ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். - (யோவான் 15:15). . "பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே" . இந்தப்பாடல் நாம் அனைவரும் அறிந்த மிகச் சிறந்த பாடலாகும். இதை எழுதியவர் ஜோசப் ஸகீரீவான் என்பவராவார். அவருடைய இளவயதில் அவர் ஒரு பெண்ணை மிகவும் நேசித்தார். அந்தப் பெண்ணையே அவரது பெற்றார் அவருக்கு நிச்சயம் பண்ணியிருந்தார்கள். திருமணத்திற்கு எல்லாம் ஆயத்தமாக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முந்திய நாள் அந்தப் பெண் நீரில் மூழ்கி மரித்துப் போனாள் என்கிற செய்தி அந்த வாலிபனை அப்படியே உடைத்துப் போட்டது. மிகவும் மீளாத் துயரத்தில் இருந்த அவருக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பைக் குறித்து கூறப்பட்டது. . இயேசுகிறிஸ்துவின் அன்பை அவர் ருசிக்க ஆரம்பித்தார். உலக அன்பு ஒருநாள் நம்மை விட்டு கடந்து போகும், கிறிஸ்துவின் அன்பே என்றும் நிலைத்திருக்கும் என்பதையும் இயேசு கிறிஸ்துவில் அவர் அடைந்த ஆறுதலையும் அனுபவித்து எழுதின பாடல்தான் இந்தப்பாடல். இன்றும் அநேகருடைய துன்பத்தில் துயரத்தில் அவர்களுக்கு ஆறுதலைக் கொண்டு வருவதாக உள்ளது. . அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் (பிலிப்பியர் 2:6,7) இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனாயிருந்தும் நமக்காக, நம்மீது அன்பு கூர்ந்து, தம் ஜீவனையே கொடுததாரே அந்த அன்புக்கு ஈடாக நாம் என்ன செய்ய முடியும்? எதைக் கொடுக்க முடியும்? நம்மையே அவருக்கு அர்ப்பணிப்போமாக. . இயேசுகிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசுகிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் அழியாதது. .
|