Friends Tamil Chat

செவ்வாய், 31 மார்ச், 2015

31 மார்ச் 2015 - ஆவியில் எளிமை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மார்ச் மாதம் 31-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
ஆவியில் எளிமை
..................

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்: பரலோகராஜ்யம் அவர்களுடையது. - (மத்தேயு 5:3).

.

இயேசுகிறிஸ்து தம் வாயை திறந்து போதிக்க ஆரம்பித்தபோது, கூறின முதல் வசனம் 'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்: பரலோகராஜ்யம் அவர்களுடையது' என்பதே. நாம் அனைவரும் அடிக்கடி படிக்கும், பிரசங்கங்களை கேட்டும் இருக்கிற பகுதி இந்த மலை பிரசங்கம் ஆகும். கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி, மற்ற மதத்தினரும் ஒத்து கொள்ளும் இயேசுகிறிஸ்துவின் போதனைகளில் இந்த மலை பிரசங்கம் முக்கியமானதொன்றாகும். அதில் 5-ம் அதிகாரத்தில் இருந்து, 7-ம் அதிகாரம் வரை கிறிஸ்து ஏராளமான காரியங்களை தொடர்ந்து சொல்லி கொண்டே போகிறார். அவை அத்தனையும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்தும், யார் அதில் போவார்கள் என்றும், பரலோக ராஜ்யம் எப்படிப்பட்டது என்றும் அவற்றில் அவர் கூறியிருக்கிறார். அவர் இந்த பிரசங்கங்களில் ஒன்றிலும் உலக காரியங்களை தேடுங்கள் என்று கூறாமல், முற்றிலும் தேவ ராஜ்யத்தின் காரியங்களை குறித்தே விளக்கி இருக்கிறார்.

.

கிறிஸ்து அநேக காரியங்களை குறித்து சொல்லியிருந்தாலும், அவரின் முதல் வாக்கியம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு பரலோக ராஜ்யம் சொந்தமானது என்பதே. ஆவியில் எளிமை என்பதை குறித்து நாம் அறிந்திருந்தாலும், அதை குறித்து தியானிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இந்த நாட்களில் கிறிஸ்தவர்களுக்கு எல்லாமே உண்டு. ஆசீர்வாதம் உண்டு, இரட்சிப்பு உண்டு, அவர்களை கர்த்தர் கீழாக்காமல் மேலாகவே வைத்திருக்கிறார். எல்லாவிதத்திலும் ஆசீர்வாதமாகவே வைத்திருக்கிறார். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு ஆவியில் எளிமை காணப்படுகிறதா என்று பார்த்தால் அப்படிப்பட்ட எளிமையுள்ளவர்களை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. நான் மற்றவர்களை காட்டிலும் ஒரு படி அதிகம் என்கிற எண்ணம் நாம் வெளியே காட்டாவிட்டாலும் நம் இருதயத்தின் ஆழத்தில் காணப்படுவது நிச்சயமான உண்மை.

.

வெளிப்படையாக நம்மில் அநேகர் நாம் மிகவும் தாழ்மையாக இருப்பதை போன்று இருக்கலாம். மற்றவர்கள் நம்மை ஐயோ எத்தனை எளிமையான மனிதர் என்று கூறலாம். ஆனால் நம் உள்ளத்திற்கு மாத்திரமே தெரியும் நாம் எத்தனை எளிமையுள்ளவர்களாக இருக்கிறோம் என்று. நாம் கர்த்தருக்காக வைராக்கியமுள்ளவர்களாக ஒருவேளை நான் கர்த்தருக்காக இதை செய்கிறேன் என்று கூறி, காரியங்களை செய்யலாம். கர்த்தருக்காகவும் சபைக்காகவும் இதை செய்கிறேன் என்றும் கூறலாம். ஆனால் அதனால் சகவிசுவாசிகளுக்கும், போதகர்களுக்கும், மற்றவர்களுக்கும் நாம் இடறலாய் இருந்தால் அது வைராக்கியம் இல்லை, இடறலே! ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

.

'சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்: இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்' (அப்போஸ்தலர் 9:1-2). சவுல் தன் தேவனுக்காக வைராக்கியம் பாராட்டி, தன்னுடைய மதத்திற்கு விரோதமாக யார் எழும்பினாலும், அவர்களை சும்மா விட மாட்டேன், அவர்களை கட்டி துன்புறுத்தி சிறையில் போடுவேன் என்று தேவனுக்காக வைராக்கியம் பாராட்டித்தான் அதை செய்தான். அவன் அத்தனையாய் தன்னுடைய மதத்திற்காக வைராக்கியம் பாராட்டினான். தன்னுடைய மதமும், தான் வணங்கிய தேவனுமே அவனுக்கு முதன்மையாக இருந்தார்கள். ஆனால் அதற்காக 'அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான்' (3-4 வசனங்கள்). அப்போது கிறிஸ்து அவனுக்கு தரிசனமாகி, அவனுடனே பேசியபோது, 'அவன் அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான்' (6ம் வசனம்). இதுதான் ஆவியில் எளிமை என்பது. உடனே அவன் தன்னுடைய வைராக்கியம், ஆவிக்குரிய பெருமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தேவனுக்கு முன், பயந்து நடுங்கி, திகைத்து, ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று தன்னையே அவருக்கு ஒப்புக்கொடுத்தான். அவன் அப்படி செய்ததால், அவனிமித்தம், பயந்து கொண்டிருந்த சீஷர்களும், சபை மக்களும் அமைதி பெற்றார்கள். 'அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின' (31ம் வசனம்).

.

பிரியமானவர்களே, ஒருவேளை நமக்கும் கூட இந்தவிதமான ஆவிக்குரிய பெருமையும், நான் இருக்கும் சபைதான் பெரியது என்று தேவையற்ற வைராக்கியமும், மற்றவர்கள் கொண்டிருக்கிற நம்பிக்கைகள் பிரயோஜனமற்றது, நான் செய்வதுதான் சரி என்கிற எண்ணமும் இருந்தால் நம்மை நாமே சோதித்து பார்ப்போம். சவுல் தேவனுக்காகத்தான் வைராக்கியம் பாராட்டினான். ஆனால் அவனிமித்தம் சபையினருக்கு அமைதியில்லை, எப்போது அவன் தங்களை பிடித்து கொண்டு போவானோ என்கிற பயத்தில் இருந்தார்கள். அதுபோல நம்முடைய தேவையற்ற வைராக்கியம் மற்றும் ஆவிக்குரிய பெருமையினிமித்தம் சபையினருக்கும் போதகர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடறலாயிருக்கிறோமா?

.

பரிசேயனும், ஆயக்காரனும் ஜெபாலயத்தில் பிரவேசித்து, ஜெபித்த ஜெபத்தை நாம் யாவரும் அறிவோம். பரிசேயன் கர்த்தருடைய கட்டளைகளையே செய்தான். ஆனால் அவனுக்கு தான் அவற்றை எல்லாம் விடாமல் செய்கிறோம், அதனால் தேவன் என் ஜெபத்தைத்தான் கேட்பார் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஆயக்காரனோ, பரலோகத்திற்கு தன் கண்களை கூட ஏறெடுக்க துணியாமல் தன் மார்பில் அடித்து கொண்டு, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தான். பரிசேயனுடைய ஜெபம் அவனுடைய ஆவிக்குரிய பெருமையினிமித்தம் கேட்கப்படவில்லை. ஆனால் ஆயக்காரனுடைய ஜெபமோ அவனுடைய ஆவியின் எளிமையினிமித்தம் கேட்கப்பட்டது. அப்படிப்பட்டவர்களிடத்தில்தான் தேவனும் வாசம் செய்கிறார். அல்லேலூயா! 'நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்' (ஏசாயா 57:15). ஆமென்.

.

நாளை புதிய மாதத்திற்குள் பிரவேசிக்க போகிறோம். நம்மில் காணப்படும் எந்த மேட்டிமையையும், பெருமையான எண்ணங்களையும் விட்டுவிட்டு, ஆவியில் எளிமையுள்ளவர்களாக, பரலோக ராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக மாறுவோம். வெளிதோற்றத்திற்கு எளிமையாக நாம் காணப்படாமல், (தேவன் அதை அறிவார்) உள்ளான இருதயத்திலே, ஆவியிலே எளிமையுள்ளவர்களாக, பணிந்த ஆவியுள்ளவர்களாக, தேவன் வாசம் பண்ணும் இடமாக நம் இருதயம் காணப்பட நம்மை தேவனுக்கு அர்ப்பணிப்போம். தேவன் அதிலே பிரியப்படுவார். ஆமென் அல்லேலூயா!

.

உலக பெருமை இன்பமெல்லாம்

உமக்காய் இழக்கணுமே

உம்மை பிரிக்கும் பாவங்களை

இனிமேல் வெறுத்தேனையா

உம் சித்தம் நிறைவேற்றுவேன்

உமக்காய் வாழ்ந்திடுவேன்

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த மாதத்தின் கடைசி நாளில் இருக்கிற நாங்கள், ஏதோ பெரிய தவறுகள் செய்தால்தான் பாவம் என்று நினைத்து, எங்கள் வாழ்விலே காணப்படும் ஆவியில் எளிமை அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்போமானால் தேவன் அத்தகைய இருதயத்தில் வாழ மாட்டார் என்று உணர்ந்து, இந்த வேளை நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயமுள்ளவர்களாக எங்களை உமக்கு படைக்கிறோம். தேவன் விரும்பாத எந்த காரியமும் எங்களில் காணப்படாதபடி, ஆவியில் எளிமையுள்ளவர்களாக நாங்கள் வாழ தேவன் எங்களுக்கு உதவி செய்வீராக. தேவையற்ற வைராக்கியங்களையும், பெருமையான எண்ணங்களையும் உதறிவிட்டு, ஆவியில் எளிமையும், பணிந்த ஆவியுள்ளவர்களாக வாழ கிருபை செய்யும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
......

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 30 மார்ச், 2015

30th March 2015 பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மார்ச் மாதம் 30-ம் தேதி - திங்கட் கிழமை

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை

.

ஒப்புவிக்கிறேன்

...

அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக்கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். - (லூக்கா 23:44-46).

.

நாம் தொடர்ந்து இயேசுகிறிஸ்து சிலுவையில் பேசின ஏழு வார்த்தைகளை தியானித்து வருகிறோம். இன்றைய தினமும் கடைசி வார்த்தையாகிய பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்ற வார்த்தையை குறித்து தியானிக்க இருக்கிறோம்.

.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. கிறிஸ்து தம் ஜீவனை விட்டார். சர்வத்தையும் படைத்த சர்வ வல்லவர் தம் ஜீவனை விட்டார். சிருஷ்டிகளுக்கு ஜீவனை கொடுத்தவர், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினவர் தம் ஜீவனையே கொடுத்து மரித்தார். அதை காண சகியாமல், சூரியன் இருளடைந்தது. 'அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது' (மத்தேயு 27:51) என்று அவர் படைத்த சிருஷ்டிகளால் அதை காண சகிக்கவில்லை.

.

தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது என்று பார்க்கிறோம். கீழ் தொடங்கி மேல் வரைக்கும் கிழிந்திருந்தால் அது மனிதனின் செய்கை என்று சொல்லலாம். ஆனால் மேல் தொடங்கி கீழ் வரைக்கும் கிழிந்ததால், இது தேவனுடைய செயலாகும். மனிதன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு செல்ல முடியாதபடி, தடையாக இருந்த திரைச்சீலை கிழிந்தது. இப்போது மனிதன் நேராக தன்னை படைத்த தேவனிடத்தில், கிருபாசனத்தண்டை கிட்டி சேர முடியும். இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் தேவனையும் மனிதனையும் இணைக்கும் பாலமாக மாறியது. அல்லேலூயா!

.

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார் என்று பார்க்கிறோம். ஏன் மகா சத்தமிட்டு சொன்னார்? 'நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்' (யோவா-10:18) என்ற வார்;த்தையின்படி அவருடைய ஜீவனை சத்துருவால் எடுக்க முடியவில்லை, ரோம வீரர்களால் எடுக்க முடியவில்லை. சுற்றிலும் இருந்த யூதர்களால் எடுக்க முடியவில்லை. அதை என்னிடத்திலிருந்து ஒருவனும் எடுத்துக் கொள்ள மாட்டான். நானே அதை கொடுக்கிறேன் என்று அவர் மகா சத்தமாய் சாட்சியாக அறிவித்து, தமது ஜீவனை பிதாவின் கரத்தில் ஒப்புக் கொடுத்து ஜீவனை விட்டார். அல்லேலூயா!

.

கிறிஸ்துவின் மரணத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் உண்டு. 'இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்' (பிலிப்பியர் 3:10-11) என்று அப்போஸ்தலனாகிய பவுல் வாஞ்சித்தார்.

.

கிறிஸ்துவே வார்த்தையானவர். அவரை எப்படி பிழிந்தாலும் அவர் வாயிலிருந்து வேதத்தின் வார்த்தைகளே வெளிவரும். அவர் நாற்பது நாட்கள் உபவாசித்து, பசியுண்டான வேளையிலும், பிசாசு அவரை சோதித்தபோதும், அவர் வாயிலிருந்து வசனமே வெளிவந்தது. அவர் இத்தனை பாடுகள் பட்டு, சிலுவையில் தொங்கி கொண்டிருந்தபோதும், அவர் வாயிலிருந்து வேத வார்த்தைகளே வெளிவந்தது. 'உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்' (சங்கீதம் 31:5) என்று தீர்க்கதரிசனமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சங்கீதக்காரன் சொன்;ன இந்த வார்த்தைகளே அவர் வாயிலிருந்து வந்தது. நாமும் கூட ஒரு நாளில் மரிக்க போகிறோம். கர்த்தருடைய வருகை தாமதித்தால் நம்மில் யாவரும் ஒரு நாளில் மரிக்கத்தான் போகிறோம். கிறிஸ்துவை போல நம் வாயில் எப்போதும் கர்த்தருடைய வார்த்தை காணப்படுமா? நம் இருதயம் வேத வசனங்களால் நிரம்பப்பட்டிருக்கிறதா? எந்த சூழ்நிலையிலும் நாம் கர்த்தருடைய வார்த்தைகளை சொல்ல தக்கதாக நம் வாயில் அவருடைய வார்த்தைகள் காணப்படுகிறதா அல்லது உலக காரியங்களும், தேவையற்ற காரியங்களும் காணப்படுகிறதா?

.

சாவு என்றால் பயத்தோடு காணப்படுகிறோமா? கிறிஸ்து சாவை கண்டு அஞ்சவில்லை. அதை தைரியமாக சந்தித்தார். மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் உயிரோடு எழுந்து சாவையும், சாத்தானையும் ஜெயித்தார். அல்லேலூயா! சாவு என்று வரும்போது அநேகரை நான் பார்த்திருக்கிறேன். பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பதையும், அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதையும் கண்டிருக்கிறேன். ஒருவர் சொன்னார், தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விடுகிறார்கள், திரும்பவும் அவர்களுக்கு அதை சரிசெய்ய தருணம் இல்லையே என்று கண்ணீர் விடுகிறார்கள் என்று. ஆனால் கர்த்தருக்குள் வாழ்ந்த பரிசுத்தவான்களோ, மகிழ்ச்சியோடு தங்கள் நித்தியத்தை எதிர்கொள்ளுகிறார்கள். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தருணத்தில் பரிசுத்தமாய் வாழ்ந்து, சாவு எந்த நாளில் வந்தாலும் அதை தைரியமாய் எதிர்கொள்ளுவோமா? நாம் உலகத்தில் இருந்தால் கர்த்தர் நம்மோடு இருக்கிறார், நாம் மரித்தால் கர்த்தரோடு இருப்போம் என்கிற தைரியமும் பக்குவமும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

.

தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாய் கிழிந்தபோது, தேவன் கிறிஸ்துவின் மேல் சுமத்தப்பட்டிருந்த பாவங்களை மன்னித்து விட்டார் என்பதன் அடையாளமாகவும், மனிதனின் பாவங்களும் கிறிஸ்து மூலமாக மன்னிக்கப்படும் என்பதன் அடையாளமாகவும் வெளிப்பட்டது. இப்போது தேவனுடைய பிரசன்னம் தடையாயில்லை, என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று அவர் கதற வேண்டியதில்லை, முதலில் பிதாவோடு அவர் கொண்டிருந்த உறவு மீண்டும் ஆரம்பித்தது. வலுப்பட்டது. அதன் காரணமாக, பிதாவின் செல்ல பிள்ளையாக இருந்த கிறிஸ்து, இப்போது மீண்டும் அவருடைய செல்ல பிள்ளையாக பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று தம் ஜீவனை அவருடைய கரத்தில் உரிமையோடு கொடுத்து ஜீவனை விட்டார். அல்லேலூயா!

.

நாம் ஒரு நாளில் சந்திக்க போகும் மரணமும், பயமில்லாததாக, சமாதானம் நிறைந்தததாக, கர்த்தருடைய வார்த்தைகள் நம் வாயிலும் நிறைந்ததாக நம்முடைய ஆவியையும் பிதாவே உம்முடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் என்று உரிமையோடு கொடுத்து செல்லும்படியாக அமையட்டும். 'நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக' (எண்ணாகமம் 23:10), ஆமென் அல்லேலூயா!

.

மரணமே உன் கூர் எங்கே?

பாதாளமே உன் ஜெயம் எங்கே

சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்

சபையோரே துதி சாற்றிடுவோம்

.

பரிசுத்தமாகுதலை

பயத்தோடென்றும் காத்து கொள்வோம்

எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக

எழும்புவோமே மகிமையிலே

.

உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

ஜெயித்தெழுந்தாரே

உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்

சொந்தமானாரே

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தவராக, சிலுவையிலே வெற்றி சிறந்த கிறிஸ்தேசுவுக்காக நன்றி செலுத்துகிறோம். எங்களுடைய பாவத்தின் கிரயம் சிலுவையில் செலுத்தப்பட்டபடியால், நாங்கள் எங்கள் பிதாவின் கிருபாசனத்தண்டை கிட்டி சேரும்படியாக கிறிஸ்து சிந்திய சொந்த இரத்தத்திற்காக நன்றி செலுத்துகிறோம். அவருடைய பாடுகளை அறிந்த நாங்கள், பரிசுத்தமாய் வாழ்ந்து பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

சனி, 28 மார்ச், 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - :29 மார்ச் 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

I. இந்த வார கேள்விகள்:  29 மார்ச் 2015.

***********************************************
1. சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் யார்?
.
2. மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும். ஆனால்  
 

 இதுவோ அதை மகிழ்ச்சியாக்கும். எது?

.
3. துஷ்டன் கலகத்தையே விரும்புகிறான். அவனுக்கு விரோதமாக யார்
 

  அனுப்பப்படுவான்?
.
4. துன்மார்க்கன் எதினால் சிறுமைப்பட்டவனை துன்பப்படுத்துகிறான்?
.
5. வானபரியந்தம் உயர்ந்ததும், பாதாளத்திலும் ஆழமானதும், பூமியைப்
 

   பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தை பார்க்கிலும் அகலமுமானது எது?
.

.
 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
.

II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
=======================================
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்?
.
3) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================
இந்த சம்பவம் என்ன?
.

=================================================

கடந்த  வார கேள்வி பதில்கள்: 22 மார்ச் 2015
.
1. தேன்கூடுபோல ஆத்துமாவிற்கு மதுரமானது எது?
.          
சரியான பதில் : இனிய சொற்கள் (நீதிமாழிகள் 16:24)
.
2. இந்த ஜீவனுக்கும் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குதத்தமுள்ளதாகையால்
  

  எல்லாவற்றிற்கும் பிரயோஜனமானது எது?
.          
சரியான பதில் : தேவபக்தியானது (1 தீமொத்தெயு 4:8)
.
3. பாசான் என்னும் நகரத்தின் மறுபெயர் என்ன?
.          
சரியான பதில் : இராட்சத தேசம் (உபாகமம் 3:13) (
அவோத்யாயீர்)
.
4. மோசேயின் காலத்தில் 20 வயதுடைய ஆணின் மதிப்பு என்ன?
.          
சரியான பதில் : 20 சேக்கல் வெள்ளி (லேவியராகம் 27:5)
.
5: நெகேமியாவின் நாட்களில் எருசலேமின் சுவர்கள் கட்டியெழுப்ப

   எத்தனை நாட்கள் ஆனது?
.          
சரியான பதில் : 52 நாட்கள் (நெகேமியா 6:15)
.
=======================================================
 சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.
5 கேள்விகளுக்கும் பதில் எழுதியவர்கள்:
=============================

.
1) Bro.Rajesh...2) Sis.M.Vijayarani Manonmani
.
3) Mr.Martin & family..4) Sis.R.Sheela...6) Bro.R.Silas..
.
7) Mrs. Kiruba John..8) Bro Jebaveerasingh J..
.
9) Bro. Prabhu Johnson..10) Bro.Christyshiba..
.
11) Mrs.Deepa R.Theodore..
.
4 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்:
=============================

.

1) Bro.Victor Jayakaran..2) Miss.Maria Madhana.M..
.
 3) Mr. John Manickam .. 4) Bro.L.Samuel George..
.
 5) Mr Ilango Thomas..6) Bro. K.Elayaraja..
.
 7) Mrs. Hannah Ezekiel..8) Mrs.M.Amutha Sakthi Victor..
.
 9) Sis. Geetharani..10) Mrs.Sweetlin Christopher..
.
11) Mrs. Baby Thangaraj..12) Sis.Kamini David..
.
13) Mrs.E.J.Esther..14) .V.Rajeswari@Deborah..
.
15) Mrs.Jeyaseeli Jawahardoss..16) Mrs. Judithara.J..
.
17) Sis.Mercy Karunya..18) Mr.Nirmalraj..
.
19) Sis.Joy Mabel Kennedy..20) Sis.K Sudha..
.
21) Mrs.Sheeba Samuel..22) Mrs.Florence John..
.
23) Mr. Inban Asir..24) Sis. S. Ramila suther..
.
25) Bro.J.Antony Suther..26) Mrs.S.Merlin Jayakumar..
.
.

3 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்:
=============================

.

1) Bro. M.Melvin..2) Miss.G.Stella..3) Mrs.T.L.Sheela Jasmine.  

.
2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை :
=================================================
.
பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள். அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள். - அப்போஸ்தலர் 12:13-15.
.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :

.
1) Bro.Rajesh...2) Sis.M.Vijayarani Manonmani
.
3) Mr.Martin & family..4) Bro.Victor Jayakaran..
.
5) Sis.R.Sheela...6) Bro.R.Silas..7) Miss.Maria Madhana.M.
.
8) Mr.John Manickam..9) Bro.L.Samuel George..
.
10) Mr Ilango Thomas..11) Mrs. Kiruba John..
.
12) Bro.K.Elayaraja..13) Mrs. Hannah Ezekiel..
.
14) Bro Jebaveerasingh J..15) Mrs.M.Amutha Sakthi Victor..
.
16) Bro. M.Melvin..17) Sis. Geetharani.
.
18) Mrs.Sweetlin Christopher..19) Mrs. Baby Thangaraj..
.
20) Sis.Kamini David..21) Mrs.E.J.Esther..
.
22) V.Rajeswari@Deborah..23) Mrs.Jeyaseeli Jawahardoss..
.
24) Mrs. Judithara.J..25) Sis.Mercy Karunya..26) Mr.Nirmalraj..
.
27) Sis.Joy Mabel Kennedy..28) Sis.K Sudha..
.
29) Mrs.Sheeba Samuel..30) Bro. Prabhu Johnson..
.
31) Mrs.T.L.Sheela Jasmine..32) Mrs.Florence John..
.
33) Mr. Inban Asir ..34) Bro.Christyshiba..

.

============================================================ 

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 27 மார்ச், 2015

27th March 2015 - முடிந்தது

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மார்ச் மாதம் 27-ம் தேதி - வெள்ளிக் கிழமை
முடிந்தது
...

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். - (யோவான் 19:30).

.

முடிந்தது எல்லாம் முடிந்தது

பாடுகள் வேதனைகள் முடிந்தது

பிசாசின் போராட்டங்கள் முடிந்தது

மனிதரின் துன்புறுத்தல்கள் முடிந்தது

இயேசு உலகில் வந்த நோக்கம் முடிந்தது

தேவனின் இரட்சிப்பின் செயல்திட்டம் நிறைவேறியது

அல்லேலூயா! அல்லேலூயா!

.

கடந்த இரண்டு நாட்களாக இயேசுகிறிஸ்து சிலுவையில் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கதறினதையும், தாகமாயிருக்கிறேன் என்று தாகத்தால் தவித்ததையும் குறித்து பார்த்தோம். இந்த நாளில் எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்து, நான் என் பிதா என்னை இந்த உலகத்திற்கு அனுப்பினதன் நோக்கத்தை நான் வெற்றிகரமாக முடித்து விட்டேன் என்பதன் அடையாளமாக முடிந்தது என்று வெற்றி முழக்கமிட்டார். நரகத்தை நடுங்க வைத்த ஒரு வார்த்தை உண்டென்றால் அது இந்த வார்த்தையே 'முடிந்தது' அல்லேலூயா!

.

ஆதியாகமத்தில் இருந்து ஸ்திரீயின் வித்து வரக்கூடாது என்பதற்காக ஆபேலை கொன்று, இன்னும் எத்தனையோ பேரை அழித்த சத்துரு, அவர் சிலுவையில் இந்த வார்த்தை சொல்லிவிட கூடாது என்பதற்காக எத்தனையோ தந்திரங்களை செய்த சாத்தான் அவர் அந்த வார்த்தைகளை சொல்லிய மாத்திரத்தில் நடுங்க ஆரம்பித்தான். நரகமே குலுங்க ஆரம்பித்தது. மனுக்குலத்தின் மீட்பு ஆரம்பித்து விட்டது. அல்லேலூயா!

.

நம்மில் அநேகர் அநேக திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்து அவற்றை முடிக்க முடியாமல் பாதியிலேயே விட்டு விட்டிருக்கிறோம். உதாரணத்திற்கு டயட் செய்ய வேண்டும் என்று ஆரம்பிப்பது, உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆரம்பிப்பது, இன்றிலிருந்து தினந்தோறும் ஒரு மணி நேரம் ஜெபிப்பேன் என்று ஆரம்பிப்பது என்று எத்தனையோ காரியங்களை ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டு வந்திருக்கிறோம்.

.

கிறிஸ்து மனுக்குலத்தை இரட்சிக்க தேவனின் திட்டத்தை செயல்படுத்த இந்த உலகத்தில் மானிடனாக பிறந்து வளர்ந்தாலும், எத்தனையோ முறை அவர் அதை பாதியிலேயே நிறுத்தி விட்டு, மீண்டும் பரலோகம் சென்று விட தூண்டப்பட்டாலும், அவற்றை ஒருபுறம் தள்ளிவிட்டு, கடைசிவரை பிதாவின் சித்தத்திற்கு தம்மை அர்ப்பணித்து, ஒரு சிறிய தீர்க்கதரிசனமும் விடாதபடி, எல்லாவற்றையும் பக்குவமாக சரியானபடி, தம் திட்டத்தின்படி அல்ல, தேவ திட்டத்தின்படி செய்து முடித்தார். அதனால் அவர் முடிந்தது என்று வெற்றி முழக்கமிட முடிந்தது.

.

பிரதான ஆசாரியர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்ட யூதர்களும் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவுடன் நினைத்திருக்கலாம், அவரை சிலுவையில் அறைந்து விட்டோம், எல்லாம் முடிந்தது என்று. ஆனால் கிறிஸ்துவின் வாயிலிருந்து அந்த வார்த்தை முடிந்தது என்று சொல்லும்வரை எதுவும் முடியவில்லை.

.

சத்துரு நினைத்திருக்கலாம், என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று இயேசுகிறிஸ்து கதறியபோது, அவ்வளவுதான் கிறிஸ்து முடிந்து விட்டார், அவரை சாகடித்து விட்டோம். எல்லாம் முடிந்தது என்று. ஆனால் கிறிஸ்துவின் வாயிலிருந்து அந்த வார்த்தை முடிந்தது என்று சொல்லும்வரை எதுவும் முடியவில்லை.

.

கிறிஸ்து மரித்து உயிர்த்து பரலோகத்திற்கு சென்ற போது வெறுங்கையாக போகவில்லை. தம் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட இன்றைக்கு என்னோடு கூட பரதீசிலிருப்பாய் என்று கிறிஸ்து சொன்ன, அந்த மனம் திரும்பிய, இரட்சிக்கப்பட்ட கள்ளனோடு சென்றிருப்பார். அல்லேலூயா! கிறிஸ்துவின் வாயிலிருந்து அந்த வார்த்தை முடிந்தது என்று சொல்லும்வரை எதுவும் முடியவில்லை.

.

உலக தோற்றத்திற்கு முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய (வெளி 13:8) கிறிஸ்துவின் மூலம் உலக தோற்றத்திற்கு முன்பே பிதாவானவர் தீர்மானித்திருந்த மீட்பின் திட்டம் இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து வந்த வார்த்தையாகிய முடிந்தது என்றதும் மூலம் நிறைவேறிற்று.

.

உலக மீட்பிற்காக குற்றமில்லாத, மாசற்ற, விலையேறப் பெற்ற கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம் அதன் விலைக்கிரயம் செலுத்தப்பட்டாகி விட்டது. சிலுவையில் கிறிஸ்து சிந்தின இரத்தத்தின் மூலம் உலக மீட்பு ஆரம்பித்தாகி விட்டது. பிசாசின் இராஜ்யம் முடிவடைந்து விட்டது.

.

பிரியமானவர்களே கிறிஸ்து சிலுவையில் சொன்ன இந்த ஆறாம் வார்த்தை மிகவும் முக்கியமானது. பழைய ஏற்பாட்டு விசுவாசிகள், தீர்க்கதரிசிகள் சொன்ன தீர்க்கதரிசனங்கள், உலகத்தின் மீட்பு எல்லாமே அவர் சொன்ன இந்த வார்த்தையில் அடங்கி விட்டது.

.

உலக மீட்பு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் மீட்பிற்காகத்தான் கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தினார். அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். ஒருவேளை நாம் இரட்சிக்கப்படாமல் இருந்தால், இந்த வேளையில் தானே கிறிஸ்துவின் இரத்தம் சுத்திகரிக்கட்டும். 'என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்' (ரோமர் 10:9-10) என்ற வார்த்தையின்படி கிறிஸ்துவை நம் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவோம்.

.

கிறிஸ்து சிந்தின இரத்தத்தை வீணென்று எண்ணாதபடி, அவர் முடிந்ததென்ற சொன்னதை நாம் விலக்காதபடி, வசனத்தின்படி அவரை ஏற்றுக் கொண்டு, அவருக்காக வாழ்வோம். நமக்காக அவர் சிலுவையில் தம் இரத்ததை கிரயமாக செலுத்தி, நம்மை மீட்டுக் கொண்டார். ஆமென் அல்லேலூயா!

.

பாவ மன்னிப்பின் நிச்சயத்தை

பெற்றுக் கொள்ள வேண்டும்

பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்

.

இயேசு ருகிறார் இன்று தருகிறார்

அதற்காகத் தான் சிலுவையிலே

இரத்தம் சிந்தி விட்டார்

.

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை

இயேசுராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் இந்த வார்த்தையை குறித்து தியானிப்பது எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. கிறிஸ்து பிதாவின் சித்தத்தின்படி எல்லாவற்றையும் செவ்வனே செய்து முடித்து, முடிந்தது என்று ஜெய முழக்கமிட்டாரே, அவருடைய சிலுவை வெற்றிக்காக துதிக்கிறோம். அவர் சிலுவையில் சிந்தின இரத்தம் எங்களுக்காக என்பதை உணர்ந்து, இன்னும் இரட்சிக்கப்படாதவர்கள் இரட்சிக்கப்பட்டு கர்த்தரிடம் வந்து சேர்ந்துவிட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 26 மார்ச், 2015

26th March 2015 - தாகமாயிருக்கிறேன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மார்ச் மாதம் 26-ம் தேதி - வியாழக் கிழமை
தாகமாயிருக்கிறேன்
...

அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். - (யோவான் 19:28-29).

.

நாம் தொடர்ந்து சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசின ஏழு வார்த்தைகளை குறித்து தியானித்து வருகிறோம். இன்றைய தினம் ஐந்தாவது வார்த்தையாகிய தாகமாயிருக்கிறேன் என்னும் வார்த்தையை குறித்து தியானிக்க இருக்கிறோம்.

.

வியாழனன்று நடு இரவில், கெத்சமனே தோட்டத்தில் பிடிக்கப்பட்டு, பிரதான ஆசாரியன், பின் பிலாத்து என்று மாறி மாறி விசாரிக்கப்பட்டு, இவரிடத்தில் ஒரு குற்றத்தையும் காணேன் என்று தீர்ப்பு வழங்கியிருக்க, சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று யூத மக்களின் தொடர் கூச்சலுக்கு இணங்க, தன் கையை கழுவி, நீதிமானின் இரத்தபழிக்கு நான் நீங்கலாகுகிறேன் என்று பிலாத்து, கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தப்பின், துப்பப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, கேலி பரியாசம் செய்யப்பட்டு, இரும்பு முட்களால் ஆன சவுக்கினால் முதுகு உழுதவன் நிலத்தை போல ஆகி, இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டு, கோர குருசை சுமந்து கொல்கதா மலைக்கு ஏறி சென்ற கிறிஸ்துவுக்கு கொஞ்சம் இந்த தண்ணீரை குடித்து விட்டு, தொடர்ந்து செல்லுங்கள் என்று கொடுத்ததாக வசனத்தில் சொல்லப்படவில்லை. அப்படி கொடுப்பதற்கும் ரோம வீரர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.

.

கொல்கதா மலைக்கு சென்று அங்கு கைகள் கால்களில் ஆணிகளால் கடாவபட்டு, தலையில் முள்முடி சூடி, தொடர்ந்து பன்னிரண்டு மணி நேர துன்புறுத்தலுக்கு ஆளாகி, ஆறாவது மணி நேரமாக சிலுவையில் தொங்கி கொண்டிருந்த கிறிஸ்துவுக்கு தாகம் ஏற்பட்டிராதா? நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் அவர் நூறு சதவிகிதம் தெய்வமாக இருந்தாலும், அவர் நூறு சதவிகிதம் மனிதனாகவும் இருந்தார். அவர் பயங்கரமான டிஹைடிரேஷன் என்னும் தண்ணீர் உடலில் வற்றிப் போன நிலையில் இருந்தார் என்று அவர் பாடனுபவித்ததை நன்கு கற்று அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சங்கீதம் 22 ல் தாவீது தீர்க்கதரிசனமாக உரைத்தவைகள் அந்த நாளில் நிறைவேறிற்று. அவற்றில் ஒன்றான, 'என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்' (15ம் வசனம்) என்ற வசனத்தின்படி ஈரப்பசை இல்லாதபடியால், அவருடைய நாவு மேல் வாயோடே ஒட்டிக் கொண்டது. அப்போது அவர் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னவுடன், அங்கிருந்த ரோம வீரர்கள், அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 'என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்' (சங்கீதம் 64:21) என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று.

.

'நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்' (யோவான் 4:14) என்று என்றுமே தாகம் வராத ஜீவ தண்ணீரை சமாரியா ஸ்தீரிக்கு கொடுத்தவர், இன்று தாகமாயிருக்கிறேன் என்றார். அவருடைய உண்மையான தாகம் அழிந்து போய் கொண்டிருக்கிற ஆத்துமாக்களை பற்றியதே. தண்ணீரை திராட்சராமாக மாற்றியவர், கன்மலையிலிருந்து தண்ணீரை புறப்பட்டு வர செய்து ஜனங்களின் தாகத்தை தீர்த்தவர், இன்று தாகமாயிருக்கிறேன் என்றார். அவர் நினைத்திருந்தால், அவரிடம் கொடுக்கப்பட்ட தண்ணீரை அவருடைய வாய்க்கு உகந்ததாக, அவருடைய தாகத்தை தீர்ப்பதாக மாற்றியிருந்திருக்கலாம். ஆனால் அது சாத்தானின் தந்திரம் என்பதை உணர்ந்தவராக, தம் பிதாவின் சித்தத்திற்கு தம்மை அர்ப்பணித்தார்.

.

வார்த்தையின் வடிவானவர், வார்த்தை என்னும் நாமத்தை உடையவர், தம்மை குறித்து எழுதப்பட்டிருந்த அத்தனை தீர்க்கதரிசனங்களும் நிறைவேறபட்டிருப்பதை அறிந்திருந்தார். அப்பொழுது அவர் 'என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்' என்ற வாக்கியம் நிறைவேறாததை கண்டபோது, 'வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்'. அல்லேலூயா!

.

தாகமாயிருக்கிறேன் என்ற கிறிஸ்துவின் தாகம் இன்றளவும் தீரவில்லை. அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் அவரண்டை வந்து சேரும் வரை அவர் தாகம் தீராது. அவருடைய தாகத்தை தீர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா? Each one catch one என்று ஒவ்வொருவரும் மாதம் ஒருவரை அல்லது வருடம் ஒருவரை கர்த்தரிடம் வழிநடத்தினாலே கர்த்தரின் தாகத்தை நாம் ஓரளவு தீர்க்க முடியுமல்லவா?

.

கிறிஸ்து நம் அன்பின் மேல் தாகமாயிருக்கிறார். நம் மேல் கொண்ட அன்பினாலேதானே இத்தனை பாடுகள், கஷ்டங்கள் சகித்தார். அவர் நம்முடைய அன்பை எதிர்ப்பார்ப்பது ஒன்றும் தவறில்லையே! நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தி, அதற்காக தியாகம் செய்யும்போது, அவரிடமிருந்து அன்பு திரும்ப கிடைக்காவிட்டால் அதை நம்மால் தாங்க முடியாதல்லவா? அதுப் போலதான் கர்த்தரும் நம்மில் அன்பு செலுத்தி, இத்தனை தியாகங்கள் செய்திருக்க நாமும் அவரில் அன்பு செலுத்த கடனாளிகளாயிருக்கிறோம் அல்லவா?

.

நம் ஆத்தும தாகத்தை தீர்த்தாரே! என்றுமே தாகம் வராத ஜீவ தண்ணீரண்டை நம்மை வழிநடத்தினாரே! அப்படி நம் தாகத்தை தீர்த்தவரின் தாகத்தை நாம் தீர்க்க வேண்டுமே! அழிந்து போகும் ஆத்துமாக்களின் தாகத்தை தீர்ப்போம். வேதத்தில் அவரை கண்டு, அவரை நேசிப்போம். அவருடைய தாகத்தை தீர்ப்போம். ஆமென் அல்லேலூயா!

.

அழகுமில்லை சௌந்தரியமில்லை

அந்த கேடுற்றார் எந்தனை மீட்க

பல நிந்தைகள் சுமந்தாலுமே

பதினாயிரங்களில் சிறந்தவரே

.

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்

கொடுமை குருசை தெரிந்தெடுத்தாரே

மாயலோகத்தோடழியாது நான்

தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

.

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

சிறுமை அடைந்தே தொங்குறார்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்காய் அழகை இழந்து, சௌந்தரியம் இழந்து, தாகத்தால் தவித்து, பல நிந்தனைகளை சுமந்து, தமது ஜீவனையே கொடுத்த கிறிஸ்துவின் அன்பை நினைத்து துதிக்கிறோம். அவருடைய தாகத்தை தீர்க்கிறவர்களாக எங்களை மாற்றும். அழிந்து போகிற ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்து, அவர்களையும் கிறிஸ்துவிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.