Friends Tamil Chat

வெள்ளி, 31 அக்டோபர், 2014

31st October 2014 ஆவியின் கனியோ.. நீடிய பொறுமை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 31-ம் தேதி - வெள்ளிக் கிழமை
ஆவியின் கனியோ.. நீடிய பொறுமை
...........

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5: 22-23).

.

நான்காவது சுளை…….நீடிய பொறுமை:

.

நாம் அவசர உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது கொஞ்சம் தாமதித்தால் உடனே எத்தனை முறுமுறுப்புகள், எத்தனை முக கோணல்கள்!

.

சமீபத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்தியரை பார்க்க வேண்டி இருந்தது. மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. அங்கிருந்த நர்ஸிடம், 'என்ன உங்க டாக்டர் ஒரு பேஷண்டை இத்தனை நேரம் பார்க்கிறார்? எத்தனை நேரம் காத்திருப்பது? பேப்பரை கிழித்துப் போட்டு நாங்கள் போகப் போகிறோம்' என்று சூடாக சொன்னபோது, அந்த நர்ஸ் 'இப்ப டாக்டர் உங்களை பார்ப்பார்' என்று சொல்லி, அழைத்துப் போனார்கள். அந்த டாக்டரை பார்த்தவுடன், அவர் பேசினதைக் கேட்டவுடன், ஏன் அப்படி கத்தினோம் என்று தோன்றியது. அத்தனை மெதுவாக, பொறுமையாக அந்த டாக்டர் பேசினார். நல்ல நண்பராக மாறினார்.

.

நம்மால் எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. டிராபிக் ஜாமில் வண்டியை ஓட்டும்போது, சிக்னலில் எத்தனை நேரம் காத்திருப்பது என்று முனகல்களும், முறுமுறுக்காமலும் நாம் இருப்பதில்லை. வீட்டில் சாப்பாடு கொஞ்சம் லேட்டானால் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. பொறுமை என்பதை இக்காலத்தில் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.

.

நம்முடைய தேவனின் தெய்வீக குணாதிசயங்களில் ஒன்றாக நீடிய பொறுமை விளங்குகிறது. பாவிகளாயிருக்கையில் நம்மேல் அவர் பொறுமையுள்ளவராக இருந்தாரே! உலகம் சென்றுக் கொண்டிருக்கிற பாதையை நோக்கினால், எத்தனை அக்கிரமங்கள், என்ன பயங்கரமான செயல்கள்! நம்மால் அதைப் பார்த்து, பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எத்தனையோ முறை சொல்கிறோம், ஏன் ஆண்டவர் இவர்களை எல்லாம் விட்டு வைத்திருக்கிறார் என்று! ஆனால் அவையெல்லாவற்றையும் காண்கின்ற தேவன் அப்படி அக்கிரமம் செய்கிறவர்களையும் அழித்து விடாதபடி பொறுமையாயிருக்கிறாரே! அது நீடியப் பொறுமையல்லவா!

.

'தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்' (2 பேதுரு 3:9) என்று வேதம் கூறுகிறது. தேவன் அத்தனை பொறுமையுள்ளவராயிருந்தார் என்றால் நாம் எத்தனை பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

.

வேதத்தில் பொறுமையாயிருந்த ஆதி விசுவாசிகள் பலரைக் காண முடியும்! மோசே, ஆபிரகாம், யோசேப்பு, யோபு என்று பட்டியலை அடுக்கிக் கொண்டே போக முடியும்.. அவர்கள் பொறுமையாய் இருந்ததைப் போல புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

.

நம்முடைய தேவைகளில், தேவன் ஏன் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கவில்லை என்று பொறுமையை இழந்துப் போகாமல், அவருடைய நேரத்திற்காக நீடிய பொறுமையோடு காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 'கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்' (சங்கீதம் 40:1) என்று நாமும் சொல்ல முடியும்.

.

எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க ஆவியானவரின் பெலன் தேவை. அவர் கொடுக்கிற நீடிய பொறுமையாகிய கனியின் சுளை நம் வாழ்வில் இருக்கும்போது 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்கிற பழமொழியின்படி வெற்றி மேல் வெற்றி நம்மை வந்தடையும் என்பதி;ல் சந்தேகமேயில்லை.

.

'நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே' (யாக்கோபு 5:8) ஆமென் அல்லேலூயா!

.

இரக்கம் உள்ளவரே

மனதுருக்கம் உடையவரே

நீடிய சாந்தம் பொறுமை அன்பு

நிறைந்து வாழ்பவரே

.

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரமே (2)

உயிருள்ள நாளெல்லாமே

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீடிய பொறுமையினால் எங்கள் ஒவ்வொருவரையும் நிறைத்தருளும். அநேக வேளைகளில் எங்களுடைய பொறுமையை நாங்கள் இழந்துப் போகிறோமே, எங்களுக்கு மன்னியும் தகப்பனே. நீடிய பொறுமை என்னும் ஆவியின் கனியினால் எங்கள் ஒவ்வொருவரையும் அலங்கரித்தருளும். இன்னும் அதிக பொறுமையாய் இருக்க கற்றுத்தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 30 அக்டோபர், 2014

30th October 2014 ஆவியின் கனியோ... சமாதானம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 30-ம் தேதி - வியாழக் கிழமை
ஆவியின் கனியோ... சமாதானம்
...........

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23)

.

மூன்றாம் சுளை சமாதானம்:

.

இந்த நாட்களில் மனிதன் சமாதானத்தை தேடி எங்கெங்கோ அலைகிறான். நாட்டுக்கு நாடு சமாதானமில்லை, மனிதனுக்கு மனிதன் சமாதானமில்லை, மதத்திற்கு மதம் சமாதானமில்லை, குடும்பங்களுக்குள் சமாதானமில்லை, ஏன் மனிதனுக்குள்ளேயே சமாதானமில்லை.

.

சமாதானப் பேச்சு வார்த்தை என்று சொல்லி, பெரிய நாடுகளின் தலைவர்கள் கூட்டங்கள் கூட்டி பேசினாலும், எந்த முடிவும் எடுக்கப்படாமல், சமாதான குறைவையே ஒவ்வொரு நாடும் சந்தித்து வருகின்றன.

.

எந்த இடத்திலுமிருந்து சமாதானம் வராது. சமாதானத்தை தருகிறவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே ஏனெனில் அவரே சமாதானப்பிரபு என்றழைக்கப்படுகிறார். ஒரு கதை உண்டு, ஒரு முறை அமெரிக்க அதிபரும், ரஷிய அதிபரும், இஸ்ரவேலின் அதிபரும் சந்திக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தரிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். முதலாவது, அமெரிக்க அதிபர் வெள்ளையினத்தவருக்கும், கறுப்பினத்தவருக்கும் எப்போதாவது சமாதானம் உண்டாகுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் உன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் அதைக் காண மாட்டாய் என்றார். அடுத்தது ரஷிய அதிபர், அமெரிக்காவிற்கும், ரஷியாவிற்கும் சமாதான உடன்படிக்கை ஏற்படுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் உன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் அதைக்காண மாட்டாய் என்று கூறினார். அடுத்ததாக இஸ்ரவேலின் அதிபர், கர்த்தரிடம், இஸ்ரவேலருக்கும், பாலஸ்தீனியருக்கும் இடையே சமாதானம் உண்டாகுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் என்னுடைய வாழ்நாள் முழுவதும் அதைக்காண மாட்டாய் என்றாராம். எருசலேம் என்பதற்கு சமாதானம் என்றுப் பொருள். ஆனால் இதுவரை அங்கு சமாதானம் என்பது துளியளவும் இல்லை.

.

நம்மைப் போல அல்ல, அரபியர் ஒருவரையொருவர் காணும்போது, சலாமாலைக்கும் என்று வாழ்த்து சொல்லிதான் சந்திக்கிறார்கள். ஆனால் சமாதானம் அவர்களிடம் கிடையாது. இஸ்ரவேலர் ஷாலோம் அலைக்கும் என்று வாழ்த்துகிறார்கள். அவர்களுக்குள் சமாதானம் இருந்தாலும், வெளிப்படையாக சமாதானம் என்பது இல்லை.

.

வேதத்தில் மூன்று சமாதானங்களைக் குறித்துப் பார்க்கிறோம்

.

1. தேவனிடத்தில் சமாதானம்: இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோமர் 5:1).

.

2. உள்ளான சமாதானம்: நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலிப்பியர் 4:6-7).

.

3. வெளிப்புறத்தில் சமாதானம்: யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (எபிரேயர் 12:14).

.

இந்த மூன்று வகை சமாதானமும் ஒரு மனிதனுக்குள் இல்லாவிட்டால் அவனது வாழ்வு நரகமாகவே இருக்கும். தேவனோடும், நம் உள்ளான மனிதனோடும், வெளியுலகில் உள்ள மற்றவர்களோடும் நாம் சமாதானம் அற்றிருப்போமானால் நம் வாழ்வில் சமாதானம் என்பது துளியும் இராது.

.

நம் வாழ்வில் சமாதானம் எப்போது வரும்? சமாதானக்காரணராகிய இயேசுகிறிஸ்து வரும்போது மட்டுமே! ஏனெனில் அவர்தான் சொன்னார், சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்ளூ உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவான் 14:27) என்று நம்மை ஆற்றினவர் அவர்தாமே!

.

ஒரு மனிதன் கையில் ஒரு துப்பாக்கியுடன் ஒரு பேங்க்கை கொள்ளையிட சென்றான். அவன் அதில் 6000 டாலரை கொள்ளையடிக்கும்போது, பிடிபட்டான். அவனுடைய துப்பாக்கி மியூசியத்திற்கு சென்றது. அவனுடைய துப்பாக்கி பழைமை வாய்ந்த அருமையான ஒரு துப்பாக்கி. ஆதை விற்றால் 10,000 டாலர் விலைபோயிருக்கும். ஆனால் அதை அவன் அறியாதவனாக வங்கியை கொள்ளையடிக்க சென்று, பிடிபட்டு, சிறையில் வாடினான்.

.

அதுப்போல கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவே நம்முடைய சமாதான காரணர் (எபேசியர் 2:14) என்பதை அறியாதவர்களாக, சமாதானத்தை தேடி அங்கும் இங்கும் அலைகிறார்கள். ஏந்த சூழ்நிலையிலும் கர்த்தர் நமக்குள் இருந்தால், ஆவியின் கனியாகிய சமாதானம் நம்மை சூழ்ந்திருக்கும். எந்த புயல் அடித்தாலும் மனதின் அடியில் அசைக்க முடியாத சமாதானம் நிறைந்திருக்கும்.

.

இயேசுவோடு பயணம் செய்த சீஷர்கள் நடுக்கடலிலே புயல் வீசி கடல் கொந்தளித்தபோது, 'ஆண்டவரே எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று' (மத்தேயு 8:25-26) என்று காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப்படுத்தினவர், நம் வாழ்வில் கர்த்தர் இருந்தால் வீசும் புயலையும், காற்றையும் அதட்டி நம் வாழ்விலும் வசந்தம் வீசச்செய்வார்.

.

தேவ சமாதானத்தினால் நாம் ஒவ்வொருவரும் நிரம்பியிருப்போம். ஆவியின் கனியாகிய சமாதானம் நிறைந்திருக்கும்போது, நம் நித்திரை இனிமையாயிருக்கும், நம் குடும்ப வாழ்வு, சபை, சமுதாய வாழ்வு இனிதாயிருக்கும். சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. (2தெச-3:16). ஆமென் அல்லேலூயா!

.

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

.

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கருத்தோடு துதித்திடுவேன்

.

ஜெபம்
எங்கள் அன்பின் சமாதானக் கர்த்தரே, சமாதானம் இன்றி தவிக்கிற ஒவ்வொருவருக்கும் சமாதானத்தை கட்டளையிடுவீராக. என்னுடைய சமாதானத்தையே கொடுக்கிறேன் என்று சொன்ன இயேசுகிறிஸ்துவின் சமாதானம் ஒவ்வொருவரையும் நிரப்பட்டும். எந்த சூழ்நிலையிலும் ஆவியின் கனியாகிய சமாதானம் எங்கள் வாழ்வில் நிறைந்து காணப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
........

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 29 அக்டோபர், 2014

29th October 2014 - ஆவியின் கனியோ...... சந்தோஷம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 29-ம் தேதி - புதன் கிழமை
ஆவியின் கனியோ.. சந்தோஷம்
...

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23)

.
இரண்டாம் சுளை சந்தோஷம்:

சந்தோஷம் என்றதும், நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை நாம் நினைக்கிறோம். உலகத்தில் சந்தோஷம் தருபவை எத்தனையோ இருக்கின்றன. பூக்களை பார்க்கும்போது, சிறு குழந்தைகள் நடப்பதை, பேசுவதை பார்க்கும்போது, சூரிய உதயத்தையும், முழு நிலாவையும் பார்க்கும்போது என்று நம் மனம் பூரிப்படைகிறது. நம் பிள்ளைகள் நல்ல மார்க் வாங்கி வரும்போது ஒரு சந்தோஷம், நாம் செய்த ஒரு காரியத்தை மற்றவர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்... ஆனால் எதுவும் நிரந்தரமானது இல்லை.

.

இத்தனை சந்தோஷங்கள் இருந்தும் வாழ்க்கை சில வேளைகளில் நமக்கு தருவது, வெறுமையும், விரக்தியும், கவலையும், கண்ணீரும்தான். உலகத்திலேயே எப்போதும் சந்தோஷமாயிருக்கிற மனிதன் ஒருவனும் இல்லை. ஒருவேளை மனநிலை சரியில்லாதிருந்தால் அவன் அந்த நிலைமையில் இருக்கக் கூடும்.

.

வேதத்திலும் நாம் சந்தோஷத்தைக் குறித்து அநேக வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம், களிகூருதல் என்று நான்கு வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' (சங்கீதம் 68:3). நீதிமான்கள்தான் இந்த நான்கு வகையான சந்தோஷமும் அடைவார்கள் என்று வேதம் கூறுகிறது.

.

'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்' (பிலிப்பியர் 4:4) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். அவர் எந்த நிலையிலிருந்து அப்படி கூறுகிறார் என்றால் எல்லாம் நன்றாக, மனரம்மியமாக இருந்தபோதல்ல, சிறையில் இருந்துக் கொண்டுதான் இந்த கடிதத்தை அவர் எழுதினார். அவர் சிறையில் இருந்தபோதும், அவர் மனம் சோர்ந்துப் போய் உட்கார்ந்து விடவில்லை, 'பாருங்கள் நான் கர்த்தருக்காக பாடுகள் பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறையில் வாடிக் கொண்டிருக்கிறேன்' என்று முறுமுறுத்துக் கொண்டு கடிதத்தை எழுதவில்லை, மாறாக வெளியில் இருக்கும் மற்றவர்களை சிறையில் இருந்துக் கொண்டே உற்சாகப்படுத்தினார். கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று உற்சாகப்படுத்தினார். என்ன ஒரு அற்புதமான கர்த்தருடைய அப்போஸ்தலன் அவர்!

.

பிரியமானவர்களே, நம் வாழ்வில் துக்கமான, துயரமான, தாங்க முடியாத பாரங்கள் அழுத்தும்போது, கண்ணீர் வடிப்பதும், இதிலிருந்து என்னை விடுவிப்பவர் யார் என்று கதறுவதும் சாதாரண மனிதனுடைய நிலைமையாகும். ஆனால் கர்த்தருக்குள் இருப்பவர்கள் அவர் கொடுக்கிற, ஆவியானவரால் உண்டாகிற சந்தோஷத்தால் நிறைந்தவர்களாக, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும், அவற்றை தாங்கக்கூடிய, அவற்றால் சோர்ந்துப் போய் விடாமல், கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, சந்தோஷமாக இருக்க முடியும்.

.

'அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 16:23-25). இந்த வசனங்களை பார்க்கும்போது, பவுலும் சீலாவும் பிசாசு பிடித்திருந்த ஒரு பெண்ணை சுகப்படுத்தினதால் அவள் மூலம் அவளுடைய எஜமானர்களுக்கு கிடைத்த வருமானம் போய் விட்டது என்று, அவர்கள், பவுல், சீலாவின்மேல் பொய்யாய் குற்றம் சாட்டி, அநேக அடிகளை அடித்து, சிறையில் அதுவும் உள்ளே இருக்கும் இருண்ட இடத்தில் காவலில் வைத்து, கால்களை தொழுமரத்தில் கட்டி வைத்திருந்தார்கள்.

.

இந்த நிலையிலும், அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள் என்று வேதம் கூறுகிறது. யார் பாடலை பாட முடியும்? சோகமாய், உலகத்தை வெறுத்தவர்கள் யாரும் எனக்கில்லை என்று அழுது வடிந்து பாடுவார்கள். இல்லையென்றால் சந்தோஷமாய் இருப்பவர்கள் பாடுவார்கள். பவுலும் சீலாவும் அழுது வடிகிற பாடலை அல்ல, தேவனை துதித்துப் பாடினார்கள் என்று பார்க்கிறோம். அப்படியென்றால் ஆவியானவர் கொடுக்கிற, எந்த சூழ்நிலையிலும் மாறாத சந்தோஷத்தினால் நிறைந்தவர்களாக அவர்கள் உள்ளம் நிறைந்திருந்தபடியால் அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள். அல்லேலூயா!

.

நம்மைப் போல மனிதனாக இருந்த பவுலினால் பயங்கரமான சூழ்நிலையிலும் சந்தோஷமாயிருக்க முடியுமென்றால், அவருக்குள் இருந்த ஆவியானவர் அவரை தேற்றி, திடப்படுத்தி, சந்தோஷத்தினால் நிறைத்திருந்தார். நாமும் நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், போராட்டங்களில் சோர்ந்துப் போகாமல், சந்தோஷமாய் அவற்றை சந்தித்து, கர்த்தருக்குள் களிகூருவோமா! ஆவியின் இரண்டாம் சுளையாகிய சந்தோஷத்தினால் நாம் எப்போதும் நிரம்பியிருப்போமா? 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' ஆமென் அல்லேலூயா!

.

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க

உயர்வானாலும் தாழ்வானாலும்

சர்வ வல்ல தேவன் நம்மோடிருப்பதால்

.

நெருக்கத்தின் நேரத்திலும்

கண்ணீரின் பாதையிலும்

நம்மை காண்கின்ற தேவன்

நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

.

என்னதான் நேர்ந்தாலும்

சோர்ந்துப் போகாதீங்க

நம்மை அழைத்த தேவன்

கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வாழ்க்கையில் நெருக்கத்தின் நேரத்திலும், கண்ணீரின் பாதையிலும் நீர் எங்களோடிருப்பதால், எதைக் குறித்தும் கவலைப்படாமல், எப்போதும் சந்தோஷமாயிருக்க கிருபை செய்யும். துன்ப நேரத்தில் முறுமுறுக்கிறவர்களாக இல்லாமல், உம்முடைய சித்தம் இல்லாமல் எதுவும் நடக்காது என்கிற விசுவாசத்தோடு உம்மைப் பற்றிக் கொண்டு, சந்தோஷமாய் கடந்து செல்ல உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

28th October 2014 ஆவியின் கனியோ அன்பு...பாகம் 2

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 28-ம் தேதி - செவ்வாய் கிழமை
ஆவியின் கனியோ அன்பு...பாகம் 2
...

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23).

.

முதலாம் சுளை அன்பு:

அன்பு என்ற சொல்லுக்கு நான்கு சொற்கள் கிரேக்க மொழியிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பிலியோ என்பது சிநேகிதருக்குள் காண்பிக்கப்படும் அன்பு. ஈரோஸ் என்பது கணவன் மனைவியிடைய காண்பிக்கப்படும் அன்பு. ஸ்டார்க்கே என்பது குடும்பத்தில் உறவினர்கள் மத்தியில் காண்பிக்கப்படும் அன்பு. அகப்பே என்பது தெய்வீக அன்பு என்பதாகும். கர்த்தர் நம்மிடத்தில் வெளிப்படுத்தியது அகப்பே அன்பாகும்.

.

தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் நமக்கு கூறுகிறது. அந்த அன்பினாலேதான் 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16) என்று அவருடைய அளவில்லாத அன்பை காண்கிறோம்.

.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8). கிறிஸ்து நம் மேல் வைத்த அன்பினாலே தம் ஜீவனையும் பாராமல், பாடுகளையும் வேதனையையும் சகித்து, சிலுவையிலே நமக்காக மரித்தார். மீண்டும் உயிர்த்து, நமக்காக ஒரு வீட்டை பரலோகத்தில் ஆயத்தம் செய்ய போயிருக்கிறார். நம்மை அழைத்துச் செல்ல மீண்டும் வருவார். ஆமென்.
ஆவியானவரின் கனியாகிய அன்பு இப்படி பிதா, குமாரன், பரிசுத்தஆவியானவராகிய திரியேக தேவன் நம்மேல் அன்பு வைத்திருக்கும்போது, நாமும் அவர் மேல் அன்புக்கூர கடனாளிகளாயிருக்கிறோம். அவரிடத்தில் இருந்து பெற்ற அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்கும்போது, மற்ற அன்புகளைவிட தெய்வீக அன்பை காண்பிக்கும்போது தேவன் அங்கு மகிமைப்படுகிறார்.

.

கார்லும், ஈடித்தும் கணவன் மனைவியாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு பிள்ளையில்லை. ஆனால் இருவரும் ஒருவரிலொருவர் அன்பு நிறைந்தவர்களாக, 23 வருடங்களாக குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். கார்ல் அரசாங்கத்தில் வேலையில் இருந்தபடியால், அவருக்கு வேறு இடத்திற்கு சென்று அலுவலை முடித்து வரும் நிலைமை இருந்து வந்தது.

.

ஒருமுறை அவருக்கு ஜப்பானில் உள்ள ஒக்கினாவா என்னுமிடத்தில் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதினால் அங்கு சென்ற அவரிடம் இருந்து கடிதம் வருவது திடீரென்று குறைந்தது. முன்பெல்லாம் வேறு இடம் சென்றால் அடிக்கடி கடிதம் எழுதுபவர், இப்போது குறைத்துக் கொண்டாரே, ஒருவேளை வேலைப்பளு அதிகமாயிருக்கும் என்று ஈடித் நினைத்துக் கொண்டார்கள்.

.

ஒருநாள் அவரிடமிருந்து கடிதம் வந்தது, 'நம் திருமண வாழ்வு முடிந்து விட்டது' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அவர் அங்கு ஐக்கோ என்னும் பத்தொன்பதே வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது. பெரிய இடியைப் போன்று இந்த செய்தி வந்தபோதும், ஈடித் கர்த்தரை விசுவாசிக்கிற சகோதரியாக இருந்தபடியால், அவர்கள் மேல் கோபப்படாமல், பரிதாபப்பட்டார்கள். எப்போதும் தன்னையே சார்ந்து ஜீவிக்கிற தன் கணவன் இப்போது என்ன செய்வார் என்று.

.

கார்லிடமிருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்ததாக கடிதம் வந்தது. இந்த சகோதரி அந்த பிள்ளைகளுக்கு பரிசுகள் வாங்கி அனுப்பினார்கள். சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு கடிதம் வந்தது, நுரையீரல் கேன்சரினால் கார்ல் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், பணம் கட்டுவதற்கு இல்லாமல் அவதிப்படுவதாகவும் வந்த செய்தியைக் கேட்டு, பணத்தையும் அனுப்பி வைத்தார்கள்.

.

சிகிச்சை பலனளிக்காமல் கார்ல் இறந்தப்பின் ஈடித் ஐக்கோவின் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கச் சொல்லி ஐக்கோவிற்கு கடிதம் எழுதினார்கள். ஐக்கோவிற்கு கஷ்டமாயிருந்தாலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து, அனுப்பி வைத்தாள். இந்த பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தபோது, ஈடித் தனக்கு வயதாகிக் கொண்டே போவதால், பிள்ளைகளை கவனிப்பதற்கு அவர்களின் தாய் இருந்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தார்கள். இவர்களின் அற்புதமான மன்னிப்பின் கதையை செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தபடியால், அது அரசாங்கம் வரை தெரிவிக்கப்பட்டு, ஜப்பானிலிருந்து அமெரிக்கா வர முடியாதிருந்த ஐக்கோவிற்காக விசேஷித்த முறையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு, ஐக்கோ அமெரிக்கா வந்து சேர்ந்தாள்.

.

விமான நிலையம் வந்து சேர்ந்த ஐக்கோவை 'நீதான் என் திருமண வாழ்வை நாசமடைய வைத்துவிட்டாய். நீ என்னுடைய வாழ்க்கை, என் சுகம், என் சம்பாத்தியம் எல்லாவற்றையும் நாசப்படுத்தி விட்டாய்' என்று கோபப்பட காரணங்கள் இருந்தாலும், எந்தவித கோபமும் கொள்ளாமல், அந்த பெண்ணை கட்டி அணைத்து முத்தமிட்டு, ஏற்றுக் கொண்டார்கள். அந்தப்பெண் அவர்களின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

.

நிபந்தனை அற்ற அன்பின் உதாரணமாக இந்த உண்மை சம்பவம் காணப்படுகிறது. கிறிஸ்து நம்மீது அன்பு வைக்க, நமக்காக ஜீவனை கொடுக்க எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ள எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாமும் எந்த நிபந்தனையும் இல்லாதவர்களாக அவருடைய அன்பை மற்றவர்களுக்கு செலுத்தவேண்டும் என்பது அவருடைய எதிர்ப்பார்ப்பு. அப்படிப்பட்ட கனியை நாம் தரவேண்டும் என்றுதானே அவர் நம்மை ஏற்படுத்தினார்?

.

எந்த சூழ்நிலையிலும், எந்த பிரச்சனை நேரத்திலும், எந்த அமைதியற்ற இடத்திலும் நிபந்தனை அற்ற அன்பை வெளிப்படுத்துவோமா? அப்படியான அன்பை நாம் வெளிப்படுத்தும்போது, நம்மை காண்பவர்கள் நம்மில் கிறிஸ்துவை காண்பார்கள். அப்படிப்பட்டதான அன்பில் வளர தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

அரபிக் கடல் வற்றினாலும் இயேசு

அன்புக் கடல் வற்றாதம்மா

பசிபிக் கடல் வற்றினாலும் இயேசு

பாசக்கடல் வற்றாதம்மா

.

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்

பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு இருப்பார்

நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவார்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, அன்பு என்ற வார்த்தைக்கு அடையாளமாக இருப்பவரே, அன்பு என்ற வார்த்தை அர்த்தமாக இருப்பவரே உம்மை நாங்கள் துதிக்கிறோம். நீர் எங்களிடத்தில் வெளிப்படுத்தின நிபந்தனையற்ற அன்பை நாங்களும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். ஆவியின் கனியாகிய அன்பை பெற்றுக் கொண்ட எங்களை உம்மைப் போல அன்புள்ளவர்களாக மாற்றுமே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 27 அக்டோபர், 2014

27th October 2014 - ஆவியின் கனியோ...

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 27-ம் தேதி - திங்கட் கிழமை
ஆவியின் கனியோ...
...

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை -(கலாத்தியர் 5:22-23).

.

வேதத்தில் ஆவியின் கனி என்று ஒருமையில் சொல்லிவிட்டு, அதன்பின் ஒன்பது குணாதிசயங்களைக் குறித்து இந்த வசனம் விவரிக்கிறது. ஒரு கனியில் எப்படி இத்தனை கனிகள் இருக்க முடியும்? ஒரு ஆரஞ்சு சுளைக்குள் சுளைகள் இருப்பதுப் போல ஒரு பழத்திற்குள் இருக்கும் சுளைகளாக இந்த குணாதிசயங்கள் காணப்படுகிறது.

.

இதை கொடுப்பவர் ஒரே ஆவியானவர். அவர் ஆவிக்குரிய கனியை ஒருபுறமும், ஆவிக்குரிய வரங்களை ஒருபுறமும் கொடுக்கிறார். ஒரு பறவை பறப்பதற்கு எப்படி இரண்டு இறக்கைகள் தேவைப்படுகிறதோ அதுப்போல ஒரு பக்கம், ஆவியின் கனியும், மறுபுறம் ஆவியின் வரங்களும் நாம் கர்த்தருக்குள் வளர, அவரோடு உயர்ந்த அனுபவத்திற்குள் பறப்பதற்கு தேவையாக இருக்கிறது.

.

சிலருடைய வாழ்க்கையில் இயற்கையாகவே ஆவியின் கனி காணப்படலாம். மற்ற மதத்தினவரிடமும் இதுப் போன்ற கனி காணப்படலாம். ஆனால் ஆவியின் கனி என்பது பரிசுத்த ஆவியானர் நம்மில் ஊற்றப்பட்டு, கனிகளே இல்லாத ஒருவரின் வாழ்வில் இந்த ஒன்பது குணாதிசயங்களையும் வெளிப்படுவதே ஆகும்.

.

அநேகர் சாட்சி சொல்வதைக் கேட்டிருக்கிறேன். 'நான் வாலிப வயது வரை என் விருப்பம் போல நடந்தேன், ஒரு நாள் கர்த்தர் என்னை சந்தித்தார். அவருடைய பிள்ளையாய் என்னை மாற்றினார். அவர் என்னுள்ளத்தில் வந்தப்பின்பு என்னுடைய சுபாவம் மாறிற்று, கர்த்தருடைய குணாதிசயங்கள் என்னில் நிரம்பி, மற்றவர்களுக்கு அவற்றை வெளிப்படுத்த தேவன் கிருபை செய்தார்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆம், ஆவியானவர் நமக்குள் வரும்போது, நம்முடைய மாம்ச சுபாவங்களும், மாம்ச கிரியைகளும் அழிந்து, கர்த்தருடைய சுபாவங்களும், ஆவியானவரின் கிரியைகளும் நமக்குள்ளிருந்து வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அப்படி வெளிப்படவில்லை என்றால் நம்முடைய இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே!

.

'...நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்' (யோவான் 15:16) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? ஆம் நாம் கனி கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நம்மிடத்தில் தேவன் வந்து பார்க்கும்போது கனி இல்லாதிருந்தால் நம் நிலை பரிதாபத்திற்குரியதே!

.

சில நேரங்களில் 'என் கணவர் இப்படி இருக்கிறார், என் மனைவி இப்படி இருக்கிறாள், அவளிடத்தில், அவரிடத்தில் என் கனியை காட்டுவது என்பது ஒருபோதும் நடக்காத காரியம்' என்று நாம் நினைக்கிறோம். நாம் அந்த இடத்தில் கனிக் கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். வேறு சிலர் 'நான் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்களுக்கு என் கனியை நான் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்தினாலும் எல்லாமே வீண், அவர்கள் அதை புரிந்துக் கொள்ள மாட்டார்கள்' என்று நினைக்கிறோம். அவர்கள் மத்தியில் நாம் கொடுக்கும் கனியே மிகவும் சிறந்தது. அந்த கனியே பலன் கொடுக்கக்கூடியது.

.

தேவன் நம்மை ஏற்படுத்தினதின் ஒரு காரணம் நாம் கனிகொடுக்கும்படிககும், அது நிலைத்திருக்கும்படிக்கும் என்று நாம் அறிந்துக் கொண்டோம். அதினால் அது எத்தனை முக்கியமானது என்றும் அறிவோம். ஆகையால் நாளையிலிருந்து ஆவியின் கனியாகிய ஒன்பது பலரச, பரவச சுவைகளால் நிரம்பியிருக்கும் சுளைகளை ஒவ்வொரு நாளும் ஒரு சுளையாக அனுதின மன்னாவில் ருசித்துப் பார்த்து, நம் வாழ்வில் அந்த சுவையான சுளைகள் இருக்கிறதா என்று சோதித்து, கனி கொடுக்கிறவர்களாக நாம் மாறுவோமாக! ஆமென் அல்லேலூயா!

.

அன்பு, மகிழ்ச்சி, சமாதானம்

நீடிய பொறுமை, தயவு

விசுவாசம், நற்குணம், சாந்தம்

இச்சையடக்கம் தாருமையா

.

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

அடியோரை ஆட்கொண்டு நடத்துமே

ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்

அன்பினால் இன்று அலங்கரியும்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே இந்த வேளையிலும் ஆவியின் கனி எங்களிடத்தில் விளங்கும்படியாக ஆவியானவர் எங்களை ஒவ்வொருவரையும் ஆட்கொள்வாராக. அவரில் நிரம்பியிருக்கிற நாங்கள் ஆவியின் கனியை எங்கள் வாழ்வில் வெளிப்படுத்த கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 23 அக்டோபர், 2014

24th October 2014 - காலை நேரம் இன்ப ஜெப தியானமே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 24-ம் தேதி - வெள்ளிக்கிழமை
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
..........

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். - (சங்கீதம் 143:8).

.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.

.

வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். 'ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்' என்றனர். 'வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்' என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார். 'நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்' என்றார்.

.

நாம் முதலில் யாரோடு பேசுகிறோம்? அன்றைய செய்தி தாளுடனா? அல்லது தொலைகாட்சி பெட்டியுடனா, அல்லது மற்றவர்களுடனா? யாருடன் முதலில் பேசுவீர்கள்? அதிகாலையில் எழும்பும் பழக்கம் உண்டா? தொலைபேசி அழைப்போ, அல்லது யாரோ எழுப்பிதான் நீங்கள் எழுவதுண்டா? இவர்கள் உங்களை எழுப்புவதற்கு முனபே தேவனோடு உறவாடி, அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்பீர்களானால் தூங்கி வழிந்த முகத்தோடு அல்ல, புன்சிரிப்போடு எழுந்தரிப்பீர்கள். யாரையும் புன்சிரிப்போடு சந்திப்பீர்கள். அந்த நாளின் எல்லா காரியங்களிலும் நிதானத்தோடு யோசித்து செயல்படுவீர்கள். அன்று வரும் பிரச்சனைகளினால் பதற்றப்பட்டு உங்க்ள சமாதானத்த இழக்க மாட்டீர்கள். கர்த்தரை நம்பி அவர் பொறுப்பில் விட்டு விடுவீர்கள்.

.

ஆம், அதிகாலை நேரத்தை அன்பருடன் செலவிடுவது ஒரு இன்பமான வேளை. 'என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்' (நீதிமொழிக்ள 8:17-21). இந்த இடத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி கூறப்பபட்டுள்ளது. அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் என்றுஇயேசுகிறஸ்து கூறுகிறார். அப்படி அவரை அதிகாலையில் தேடி கண்டடையும்போது, அவர்களை ஆசீர்வாதத்தின் ஊற்றுகளாக தேவன் மாற்றுகிறார். ஐசுவரியமும் கனமும், நிலையான பொருளும், நீதியும் அவர் நமக்கு கொடுத்து, நம்முடைய களஞ்சியங்களை நிரப்பி, நீதியின் பாதைகளில் நம்மை நடத்துகிறார்.

.

உலக மனிதர்கள் யாருடனும் பேசும் முன்பே உலகை படைத்த தேவனுடன் பேசுவது எத்தனை பாக்கியம்! அந்த நாளை அவருடைய பொற் பாதத்தில் சமர்ப்பித்து, அந்த நாளுக்குரிய கிருபைகளை பெற்று கொண்டு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருக்கும் கிருபை தருவாராக! ஆமென் அல்லேலூயா!

.

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அர்ப்பணித்தேன் என்னையே

ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்

அப்பனே உமக்கு தந்தேன்

ஆராதனை ஆராதனை

அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, காலைதோறும் உம்முடைய கிருபைகள் புதியவைகளாய் இருந்து, உம்மை தேடி வருகிறவர்களை அன்பு கூர்ந்து, அந்த புதிய கிருபைகளால் அவர்ளை நிரப்புகிறவரே உம்மை துதிக்கிறோம். நாங்கள் இந்த உலகத்தில் எந்த மனிதரையும சந்திப்பதற்கு முன் உம்மை சந்தித்து விட கிருபை செய்யும். ஒவ்வொரு நாளும் உம்மிலே களிகூர்ந்து ஆரம்பித்து, உலகத்தில் நாங்கள் எதிர்கொள்ளுகிற ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியை பெற்று கொள்ள எங்களை தயார்படுத்தும். அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள் என்று சொன்னீரே, உம்மை கண்டு கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.