற எவ்விதத்திலும் தேவனை தேடுகிற உணர்வே அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள்; முதலிடம் கொடுப்பது சமுதாய அந்தஸ்திற்கும் ஐசுவரிய வாழ்விற்குமே!

.

தாவீது தன் மகன் சாலமோனிடம், 'நீ தேவனை தேடினால் உனக்கு தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் என்றைக்கும் கைவிடுவார்' என்று கூறுகிறார். அவ்வசனத்தை நமக்கு அன்பான ஆலோசனையாகவும், அதே வேளையில் எச்சரிப்பாகவும் எடுத்து கொள்ள வேண்டும்.

.

தேவனுக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கும் போது, உலகத்தாரின் பார்வையிலே நாம் ஒரு சில நன்மைகளை வீணாக இழப்பதுபோல தோன்றலாம். உதாரணமாக ஞாயிற்று கிழமை நமது வியாபார ஸ்தலத்தை மூடிவிட்டு ஆலயத்திற்கு செல்லவும், குடும்பத்தோடு மகிழ்வாய் இருக்கவும் தீர்மானிக்கலாம். அதனால் அன்றைய வியாபாரம் பாதிக்குமே, அது மற்றவர்கள் வசமாகுமே என்று பிறர் யோசிக்கலாம். ஆனால் தேவனை முக்கியப்படுத்தியதால் வருமானம் குறைந்தாலும் அந்த குறைந்த வருமானத்தை தேவன் ஆசீர்வதித்து கடனில்லாத வாழ்வை அளிக்க முடியும் அல்லது அந்த நாளின் வருமானத்தை மற்ற ஆறு நாட்களில கூட்டி கொடுக்கவும் முடியுல்லவா? இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தேவனுக்கு முதலிடம் கொடுககும்போது, தேவன் நம்முடைய தேவைகளை அதிசய விதமாய் சந்திக்க வல்லவராயிருக்கிறார்.

.

தேவனுக்கு நம் முதன்மையையும் சிறந்ததையும் கொடுப்போம். அவருடைய ராஜ்யத்தை தேடுவோம். அவருடைய நீதியை தேடுவோம். அப்போது தேவன் நம் ஒவ்வொருவருடைய தொழிலிலும், படிப்பிலும்;, குடும்பத்திலும்; நம்மை முதலிடத்திற்கு கொண்டு வருவார். ஆமென் அல்லேலூயா!

.

முதலாவது முதலாவது தேவனுடைய

இராஜ்யத்தை தேடுங்கள்

தேடுவீரென்றால் தேடுவீரென்றால்

உறைவிடமும் உணவும் கூட கொடுக்கப்படும்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். எங்கள் வாழ்க்கையிலே முதலாவது நாங்கள் உம்மை கனப்படுத்தவும், உம்முடைய காரியங்களுக்கு முதலிடம் கொடு;க்கவும் எங்களுக்கு உணர்த்தும். உலக காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து அதன்பின் சென்றுவிடாதபடி எங்களை காத்து கொள்ளும். உமக்கு முதலிடம் கொடுப்பவர்களை கனம் பண்ணி அவர்கள் தேவைகளை நீர் சந்திக்கிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

26th August 2014 - இரண்டு குடும்பங்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
இரண்டு குடும்பங்கள்
.............

நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். - (லூக்கா 17:26-30).

.

மேற்கண்ட வசனங்களில் இரண்டு பழைய ஏற்பாட்டு நீதிமான்களை குறித்து காண்கிறோம். இயேசுகிறிஸ்து வரப்போகும் இந்த கடைசி நாட்களில் இந்த நீதிமான்களின் நாட்களில் நடந்ததுப்போல நடக்கும் என்று வேதம் எச்சரிக்கிறது. இந்த இரண்டு நீதிமான்களும் குடும்பங்களை உடையவர்களாயிருந்தார்கள். இவர்கள் குடும்பங்களிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடத்தை இந்த நாளில் கற்று கொள்வோம்.

.

முதலாவது நோவா அவர் காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்டது என்று நாம் அறிவோம். 'பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்' (ஆதியாகமம் 6:11). அப்படிப்பட்ட கொடிதான காலத்தில் 'நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்' (9ம் வசனம்). நோவாவிற்கு மூன்று குமாரர் இருந்தார்கள். அவர் தன் குடும்பத்தை தேவ பயத்திற்குள்; நடத்த அறிந்திருந்தார். அவர் தன் மனைவியிடமும், தன் பிள்ளைகளிடமும் 'தேவன் இந்த உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழிக்கபோகிறார்' என்று சொன்னபோது, அவர்கள் பரிகசிக்காமலும், கேலி செய்யாமலும் தங்கள் தகப்பனோடு சேர்ந்து, பேழையை கட்ட ஆரம்பித்தனர். அவருடைய மனைவி அவரோடு இணைந்து, அந்த பேழையை கட்ட உதவி செய்தாள். பேழையை கட்டி முடித்தபோது, நோவா தன் மனைவியையும், மகன்களையும், அவர்களின் மனைவிகளையும், அழைத்து, மொத்தம் எட்டு பேராக அந்த பேழைக்குள் பிரவேசித்தார்கள். அந்த உலக சரித்திரத்திலேயே மிகப்பெரிய ஜலப்பிரளயம் வந்தபோது, நோவாவும் அவன் குடும்பமும் எட்டுபேர் மாத்திரம் காக்கப்பட்டார்கள். விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். -(எபிரேயர் 11:7).

.

இந்த நாட்களிலும், எந்த தகப்பன் தன் குடும்பத்தை கர்த்தருக்குள் நடத்தவும், கர்த்தருக்கு பயந்து, இந்த கொடிய பொல்லாத உலகத்தினால் கறைபடாதபடி தன் குடும்பத்தை பாதுகாக்கிறானோ, அவனுடைய குடும்பமும் நோவாவின் குடும்பம் காக்கப்பட்து போல காக்கப்படும். நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

.

மற்ற குடும்பம் லோத்தின் குடும்பம், அவரும் நீதிமானாயிருந்தார். ஆனால் எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள விசுவாசிகளின் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. சோதோம் கொமாரா என்னும் பட்டணத்தில் வசித்த அவன், அந்த தேசத்து மக்கள் செய்யும் கொடிய பாவமான காரியங்களை 'நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க' (2பேதுரு 2:8) (அவருடைய குடும்பத்தை அல்ல). லோத்து தன் குடும்பத்தை கர்த்தருடைய வழியில் சரியான முறையில் நடத்தவில்;லை. ஆகையால், தூதர்கள் வந்து அவனை சீக்கிரமாய் இந்த தேசத்தை விட்டு போ என்று துரிதப்படுத்தினாலும், அவர்கள் தாமதித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த தேசத்தை விட்டு போக மனதில்லாதிருந்தது. 'அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்' (ஆதியாகமம் 19:16). தேவனுடைய இரக்கத்தினாலே தூதர்கள் அந்த குடும்பத்தை பிடித்து இழுத்து கொண்டு போய் வெளியே விட்டார்கள். அப்படி விட்டும், கணவனாகிய லோத்து கண்டிப்பாக திரும்பி பார்க்க வேண்டாம் என்று சொல்லியும், திரும்பி பார்த்து உப்புத்தூணாய் மாறிப் போனாள் அவருடைய அன்பு மனைவி! அத்தனை கீழ்ப்படிதல் அந்த பெண்ணிற்க்கு! அத்தனை உலக பற்று! உலகத்தை விட்டு வர முடியாதபடி அவள் இருதயம் முழுவதும் உலகத்தின் மேல் இருந்தபடியால், கணவன் சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவில்லை. லோத்து அவரது பெண்பிள்ளைகளின் மருமக்கள்மாரிடம் போய் தேவன் இந்த தேசத்தை அக்கினியால் அழிக்கப்போகிறார் என்று பேசி அவர்களை காப்பாற்ற எண்ணினபோது, அவர் சொன்ன காரியம் அவர்களுக்கு பரியாசம் பண்ணுகிறதை போல இருந்தது. அவர்கள் லோத்தின் குடும்பத்தோடு சென்று, வரும் கோபத்திற்கு தப்பித்து கொள்ள கவலைப்படவில்லை!

.

லோத்து தன் பிள்ளைகளையும் சரியாக வளர்க்காததால், தங்கள் தகப்பனுக்கு குடிக்க கொடுத்து, இருவரும் அவரோடு சயனித்து, தங்கள் தகப்பன் என்றும் நினையாதபடி, கொடிய பாவத்தை செய்தார்கள். அதன் மூலம் பிள்ளைகளையும் பெற்று, தேவன் தெரிந்து கொண்ட ஜனத்திற்கு விரோதமாக எப்பொழுதும் எதிர்த்து நிற்கும் சந்ததியாக அந்த பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் நீதிமானாயிருந்தும், தன் குடும்பத்தை சரியாக நடத்தாதபடியால், முழு குடும்பமும் கெட்டுபோக காரணமாயிருந்தான். நோவா தன் குடும்பத்தை சரியாக நடத்தினபடியால், குடும்பமாய் தேவ கோபத்திற்கு தப்பினார்கள். ஆனால் லோத்தின் குடும்பமோ தாறுமாறாக போனது.

.

இந்த நாளில் நம் குடும்பம் எப்படி இருக்கிறது என்று யோசித்து பார்ப்போம். நோவாவின் குடுபத்தை போலவா? லோத்தின் குடும்பத்தை போலவா? இரண்டு குடும்பத்தை போலவும் கடைசி நாட்களில் இருக்கும் என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை தேவன் நம்முடைய கரத்தில்தான் கொடுத்திருக்கிறார். வரும் காலம் மிக கொடிய காலங்களாக இருக்க போகிறது. நம் குடும்பத்தை காக்க வேண்டிய கடமை நம்மிடத்தில் தான் இருக்கிறது, கர்த்தர் விரும்பும் குடும்பங்களாக, ஆபத்து நாளிலே காக்கப்படும் குடும்பங்களாக நம் ஒவ்வொருவரின் குடும்பங்களும் இருக்க தேவன் தாமே கிருபை செய்வாராக!

.

விதவித கொள்கையில்லை

பலபிரிவுள்ள பலகை இல்லை

ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்

எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லும்

அதிசயமான ஒளிமய நாடாம்

நேசரின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்

.
ஜெபம்
எங்களை குடும்பங்களாக வைத்து ஆசீர்வதிக்கிற நல்ல தகப்பனே, உம்மை நாங்கள் துதிக்கிறோம். எங்கள் ஒவ்வொருவரின் குடும்பமும் வரும் கொடிய காலத்திற்கு தப்புவிக்கப்பட வேண்டும் தகப்பனே. நோவாவின் குடும்பத்தை போல உமக்கு பயந்து, பரிசுத்தமாய் வாழ்ந்து, நீர் விரும்பும் குடும்பங்களாக எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும் ஐயா. லோத்தின் குடும்பத்தை போல பாவ காரியங்களில் ஈடுபடுகிறவர்களாக இல்லாமல், எங்கள் பிள்ளைகள் தேவனுக்கு பயந்து, பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வளர கிருபை செய்வீராக. குடும்பங்காளக நாங்கள் உமக்கே சாட்சியாக வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.