Friends Tamil Chat

வியாழன், 31 அக்டோபர், 2013

31st October 2013 - பரலோகத்தின் குடிமகன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 31-ம் தேதி - வியாழக் கிழமை
பரலோகத்தின் குடிமகன்
...

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். - (பிலிப்பியர்3:20).

.
ஒரு மனிதர் ஒரு கிராமப்புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் அவர் செல்லும் வழி தவறி விட்டது. யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தவராக ஒரு வீட்டின் கதவை தட்டினார். அங்கு இருந்த ஒரு மூதாட்டி கதவை திறந்தார்கள். என்ன என்று கேட்டபோது, வழி தவறிவிட்டதாகவும், வழி கேட்க வேண்டி கதவை தட்டியதாகவும் அந்த மனிதர் கூறினார்.
.
அப்போது அந்த வயதான அம்மா அவரை வீட்டிற்குள் அழைத்து சாப்பிட்டு செல்லுமாறு கூறினார். உள்ளே வந்த மனிதருக்கு ஆச்சரியம், அந்த வீட்டில் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள், ஒரு பழைய கட்டில் வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட அவர், அந்த தாயாரிடம், 'என்னம்மா வீட்டில் ஒன்றுமே இல்லை?' என்றுக் கேட்டார்.
.
அதற்கு அந்த தாயார், 'உன்னுடைய பொருட்கள் எல்லாம் எங்கே' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், 'நான் எப்படி என் பொருட்களை நான் போகும் இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும்? நான் வழிபோக்கனாயிற்றே?' என்று கூறினார். அப்போது அந்த தாயார், 'நானும் அப்படித்தான்' என்றுக் கூறினார்கள்.
.
பிரியமானவர்களே, நமக்கு இந்த பூமி சொந்தமல்ல, நாம் வழிப்போக்கர்களைப் போலதான் இங்கு வாழ வேண்டும், ஜீவிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய குடியிருப்பு இந்த உலகத்தில் அல்ல, பரலோகத்தில் இருக்கிறது.
.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள் (எபிரேயர் 11:13). அவர்கள் எத்தனையோ செல்வமிக்கவர்களும், செல்வ சீமான்களாயிருந்தும், அவர்கள் இந்த பூமியை தங்களுக்குத்தான் என்றென்றும் என்று சொல்லவில்லை. அவர்கள் இந்த பூமியில் தங்களை அந்நியர்கள் என்றும், பரதேசிகள் என்றும் சொல்லி, இந்த பூமியைப் பாhக்கிலும் எல்லா விதத்திலும் அதிக மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள். சிலருக்கு பரதேசி என்று சொன்னால் கோபம் வரும். ஆனால் பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்களை பரதேசிகள் என்றுதான் சொல்லிக் கொண்டார்கள். அதைப்போலவே நாமும் இந்த உலகத்திற்குரிய காரியங்கள் யாவும் அழிந்து போகப்போகிறதை நினைவு கூர்ந்தவர்களாக பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடக்கடவோம்.
.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது என்பதற்கு அர்த்தம் நம்முடைய குடியுரிமை மற்றும் குடிமகன் எல்லாமே பரலோகம்தான். நாம் இந்தியாவின் குடிமகன் என்பதிலோ அமெரிக்காவின் குடிமகன் என்பதிலோ பெருமையடையலாம். ஆனால் பரலோகத்தின் குடிமகன் என்பது மற்ற எந்த நாட்டின் குடியுரிமையைக் காட்டிலும் சிறந்தது.
.
ஆகவே பரலோகத்தின் குடியுரிமை பெறவும், குடிமகனாக மாறுவதற்கும் நமக்கு தகுதி வேண்டும். எல்லாருமே அந்த தகுதியை பெற்று விட முடியாது. ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டுமானால், பாஸ்போர்ட், விசா போன்றவை எத்தனை முக்கியமோ அதைப் போல பரலோகம் செல்வதற்கும் நமக்கு தகுதி இருக்க வேண்டும். முதலாவது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும். கழுவப்படாவிட்டால் நமக்கு அந்த உரிமை என்றுமே கிடையாது.
.
அடுத்து, இந்த உலகத்தில் வாழும்போது நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும். பரிசுத்தமில்லாமல் நாம் தேவனை தரிசிக்க முடியாது என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. பரலோகம் செல்வதற்கு பரிசுத்தம் மிக அவசியம். தேவன் ஏதோ கண்களை மறைத்து நம்மை பரலோத்திற்கு விட்டுவிடுவார் என்பது நம்முடைய எண்ணமே தவிர, கர்த்தர் அசுத்தத்தை காணாத சுத்தக் கண்ணர். அவரிடம் எந்த அசுத்தமும் செல்லாது. மேலும் பல தகுதிகள் இருந்தாலும், இந்த இரண்டு தகுதிகளும் மிகவும் முக்கியமானது.
.
பிரியமானவர்களே, நாம் இந்த உலகத்தில் வாழ்வதே பரலோகம் போய் சேர வேண்டும் என்பதற்காகவே. ஆகவே கொடுக்கப்பட்டிருக்கிற நாட்களில் நாம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தமாய் நம்மைக் காத்துக் கொள்வோம். அப்போது கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவோம். அவரோடு என்றென்றும் வாழுவோம். ஆமென் அல்லேலூயா!

.


இந்த மேகங்களை கடந்து

மோட்ச நாடு சேர்ந்திடுவோம்

இயேசுவோடு வாழ்ந்திடுவோம்

இயேசுவோடு மகிழ்ந்திருப்போம்

.
மாரநாதா அல்லேலூயா

மாரநாதா அல்லேலூயா
.
நள்ளிரவோ அதிகாலையோ

மாலையோ நடுப்பகலோ

நினையாத நேரம் வந்திடுவார்

விழிப்புடன் காத்திருப்போம்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களுடைய குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது என்று நாங்கள் பெருமைப்பட்டாலும் அங்கு வாழ்வதற்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழும்படி எஙகளுக்கு கிருபை செய்வீராக. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக, பரிசுத்தமாய் எங்களை காத்துக் கொண்டு கிறிஸ்துவின் வருகையில் காணப்பட எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 30 அக்டோபர், 2013

30th October 2013 - மகா பாபிலோன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 30-ம் தேதி – புதன் கிழமை
மகா பாபிலோன்
...

மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ளஅருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில்எழுதியிருந்தது. - (வெளிப்படுத்தின விசேஷம் 17:5).

.
வேதத்தில் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும் நாடு எது தெரியுமா? ஆம், இஸ்ரவேல் தேசத்தை குறித்து தான். அதற்கு அடுத்தபடி சொல்லப்பட்டிருக்கிற நாடு எது என்றால் அது ஈராக் தேசம் தான். ஈராக் தேசத்தை குறித்து, அநேக இடங்களில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஈராக் தேசம் ஈரான் தேசத்தோடு ஒன்பது வருடங்கள் போரிட்டு, தாக்குபிடிக்க முடிந்தது. அதை ஆண்ட சதாம் ஹூசைன் அந்த ஒன்பது ஆண்டுகளும் விடாமல் போரிட்டு, கடைசி வரை யார் ஜெயித்தார்கள் என்றே சொல்ல முடியாதபடி அந்த போர் முடிந்தது. அது முடிந்த உடனே, ஈராக் தேசம் மிகவும் சிறிய அண்டை நாடான குவைத்தை பிடித்து ஆக்கிரமித்தது, அதன்பின் குவைத் தேசததின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க படைகள் வந்து, அதை மீட்டு கொடுத்தது. இன்னும் அமெரிக்க படைகள் குவைத்தை பாதுகாத்து வருகின்றது. அதன்பின் சதாம் ஹூசைன் நீதி விசாரிக்கப்பட்டு, தூக்கில் போடப்பட்டது நாம் யாவரும் அறிந்ததே. இந்த நாளில் இந்த ஈராக் தேசத்தை குறித்து, அதன் விசேஷங்களை குறித்து நாம் பார்க்க போகிறோம். வேதத்தில் காணப்படும் அசீரியர்கள், கல்தேயர்கள், மெசபொடோமியா, பாபிலோன் இவை யாவும் பண்டைய ஈராக் நாட்டினையே குறிக்கின்றன.

.

  • ஏதேன் தோட்டம் ஈராக்கிலே இருந்தது.
  • மெசபொடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக் தேசத்திலே தான் நாகரீகம் தோன்றியது.
  • நோவா பேழையை ஈராக்கிலேதான் கட்டினார். நோவா எந்த இடத்தில் பேழையை கட்டினார் என்பது வேதத்தில் குறிப்பிடாவிட்டாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஈராக்கில் தான் கட்டியிருக்க கூடும் என்று நம்புகின்றனர்.
  • பாபேல் கோபுரம் ஈராக் தேசத்தில் தான் கட்டப்பட்டது.
  • ஆபிரகாம் இருந்த கல்தேயரின் ஊரான ஊர் ஈராக்கில் தான் இருந்தது.
  • ஈசாக்கின் மனைவி ரெபேக்காளின் ஊராகிய நாகோர் ஈராக்கில்தான் இருந்தது.
  • யாக்கோபு ராகேலை சந்தித்தது ஈராக்கில்தான்.
  • யோனா பிரசங்கம் செய்த நினிவே ஈராக்கில்தான் இருந்தது.
  • இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை ஜெயித்த அசீரியா ஈராக்கில் தான் இருந்தது.
  • ஆமோஸ் தீர்க்கதரிசி ஈராக்கில் தான் தீர்க்கதரிசனம் கூறினார்.
  • ஈராக்கில் இருந்த பாபிலோன் எருசலேமை அழித்தது.
  • பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் யூத வாலிபர்களை அடிமைகளாக கொண்டு சென்றது இந்த ஈராக்கில்தான்.
  • தானியேல் தீர்க்கதரிசி இருந்த சிங்க கெபி ஈராக்கில்தான் இருந்தது.
  • சாத்ராக் மேஷாக் ஆபெத்நேகோ என்னும் எபிரேய வாலிபர்கள் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் தூக்கி வீசப்பட்டதும் இந்த ஈராக்கில் தான். அதில் நான்காவது நபராக இயேசுகிறிஸ்து வந்து உலாவினதும் இந்த ஈராக்கில்தான்.
  • எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொன்னது இந்த ஈராக்கில்தான்.
  • பேதுரு சுவிசேஷத்தை ஈராக்கில் பிரசங்கித்தார்.
  • ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது –ஆதியாகமம் 2:10-14
  • ஆதாமும்ஏவாளும் உருவாக்கப்பட்டது ஈராக்கில்--ஆதியாகமம்2:7-8
  • சாத்தான் தன்னை முதலில் வெளிப்படுத்தினது ஈராக்கில் ஆதியாகமம் 3:1-6
  • நிம்ரோத் பாபேல் கோபுரத்தை கட்டியது ஈராக்கில் - ஆதியாகமம் 10:8-911:1-4
  • பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டது ஈராக்கில் ஆதியாகமம் 11:5-11
  • யாக்கோபு 20 வருடங்களை ராகேலுக்காக கழித்தது ஈராக்கில் ஆதியாகமம் 27:42-45
  • முதன்முதல் ராஜாங்கம் ஈராக்கிலே அமைக்கப்பட்டது தானியேல் 1:1-2, 2:36-38
  • எஸ்தர் புத்தகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஈராக் தேசத்திலே நடந்தது
  • நாகூம் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தது ஈராக் தேசத்தை குறித்து தான்
  • வெளிப்படுத்தின விசேஷத்தின் பாபிலோனிய தேசம் இப்போதிருக்கும் ஈராக் ஆகும்.

.

இப்படி சரித்திர புகழ் பெற்ற ஈராக் தேசம் வேதத்தில் இஸ்ரவேல் தேசத்திற்கு அடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஈராக் தேசத்தில் சதாம் ஹூசைனின் மறைவுக்குப்பின் எப்போது பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும், தீவிர வாத செய்கைகளும் அதிகமாக காணப்படுகிறது. இந்த தேசத்தின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போமா? இந்த தேசத்தில் சமாதானம் நிலவும்படியாக ஜெபிப்போமா? இங்குள்ள கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போமா?

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் ஈராக் தேசத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம் ஐயா. ஆதிபிதாக்களின் காலத்திலிருந்து, வெளிப்படுத்தின விசேஷம் வரை சரித்திர புகழ் பெற்ற ஈராக் தேசத்தில் இந்த நாட்களில் அநேக ஜனங்கள் குண்டு வெடிப்பிலும், தீவிரவாதத்தினாலும் மரித்து கொண்டிருக்கிறார்களே, தகப்பனே, இந்த தேசத்தில் அமைதியை தருவீராக. சமாதானத்தை தருவீராக. அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் பயமின்றி வாழத்தக்கதாக அவர்களுக்கு பாதுகாப்பை கொடுத்தருளும். அந்த தேசம் எப்படியாவது கிறிஸ்துவை அறிந்து இரட்சிக்கப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

29th October 2013 - கோபம் வேண்டாமே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 29-ம் தேதி - செவ்வாய் கிழமை
கோபம் வேண்டாமே
...

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. - (எபேசியர் 4:26).

ஒரு சாது தன் சீடர்களிடம் 'கோபப்படும்போது ஏன் ஒருவர் மற்றவரைப் பார்த்து கத்துகிறார்?' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தார்கள். ஒரு சீடன் 'நாம் நம்முடைய பொறுமையை இழந்து விடுகிறோம். அதனால் சத்தம் போட்டு கத்துகிறோம்' என்றான். அதற்கு சாது, 'ஏன், அவர்கள் பக்கத்தில் தானே இருக்கிறார்கள்? பின் ஏன் கத்த வேண்டும்' என்று மீண்டும் கேட்டார்.

.
சீடர்கள் ஒவ்வொரு பதிலை கொடுத்தார்கள். அதில் ஒன்றிலும் திருப்தி

அடையாத சாது சொன்னார், 'ஏன் கோபம் வரும்போது கத்துகிறார்கள்

தெரியுமா? கோபம் வரும்போது அவர்களின் இருவரின் இருதயமும்

ஒருவரையொருவர் விட்டு, தூர போய் விடுகிறது. அவர்களையுமறியாமல்,

தாங்கள் மற்ற நபரோடு தூர போய் விட்டோம் என்கிற எண்ணத்தினால்

சத்தமாய் கத்துகிறார்கள்' என்றார்.
.

.
அப்போது ஒரு சீடன், 'கோபம் வரும்போது கத்துகிறார்கள், ஆனால் அன்பு

வரும்போது?' என்று கேட்டான். 'அன்பு வரும்போது அவர்கள் மெதுவாக

பேசுகிறார்கள். காதில் கிசுகிசுப்பாய் பேசினாலும் அது நன்கு கேட்கும்,

ஏனெனில் அவர்கள் இருதயம் மிகவும் அருகில் இருப்பதால். கடைசியில்

அவர்கள் பேசக்கூட வேண்டாம். ஒருவரையொருவர் பார்த்துக்

கொண்டாலே போதும், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கிக்

கொள்ளும்' என்றுக் கூறினார். அது எத்தனை உண்மை!
.

.
திருமணமான புதிதில் மற்றவர்கள் கேட்காத வண்ணம் மெதுவாக பேசிக்

கொள்ளும் தம்பதியர், நாளாக நாளாக ஒருவர் ஏன் பேசுகிறார் என்று

நினைக்கும் வண்ணம் மிகவும் சத்தமாக கத்தி, பேசி சண்டைப் போட்டுக்

கொள்ளுகிறார்கள்.
.

.

அதே தம்பதியர், நாளாக நாளாக எதுவும் பேசாமலே கண்களினாலே

பார்த்து ஒருவரை யொருவர் புரிந்துக் கொள்ளும் காலக்கட்டத்திற்குள்ளும்

வருகின்றனர். புது தம்பதியினர் போல பழைய தம்பதிகள் அதிகம் பேசிக்

கொள்ளாவிட்டாலும், இருவரும் இருதயம் ஒத்திருப்பதால் அதிகமாய்

பேசாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்துக் கொள்கின்றார்கள்.

.
.
சில வேளைகளில் பழைய தம்பதியராயிருந்தாலும், கோபம் அளவு கடந்து

வரும்போது, எதையுமே நினைக்காமல் ஒருவரையொருவர் வார்த்தைகளால்

தாக்கி, புண்பட்டு, அன்று முழுவதும் சாப்பிடாமலும், அப்படியே

ஜெபிக்காமலும் தூக்கத்திற்கு செல்கின்றனர்;. பசியினாலும்,

கோபத்தினாலும் தூக்கமும் வராமல், எழுந்துப்போய் சாப்பிடவும் வறட்டு

கௌரவம் விட்டுக் கொடுக்காமல், பாடுபடுவார்கள். ஏன் இந்தப்பாடுகள்?

சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக மன்னித்து மறந்து, ஜெபித்துவிட்டு

படுத்தால், அடுத்தநாள் புதிய நாளாக, அன்றலர்ந்த மலராக

புத்துணர்ச்சியோடு எழுந்தரிக்கலாமில்லையா?
.

.
தம்பதியர் மட்டுமல்ல, மற்றவர்களும் மனதில் கோபத்தை வைத்துக்

கொண்டிருப்பது சரியல்ல, எந்த புதிய புண்களையும் சீக்கிரம்

ஆற்றிவிடலாம். ஆனால் அது சீழ்வைத்து, வீக்கம் கட்டிப் போனால் அதை

ஆற்றுவது கடினம். அதுப்போல கோபம் கொண்டாலும் மனதில் வஞ்சம்

வைத்து பழிவாங்கத் துடிக்காமல், அதை அன்றே மன்னித்து,

மறந்தோமானால், அதனால் நமக்கு பின் விளைவுகள் இராது. ஆனால்

மனதில் வைத்து எப்போதும் பழிவாங்க வேண்டும் என்ற வெறியோடு

செயல்பட்டால், அதனால் நம் உடல் நலம் கெடுவதுடன், அதிலிருந்து

விடுபட்டு வருவது கடினமாகலாம்.

.
.
பிரியமானவர்களே, கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்று

வேதம் சொல்கிறதே! கோபம் மனிதனுக்கு வருவது இயற்கை, ஆனால்

அந்த கோபத்தில் கொலையோ, பேசத்தகாதவைகளை பேசுவதோ,

மற்றவர்களை புண்படுத்துவதோ பாவமாகும். பின் வருந்தினாலும், செய்த

காரியத்தை மாற்ற முடியாதே! ஆகவே கோபம் கொண்டாலும் பாவம்

செய்யாதிருக்க கர்த்தரின் உதவியை நாடுவோம். சூரியன் அஸ்தமிப்பதற்குள்

நம் கோபமும் அடங்கட்டும். எந்த வகையிலாவது அதை அகற்றி விட்டு,

தூங்கப்போகும்போது, கர்த்தருடைய இனிய நினைவுகளால் நிரம்பி

உறங்குவோம்! ஆமென் அல்லேலூயா!

.

.

சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு

அன்பு அமைதியை தினம் நாடு

தினம் தேடு நீ தினம் தேடு

.

ஓடு ஓடு விலகி ஓடு

வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு

ஓடு ஓடு தொடர்ந்து ஓடு

இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருக்க எங்களுக்கு உதவி செய்யும். தேவையற்ற காரியங்களால் நாங்கள் ஒருவரையொருவர் கோபமூட்டி, வெறுப்பை வளர்த்துக் கொண்டிராதபடி, சூரியன் அஸ்தமிக்குமுன் மன்னித்து மறக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 28 அக்டோபர், 2013

28th October 2013 - ஆலயத்திற்கு செல்வோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!

2013 அக்டோபர் மாதம் 28-ம் தேதி – திங்கட்கிழமை

ஆலயத்திற்கு செல்வோம்
.....

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். - எபிரேயர் - 10:25.

.
ஒரு மனிதர் சபைக்கு ஒழுங்காக செல்பவர், ஒரு முறை ஒரு செய்தித்தாளில் எடிட்டர் பக்கத்திற்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்குச் செல்வது பிரயோஜனமில்லை என்றும், தான் கடந்த30 வருடங்களாக சபைக்குச் செல்வதாகவும், அங்கு, ஏறக்குறைய 3000 போதகங்களைக் கேட்டிருப்பதாகவும், ஆனால் இப்போது, போதகர் செய்த பிரசங்கங்களில் ஒன்றுக் கூட தன் நினைவில் இல்லையென்றும், போதகர் தன் நேரத்தையும், அவருடைய நேரத்தையும் வீணடிப்பதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்களும் அதில் சேர்ந்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். இது சில வாரங்களுக்குச் சென்றது. கடைசியில் ஒரு விசுவாசி எழுதினார், "எனக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. என் மனைவி ஏறக்குறைய 3200 தடவை உணவுகளை சமைத்து தந்திருக்கிறாள். அவள் என்ன சமைத்தாள் என்று கேட்டால் எனக்கு எதுவும் ஞாபகமில்லை, ஆனால் அவைகள் என் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நான் வேலை செய்வதற்கு எனக்கு சக்தியையும் கொடுத்து வருகின்றன. என் மனைவி சமைத்துக் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் இந்நேரம் சரீரபிரகாரமாக மரித்திருப்பேன். அதுப் போல நான் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கவில்லை என்றால் ஆத்தும ரீதியாக எப்போதோ மரித்திருப்பேன். தேவன் எனக்கு கொடுத்த சரீர, ஆத்மீக உணவுகளுக்காக ஸ்தோத்திரம்" என்றார்.

.

சிலருக்கு ஆலயத்திற்கு செல்வதென்றால் மிகவும் கஷ்டம். ஏனென்றால் அன்று ஒருநாள்தான் படுக்கையிலிருந்து லேட்டாக எழுந்து, ஆற அமர சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே என்ற எண்ணம். தேவனுடைய வீட்டிற்குச்சென்று அங்கு அவருடைய ஆசீர்வாதத்தை பெற்று வரும்போது நம் வாழ்க்கை செழிப்பாக மாறும். கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன் என்று தாவீது ராஜா தான் ஒரு அரசனாயிருந்தாலும் பல அலுவல்கள் இருந்தாலும் ஆலயத்திற்கு செல்லும்போது மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் எத்தனை நாடுகளில் சபைக்குச் செல்ல முடியாத தடை! அங்கு ஞாயிற்றுக் கிழமைதான் சபை என்றில்லை, வாரத்தில் எந்த நாளும் சபைக்குச் செல்லலாம், அப்படி தடையில்லாதபோது வேலையினிமித்தமாக போக முடியாத சூழ்நிலை! நம்மில் எத்தனைப் பேருக்கு ஞாயிற்றுக் கிழமை ஓய்வுநாள்! 84 ம் சங்கீதம் முழுவதும் வாசித்துப் பாருங்கள். ஆலயத்திற்கு செல்வதைக் குறித்து அருமையான வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கினறன. எனக்கு சில நேரங்களில் சபைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது இந்த அதிகாரத்தை வைத்து கதறி அழுதிருக்கிறேன். கர்த்தர் கிருபையாய் இரங்கி வாரந்தோறும் செல்லும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். அப்பாவின் வீட்டிற்கு செல்லும்போது அவர் நம்மை நன்மைகளினால் திருப்தியாக்குகிறார். அவர் செய்த நன்மைகளை எழுதப்போனால் இந்த பக்கம் முழுவதும் போதாது. ஆலயத்திற்கு செல்வதற்கு சோம்பல் படாதீர்கள்! ஆலயத்திற்கு போவோம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.

.

ஜெபம்

எங்களை நேசிக்கிற எங்கள் பரம பிதாவே, சிலர் சபை கூடுதலை விட்டு விடுவதுப் போல நாங்கள் விட்டு விடாதபடிக்கு உம்மேல் நாங்கள் அதிகமாய் அன்பு கூர கிருபை செய்யும். உம் வீட்டின் நன்மையினால் திருப்தியாக கிருபை செய்யும். ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் என்று சங்கீதக் காரனோடு நாங்களும் சேர்ந்து உம்மைத் தொழுகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே எங்கள் துதிகளை ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : -27th October 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

நினைக்கும் பருவம் இதுவாம்

நடக்கும் பருவம் இதுவாம்

வாழ்க்கை வாழ்வதற்கே எண்ணம்

எட்டிப் பார்க்கும் பருவம்

கணக்கு கொடுக்க வேண்டியதை

கணித்துச் சொல்லும் பருவம்   -அது என்ன?

 

விடை: வாலிபப் பருவம். பிர 11:9.

====================================

 கடவுளுக்கு வந்தது வருத்தமாம்

கண்களில் இருந்தது கிருபையாம்

வருத்தம் அழிவைத் தந்ததாம்

கிருபை அவனைக் காத்ததாம்  -அவன் யார்?

 

விடை: நோவா. ஆதி 6,7 அதி.


====================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 25 அக்டோபர், 2013

25th October 2013 - சிருஷ்டித்தவருடைய சாயல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 25-ம் தேதி - வெள்ளி கிழமை
சிருஷ்டித்தவருடைய சாயல்
...

தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. - (கொலோசேயர் 3:10).

.
மிஷனெரி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல், எதிர்பாராத விதமாக கடும்புயலில் சிக்கி, சின்னாபின்னமாய் உடைந்தது. மிஷனெரி கடலில் தூக்கி எறியப்பட்டார். கடைசியாக கையில் சிக்கிய ஒரு கட்டையைப் பிடித்து மூன்று நாட்கள் கழித்து, கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். உணவும் தண்ணீரும் இன்றி சாகும் தருவாயில் இருந்தவரை அந்த கடலோர கிராம மக்கள் தூக்கி சென்று காப்பாற்றினார்கள். அவருடைய உடல் நிலை சீரானது.
.
அவர் அந்த கிராமத்திலேயே இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றினார். அவர்களோடு சேர்ந்து உழைத்தார். அவர் அவர்களுக்கு எவ்விதமான போதகமும் பண்ணவில்லை. தன்னுடைய விசுவாசத்தையும் அறிக்கையிடவில்லை. அவர் வேதாகமத்தைக்கூட அவர்களுக்கு வாசித்துக் காண்பித்ததில்லை.
.
ஆனால் யாருக்காவது சுகமில்லை என்றால் முழு இரவும் கண்விழித்து அவர்களை கவனித்துக் கொள்வார். பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரம் கொடுப்பார். தனிமையாயிருப்போரிடம் சென்று ஆறுதலாய் பேசுவார். சிறுபிள்ளைகளுக்கு படிப்பு சொல்லி கொடுப்பார். யாருக்காவது அநீதியாய் தீங்கிழைக்கப்பட்டால் அவர்களுக்காக வாதாடுவார்.
.
ஒரு நாள் சில மிஷனெரிகள் அந்த கிராமத்திற்கு வந்து இயேசுவின் அன்பையும் அவரது மனதுருக்கத்தையும், தாழ்மையையும் பற்றி எளிய முறையில் எடுத்துச் சொன்னார்கள். அதைக் கேட்ட அந்த மக்கள், இயேசு எங்களோடு பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். அதைக் கேட்ட மிஷனெரிகளுக்கு பெரும் அதிர்ச்சி! அந்த கிராமத்தில் வாழ்;ந்து வந்த அந்த மிஷனெரியை அழைத்து வந்து காண்பித்தனர். அவரைப் பார்த்ததும் மிஷனெரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் தொலைந்து போனார் என்று இந்நாள்வரை
அவர்கள் எண்ணியிருந்த மிஷனெரி அவர்தான்.

.
வேதத்திலே பார்ப்போமானால் நடமாடும் நிருபமாய் வாழ்ந்தார் அப்போஸ்தலனாகிய பவுல். அந்த வரிசையில் வாழ்ந்து, வாடாத ஜீவகீரிடம் பெற்றோர் அநேகர். அதிலும் வெளியுலகிற்கு அவர்கள் வாழ்வு தெரியாமலேயே மாண்டோரும் அநேகர். உண்மையாகவே தேவனின் சாயலை பிரதிபலிக்க விரும்புவோர் பிரபலமடைய விரும்ப மாட்டார்கள். பிரபலமடைவதை மட்டும் குறிக்கோளாய் கொண்டு வாழ்வோரிடம் கிறிஸ்துவின் சாயலை காணவும் முடியாது.
.
புறஜாதிகள் முன் நடமாடும் வேதம் நாம்தான். நமது வாய் பேசும்முன் நம்முடைய வாழ்க்கை பேச வேண்டும். நமது வாழ்வு எப்படி இருக்கிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். கர்த்தர்தாமே அவரது சாயலை பிரதிபலிக்கும் வாழ்வு வாழ நமக்கு கிருபை தருவாராக! ஆமென் அல்லேலூயா!

.


தேவ சாயல் ஆக மாறி

தேவனோடிருப்பேன் - நானும்

தேவனோடிருப்பேன்

.

பூமியின் கூடாரம் என்றும்

பெலவீனமே அழிந்திடுமே

கைவேலை அல்லாத பொன்வீடு

கண்டடைந்து வாழ்ந்திடுவேன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உமது சாயலாக உருவாக்கப்பட்ட நாங்கள் எங்கள் மகிமையை இழந்து மண்ணின் சாயலாக மாறினாலும், மீண்டுமாய் தேவ சாயலை பெற்று அவரைப்போல வாழும்படி எங்களுக்கு கற்றுத்தாரும். ஏங்களை காண்பவர்கள் ஜீவனுள்ள கிறிஸ்துவை காணும்படியாக எங்கள் நடை, உடை, பாவனை, சொல், செயல் எல்லாம் உம்மையே பிரதிபலிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 24 அக்டோபர், 2013

24th October 2013 - கொடைகளை அல்ல, கொடுப்பவரையே நாடுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 24-ம் தேதி - வியாழக் கிழமை
கொடைகளை அல்ல, கொடுப்பவரையே நாடுவோம்
....

ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. ...என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். - (நீதிமொழிகள் 8:18,20,21).

.
ஒரு இராஜா அநேக போர்களை நடத்தி வெற்றிக் கண்டார். அவருடைய நான்கு அமைச்சர்கள் இந்த போர்களை அவருக்காக நடத்தி வெற்றியின் வழியில் இராஜாவை நடத்தினர். ஆகையால் அந்த இராஜா நான்கு அமைச்சர்களையும் கனப்படுத்த விரும்பினார்.
.
ஆகவே தனது பக்கத்து நாட்டு மன்னர்களையும், நாட்டின் பெரிய பதவியிலிருப்பவர்களையும் அழைத்து பெரிய விருந்து செய்தார். அந்த விருந்தில் அந்த நான்கு அமைச்சர்களையும் கனம் பண்ணி, 'உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள், அதை தருகிறேன்' என்று கூறினார்.
.
முதல் அமைச்சர் வந்தார், அவர் சொன்னார், 'இராஜா அவர்களே, நான் சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். பணம் இல்லாததால் அநேக நாட்கள் உணவு இன்றி தவித்தேன். எனக்கு நிறைய பணம் வேண்டும். ஆகவே எனக்கு பணம் கொடுங்கள், அதுப்போதும் என்றார். அதன்படியே போதும் என்று சொல்லும் அளவிற்கு அவரக்கு இராஜா பணத்தை கொடுத்தார்.
.
இரண்டாவது அமைச்சர், 'எனக்கு வீடு இல்லை. இந்த அரண்மனையைப்போல வீடு ஒன்று கட்டித்தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். வீடு கட்டித்தர இராஜா அரண்மனை வேலைக்காரரிடம் கட்டளையிட்டார்.
.
மூன்றாவது அமைச்சர், 'எனக்கு வீடும் உண்டு. பணமும் உண்டு, ஆனால் நான் போகும் வழி சரியாக இல்லை. எங்கள் வீட்டிற்கு செல்வதற்கு நல்ல பாதை போடப்பட வேண்டும்' என்றுக் கேட்டுக் கொண்டார். அதன்படி இராஜா பாதைப் போட்டுக் கொடுப்பதாக வாக்களித்தார்.
.
நான்காவது அமைச்சரை கேட்டபோது, அவரது கண்கள் கலங்கியது. பேச்சு வரவில்லை. அதைக்கண்ட இராஜா 'உனக்கு என்ன வேண்டும்? கேள், பாதி இராஜ்யமானாலும் தருகிறேன்' என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர் கண்களில் கண்ணீர் வழிந்தபடி, 'இராஜா எனக்கு பணமோ, வீடோ அல்லது வேறு எதுவுமே வேண்டாம்;. நீங்கள்தான் எனக்கு வேண்டும். உங்களுக்கு சரியென்றால் என் வீட்டில் வந்து இரண்டு நாட்கள் தங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இராஜா உடனே, 'இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை, நான் வந்து உன் குடும்பத்தோடு இரண்டு நாட்கள் தங்குகிறேன்' என்றுக் கூறினார்.
.
அதன்படி இராஜா போய் தங்க திட்டங்கள் போட்டபோது, அந்த அமைச்சரின் வீடு பழைய வீடு, போக சரியான பாதை இல்லை என்று அறிந்து, இராஜா போய் தங்கியிருக்கும்படி அரண்மனைப் போன்ற வீட்டை கட்டச்சொல்லி, சரியான பாதை போடப்பட்டு, அவர் அங்கு தங்கியிருக்கும் நாட்கள் இராஜாவுக்கு தேவையானதை செய்து கொடுக்கும்படி பணமும் நிறைய அந்த அமைச்சருக்கு கொடுக்கப்பட்டது. அவர் கேட்காமலேயே மற்றவர்கள் பெற்றுக் கொண்ட அத்தனை ஆசீர்வாதங்களையும் இந்த அமைச்சர் இராஜாவை தன் வீட்டிற்கு அழைத்ததால் பெற்றுக் கொண்டார்.
.
பிரியமானவர்களே, நாமும் கர்த்தரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று பெரிய லிஸ்டுகளை போட்டு, கேட்டுக் கொண்டிருக்கிறோமா? நமக்கு வேண்டியது இன்னதென்று அவருக்கு தெரியும், ஆனால் நம்முடைய கணக்கற்ற தேவைகளை அவரிடம் சொல்லி, தாரும் தாரும் என்றுக் கேட்டுக் கொண்டே இருக்கிறோமா?
.
நாம் உலக காரியங்களை கேட்பதற்கு முன், அதை கொடுப்பவரை நாம் நம் உள்ளத்தில் வரும்படி கேட்டால், அவர் வரும்போது, எல்லா தேவைகளும் சந்திக்கப்படுமல்லவா? 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:33) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே!
.
இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு என்னென்ன தேவை? ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு என்று அனைத்தையும் படைத்த தேவன் கூறுகிறார். அவரை சிநேகிக்கிறவர்கள் அவற்றை பெற்றுக் கொள்ளும்படி தேவன் கிருபை செய்கிறார்.
.
பிரியமானவர்களே, உலக காரியங்களை கேட்பதற்கு முன், அவற்றை கொடுக்கும் தேவனை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் வாரும் என்று கேட்போமா? அவரை நாம் முழு இருதயத்தோடு தேடும்போது, மற்ற காரியங்கள் நமக்குக்கூட கொடுக்கப்படுமே! இயேசு வந்த வீட்டிலே சந்தோஷம் வருமே, சமாதானம் வருமே, சண்டை இல்லையே சச்சரவு இல்லையே அப்படிப்பட்ட தேவனை தேடுவோம். அவரிடத்திலிருந்து ஐசுவரியம், கனம், நிலையான பொருள், நீதியை பெற்றுக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.


வாரும் ஐயா போதகரே

வந்தெம்மிடம் தங்கியிரும்

சேருமையா பந்தியினில்

சிறியவராம் எங்களிடம்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, ஐசுவரியம், கனம், நிலையான பொருள், நீதி போன்றவற்றை நாங்கள் விரும்புவதைவிட அவற்றை கொடுக்கும் உம்மையே நாங்கள் அதிகம் நேசிக்கிறோம் ஐயா. உலக பொருட்கள் ஒரு நாள் வரும், அடுத்த நாள் எடுக்கப்பட்டு போகலாம், ஆனால் உம்மோடு நாங்கள் கொண்டுள்ள ஐக்கியம் நித்திய நித்தியமாய் எங்களோடு வருமே. அதை உணர்ந்தவர்களாக, ஆசீர்வாதங்களை அல்ல, அந்த ஆசீர்வாதத்தின் ஊற்றாகிய உம்மையே நாங்கள் பற்றிக் கொள்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.