சந்தைக்கு போன அண்ணன் ஐம்பது பழம் கேட்டான் ஒன்பதுக்கு ஐந்தை பார்த்து நால் பத்தை தொட்டான் ஆரஞ்சை எடுத்து நாலு ஐந்தாய் பிருத்தான் பத்து விலை பேசி\கிடைக்காமல் திரும்பினான் -அவன் யார்? விடை: ஆபிரகாம். ஆதி 18:23-33. ==================================== பூமி தேவதை கண்திறக்க பூலோக மனிதன் கண்ணீரில் கரைந்தான் -அது என்ன? விடை: ஜலப்பிரளயம் ஒருவன். ஆதி 7:11-24. ==================================== பிடித்தால் ஆடுவான் வாசித்தால் அடங்குவான் பாடினால் முறைப்பான் உவிர்காத்த மருமகனின் உயிரைப் பிடுங்க நினைத்தான் -அவன் யார்? விடை: சவுல் ராஜா. 1 சாமு 18:10,11. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |