Friends Tamil Chat

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

30th April 2013 - நீதிமானின் முடிவு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஏப்ரல் மாதம் 30-ம் தேதி - செவ்வாய் கிழமை
நீதிமானின் முடிவு
....

'நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக' - (எண்ணாகமம் 23:10).

.
நூறாண்டுகளுக்கு முன் ஒரு நாள் செய்தித்தாளை பார்த்த ஒருவர் தன்னுடைய மரண செய்தியை காண நேரிட்டது. தவறுதலாக வேறு யாருக்கோ பதிலாக அவருடைய பெயரும், புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. அவருடைய புகைப்படத்தின் கீழ் டைனமெட் உண்டாக்கிய இராஜா என்றும், மரணத்தின் வியாபாரி என்றும் எழுதப்பட்டிருந்தது.

.
அதை பார்த்தவுடன் அந்த மனிதர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

மரணத்தின் வியாபாரி என்றா என்னை மக்கள் நினைவு கூருவார்கள் என்று

திடுக்கிட்டது. அது அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.

தன்னை யாரும் அப்படி அழைப்பதை அவர் விரும்பவில்லை. உடனே

அந்நாளில் இருந்துதானே அவர் சமாதானத்திற்கான காரியங்களில் ஈடுபட

ஆரம்பித்தார். அவர் வேறு யாருமில்லை ஆல்பர்ட் நோபல் ஆவார். அவர்

பேரில் இன்றும் ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்கும், மற்ற அறிவியல்

ஆராய்ச்சிகளை கண்டுபிடித்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
.

.
பிரியமானவர்களே நம் ஒவ்வொருவருக்கும் எல்லாரையும் போல ஒரு

வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வாழ்க்கையின் முடிவில் நாம்

மற்றவர்களால் எப்படி அறியப்படுகிறோம்? சரியான கோபக்காரன்

என்றோ, சரியான குடிகாரன் என்றோ, தொல்லைகளை கொடுக்கிறவன்

என்றோ எப்படி அறிந்து கொள்ளப்படுவோம்?
.

.
அல்லது மற்றவர்களால், இவரைப் போன்ற நல்ல மனிதரை காண்பது அரிது

என்று போற்றப்படுவோமா? நாம் இல்லாமற்போனால் மற்றவர்கள் நம்மை

உண்மையாகவே இழந்து தவிப்பார்களா?
.

.
இந்நாட்களில் ஒரு அரசியல் தலைவர் மரித்தவுடன், எங்கள் கட்சி ஒரு

மாபெரும் தலைவரை இழந்து விட்டது என்று உடனே அறிக்கை

விடுவார்கள். அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைக் கண்டுக்

கொள்ளவே மாட்டார்கள். இவையெல்லாம் அரசியலில் சகஜம்.

அதுப்போன்று நம்மை பெயரளவில் இழந்திருக்கிறோம் என்று சொல்லி,

இருதயத்தில் இவன் போனது எத்தனை நல்லது என்று நினைப்பார்களானால்

அது எத்தனை பயங்கரம்!
.

.
'யோராம் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம்

எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்' (2

நாளாகமம் 21:20) என்று ஒரு யூதாவின் இராஜாவைக்குறித்து வேதத்தில்

எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வழிகளில் நடவாமல், அவன் தன்

விருப்பம் போல ஆட்சி செய்தபடியால், ஒருவரும் விரும்பாத வண்ணம்

அவன் எட்டு ஆண்டுகளே ஆட்சி செய்து, கொடிய நோயால்

மரித்துப்போனான் என்று வேதத்தில் காண்கிறோம்.
.

.
ஆனால் யாக்கோபு மரித்தபோது, 'அப்படியே யோசேப்பு தன் தகப்பனை

அடக்கம்பண்ணப் போனான்; பார்வோனுடைய அரமனையிலிருந்த

பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து

தேசத்திலுள்ள சகல பெரியோரும், யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன்

சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள்.

தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன்

நாட்டிலே விட்டுப் போனார்கள். இரதங்களும் குதிரைவீரரும் அவனோடே

போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது. அவர்கள்

யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில்

வந்தபோது, அவ்விடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே

தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான். ஆத்தாத்தின்

களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய

கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துங்கங்கொண்டாடல்

என்றார்கள். அதினாலே யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த

ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று' (ஆதியாகமம்

50:7-11) என்றுப் பார்க்கிறோம். ஆம், யாக்கோபு மரித்தபோது, எகிப்தில்

இருந்த சகல பெரியோரும், குதிரை வீரரும், யாக்கோபுக்காக பெரும்

புலம்பலாக புலம்பினார்கள் என்றுப்பார்க்கிறோம். அவருடைய இழப்பு

அவர்களை புலம்ப வைத்தது.
.

.
கர்த்தரோடு இருந்தவர்களாக, கர்த்தருக்குள் மரிப்பவர்களுக்கும்,

கர்த்தரில்லாமல் மரிப்பவர்களுக்கும் எத்தனை வித்தியாசம்! 'கர்த்தருடைய

பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது' (சங்கீதம்

116:15) என்று வேதம் கூறுகிறது.
.

.
பிரியமானவர்களே, நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது? மற்றவர்கள்

போற்றும் வகையில் நம் வாழ்க்கை கர்த்தருக்கும் மற்றவர்களுக்கும்

பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதா? அல்லது யாரும் விரும்பாவண்ணம்,

மூர்க்கமான, பிரயோஜனமற்ற வாழ்க்கையை வாழ்ந்து

கொண்டிருக்கிறோமா? கர்ததருக்குள் மரித்தால், இம்மையிலும் மகிமை,

மறுமையிலும் மகிமை! கர்த்தரில்லாமல் மரித்தால், இம்மையிலும் வெறுமை,

மறுமையிலும் வெறுமை! எதை நாம் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்?
.

.
கர்த்தருக்கு பிரியமுள்ளவர்களாக, சபைக்கும், சமுதாயத்திற்கும்

பிரயோஜனமுள்ளவர்களாக நம் வாழ்க்கை இருக்கும்படியாக கர்த்தர் தாமே

நமக்கு உதவி செய்வராக! ஆமென் அல்லேலூயா!

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே,நீர் எங்களுக்கு கிருபையாக கொடுத்திருக்கிற எங்கள் வாழ்க்கையில் நாங்கள் இம்மையிலும் மறுமையிலும் மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளவர்களாகவும், கர்த்தருக்கு பிரியமுள்ளவர்களாகவும் ஜீவிக்க கிருபை செய்யும். நாங்கள் இந்த உலகத்தை விட்டு கடந்து உம்மண்டை வரும்போது, எங்களை ஏற்றுக் கொள்வார் இருக்கும்படியாக, எங்கள் வாழ்க்கை அமைவதாக. ஏதோ பிறந்தோம், வாழந்தோம் என்று இல்லாதபடி, கர்த்தருக்கும், சபைக்கும், சமுதாயத்திற்கும் பிரயோஜனமுள்ளவர்களாக வாழும்படி கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 29 ஏப்ரல், 2013

29th April 2013 - உண்மையான வேலை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஏப்ரல் மாதம் 29-ம் தேதி – திங்கட்கிழமை
உண்மையான வேலை
..

எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். - (கொலோசேயர் 3:24).

.
குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. அதிக சம்பளம் வழங்கினாலும் அதற்கேற்ப நேர்மையாக யாரும் உழைப்பதில்லை எனபது அந்த கம்பெனி முதலாளியின் நியாயம். ஒரு முறை அங்கு சாதாரண சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த ஒருவன், குறைவான சம்பளத்தை குறித்து கவலைப்படாமல் தன்னுடைய முழு பலத்தையும், உழைப்பையும் பயன்படுத்தி, கடுமையாக வேலை செய்தான். அவனுடைய கடுமையான வேலையை கண்டு பிற தொழிலாளர்கள், 'வீணாக நீ இப்படி கடினமாக உழைக்காதே. நீ எப்படி உழைத்தாலும் இந்த கம்பெனி முதலாளி அதை பார்த்து நல்ல சம்பளம் தர மாட்டார்' எனக் கூறினர்.

.

அதற்கு அந்த மனிதன், 'நான் இந்த முதலாளியிடம் நல்ல சம்பளத்தை எதிர்பார்த்து நேர்மையாக உழைக்கவில்லை. இந்த முதலாளி எனக்கு சம்பளம் குறைவாக தந்தாலும் என்னுடைய பெரிய முதலாளியாகிய தேவன் நியாயமான சம்பளம் தருவார் என்பதே என நம்பிக்கை. அவருக்காகவே நான் உண்மையாய் உழைக்கிறேன்' என்றான்.

.

ஆம், இவ்வுலகிலே நம் முதலாளிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அதாவது விசுவாசியானாலும், அவிசுவாசியானாலும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து உண்மையாய் உழைக்க வேண்டும். உதாரணமாக வேதத்திலே தானியேல், யோசேப்பு போன்ற வாலிபர்கள் புறஜாதியான ராஜாக்களிடத்தில் பணி புரிந்தாலும் தங்கள் பணியில் உண்மையோடும் உத்தமத்தோடும் இருந்தனர். அதோடு தேவனை பிரியப்படுத்தும் காரியங்களில் மிக ஜாக்கிரதையாக இருந்ததால் தேவன் அவர்களை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தினார். நீங்கள் பணி புரியும் வேலை ஸ்தலத்திலே உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை மிக சிறியதாக இருக்கலாம். பிறரால் அற்பமாக எண்ணப்படுகிற வேலையாயிருக்கலாம். ஆனாலும் அதை முழு ஈடுபாட்டொடும், உண்மையோடும் செய்யுங்கள். அதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் போனாலும், மதிக்காமல் போனாலும் தேவன் உங்களை நிச்சயமாய் கனம் பண்ணுவார்.

.

உங்கள் அலுவலகத்திலோ, நீங்க வேலை செய்யும் இடத்திலோ உங்களது நடவடிக்கைகளை கண்காணிக்க யாரும் இல்லாதிருக்கலாம், இருப்பினும் உங்கள் பணியினை மிக உண்மையோடும், உத்தமத்தோடும் செய்யுங்கள். ஏனென்றால் உங்கள் செயலை மட்டுமல்ல, இருதயத்தையும் காணும் உயர்ந்த அதிகாரி இயேசு உண்டு. அவர் சிறு வேலையில் உங்கள் உண்மையை கண்டு, உங்களை அநேகத்;தின் மேல் அதிபதி ஆக்குவார்.

.

பிரியமானவர்களே, இதுவரை நீங்கள் உண்மையும் உத்தமுமாய் உங்கள் கடமைகளை செய்த போதிலும் இதுவரை எந்த நன்மையும் அடையாமல் இருக்கலாம். ஆயினும் சோர்ந்து போகாதிருங்கள். நமது நோகக்மெல்லாம் மனிதர்களிடமிருந்து நன்மைகளை பெறுவதில் மட்டுமே இருக்க கூடாது. நன்மைகளை தேவனிடமிருந்தே எதிர்பாருங்கள். தேவன் பலன் தருவார். ஆகவே நீங்கள் செய்யும் எந்த வேலையையும் மனிதருக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள். அது வீட்டு வேலையோ, பள்ளி வேலையோ, அரசு வேலையோ எதுவாயிருந்தாலும் வேலையின் தரத்தையல்ல, உண்மையையே தேவன் பார்க்கிறார். அந்த உண்மையை இறுதிவரை காத்து ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!

.

மரணம் என்னை சந்திக்கும்

நாள் வரையும் உண்மையாய்

உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே

உன்னத கிருபை தாருமே

...

கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால்

அநேகத்திற் கதிகாரியாய்

மாற்றுவேன் என்ற என் நேசரே

நீர் என்னையும் மாற்றிடுமே


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல தகப்பனே, கொஞ்சத்திலும் நாங்கள் உண்மையும் உத்தமுமாய் இருக்க தேவன் எங்களுக்கு கிருபை செய்வீராக. நாங்கள் செய்யும் வேலைகளில் நீர் பார்க்கிறீர் என்கிற எண்ணத்தோடு உண்மையாய் இருக்க எங்களுக்கு கிருபை செய்யும். மனுஷனுக்காக நாங்கள் ஊழியம் செய்கிறவர்களாக இல்லாமல் தேவனுக்காக எங்கள் வேலைகளை செய்யவும், நீர் பலன் தருவீர் என்கிற நம்பிக்கையோடு வேலை செய்யவும் கிருபை தாருமையா. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..

..

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 28th April 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் பண்ணவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

வெட்டி வேலை ஆபிஸரு

பட்டி தொட்டி சுத்தினாரு

சட்டிப் பானையை உருட்டினாரு

தவிட்டையும் தேடியே ஓடினாரு

பட்டினியால் உருண்டாரு -அவர் யார்?

 

விடை: இளையகுமாரன் – லூக்கா 15:13-17.

====================================
அத்தேனே பட்டணத்தில்
அர்த்தமுள்ள நீதிமன்றம் -அது என்ன?

விடை: மார்ஸ் மேடை – அப் 17:19-23.

====================================
கைவீசம்மா கைவீசு
கஷ்டம் வரும்போது கைவீசு
வயது கூடினாலும் கைவீசு
வால வயதாகும் கைவீசு - வாசிப்பது எங்கே?

விடை:  சங்கீதம் 103:5.

====================================
சுருக்கெழுத்துப் போட்டி போல்
சுருங்கப் பேச வேண்டுமாம் -அது என்ன?

விடை: தேவ சமூகம் – பிர 5:2.

====================================

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

26th April 2013 - யார் ஆவிக்குரியவர்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஏப்ரல் மாதம் 26-ம் தேதி – வெள்ளி கிழமை
யார் ஆவிக்குரியவர்கள்?
...

பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். - (கலாத்தியர் 5:16).

.
யார் ஆவிக்குரிய கிறிஸ்தவன் என்ற கேள்விக்கு ஒவ்வொரு கிறிஸ்தவ வட்டாரத்திலும் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகிறது. சில ஐக்கியங்களில் உற்சாகமாய் பாடல்பாடி அல்லேலூயா என்று முழக்கமிடுகிறவர்கள் ஆவிக்குரியவர்கள் என்று எண்ணப்படுகின்றனர். சில வட்டாரங்களில் பிரசங்கியார் வசனம் வாசிக்க சொல்லியவுடன் முதலாவதாக சத்தமாக வாசிப்பவர்களே ஆவிக்குரியவர்களாக கருதப்படுகின்றனர். சில நேரங்களில் நீண்ட ஜெபம் செய்பவர்களே ஆவிக்குரியவர்களாக எண்ணப்படுகின்றனர்.

.

மேற்கண்ட காரியங்கள் ஒரு ஆவிக்குரிய மனிதனின் அடையாளங்களாக இருந்தாலும் வெளிப்படையான இக்காரியங்கள் இருப்பதினால் ஒரு மனிதனை ஆவிக்குரியவன் என்றுசொல்லிவிட முடியாது. ஆவிக்குரிய சபைகளில் பங்கு கொள்வதினால் ஒருவரும் ஆவிக்குரியவர்களாகி விட முடியாது. உண்மையான ஆவிக்குரியவனிடம் சில ஆழ்ந்த விருப்பங்கள் தோன்றி இருக்கும். அவை அவனது முழு வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். அவைகளை கீழே காண்போம்.

.

1. ஆவிக்குரிய மனிதன் மகிழ்ச்சியாயிருப்பதை விட பரிசுத்தமாய் இருப்பதையே விரும்புவான். ஆனால் இன்றைய கிறிஸ்தவ வட்டாரம் பரிசுத்தத்தை விட பரவசத்தையே நாடுகிறது. பரவசம் நிலையானது அல்ல, தேவன் பரிசுத்தமாயிருப்பதையே விரும்புகிறார்.

.

2. ஆவிக்குரிய மனிதன் தான் நினைப்பதைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியை தேவன் தர வல்லவர் என்பதை அறிந்திருக்கிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியை பெற்றனுபவிக்க தான் பாத்திரமாக இருப்பது அதைவிட அவசியம் என்றும் அறிந்திருப்பான்.

.

3. ஆவிக்குரிய மனிதன் சிலுவை சுமத்தலை பாரமாக நினைக்க மாட்டான். அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் வரும் பாடுகள், வியாதிகளை சிலுவை என்று எண்ணுகின்றனர். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் இவைகள் வருகின்றனவே. பின் சிலுவை என்றால் என்ன? இயேசுகிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்படிவதால் வரும் கூடுதல் பிரச்சனைகளையே சிலுவை என்று ஆண்டவர் குறிப்பிடுகிறார். இந்த சிலுவையை கர்த்தர் நம்மேல் திணிப்பதில்லை. மாறாக ஒரு ஆவிக்குரியவன் விளைவுகளை அறிந்தும் தானே சுயமாய் எடுத்து செல்வான்.

.

4. ஆவிக்குரிய மனிதன் பிறரது புகழ்ச்சியை விரும்பி நன்மை செய்யாமல் எதை செய்தாலும் அதை கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் செய்வான். அவன் நேரத்தையோ, காலத்தையோ மனிதர் தன்னை புகழ வேண்டும் என்றோ பாராமல், கர்த்தருக்கென்று உண்மையாய் தன்னால் இயன்றதை செய்வான்.

.

5. ஆவிக்குரிய கிறிஸ்தவன் மற்றவர் உயர்த்தப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறான். அவனிடத்தில் பொறாமையில்லை. தான் கவனிக்கப்படாமல் வேறாருவர் கனப்படுத்தப்படும்போது விரக்தியடைய மாட்டான்.

.

6. ஆவிக்குரியவன் மற்றவர்களை தேவன் உபயோகப்படுத்துவதைக் கண்டு முறுமுறுக்காமல் மகிழ்ச்சியடைந்து கர்த்தரை துதிப்பான். தானும் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட வேண்டும் என தன்னை அர்ப்பணிப்பான்.

.

7. ஆவிக்குரியவன் பூமியில் இருக்கும் நாட்களிலேயே பரலோக பிரஜையாகி விடுகிறான். உலகம் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே வாழாமல் தேவனுக்கு பிரயோஜனமுள்ள வாழ்வு வாழ பிரயாசப்படுவான்.

.

மேற்கண்டவற்றை ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவன் ஏதோ முயற்சி செய்து சுய பெலத்தால் செய்பவை அல்ல. பரிசுத்த ஆவியானவர் அவனுள் நடப்பிக்கும் கிரியையே ஆகும். இந்த உலகத்திற்கு உரிய வேஷத்தை தரிக்காமல் உண்மையான ஆவிக்குரியவர்களாக கர்த்தருக்கென்று வாழ்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

.

உள்ளான மனிதன் நாளுக்கு நாள்

புதிதாக்கப்படுகின்ற நேரம் இது

சோர்ந்து போகாதே நீ

சோர்ந்து போகாதே

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் மாம்சத்திற்குரியவர்களாக அல்லாமல், ஆவிக்குரியவர்களாக நடந்து கொள்ள எங்களுக்கு கிருபை செய்யும். ஆவிக்குரியவனின் குணாதிசயங்கள் எங்கள் வாழ்வில் காண்ப்பட ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்வாராக. நாங்கள் பெலவீனர்கள் தகப்பனே, மாம்சமும் ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாக போராடுகிறபடியால், நாங்கள் மாம்சத்துக்கு விட்டுக்கொடுத்து, உமக்கு விரோதமாக போய் விடாதபடி எங்களை ஆவிக்குரியவர்களாக மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 25 ஏப்ரல், 2013

25th April 2013 - நன்மைக்கு தீமை செய்தாலும்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஏப்ரல் மாதம் 25-ம் தேதி - வியாழக்கிழமை
நன்மைக்கு தீமை செய்தாலும்
...

சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். - (யாக்கோபு 5:9).

.
ஒரு நல்ல கிறிஸ்தவ மனிதர் அவர் தன்னிடம் வரும் யாவருக்கும் நன்மைகளை செய்து வந்தார். ஆனால் அவருக்கு விரோதமாக ஒரு சிலர் எழும்பி, அவருடைய நன்மைக்கு பதிலாக அவருக்கு தீமை செய்தார்கள். அவர் மனம் வருந்தியது. ஏன் இப்படி எனக்கு செய்கிறார்கள் என்று மிகவும் மனம் நொந்து போனார். கர்த்தரிடம் முறையிட்டார். அவருக்கு 'நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது' (நீதிமொழிகள் 17:12) என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்தது. அவர் தனக்கு தீமை செய்தவர்களை பதில் தீமை செய்யாவிட்டாலும், அவர்களுக்கு ஏதாவது தீமை நடக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்க ஆரம்பித்தார். கர்த்தருடைய பார்வையில் அது நிச்சயமாகவே தவறாகவே காணப்படும்.

.
பொதுவாக தீங்கு செய்தவர்கள் வீழ்ந்து போக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு

எல்லாருக்குள்ளும் இருக்கிறது. நமக்கு அநீதி இழைத்தவர்கள் தேவனால்

தண்டிக்கப்படுவதைக் காண வேண்டும் என்ற ஆசையும் எல்லாருக்குள்ளும்

இருக்கிறது. அக்கிரமக்காரர்கள் அழிந்து போவார்கள் என்று நினைத்துக்

கொண்டிருக்கும்போது, அவர்கள் இன்னும் அதிகமாக உயர்த்தப்படும்போது

சிலருக்கு மனம் கஷ்டமடையவே செய்கிறது.
.

.

பிரியமானவர்களே, கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற நாம்,

மற்றவர்களைப் போல அல்லாமல், இந்த காரியங்களில் வித்தியாசமாகவே

செயல்பட வேண்டும். நாம் செய்கிற நன்மைக்கு கர்த்தர் நிச்சயமாக பதில்

தருவார் என்று எதிர்ப்பார்க்கிற வேளையில் மற்றவர்கள் செய்த தவறுக்கு,

நம் கண்களுக்கு எதிரில் அவர்கள் நன்கு அனுபவிக்க வேண்டும் என்று

எதிர்ப்பார்க்கவே கூடாது. நம்மை தேவையின்றி விரோதித்தவர்கள்,

நியாயமின்றி எதிர்த்தவர்கள, மனசாட்சியின்றி தீங்கு செய்தவர்கள்,

நம்முடைய கண்களுக்கு முன் எந்த தீங்கையும் காணாதவர்களாக

உலாவுவது நம்முடைய உள் மனதில் நம்மை சிறுமைப்படுத்துவதுப் போல

தோன்றலாம். நம்மை தேவையில்லாமல், சத்தம் போடும் மேலதிகாரி, கர்த்தர்

மேல் நம்பிக்கையே இல்லாமல் அவருக்கு விரோதமாக பேசினாலும்,

எல்லாமே அவருக்கு நன்றாக நடக்கும்போது, கர்த்தருக்கு பயப்படுகிற

எனக்கு ஏன் இப்படி நேரிடுகிறது என்று உள்மனம் வருந்தலாம்.
.

.
ஆனால் இவைகளை சகிக்கவும், ஏற்றுக் கொள்ளவும் நம் மனநிலைமையை

பக்குவப்படுத்தவேண்டும். அதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. யோசேப்பு

தனக்கு தீமை செய்த தன் சகோதரர்களையும் நேசித்தார். போத்திபாரின்

வீட்டில் யோசேப்பு நன்மையையே செய்தபோதும், செய்யாத தவறுக்காக

தான் தேவையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்தபோது,

அவர் போதிபாரை சபித்திருக்கலாம். ஆனால் அவர் அவர்களை

நினைக்கவே இல்லை. அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று அவர் போய்

தேடிக் கொண்டும் இருக்கவில்லை. அவர்களுக்கு என்ன நேரிட்டது என்று

அதைக் குறித்து வேதத்திலும் கூறப்படவில்லை.
.

.
ஆனால் அநீதியை சகித்து, தன்னை தாழ்த்திய யோசேப்பை தேவன்

மற்றவர்கள் நினைத்திராத அளவு உயர்ந்த இடத்தில் கொண்டுப் போய்

வைத்தார். யோசேப்பின் குற்றமற்ற வாழ்க்கையை கண்ட தேவன் அதற்கு

பலனளிக்க தவறவில்லை. அநீதி செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை

விட அநீதியை சகித்தவருக்கு கர்த்தர் என்ன பலன் கொடுத்தார் என்று

வேதத்தில் கற்றறிந்து, அநீதியை சகிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
.
தேவன் அநீதி செய்கிறவர்களுக்கு இன்னும் சில நாட்கள் கொடுத்துப்

பார்க்கிறார். அவர்கள் மனம் திரும்புவார்களா என்று. இது தேவனுடைய

கிருபையையே குறிக்கிறது. நாம் அநேக இடங்களில் காண முடியும்,

கர்த்தருக்குள் இருப்பவர்கள் சீக்கிரமாய் மரித்து போவதையும், பாவம்

செய்பவர்கள் அதிக நாட்கள் வாழ்வதையும். அது கர்த்தருடைய பெரிதான

கிருபையே அல்லாமல் வேறல்ல. அவர்கள் மனம் திரும்ப மாட்டார்களா

என்று தேவன் அவர்களுக்கு ஜீவிய நாட்களை கூட்டித்தருகிறார். தேவன்

தமது கிருபையையும், இரக்கத்தையும் அவர்களுக்கு காண்பித்தால், நாம்

அதற்கு எதிராக செயல்பட முடியுமா?
.
ஆகவே தேவனுடைய எண்ணங்களுக்கு எதிராக நாம் நினைத்துக்

கொண்டிராதபடி, தவறு செய்த மற்றவர்களுக்கு என்ன நேரிடுகிறது என்று

எதிர்ப்பார்ப்போடு காத்திருப்பதைவிட, நன்மை செய்த எனக்கு தேவன்

நிச்சயமாக நல்ல பலனை கொடுப்பார் என்று கர்த்தரையே சார்ந்து ஜீவிக்க

தேவன் நம் ஒவ்வொருவருக்கும் கிருபை தருவாராக! ஆமென் அல்லேலூயா!

.
கசப்புகளை மாற்றி விட்டீர் நன்றி

மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

நன்றி நன்றி நன்றி எல்லாம் நன்மைக்கே நன்றி

.
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்றி
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்கு தீமை செய்தவர்களின் வீழ்ச்சிக்காக நாங்கள் எதிர்ப்பார்க்கிறவர்களாக இல்லாமல், நாங்கள் செய்த நன்மைக்கு தேவன் பதில் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு வாழ கிருபை செய்யும். எல்லாவற்றையும் காண்கிற தேவன் நீர் என்று உம்முடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து, உம்மையே சார்ந்து ஜீவிக்க உதவி செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 24 ஏப்ரல், 2013

24th April 2013 - துரதிஷ்ட எண் 13

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி - புதன் கிழமை
துரதிஷ்ட எண் 13?
...

மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். - (மாற்கு 7:15).

.
அனேகருக்கு 13ம் எண் என்றாலே அலர்ஜி. அது ஒரு துரதிஷ்டமான இலக்கம் என்று. யாரும் 13ம் நம்பர் உள்ள வீட்டு எண்ணில் குடிவர மறுப்பார்கள். அந்த நம்பர் உள்ள ஹோட்டல் அறை எண்ணில் தங்க மறுப்பார்கள். அந்த நாளில் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க தயங்குவார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் ஆஸ்பத்திரிகளில் 13ம் எண் உள்ள வார்டே கிடையாது.
.
இது எப்படி துரதிஷ்ட எண் என்று கூறப்படுகிறது என்றால், இயேசுகிறிஸ்துவும், பன்னிரண்டு சீடர்களும் இராப்போஜன பந்தியில் பந்தியிருந்தப்பின் அவர் சிலுவையில் அறையப்பட்டதால் இந்த எண் துரதிஷ்டம் வாய்ந்தது என்று கூறப்படுவதுண்டு. மட்டுமல்ல, வேதத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தில் 13ம் அதிகாரம் முழுக்க அந்திக்கிறிஸ்து, வலுசர்ப்பம், கள்ளத்தீர்க்கதரிசியை விளக்குவதால் இது துரதிஷ்ட எண் என்று கூறுவாரும் உண்டு.
.
ஆனால் தேவன் உருவாக்கிய எந்த நாளும் துரதிஷ்டம் வாய்ந்த நாளே கிடையாது. 'இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்' (சங்கீதம் 118:24) என்று கர்த்தர் உண்டுப்பண்ணின ஒவ்வொரு நாளையும் மகிழ்ந்து களிகூருவோம். ஏனெனில் எல்லா நாளும் எல்லா நிமிடமும் கர்த்தர் நம்மோடு இருப்பதால்! அல்லேலூயா!
.
ஆனால் வேதத்தில் மாற்கு 7:21-23 வரை உள்ள வசனங்களில் 13 காரியங்கள் நம்மை தீட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவை: 'மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்'.
.
இந்நாட்களில் நாம் இந்தியாவில் இதுப்போன்ற அசுத்தங்கள் தலைவிரித்தாடுவதை கண்கூடாக பார்க்கிறோம், மனிதனுடைய பொல்லாத சிந்தனைகளினால், ஐந்து வயது சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக வன்புணர்ச்சி செய்த காரியத்தையும் மட்டுமல்ல, சொந்த மகளென்றும் பாராமல், அசுத்தமான கிரியைகளை நடப்பிக்கும் குடிவெறியர்களும் கிறிஸ்து தங்களுக்குள் இல்லாதபடியால், துணிகரமாக அசுத்தங்களை செய்கின்றதையும் பார்த்து இதுப் போன்ற காரியங்கள் எங்கே போய் முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாத நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
.
மேலே சொல்லப்பட்ட இயேசுகிறிஸ்து கூறின 13 பாவங்களே ஒரு மனிதனை தீட்டுப்படுத்துகிறவவைகளாக இருக்கின்றன. ஒரு மனிதனின் இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிற இந்த 13 காரியங்களை குறித்தே நாம் கவனமாக இருக்க வேண்டும் இதில் எந்த காரியமும் நம் வாழ்வில் காணப்படாதபடி பரிசுத்தமாய் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை நம்மில் யாருக்காவது இந்த இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிற அசுத்தமான பாவங்களாகிய இந்த 13 காரியங்களில் ஏதாவது ஒரு பாவம் காணப்படுமென்றாலும், நம்மை சுத்திகரிக்க வல்ல கிறிஸ்துவின் இரத்தத்தினதால் நம்மை கழுவி சுத்திகரித்து கொண்டு, கிறிஸ்து அருளும் ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவற்றைப் பெற்றுக் கொண்டு நம் பரிசுத்தத்தை காத்துக் கொள்வோமாக!
.
'இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே' (கலாத்தியர் 4:9-10) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியரிடம் வருத்தப்படுவதுப் போல நாம் நாட்களையும், மாதங்களையும், வருஷங்களையும் அவை நல்லவையா கெட்டவையா என்று பாராதபடி, அவைகளுக்கு அடிமைப்பட்டுப் போகாதபடி, கர்த்தர் வெறுக்கிற அசுத்த பாவங்கள் 13லிருந்தும் நாம் விடுபட்டு, ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தில் வளர தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.


ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது - இன்று

அகமகிழ்வோம் அக்களிப்போம்

அல்லேலூயா பாடுவோம்

.
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் இந்த உலகத்தின் மக்களைப்போல 13ம் எண் துரதிஷ்டமானது என்று நினைத்து கொண்டிராதபடி, நீர் படைத்த ஒவ்வொரு நாளையும் அகமகிழ்ந்து, களிக்கூர கிருபை செய்யும். அதே நேரத்தில் நீர் அருவருக்கிற அசுத்தமான பாவங்கள் 13ம் எங்கள் வாழ்வில் இல்லாதபடி, ஒவ்வொரு நாளும் எங்களை பரிசுத்தமாய் காத்துக் கொண்டு, கர்த்தருக்குள் வாழ வளர உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

23rd April 2013 - ஜெபத்துடன் முயற்சி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஏப்ரல் மாதம் 23-ம் தேதி – செவ்வாய்க்கிழமை
ஜெபத்துடன் முயற்சி
...

விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. - (யாக்கோபு 2:22).

.
ஜெபசீலன் தன் பெயருக்கேற்ப ஒரு ஜெப வீரர். தன் குடும்பத்தோடு மலையடிவார கிராமம் ஒன்றில் குடியிருந்தார். ஞாயிறு தவிர தினமும் மலையில் ஏறி, விறகுகளை வெட்டி, தனது இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி வந்து பக்கத்து கிராமங்களில் விற்று வந்து குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் பக்தி வைராக்கியம் நிறைந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் முழுமையான இரட்சிப்பின் அனுபவத்தில் வாழாதவர்.

.

வழக்கம் போல அன்றும் விறகுகளை வெட்டி தன் வண்டியில் ஏற்றி கொண்டு புறப்பட்டார். பலத்த மழை பெய்தது. சற்று நேரம் மழைக்கு ஒதுங்கி விட்டு வண்டியை ஓட்டி வந்தார். வழியில் சக்கரம் சேறு நிறைந்த ஒரு குழியில் மாட்டி கொண்டது. வண்டியை வெளியே கொண்டு வர மாடுகளை முடுக்கி விட்டார். வண்டி நகரவில்லை. கண்ணீரோடு ஜெபித்தார். ஜெபித்து விட்டு வண்டியை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் மாடுகளை அதட்டினார். வண்டி ஒரு அடி கூட நகரவில்லை. மீண்டும் ஒரு முறை ஜெபித்தார். பலனில்லை. மூன்றாவது முறை, 'என்ன ஆண்டவரே, நான் உம் பிள்ளையல்லவா? ஜெபத்தில் எதை கேட்டாலும் செய்வேன் என்று சொல்லியிருக்கிறீரே, நான் இரண்டு முறை ஜெபித்தேன். நீங்கள் வண்டியை வெளியே வர செய்யவில்லையே' என்றார். ஆண்டவர் சொன்னார், ' ஜெபசீலன், நீ ஒரு ஜெபவீரன் என்பது உண்மை. நான் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன் என்பதும் உண்மை. அதே நேரத்தில் உன்னுடைய முயற்சியும் வேண்டும். நீ இப்பொழுதே போய் குழியில் மாட்டியிருக்கும் சக்கரத்தை இழு, நான் உனக்கு உதவியாய் இருப்பேன்' என்றார். அப்படியே ஜெபசீலன் சக்கரத்தை இழுக்க முயற்சித்த போது ஆண்டவருடைய கரமும் இணைந்து செயல்பட்டது. வண்டி குழியை விட்டு வெளியே வந்தது. ஆண்டவருக்கு நன்றி கூறி வண்டியை ஓட்டினார்.

.

பிரியமானவர்களே, நம்மில் அநேகர் எல்லாவற்றிற்காகவும் ஜெபிக்கிறோம். ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. இறுதியில் ஆண்டவர் என் ஜெபத்தை கேட்கவில்லை என்று சோர்ந்து விடுகிறோம். உதாரணமாக நமது கடன் பாரத்திற்காக பாரத்தோடு இருதயம் நொறுங்குண்டு, ஜெபிக்கிறோம். அதோடு வீட்டின் ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவீனங்களை ஞானமாய் குறைத்து உணவு பொருட்கள் வீணாவதை தவிர்த்து, சிக்கனமாய் வாழ முயற்சி எடுக்கும்போது, தேவன் புதிய வழிவாசல்களை திறப்பார். ஆம் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிதாவை நோக்கி ஜெபித்தார். பூமியிலே கடவுளின் ராஜ்ஜியத்தை கட்ட உழைத்தார். அப்போஸ்தலனாகிய பவுலும் ஊழியத்திற்காக ஜெபித்தார், அதே வேளையில் சுவிசேஷத்திற்காக முயற்சி செய்து பாடுபட்டார்.

.

நம்முடைய கிறிஸ்தவ ஜீவியம் எப்படியிருக்கிறது? எல்லாவற்றிற்காகவும் ஜெபித்த பின் முயற்சிக்கிறீர்களா? 'நீங்கள் ஜெபித்து இயேசுவை நோக்கி ஒரு அடி எடுக்க முயற்சிக்கும்போது இயேசுகிறிஸ்து நூறு அடிகள் எடுத்து உங்களை நோக்கி ஓடி வருகிறார்' என்று ஒரு போதகர் கூறினார்.

.

ஜெபிப்போம், விடாமல் முயற்சி செய்வோம், வெற்றியை எடுத்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.

ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்

ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன

ஜெபத்தினால் ஜெபத்தினால்

ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் ஜெபிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் முயற்சி எடுக்கவும் கிருபை செய்வீராக. ஒரு முயற்சியும் இல்லாமல், ஜெபித்து மட்டும் காத்திருக்காமல், நாங்கள் செய்ய வேண்டிய காரியத்தை நாங்கள் செய்து, கர்த்தருடைய வேளைக்காக ஜெபித்து காத்திருக்க கிருபை தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..

..

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.