கையினால் வரைந்தால் அது சித்திரம் கைக்குள் வரைந்தால் நீ பத்திரம் -அது எங்கே? விடை: கர்த்தரின் உள்ளங்கையில் – ஏசா 49:16. ==================================== வீட்டிலே துரத்தலாம் வீதிக்கு அனுப்பலாம் ஒதுக்கப்பட்டு, துரத்தப்பட்டு ஓரமாய் கிடந்தவன் காலம் வர, நேரம் வர முக்கியமாய் மாறினான் -அது என்ன? விடை: மூலைக்கு தலைக்கல் – சங் 118:22. ==================================== ஊர் ஊராக சுற்றியவன் ஊதாரியாக வாழ்ந்தவன் சொந்தம் விட்டு பறந்தவன் சொத்தை எல்லாம் அழித்தவன் தவிட்டை தேடி தவித்தவன் தகப்பனை நாடி நடந்தவன் -அவன் யார்? விடை: இளைய மகன் – லூக்கா 15:11-24. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |