குடு குடு பாட்டி குனிந்து விழுந்து சிரித்தாள் நிமிர்ந்து மேலே பார்க்க கையிலே ஓர் தங்கக் கட்டி -அவள் யார்? விடை:சாராள். ஆதி 18:11-14; 21:1-3. ==================================== ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் இவனோ மிகுந்த நன்மையைக் கெடுப்பான் -அவன் யார்? விடை: பாவியான ஒருவன். பிர 9:18. ==================================== எண் கணித முறையில் எண்ணற்ற பெயர்கள் எப்படி மாற்றிப் பார்த்தாலும் ஆண்டவர் பெயர் மாற்ற புதிய பெயர் கிடைத்திடும் -அவை என்ன? விடை: எப்சிபா – பியூலா. ஏசா 62:2-4. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |