Friends Tamil Chat

வெள்ளி, 31 ஜனவரி, 2014

31st Jan 2014 - உபத்திரவத்தின் மூலம் பாடம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜனவரி மாதம் 31-ம் தேதி - வெள்ளி கிழமை
உபத்திரவத்தின் மூலம் பாடம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். - (சங்கீதம் 119:71).

.

ஒருதேவனோடு நெருங்கி வாழ்நத ஒரு வியாபாரி தன் வியாபாரம் செழித்தவுடன் தேவன் விட்டு விலகி தூரமாய் சென்று விட்டார். சபையிலுள்ள மூத்தவர்கள் அவரை மீண்டும் தேவனண்டை வரும்படி புத்தி சொன்னார்கள். ஆனால் அவரோ தன் வியாபாரத்திலே முனைப்பாக இருந்துவிட்டார்.

.

ஒரு நாள் வியாபாரியின் மூன்று பிள்ளைகளில் மூன்றாவது மகனை ஒரு விஷப்பாம்பு கடித்ததால் அவன் மரணத்தருவாய்க்கு வந்தான். மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். இச்சூழ்நிலையில் இவர் மிகுந்த பாரத்தோடு சபை மூப்பர் ஒருவரை ஜெபிக்கும்படி அழைத்தார்.

.

வந்த மூப்பர் ஞானமுள்ள தேவ மனிதர், அவர் ஜெபிக்க தொடங்கி, 'தேவரீர் நீர் இந்த பிள்ளையை கடிக்கும்படி ஒரு பாம்பை அனுப்பினதற்காக நன்றி செலுத்துகிறேன். நாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாய் இந்த குடும்பம் உம்மைத் தேடும்படி எடுத்துக் கொண்ட எந்த முயற்சியும் பலனளிகக்வில்லை. ஆனால் எங்களால் முடியாததை இந்த பாம்பு நொடிப்பொழுதில் செய்து முடித்து விட்டதே! இப்போதும் இவர்கள் தங்கள் பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள். இயேசுவின் நாமத்தில் தயவு கூர்ந்து இந்த பிள்ளையை சுகமாக்கும், இனியும் இவர்கள் உம்மை நினைவுகூர்வதற்கு எந்த ஒரு பாம்பும் வரும் நிலை ஏற்படாதிருக்க அருள் செய்யும்' என்று ஜெபித்து முடித்தார். சற்று நேரத்திற்குள் பிள்ளையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, தேவன் அற்புத சுகத்தை கொடுத்தார்.

.

பொதுவாகவே மனித இயல்பு அப்படியாயிருக்கிறது. இப்பூமிக்குரிய வாழ்வு எந்த துன்பம் இல்லாமலும், தரித்திரம் இல்லாமலும், நோய் இல்லாமலும் சொகுசான வாழ்க்கை இருக்குமென்றால் தேவனைக் குறித்த சிந்தை கிட்டத்தட்ட ஒருவருக்குமே ஏற்படாது. இதன் நிமித்தமே தேவன் இவ்வுலகத்தில் பாதுகாப்பற்ற வாழ்வையும், துன்பங்களையும் உபயோகித்து, தேவையான நேரத்தில் நாம் அவரிடம் திரும்பவும், அவரை தேடவும் வைக்கிறார். காரணம் நம் சரீரத்தை விட ஆத்துமா மேன்மையானதல்லவா? இப்படித்தான் தீமைகளை நம் ஆத்துமாவிற்கு நன்மையாக மாற்றுகிறார்.

.

பிரியமானவர்களே, நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளும், வியாதிகளும், பாடுகளும் நம் அன்பின் தேவனால் அனுமதிக்கப்பட்டதே! தேவன் நம்மீது கொண்ட அன்பின் சின்னமாகவே இவைகள் இருக்கின்றன. அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடியும் கூட கீழே விழுவதில்லை. ஆம், தீமைகளை தேவன் உபயோகித்து, அதன் மூலம் நம்மை பாவங்களிலிருந்தும், பின்மாற்றத்திலிருந்தும் திரும்பும்படி செய்கிறார். இதன் மூலம் பரலோகத்திலுள்ள நம் நித்திய வீட்டை கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார். ஆமென் அல்லேலூயா!

.

சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே

வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே

பெலன் தரும் தேவன் இருக்கிறார்

கிருபையால் உன்னை நிரப்பிடுவார்

.

காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை

மாந்தர்கள் மறந்திடலாம் இயேசு மறப்பதில்லை

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீர் எங்கள் நன்மைக்காவே தீமைகளையும், பாடுகளையும், துன்பங்களையும் அனுமதிக்கிறீர் என்று உணர்ந்து, உம்மை இன்னும் அதிகமாய் தேடவும், எங்களுடைய தீய வழிகளிலிருந்து நாங்கள் திருந்தி, உம்மிடம் நெருங்கி ஜீவிக்கவும் கிருபை செய்யும். பரலோக இராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another


எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதைத் தருவதாக வாக்களித்தவரே, உம்மிடத்தில் எங்கள் விண்ணப்பங்களை வைக்கிறோம் தகப்பனே,

.
சகோதரன் சுகுமாரன் இரட்சிக்கப்படவும், அதன் மூலம் அவருடைய முழுக்குடும்பமும் இரட்சிக்கப்படவும் ஜெபிக்கிறோம். கர்த்தரை அறிகிற அறிவில் அவர் வளரவும், வேதத்தை வாசித்து, கர்த்தரைப் பற்றிக் கொள்ளவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் ஜான்சன் அன்டனி அவர்களுக்கு நிரந்தரமான, அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு வேலையைக் கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவருடைய இருதய வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் சௌந்தரராஜ் அவர்களின் சரீரத்தில் இருக்கிற பிரச்சனைகள் மாறவும், அவருடைய லோன் பிரச்சனைகள் மாறவும், அவருடைய ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்கவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் பிராங்க்ளின் தேசாய் அவர்களின் மகன் டாக்டர் ஜெபா அவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 3 தேதி எழுத இருக்கிற யுனிவர்சிட்டி பரிட்சையில் நல்லபடியாக எழுதி முடிக்கவும், நல்ல மதிப்பெண்களோடு வெளிவரவும் தேவன் கிருபை செய்வீராக. வெளிநாட்டில் இருக்கிற அவருடைய மற்ற நான்கு பிள்ளைகளுக்கும் நல்ல வேலைகள் கிடைக்கவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் இம்மானுவேல் ஏஞ்சலோ அவர்கள் சென்னையில் புரோகிரமராக வேலைக்கு சேர்ந்து செய்து கொண்டிருந்தாலும், அவருடைய படிப்பு பி.காம் ஆக இருப்பதால், தன்னுடைய வேலையை சரியாக செய்ய முடியவில்லை என்றும், அதிக நேரம் எடுத்தாலும், சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் அவதிப்படுவதால், அவருடைய படிப்பிற்கேற்ற வேலையை அந்த கம்பெனியிலேயே கிடைக்கவும் தேவன் கிருபை பாராட்டும்படியாக ஜெபிக்கிறோம். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே, தயவாய் அவருடைய வாஞ்சையை நிறைவேற்றுவீராக.
.
சகோதரன் அனுதீப்குமார் அவர்களின் சகோதரியின் மகள் ஹரிணிக்கு மூன்றறை வருடங்கள் ஆகியும், உட்காரவோ, எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாதபடி இருக்கிறபடியால், தேவன் அந்த குழந்தைக்கு ஒரு அற்புதத்தை செய்வீராக. நாங்கள் இந்துக்கள், ஆனால் கர்த்தர் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார் என்று விசுவாசிக்கிறோம் என்று அவர்கள் எழுதியிருக்கிறபடியால், அவர்களுடைய விசுவாசத்தை கனப்படுத்தி, தேவன் ஒரு அற்புதத்தை அந்த குழந்தைக்கு செய்யும்படியாக ஒருமனமாக ஜெபிக்கிறோம் தகப்பனே, நீரே அற்புதங்களை செய்கிறவர் என்பதையும், இன்றும் ஜீவிக்கிறவர் என்பதையும் அந்த குடும்பம் அறியும்படியாக தேவன் பெரிய காரியத்தை செய்வீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 30 ஜனவரி, 2014

30th Jan 2014 - நீதிமானின் சந்ததி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜனவரி மாதம் 30-ம் தேதி – வியாழக்கிழமை
நீதிமானின் சந்ததி
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். - நீதிமொழிகள். 22:6.

.
பிரசித்திப் பெற்ற ஊழியக்காரனான ஆஸ்வால்ட் ஸான்டர்ஸ் (J.Oswald Sanders) தாம் எழுதிய A spiritual Clinic என்னும் தமது புத்தகத்தில் நியூயார்க் நகரத்தில் இருந்த இரண்டு குடும்பங்களின் தலைமுறைகளின் வரலாற்றை ஒப்பிட்டு பார்த்து, அவர் ஒரு விசேஷித்த காரியத்தை கீழ்கண்டவாறு கண்டறிந்தார்.

.

முதலாவது குடும்பம் மேக்ஸ் ஜூக்ஸ் (Max Jukes)..அவர் கடவுள் பக்தியில்லாதவராக, துன்மார்க்க ஜீவியம் செய்தவராக இருந்தார். அவர் மணந்த பெண்ணும் ஒரு கொள்கையில்லாதவளாய் கடவுள் பயம் இல்லாதவளாக இருந்தாள். அவர்களுடைய தலைமுறைகளில் வந்தவர்களில் 1200 பேரை வைத்து கணக்கெடுக்கப்பட்டது. அதில் 310 பேர் மிகவும் ஏழ்மையான நிலையில் ஒரு வீடும் வேலையும் இல்லாமல் கஷ்டமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 440 பேர் தங்களது ஒழுக்கமில்லாத வாழ்க்கையினால் தங்கள் சரீரங்களில் வியாதிகளை வரவழைத்துக் கொண்டார்கள். ஒருவருக்கு 13 வருடம் வீதம் 130 பேர் தங்களது துஷ்ட நடவடிக்கைளினால் சிறைக்கு அனுப்பபட்டார்கள். 100 பேர் குடியர்களாகவும், 60 பேர் திருடர்களாகவும், 190 பேர் விபச்சாரிகளாகவும் இருந்தனர். இவர்களது இந்த நிலையினால் அரசாங்கத்துக்கு 1,500,000 டாலர்கள் வீண் செலவு விரயமானது.

.

அடுத்த குடும்பம் ஜோனத்தான் எட்வர்ட் (Jonathan Edward) குடும்பம். அவர் தேவனுடைய மனிதனாக கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தவர். அவர் மணந்த பெண்ணும் கர்த்தருக்கு பயந்தவர்கள், ஊழிய அழைப்பு பெற்றவர்கள். அவர் குடும்பத்தில் வந்த தலைமுறையில் 300 பேர் போதகர்களாகவும், மிஷனெரிகளாகவும், வேதாகம கல்லூரியில் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். 100 பேர் பேராசியர்களாகவும், 100 பேர் சிறந்த வக்கீல்களாகவும், 30 பேர் நீதிபதிகளாகவும், 60 பேர் வைத்தியர்களாகவும், 14 பேர் கல்லூரிகளில் துணை முதல்வர்களாகவும் ஒருவர் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதியாகவும் இருந்தனர். அநேகர் அவரது குடுமபத்திலிருந்து நல்ல செல்வாக்கு மிக்கவர்களாகவும், நாட்டில் உயர்ந்த நிலைகளில் இருந்ததாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது. அவர்களது குடும்பத்தினால் அரசாங்கத்திறகு மிகுந்த வரவு வந்ததென்று குறிப்புகள் கூறுகின்றன.

.

நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள் - (நீதிமொழிகள் 20:7). நீங்கள் நீதிமானாயிருந்தால் உங்களுக்கு பின்வரும் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கும். இது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்துள்ளது. நீங்கள் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால் 128 ஆம் சங்கீதத்தில் கூறப்பட்டுள்ள அத்தனை ஆசீர்வாதங்களும் உங்களையும் உங்கள் சந்ததியையும் சாரும் . துன்மார்க்கனுடைய சந்ததி துனமார்க்கமாக இருக்கும் என்பதற்கு மேலே கூறப்பட்ட உதாரணமே சாட்சி. நம்முடைய வாழ்வும், நாம் பின்வைத்து போகும் நமது அடிச்சுவடிகளும் நம்முடைய சந்ததிக்கு ஆசீர்வாதமா அல்லது சாபமா என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கையே உறுதிப்படுத்தும். ஆகவே கர்த்தருக்கென்று வாழ்வோம், விசுவாசமுள்ள சந்ததியை இந்த உலகததிற்கு கொடுப்போம். நாமும் நம் குடும்பமும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.

.

நானும் என் வீட்டாருமோவென்றால்

கர்த்தரையே சேவிப்போம்

நீயும் சேவிப்பாயா?

நீயும் சேவிப்பாயா?


ஜெபம்

எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல பிதாவே, எங்களது வருங்கால சந்ததி கர்த்தருக்கு பிரயோஜனமாகவும், உலகிற்கு ஆசீர்வாதமாகவும், சபைக்கும் சமுதாயத்திற்கும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கும்படியாக எங்களது வாழ்க்கை நல்ல ஒரு உதாரணமாக இருக்க கிருபைச் செய்யும். எங்களது சந்ததியில் யாரும் கெட்டவர்களாகவோ தீமை செய்கிறவர்களாகவோ இல்லாதபடி நீர் விரும்பும் குடும்பங்களாக எங்கள் குடும்பங்களை மாற்றும். எங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கு பயப்படும் பயத்தில் வளர்க்க பெற்றோராகிய எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another


எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்கள் ஜெபத்தை கேட்கிறவரே, பதில் தருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். இப்போதும் எங்களுடைய விண்ணப்பத்தை கேட்டு பதில் தருவீராக.
.
சகோதரன் முத்து அவர்களின் உறவினருக்கு கல்யாண வயது தாண்டியும், இன்னும் திருமணமாகாமல் இருப்பதால், தேவன் தாமே அவருக்கு ஏற்ற துணையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவருக்கு துணை அமைவதினால், அவர்களுடைய முழுக்குடும்பமும் இரட்சிக்கப்பட ஒரு சாட்சியாக அமையும்படியாக தேவன் ஒரு அற்புதத்ததை அந்த குடும்பத்தில் செய்யும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரி சாலம்மாள் அவர்களுடைய கணவருக்கு ஏற்ற ஒரு வேலையை தந்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறபடியால், ஏற்ற நேரத்தில் அவர்களுடைய மனவிருப்பத்தின்படி ஒரு ஆரோக்கியமான குழந்தையை கொடுத்து ஆசீர்வதிக்கவும், அவர்களுடைய மற்ற இரண்டு பிள்ளைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிக்கிறோம். குடும்பத்தில் சகோதரி மட்டும் சம்பாதிக்கிறவர்களாக இருக்கிறபடியால், சீக்கிரமாய் அவர்களுடைய கணவருக்கு ஒரு வேலை கிடைத்து, குடும்பமாய் உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.
.
சகோதரி லின்சி அவர்களுடைய வாழ்வில் அவர்கள் சந்திக்கிற ஏமாற்றங்களையும், சோதனைகளையும், மன வருத்தங்களையும் தேவன் காண்கிறதற்காக ஸ்தோத்திரம். அவர்களுக்கு அவைகளை தாங்கிக் கொள்கிற சக்தியையும் பெலனையும் பரத்திலிருந்து தேவன் கட்டளையிடுவீராக. அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து, உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும். எல்லா பிரச்சனைகளையும் மாற்றிப் போடுவீராக.
.
சகோதரன் ராபின்சன் அவர்களின் மகன் கடந்த இரண்டு வருடங்களாக மெடிக்கலுக்கு முயற்சித்து கிடைக்காததால், இந்த 2014 ம் வருடத்தில் தேவ கிருபை கிடைத்து, அவருக்கு ஒரு சீட் கிடைக்கும்படி கிருபை செய்வீராக. வாலிப வயதில் உம்மை நேசிக்கவும், உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழவும் தேவன் கிருபை செய்வீராக.
.
சகோதரன் கோவிந்தராஜ் அவர்களின் அண்ணன் மனைவி அழகம்மாளுக்கு இரண்டு சீறுநீரகங்களும் கெட்டுப் போய் விட்டதாக டாக்டர்கள் சொல்லியிருப்பதால், தேவன் தாமே அவர்களை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய அண்ணன் கூலி வேலை செய்பவர்கள் என்று எழுதியிருக்கிறாரே, இந்த வியாதிக்கு எப்படி செலவு செய்ய முடியும் தகப்பனே, தேவன் தாமே அவர்களது கண்ணீரின் விண்ணப்பத்திற்கு செவி சாய்த்து, அந்த சகோதரிக்கு பரிபூரண விடுதiலையை கட்டளையிடும்படியாக ஜெபிக்கிறோம். அதன் மூலம் முழுக்குடும்பமும் உம்மை அறிந்துக் கொள்ளவும், உமக்காக வாழவும் கிருபை செய்யும்.
எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 29 ஜனவரி, 2014

29th Jan 2014 - மண்பாண்டங்களில் தேவ பொக்கிஷம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜனவரி மாதம் 29-ம் தேதி – புதன் கிழமை
மண்பாண்டங்களில் தேவ பொக்கிஷம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். - (2 கொரிந்தியர் 4:7).

.
என் நண்பருடைய வீட்டிலே சிறந்த ஓவியர் ஒருவரால் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு ஒன்றை பார்த்தேன். அது தெருவிலே விற்கப்பட்ட சாதாரண மண்பானையால் ஆனது. ஆனால் அந்த ஓவியர் தன் கலைத்திறனால் அதன் மீது மரங்களும், தாவரங்களும், பழங்களும், பூக்களும் நிறைந்த ஒரு சோலைவனம் ஒன்றை வரைந்திருந்தார். அதை அவர் வீட்டிற்கு வருகிறவர்கள் கண்டு ரசிக்கும்படியான ஓரிடத்தில் வைத்திருந்தார். அதை காண்கிறவர்கள் அனைவரும் அது எங்கு, என்ன விலை கொடுத்து வாங்கப்பட்டது? எனறு கேட்டனர். அது மிகவும் அற்பமான ஒரு மண்பாண்டத்தை மூலப்பொளூக கொண்டு செய்யப்படடது என்பதை அறிந்ததும் மிகவும் வியப்படைந்தனர். அதன் மதிப்பு வெறும் பதினைந்து ரூபாய் தான். ஆனால் அதன் உண்மை மதிப்பை பணத்தினால் அளவிட முடியாது.

.

நாமும் கூட அற்பமான களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள்தான். ஆனால் தேவக்குமாரனுடைய இரத்தத்தாலே கிருபையாக மீட்கப்பட்ட வேளையில் தானே மிகவும் ஒப்பற்ற ஓவியராகிய தேவனின் கரங்களில் கொடுக்கப்படுகிறோம். நாம் அறியாத முறையில் நமது புத்திக்கெட்டாத வகையில் தேவன் அவற்றின் மீது விநோதமான அற்புத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அது ஒரு ஆவிக்குரிய ஓவியமாகும். இவ்வுலக மக்கள் நம்முடைய இலட்சணமில்லாத தோற்றத்தையும், கறுப்பு நிறத்தையும், சப்பை மூக்கையும் வேறு பல குறைபாடுகளையும் கண்டு அருவருக்கலாம். ஆனால் தேவன் அவ்விதமாக பார்ப்பதில்லை. இராப்பகலாக இடைவிடாது தமது சித்தத்தையும், விருப்பத்தையும் நம்மில் நிறைவேற்றி கொண்டே இருக்கிறார். வெகு சீக்கிரத்தில் அதை செய்து முடித்தவராக தம் தூதர்களுக்கும் சகல சிருஷ்டிகளுக்கும் காண்பிப்பார். 'தூதர்களே பாருங்கள், நான் உருவாக்கிய பவுல் என்னும் இந்த பாத்திரத்தையும், பேதுரு, யாக்கோபு, யோவான் என்று அந்த பாத்திரங்களையும் உற்று பாருங்கள்' என்பார். அவர்களோ, வியப்புடன், 'இவர்களை அத்தனை அழகுள்ளவர்களாக, பூரணர்களாக எவ்வாறு சிருஷ்டித்தீர்! அவர்களை நாங்கள் உலகில் பார்த்திருக்கிறோமே, அப்போது அவர்கள் அழகற்றவர்களாக, குறைவுள்ளவர்களாகத்தானே இருந்தனர். மக்களும் இவர்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லையே' என்று கூறுவார்கள். இது கற்பனையல்ல, கதையுமல்ல, வேதாகமம் கூறும் உண்மை! இந்த அருமையான சத்தியத்தை காலஞ்சென்ற பரிசுத்தவான் சகோ பகத்சிங் அவர்கள் கூறியதாகும்.

.

ஒன்றுக்கும் தகுதியில்லாத நம்மை தேவன் எவ்வாறு விண்ணோரும் மண்ணோரும் போற்றும் மகிமையான கிரீடமாக மாற்றுவார்? இந்த உலக வாழ்விலே நம்மை முழுவதும் தேவ கரத்தில் அர்ப்பணிக்கும்போது மாத்திரமே! 'ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்'. - (2 தீமோத்தேயு 2:21) என்று வேதம் கூறுகிறது. எஜமானால் பயன்படுத்தப்படும் பாத்திரமாக நாம் மாற வேண்டுமானால், நம்மை கிறிஸ்துவினுடைய இரத்தத்தால் சுத்திகரித்து கொள்ளும்போது மாத்திரமே, நாம் அவருக்கு பிரயோஜனமான பாத்திரமாக மாற முடியும். குயவனாகிய அவருடைய கரத்தில் களிமண்ணான நம்மை ஒப்படைக்கும்போது, அவர் நம்மை அவருக்கு உகந்த பாத்திரமாக மாற்றுவார்.

.

கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மேற்கண்ட வசனத்தின்படி தங்களை குயவனாகிய தேவனிடத்தில் களிமண்ணாக படைத்து, அவருடைய சித்தத்திற்கு தங்களை வனையும்படி ஒப்புக்கொடுத்ததினால் மாத்திரமே அவரால் பயன்படுத்தப்பட முடிந்தது. அப்படிப்பட்ட பாத்திரமாக நம் ஒவ்வொருவரையும் தேவனே வனைந்து, எஜமானாகிய அவருக்கு பிரயோஜனமுள்ள பாத்திரங்களாக நம்மை மாற்றுவாராக! ஆமென் அல்லேலூயா!

.

குயவனே குயவனே படைப்பின் காரணனே

களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே

நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செய்யுமே

வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவை போற்றிடுதே

என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களை படைத்திட்ட குயவனே, எஜமானாகிய உம்முடைய கரத்தில் எங்களை படைக்கிறோம் தகப்பனே. உமக்கு உகந்த பாத்திரங்களாக எங்களை மாற்றுமே. வேதத்தில் நீர் வல்லமையாக பயன்படுத்தின பாத்திரங்களை போல எங்களையும் இந்த கடைசி நாட்களிலே வல்லமையாக, தேவன் விரும்புகிறபடி பயன்படுத்துமே! எங்களை அர்ப்பணிக்கிறோம், ஏற்று கொள்ளும், வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another


எங்கள் அன்பின் பரம தகப்பனே, ஜெபத்தை கேட்கிறவரே, பதில் கொடுப்பவரே உமக்கே எல்லா மகிமையையும் செலுத்துகிறோம். எங்கள் விண்ணப்பங்களை உம்முடைய சமுகத்தில் வைக்கிறோம். தயவாய் செவி சாய்த்து பதில் கொடுப்பீராக.
.
சகோதரி ஜெபஸ்டி கெத்சியாளுக்காக ஜெபிக்கிறோம். அவர்கள் சமீபத்தில் TNEB பரிட்சையில் நல்ல வெற்றியைக் காண கிருபை செய்யும். உம்முடைய சித்தம் மகளுடைய வாழ்வில் நிறைவேறவும், ஒரு ஏற்ற துணையை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஜெபிக்கிறோம். அவர்களது இருதய வாஞ்சைகளை நிறைவேற்றுவீராக.
.
ஒரு சகோதரன் திருமணமாகி ஒரு வருடம் ஆகி, மெடிக்கல் செக்கப் செய்தபோது, குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று கூறினபடியால் மிகவும் துயரத்திலும், உலகமே இருண்டது போலவும் இருக்கிற அந்த சகோதரனுடைய வாழ்வில் பெரிய அதிசயத்தை செய்வீராக. உம்மால் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? தகப்பனே நூறு வயதில் ஆபிரகாமுக்கு குழந்தையை கொடுக்க உம்மால் கூடுமென்றால், இந்த சகோதரனுக்கும் அதிசயம் செய்ய உம்மால் கூடுமே, தயவாய் இரங்கி இந்த குடும்பத்திற்கு நன்மையை செய்வீராக
.
ஒரு சகோதரி அவர்களுக்கு திருமணக்காரியத்தில் உம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தி, தேவ சித்தத்தின்படியும், திட்டத்தின்படியும் நடைபெற ஜெபிக்கிறோம். அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் அவர்கள் இருக்கும் நாட்டின் பிரஜையாக மாற கிருபை செய்வீராக.
.
சகோதரி மீனவாணி அவர்களின் சித்தி சர்க்கரை வியாதியினால் கஷ்டப்பட்டு, காலில் ஒரு விரலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டும், தற்போது காலில் மற்ற மூன்று விரல்களையும் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வதால், அந்த சகோதரிக்கு சுகத்தை கொடுக்குமாறு ஜெபிக்கிறோம். ஒரு அற்புதத்தை செய்வதால் அந்த குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்படுவதற்கு ஒரு அடித்தளமாக ஒரு பெரிய அதிசயத்தை அந்த சகோதரியின் வாழ்வில் செய்வீராக.
.
சகோதரன் ஜான் பிளஸ்வின் அவர்களின் ஆவிக்குரிய வாழ்விற்காக உம்மிடத்தில் ஜெபிக்கிறோம் தகப்பனே, அவர் எப்போதும் உம்மையே பற்றிக் கொண்டிருக்கவும், தன்னுடைய வாலிப வயதில் உம்மை நேசிக்கவும், நீர் செய்த நன்மைகளை மறவாமல் உமக்கென்று சாட்சியாக வாழவும் கிருபை செய்யும். அவர் அனுப்பியிருக்கிற பிராஜக்ட் வேலைகளை ஜர்னல்கள் ஏற்றுக் கொள்ள கிருபை செய்யும்.
எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

28th Jan 2014 - நிறைவான வளர்ச்சி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜனவரி மாதம் 28-ம் தேதி - செவ்வாய் கிழமை
நிறைவான வளர்ச்சி
ஜெபக்குறிப்பு நாளை வெளிவரும்.

கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்.. - எபேசியர் 4:11.

.
கிறிஸ்துவுக்குள் பிறந்த நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டுமெனறு தேவன் எதிர்ப்பாக்கிறார். சிலர் எத்தனையோ வருடங்களாக இரட்சிக்கப்பட்டிருந்தும் இன்னும் ஆவிக்குரிய வாழ்வில் குழந்தைகளைப் போலவே இருக்கிறார்கள். கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியில் பூரண புருஷராக வேண்டும் என்றும் தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். அப்படியென்றால் நாம் எதில் வளர வேண்டும்? ஆவிக்குரிய வாழ்வில், வேத சத்தியத்தில், நற்செயல்களில், தேவனோடுள்ள ஐக்கியத்தில், ஆழமான ஜெப ஜீவியத்தில்... என சொல்லிக் கொண்டே போகலாம்.
.
இப்படி படிப்படியாக வளர்ந்து ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ளவர்களாக நாம் மாற வேண்டுமெனறு தேவன் விரும்புகிறார். ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளம் என்ன? அதை எப்படி கண்டுக் கொள்ளக்கூடும்? என கேட்போமானால், 'குறைக்குடம், கூத்தாடும், நிறைகுடம் நீர்த்தழும்பாது' என்ற பழமொழிக்கேற்ப ஆவிக்குரிய வாழ்வில் வளராதவர்களிடத்தில் குறைக்குடத்தைப் போல சிறு சிறு காரியங்களிலும் மனத்தாங்கல் அடைந்து, அவர்கள் என்னை மதிக்கவில்லை, என்னிடம் பேசவில்லை, என்னை விசாரிக்கவில்லை, கிறிஸ்தவனாகிய எனக்கு ஏன்பாடு, எனக்கெதற்கு உபத்திரவம் என சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அங்கலாய்ப்பின் சத்தத்தை எப்போதும் அவர்களிடம் கேட்க முடியும். ஆனால் ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்தவர்களோ, தேவ அன்பினால் நிரப்பப்பட்டவர்களாக நிறைக்குடத்தைப் போல நீர்த்தழும்பாமல் நிதானமாய் இருப்பர்.
.
ஒரு சில காரியத்தை சிந்தித்து, நம்முடைய நிலை எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்துப் பார்ப்போமா? பிறருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாயிருக்க வேண்டும். எந்த தாழ்ந்த நிலையிலும் ஊழியம் செய்ய முன்வருபவர்களாக இருக்க வேண்டும்;. அதாவது தன்னுடைய நிலையை விட்டு, எல்லாருக்கும் கடையனாக அனைவரது கால்களையும் கழுவுமளவிற்கு பணிபுரியும் சிந்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். வேதத்திலே யோனத்தான், சவுல் இராஜாவின் சொந்த மகனாய் இருந்தாலும், தான் சிநேகித்த தாவீதிடம், 'நீர் இஸ்ரவேலின் மேல் இராஜாவாயிருப்பீர், அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்' (1 சாமுவேல்23:17) என்றாரே! இவர் நமக்கு மாதிரியல்லவா?
.
மற்றவர்கள் எல்லாரையும் தன்னை விட மேலானவர்களாக எண்ண வேண்டும். படிக்காதவர்கள், ஏழைகள், இரட்சிக்கப்படாதவர்கள், அப்படி யாராயிருந்தாலும் அவர்களை தன்னை விட மேன்மையாய் எண்ணி, முழு கனத்தையும் அவர்களுக்கு கொடுத்து, அவர்களோடு நட்பு பாராட்டுபவர்களாக இருக்க வேண்டும். 'மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்' (பிலிப்பியர் 2:3)
.
கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ள வேண்டும். இவன் என்னை விட வயதில், படிப்பில், பதவியில், செல்வாக்கில் குறைந்தவன்தானே! ஆகவே முதலில் அவன் பேசட்டும், பின் நான் பேசுவேன் என்ற எண்ணம் கடுகளவும் கொண்டிராதவர்களாக இருக்க வேண்டும். காரணம் அப்படிப்பட்டவர்களுக்கு தங்களை குறித்த எந்த பெருமையான எண்ணமும் இராததால், எந்த வித தடையுமின்றி பிறரை கனம் பண்ண முந்திக் கொள்வார்கள். 'கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்' (ரோமர் 12:10)
.
நம்மிடம் இப்படிப்பட்ட முதிர்ச்சி உண்டா? அல்லது எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சிறிய காரியத்தையும் பெரிதாக எடுத்து, தன்னோடுள்ளவர்களையெல்லாம் புகார் செய்யும் குழந்தையைப் போல இருக்கிறோமா? நம்மையே ஆராய்ந்துப் பார்ப்போம்.

.
கர்த்தருக்குள் வளருவோம், ஆவிக்குரிய முதிர்ச்சி அடைவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!

.


தேவ ஆவியில் நிறைந்த மனிதரெல்லாம்

அக்கினியாய் எழும்பி ஜொலித்ததுப்போல்

என்னை மாற்றுமே என்னை மாற்றுமே

கலங்கரை விளக்காய் என்னை மாற்றுமே

.
தூய ஆவியே என்னை நிரப்பிடுமே

தேவ ஆவியே என்னை நடத்திடுமே

ஆவியில் நடக்கணுமே - தேவ

வார்த்தையில் நிலைக்கணுமே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சி அடைந்தவர்களாக எங்கள் ஒவ்வொருவரையும் மாற்றுவீராக. கர்த்தருக்குள் ஒவ்வொரு நாளும் நாங்கள் வேரூன்றி வளர ஆவியானவர் உதவி செய்வீராக. சிறு குழந்தைகளைப் போல சிறு காரியத்திற்கும் முறுமுறுக்கிறவர்களாக இல்லாமல், எங்களை வளருகிறவர்களாக மாற்றும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

ஜெபக்குறிப்பு நாளை வெளிவரும்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 27 ஜனவரி, 2014

27th January 2014 - அழியாத கிரியைகள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜனவரி மாதம் 27-ம் தேதி - திங்கட்கிழமை
அழியாத கிரியைகள்
..

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. - வெளிப்படுத்தின விசேஷம். 22:12.

.
ஒரு நாள் நான் பரலோகத்தில் இருப்பதைக் போல கனவு கண்டேன். அங்கு ஒரு தூதன் ஒரு நோட்டில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். நான் அவன் என்ன எழுதுகிறான் என்றுப் பார்க்க ஆவல் கொண்டேன். அவன் எழுதுகிறது எனக்கு ஆச்சரியமாக இல்லை, ஆனால் அவன் எழுத வைத்திருந்த நித்திய மை (Eternal Ink) என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த மை அந்த பாட்டிலில் இருக்கும்போது கறுப்பாக இருந்தது. ஆனால் எழுத ஆரம்பித்த போதோ தண்ணீரைப் போல நிறமே இல்லாமல் மாறினது. அந்த தூதன் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தான். அவன் எழுதின உடனே அந்த பேப்பரில் இருந்த எழுத்துக்கள் மறைந்து போனது. அந்த தூதன் அதில் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து பக்கம்பக்கமாக எழுதிக் கொண்டே இருந்தான். நான் நினைத்தேன், இந்த தூதன் இப்படி பக்கம் பக்கமாக எழுதி என்ன பயன்? ஓன்றுமே இந்த பக்கங்களிலே இல்லையே! அவன் திரும்ப அதை படிக்க முடியாதே என்று நினைத்தேன்.

.

எனது ஆச்சரியத்திற்கு, ஒரு பக்கத்தில் ஒருவரியின் எழுத்துக்கள் அப்படியே அழியாமல் நின்றன. அந்தத் தூதனை பார்த்தபோது அவன் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது. அந்த புத்தகம் முழுவதும் எழுதி முடிக்கும் தருவாயில் ஒரு சில பக்கங்களில் ஒரு சில எழுத்துக்கள் மட்டுமே அழியாமல் அப்படியே இருந்தன. மற்றவை எல்லாம் அழிந்துப் போயின. அப்படி என்னதான் அந்த தூதன் எழுதினான், ஏன் அவனுடைய எழுத்துக்கள் அழிந்து போயின என்பதன் இரகசியத்தை அறிய மிகுந்த ஆவல் கொண்டேன். கடைசியாக அந்தத் தூதனிடமே கேட்டு விடுவது என்று தீர்மானித்து அவனிடம் கேட்டேன். அதற்கு அந்த தூதன் சொன்ன பதில் என்னை திடுக்கிட வைத்தது.

.

அந்த தூதன் என்னைப் பார்த்துச் சொன்னான்: 'நான் என்ன எழுதுகிறேன் என்று உனக்கு ஆச்சரியமாக இருக்கும்!' சர்வ வல்ல தேவன் உலகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை குறித்து எழுதச் சொன்னார். இதில் நான் எழுதுகிற ஒவ்வொன்றும் சரியாக அவர்கள் என்னப் பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை மிகவும் சரியாக எழுதியிருக்கிறேன். நீ என்னிடத்தில் கேட்பதால் நான் இப்போது எழுதிக் கொண்டிருந்தது உன்னுடைய வாழ்க்கையைதான். ஆண்டவர் என்னை உன்னுடைய முழு வாழ்க்கையைக் குறித்தும் எழுதச் சொன்னார். நான் நீ வேலை செய்தபோது பார்த்தேன், நீ ஆலயத்திற்கு போனதைப் பார்த்தேன், நீ ஜெபித்த போது பார்த்தேன், உன்னுடைய கோபங்கள், உன்னுடைய பாவங்கள் உன்னுடைய நன்மையான காரியங்கள், தீமையான காரியங்கள் எல்லம் எழுதப்பட்டன. இப்போது இந்த நித்திய மையைக் குறித்து சொல்கிறேன். நான் எழுதிய இந்த மையில், எந்த காரியங்கள், நீ செய்தவற்றில் நிலையானதோ அது மாத்திரம் நிலைத்திருக்கும், மற்றவை எல்லாம் அழிக்கப்பட்டுப் போகும்.

.

உன்னுடைய வாழ்க்கையில் அநேக காலங்கள் அழிக்கப்பட்டு வீணாய் போயிற்று. நான் கர்த்தருக்கு உண்மையாக உன் வாழ்வில் நடந்த எல்லாக் கரியங்களையும் எழுதுகிறேன். இந்த மை எது நித்தியமானதோ அதை மாத்திரம் வைத்துவிட்டு, மற்றதை அழித்து விடும். ஒரு நாள் இந்த புத்தகங்கள் திறக்கப்படும். இந்த நித்திய மையானது, நீ உலகத்தில் செய்த நல்ல காரியங்களை மாத்திரம் வெளிப்படுத்தும். நீ உன் இன்பத்திற்கும் உனக்காகவும் மாத்திரம் வாழ்ந்திருந்தால் அந்த புத்தகத்தின் பக்கங்கள் வெறுமையாக இருக்கும். உண்மையில் சொல்லப் போனால் அந்நாளில் நீ வெட்கத்தினால், முகம் கவிழ்க்கப்பட்டுப் போவாய் கர்த்தருக்கு என்று ஒரு காரியத்தையும் செய்யாமல் போனோமே என்று. நீ பரலோகத்தில் நுழையும் போது இன்னும் அதிகமாக கர்த்தருக்கென்று உழைத்திருக்கலாமே என்று அப்போது நினைத்து, துயரப்படுவாய். உன்னுடைய வாழ்க்கை முழுவதும் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தாலும் நீ கர்த்தருக்கென்று என்ன செய்தாயோ அது மாத்திரம் நிலைத்திருக்கும் என்று அந்தத் தூதன் சொன்னபோது நான் கீழே விழுந்து கண்ணீர் விட்டு அழுதேன். நல்ல வேளை நான் இன்னும் மரிக்கவில்லை, கனவில் தான் இருந்தேன்.

.

நான் அந்தத் தூதனிடம், 'நீர் போய் கர்த்தரிடம் சொல்லும், நான் எழுந்தரிக்கும்போது நான் என்னை முற்றிலுமாக கர்த்தரிடம் ஒப்புவித்து அவருக்காக நான் வாழ்வேன். நான் பாவ வழியில் இருந்து விலகி பரிசுத்தமாக வாழ்ந்து, என்னால் இயன்ற வரை ஆத்துமாக்களை கர்த்தரிடம் கொண்டு வருவேன். இந்த அழிந்துப் போகிற உலகத்தையே நோக்கமாக கொண்டு வாழாமல், இங்கு காணப்படும் சுகங்களையே நித்தியமாக எண்ணாமல், கர்த்தருக்கு உண்மையாக வாழ்வேன். என் புத்தகத்தை அந்நாளில் கர்த்தர் திறக்கும்போது அவை வெறும் பக்கங்களாக இல்லாமல், அவற்றை நிரப்பத்தக்கதாக என் வாழ்க்கையை நான் வாழ்வேன். நல்லது உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று கர்த்தர் என்னை அழைக்கும்படி நடந்துக் கொள்வேன்' என்று கர்த்தரிடம் சொல்லுங்கள்' என்றுக் கூறினேன். (The actual account of a dream) by Craig F. Pitts.

.

அன்பானவர்களே, நம்மில் எத்தனைப் பேர் நித்தியத்தைக் குறித்த நினைவே இல்லாமல், இந்த உலகத்திற்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்! ஜீவ புஸ்தகம் என்று உண்டு நாம் செய்தவை எல்லாம் எழுதப்பட்டிருக்கும் என்ற நினைவே இல்லாமல் பணத்தை சம்பாதிப்பதும் சொத்துக்களை சேர்ப்பதும், கர்த்தருடைய காரியங்ளை செய்வதற்கு வேறு யாரோ இருக்கிறார்கள், நான் எனக்காக, என் குடும்பத்திறகாக வாழ்நதால் போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா? தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். - (லூக்கா 12:20). பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுவோம் தேடுவோம். கர்த்தர் நம்முடைய புத்தகத்தை திறக்கும் அந்நாளில், வெறும் பக்கங்களாக இல்லாமல், அவைகள் முழுவதும் நிரம்பத்தக்கதாக கர்த்தருக்கென்று உழைப்போம் ஆமென் அல்லேலூயா!

.

ஜீவனுள்ள நாட்களெல்லம்

இயேசுவுக்காய் வாழ்வோம்

இருப்பதுவோ ஒரு வாழ்வு

அதை அவருக்கு கொடுத்திடுவோம்

.

ஜெபம்

எங்களை வழிநடத்துகிற எங்கள் நல்ல தெய்வமே, உம்மை நாங்கள் ஸ்தோததரிக்கிறோம். எங்களது வாழ்நாள் முழுவதும் ஒரு புல்லைப் போல கடந்து போகிறது ஆண்டவரே. அந்த வாழ்நாளில் நாங்கள் உமக்கென்று உண்மையாய உழைக்க, உமக்கென்று வாழ உதவி செய்யும். ஜீவ புஸ்தகத்தில் வெறும் பக்கங்களாக எங்கள் வாழ்நாட்கள் காணப்படாமல், அவைகளை நிரப்பத்தக்கதான வாழ்க்கையை நாங்கள் வாழ எங்களுக்கு கிருபை செய்யும். எங்களை எடுத்துப் பயன்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

சனி, 25 ஜனவரி, 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 26th January 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

உயிர் உண்டு, உடல் இல்லை

பாதை உண்டு, பள்ளம் இல்லை

மார்க்கம் உண்டு, மரணம் இல்லை

இவ்வழி சென்றால் எவ்வழியும்

தேவை இல்லை    -அது எவ்வழி?

 

விடை: நீதியின் பாதை. - நீதி 12:18.

====================================

குட்டைக்கும் நெட்டைக்கும் சண்டையாம்

சண்டையில் குட்டை ஜெயித்ததாம்

நெட்டைக்கு நெற்றிப்பட்டை கழந்ததாய்

ஜெயித்த குட்டையன் யார்?

தோற்ற நெட்டையன் யார்?

 

விடை: தாவீது – கோலியாத். 1 சாமு 17:38-50.


====================================

நன்றி: 'வேதாகம நண்பன்'

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 24 ஜனவரி, 2014

24th Jan 2014 - நாம் நினைப்பதற்கும் மேலானவர்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜனவரி மாதம் 24-ம் தேதி – வெள்ளிக்கிழமை
நாம் நினைப்பதற்கும் மேலானவர்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். - (எபேசியர் 3:20-21).

.
ஜான் ஜி வென்டல் என்னும் ஒருவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ஆறு சகோதரிகள் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர் மிகவும் வசதி படைத்தவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அதிகமான சொத்துக்களை விட்டு சென்றனர்.

.

இந்த ஜான் வென்டல் தன் சகோதரிகளில் ஐந்து பேரை அவர்களோடு பேசி, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்காமலேயே அவர்களும் அந்த சகோதரனும் ஒரே பழைய வீட்டில் ஐம்பது வருடங்கள் வசித்தனர். அவர்களை போல கஞ்சத்தனம் செய்தவர்கள் யாருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சரியான உணவில்லாமல், சரியான உடைகளை வாங்காமல், சரியான வீடு வசதிகளோடு வாழாமல், தங்கள் வாழ்க்கையை கழித்தனர். எவ்வளவு பணம் இருந்தும், அதை அப்படியே வைத்திருந்து, செலவழிக்காமல், மரித்தனர். அவர்களுடைய கடைசி சகோதரி 1931-ம் ஆண்டு மரித்தபோது, அவள் ஒரே ஒரு உடையை 25 வருடங்களாக அணிந்திருந்தாள் என்பது தெரிய வந்தது. அவளுடைய எஸ்டேட்டின் மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்கள் ஆகும். பணத்தை உடையவர்கள் அதின் மேல் ஆசை வைக்கும்போது, மற்றவர்களுக்கும் கொடுக்காமல், தாங்களும் அனுபவியாமல், மரிக்கும் சூழ்நிலை மிக கொடுமையானதாகும்.

.

கர்த்தருடைய வாக்குதத்தம் 'என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்' என்பதாகும். கர்த்தர் குறைகளை நீக்குகிற கர்த்தர்தான். எல்லாவற்றையும் நிறைவாய் தருகிறவர்தான். ஆனால் ஜான் வென்டல் போன்றவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை மதிக்காமல், கடைசி வரை கருமிகளாக வாழ்ந்து, யாருக்கும் பயனில்லாமல், அவர்களுக்கே அந்த ஐசுவரியமும், நிறைவான வாழ்க்கையும் பயனில்லாமல் போனது போல வாழ்ந்து மரிக்கிறவர்களும் இந்த உலகத்தில் உண்டு.

.

'வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்' - (சங்கீதம் 112:9) என்று வேத வசனம் கூறுகிறது. ஏழைகளுக்கு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கடனிலும், தேவையிலும் வாழ்கிற சொந்த சகோதர சகோதரிகளுக்குக்கூட கொடுக்காமல் வாழ்கிற எத்தனையோ பணக்காரர்கள் நமது குடும்பங்களிலும், சபைகளிலும் உண்டு. கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த செழிப்பினால் என்ன பயன்? ஏழைகளுக்கு கொடுக்கிறவனுடைய நீதி என்றென்றைக்கும் இருக்குமாம். அவனது கொம்பு மற்றவர்களுக்கு முன்பாக மற்றவர்கள் வியக்கும் வண்ணம், மகிமையாக உயர்த்தப்படுமாம். அதே சமயம் அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு - (நீதிமொழிகள் 11:24) என்று வேதம் கூறுகிறது.

.

நம் தேவன் கருமியல்ல, அவர் 'நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்' - (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது. அன்னாள் ஒரு பிள்ளையை தான் கேட்டாள், ஆனால் அவளுக்கு சாமுவேலையும் சேர்த்து, ஆறு பிள்ளைகளை தேவன் கொடுத்தார். சாலமோன் இராஜா ஞானத்தைதான் கேட்டார். ஆனால் தேவன் அவருக்கு அவர் கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் கொடுத்தார். இப்படி நம் தேவன் நாம் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் செய்ய வல்லவராயிருக்கிறபடியால், நாம் எதை குறித்தும் கலங்க தேவையில்லை.

.

நாம் அவருடைய பிள்ளைகளாயிருந்தால், நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிற தேவன், நாம் வேண்டி கொள்வதற்கும் நினைத்து பார்ப்பதற்கும் அதிகமாக கொடுத்து ஆசீர்வதிப்பார். நான் புதிதாக வேலையில் சேர்ந்தபோது, எனக்கு குறைந்த சம்பளமே இருந்தது. எங்கள் குடும்பத்தின் சம்பளம் குறைவாக இருந்தபோதிலும், தேவன் அதை ஆசீர்வதித்தபடியால், எந்த குறைவும் எந்த கடனும் வாங்காமலேயே வீடு கட்டி முடிக்க கிருபை செய்தார். பின் சம்பளம் சற்று உயர்ந்தது. அதிலும் தேவன் ஆசீர்வதித்தபடியால், எந்த குறையும் அவர் வைக்கவில்லை. இப்போது முதலில் வாங்கியதைவிட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அந்த குறைந்த சம்பளத்திலும் வாழ்ந்த வாழ்க்கையே இப்போதும் வாழ்ந்தாலும், கர்த்தருக்கென்று கொடுப்பதில் நாங்கள் குறைவுபட்டதே இல்லை. நாங்கள் கொடுக்க கொடுக்க தேவன் எங்களுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறார். நாங்கள் அவர் எங்களுக்கு திருப்பி தர வேண்டும் என்கிற எண்ணத்தோடு கொடுப்பதில்லை. அவர் மேல் வைத்திருக்கிற அன்பினால் நாங்கள் கொடுத்தாலும், தேவன் யாருக்கும் கடனாளி அல்ல, அவர் திருப்பி கொடுத்து கொண்டேதான் இருக்கிறார். அல்லேலூயா!

.

எனது நண்பர் அவர் செல்லும் சபை ஏதோ காரணத்தினால் பிரிந்த போது, அவர் உண்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கத்தில் சேர்ந்து, பின் சபை வளர்ச்சிக்காக தனக்கு இயன்றதை விட பல மடங்கு அதிகமாக கர்த்தருடைய ஊழிய விரிவாக்கத்திற்காக கொடுத்தார். அநேகர் அவரை தடுத்தனர். 'நீ கொடுக்கிற பணம் உனக்கு திரும்ப கிடைக்காது' என்று அவரை அதைரியப்படுத்தினர். ஆனால் அவரோ 'இல்லை, நான் கர்த்தருக்கென்று கொடுப்பதாக தீர்மானித்து விட்டேன். அந்த பணம் எனக்கு கிடைத்தாலும் பரவாயில்லை, கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் தீர்மானித்தது தீர்மானித்ததே' என்று சொல்லி, அந்த பணத்தை கொடுத்தார். இரண்டு பேரோடு ஆரம்பிக்கப்பட்ட அந்த சபை எண்ணி எட்டே மாதங்களில் 230 குடும்பங்கள் அந்த சபையில் சேரவும், அவருக்கு வரவேண்டிய பணம் எட்டே மாதங்களில் திரும்ப கிடைக்கப்படவும் தேவன் கிருபை செய்தார். கடந்த நான்கு வருடங்களாக அவருடைய கட்டி முடிக்கப்படாதிருந்த வீடு மூன்றே மாதங்களில் கட்டி முடிக்க தேவன் கிருபை செய்தார். அவர் தன்னுடைய வீடு கட்டுவதை நினைத்து கூட பார்க்கவில்லை, ஆனால் தேவன் அற்புதத்தை அவருடைய வாழ்வில் செய்தார்! கர்த்தரை நேசித்து நாம் அவருக்காக ஒரு அடி எடுத்து வைக்கும்போது, கர்த்தர் நமக்காக எத்தனை செய்கிறார் பாருங்கள்! நாம் நினைப்பதற்கும், கேட்பதற்கும் அதிகமாக செய்ய வல்லவர் நம் தேவன். தேவனது கிருபைகளை ருசித்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், அவருடைய மகத்துவமான அற்புதமான செய்கைகளை குறித்து! கர்த்தருக்கென்று கொடுப்போம், தசமபாகம் மாத்திரமல்ல, நம்மால் எவ்வளவு முடியுமோ அவற்றை உள்ளன்போடு கொடுப்போம், அவரது இனிமையான ஆசீர்வாதங்களை ருசிப்போம்! ஆமென் அல்லேலூயா!

.

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய்

கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை

அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தையை

ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்

மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார்

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாக எங்களுக்கு செய்ய வல்லவரே உமக்கே மகிமை செலுத்துகிறோம். எங்களால் இயன்றதை உமக்கு மனவிருப்பத்தோடு கொடுக்க கிருபை செய்யும். நீர் கொடுப்பீர் என்ற எண்ணத்தோடு கொடுக்காமல், நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதத்திலிருந்து உமக்கென்று கொடுக்க எங்களை உற்சாகப்படுத்தும். அதினால் உம்முடைய அளவற்ற ஆசீர்வாதத்தை ருசி பார்த்து உமக்கு நன்றி சொல்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீங்கள் கேட்பது எதுவோ அதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசித்தால் அது உங்களுக்கு நடக்கும் என்ற வசனத்தின்படி, நாங்கள் விசுவாசத்தோடு உம்மிடத்தில் எங்கள் விண்ணப்பங்களை வைக்கிறோம் தகப்பனே, தேவரீர் தயவாய் கேட்டு பதில் தருவீராக.

.

கஜாக்ஸ்தானிலுள்ள சகோதரன் அகஸ்டின் அவர்களின் மனைவி ரின்சி அவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டு, எந்த சத்தான உணவும் சாப்பிட முடியாமல், வெறும் திராவக உணவையே சாப்பிட்டும், அவ்வப்போது வயிற்றுவலியால் துடிப்பதாக எழுதியிருக்கிறார்களே, நாங்கள் ஒருமனப்பட்டு அந்த சகோதரிக்காக உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, அந்த சகோதரிக்கு ஒரு விடுதலையை இப்போதே கட்டளையிடுவீராக. அவர்களுக்கு வயிற்று வலியை கொண்டு வரும் எந்த சத்துருவின் அந்தகார சக்திகளின் கிரியைகள் இருந்தாலும் அவற்றை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அப்பாலே போ என்றுக் கட்டளை கொடுக்கிறோம். தேவன் அந்த மகளை விடுதலை செய்வதற்காக ஸ்தோத்திரம். இன்றுக்கண்ட எகிப்தியனை என்றுமே காணாதபடிக்கு அந்த சகோதரியின் வாழ்வில் பெரிய காரியத்தை செய்வதற்காக அப்பா உமக்கு ஸ்தோத்திரம்.

.

ஒரு சகோதரி தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டு விண்ணப்பத்தை அனுப்பியிருக்கிறார்களே, அவர்களுடைய குடும்பத்தில் கணவன் மூலமாக எந்த நாளும் பிரச்சனை என்றும், எத்தனை உபவாச ஜெபம் இருந்தும், இரட்சிக்கப்பட்டு பின்மாற்றமடைந்த அந்த கணவனால் ஒவ்வொரு நாளும் வேதனையும், கண்ணீரும் அனுபவிக்கிற அந்த சகோதரிக்காக உம்மிடம் மன்றாடுகிறோம் தகப்பனே, அந்த கணவரை சந்திப்பீராக. தன் மனைவியும் கொடுமைப்படுத்துகிறோம் என்கிற நினைவு அந்த கணவருக்கு வரும்படியாக ஜெபிக்கிறோம். அந்த கணவரை ஆட்கொண்டு, பொல்லாத காரியங்களை செய்ய வைக்கிற சத்துருவின் அந்தகார சக்திகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கடிந்து அப்புறப்படுத்துகிறோம். அந்த குடும்பத்தின் சமாதானத்தை கெடுக்கிற எல்லா பொல்லாத ஆவிகளின் கிரியைகளும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அகன்று போவதாக என்று கட்டளைக் கொடுக்கிறோம். சந்தோஷமாய் அவர்கள் குடும்பமாய் உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்.

.

சகோதரன் ஷெல்டன் அவர்களின் தாயார் திருமதி மோட்சம் மேரி அவர்கள் கடந்த 22ம் தேதி கர்த்தருக்குள் நித்திரை அடைந்திருக்கிறபடியால், அவர்களை இழந்து தவிக்கிற குடும்பத்திற்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்து காத்துக் கொள்ளும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரி கரோலின் அவர்களின் மகன் நிதின் கில்பர்ட் பத்தாவது படிக்கிறபடியால், அந்த மகனுடைய படிப்பை ஆசீர்வதித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்கல்விக்கு செல்லும்படியாக கிருபை செய்யும். உமக்கு பயப்படுகிற பயத்தையும், கர்த்தருக்காக வாழும் வாஞ்சையையும் இந்த நாட்களிலேயே கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.