ஆண்டவரின் ஆலயத்தை அழ்குப்படுத்தி பார்ப்பான் அடியேன் கேட்பதாய் அமைதியாய் சொல்லுவான் அனைவருக்கும் மாதிரியான அன்பான நண்பன் அவன் -அவன் யார்? விடை: சாமுவேல். 1 சாமு 3-10. ==================================== பாம்புகளின் தலைவன் பாலைவனத்தில் பிறந்தான் பார்த்தவன் பிழைத்தான் பாராதவன் மரித்தான் -அவன் பெயர் என்ன? விடை: நிகுஸ்தான். 2 இராஜா 18:4. ==================================== ஐயா உள்ளே வந்தாரு கொண்டு வந்ததைக் கொடுத்தாரு கொஞ்சம் மறைச்சு வைச்சாரு பொய் ஒன்றுதான் சொன்னாரு பொட்டென்று விழுந்தாரு அம்மா உள்ளே வந்தாங்க அதே மாதிரி சொன்னாங்க அந்தோ பாவம் அழிந்தாங்க -அவர்கள் யார்? விடை: அனனியா – சப்பீராள். அப் 5:1-10. ==================================== |