Friends Tamil Chat

வெள்ளி, 7 மார்ச், 2014

7th March 2014 - பாடுகளின் நடுவில் வளர்ச்சி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 07-ம் தேதி - வெள்ளிக்கிழமை
பாடுகளின் நடுவில் வளர்ச்சி
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார். - (2 தீமோத்தேயு 2:12).

.
சீனாவில் கம்யூனிஸ்ட் அரசால் இன்றும் கிறிஸ்தவ விசுவாசிகள் தாங்கொண்ணா உபத்திரவங்களின் வழியாக செல்லுகின்றனர். அதறகு மத்தியிலும் சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக பெருகிக் கொண்டே இருக்கிறது என்பது எந்த சந்தேகமுமில்லாத பெரிய உண்மை. உபத்திரவங்களின் மத்தியில்தான் வெளிப்படையான வளாச்சியைக் காண முடிகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் ஆயிரக்கணக்கில் இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது பல மில்லியன்கள்! இந்த வளர்ச்சியின் இரகசியம் என்ன? அவர்கள் கடந்து வந்த பாடுகளே!

.

வாச்மன்நீ, யூன்லேம்ப் போன்றோர் பெரும் பாடுகளையும் நீண்ட சிறை வாசத்தையும் சகித்து அவர்கள் செய்த ஊழியங்கள் சபை வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன. ஆகவே சீனாவிலுள்ள சபைகள் கிறிஸ்தவ உலகத்திற்கு கொடுக்கும் செய்தி என்னவெனில் 'கிறிஸ்தவனுக்கு உறுதியான விசுவாசமும் உபத்திரவங்களைச் சகித்துக் கொள்ளும் மனப்பாங்கும் இருக்குமானால் சபை மிக வேகமாக வளர்ச்சி அடையும்' என்பதுதான்.

.

இப்படி சீனாவில் சபை வளர்வதற்கு காரணமாயிருந்து வாச்மன்நீ அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்ச்சிகளை காண்போம். இவர் ஒரு சிறந்த கல்விமான், அநேக கிறிஸ்தவ புத்தகங்களை எழுதி, சீன மக்களின் இதயத்தை தட்டி எழுப்பினார். ஊழியத்தின் பாதையிலே பல அவதூறுகள், பழிச்சொற்கள், காரணமில்லாத பகை என அடுக்கடுக்காய் வந்த துன்பங்களை பொறுமையோடு சகித்தார். அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் அவர் பிரசங்கித்த செய்தியின் சுருக்கத்தை காண்போம்.

.

'தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கும் உபத்திரவஙகள், கசப்பான அனுபவங்கள், சோதனைகள் அனைத்தும் நம்முடைய மிகுந்த நன்மையைக் கருத்தில் கொண்டே அருளப்பட்டதாகும். தேவன் நமக்கு நலமானவற்றையே எப்போதும் தரவேண்டுமென்று எதிர்ப்பார்க்கக்கூடாது. ஒரு மனிதன் ஆண்டவரை நோக்கி, 'ஆண்டவரே, தயவு செய்து நான் நலமானதை மாத்திரம் தெரிந்துக் கொள்கிறேன். நான் அனுபவிக்கும் இநத் உபத்திரவம் எனக்கு வேண்டாம்' என்று ஜெபிப்பானானால் தேவன் அவனுக்கு என்ன பதில் கூறுவார்? 'நான் உனக்கு இப்போது தந்திருப்பது உன்னுடைய நலமான ஆதாயத்திற்காகவே தந்திருக்கிறேன்' என்ற பதிலையே அவனுக்கு கொடுப்பார் என திட்டமாய் நமபுகிறேன்' என்று ஆவிக்குரிய கூர்மையோடு பிரசங்கித்தார்.

.

அவரது 53ஆவது வயதில் சீன அரசின் பொய்யான குற்றச்சாட்டினால் சிறையில்அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்டடிருந்த அறையின்நீளம் ஒன்பது அடி, அகலம் 45 அடிகளாகும். அந்த அறை எலிகள், கரப்பான் பூச்சிகள், தௌ;ளுப்பூச்சிகள், மூட்டைப்பூச்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது, அந்த சிறிய இறுக்கமான அறையில் பதினைந்து ஆண்டு காலம் வௌ;வெறு சீதோஷண் நிலையில் அவர் எப்படி தனது நாட்களை செலவிட்டிருப்பார் என்பதை நினைக்கையில் நம் கண்கள் கண்ணீரால் நிரம்பாமல் இருக்க முடியாது. அந்த அறையின் கம்பிகளை அவரது மெலிந்த கரங்களால் பிடித்து சாய்ந்துக் கொள்வதைத் தவிர வேறு சரீர இளைப்பாறுதல் ஏதும் அவருக்கு இல்லை. பின் அந்த சிறை அறையிலேயே மரணமடைந்து விட்டார். மரிக்கும்போது அவருடன் உறவினர்களோ, நண்பர்களோ யாருமே இல்லை. அவர் மரித்தவுடன், அவரது சரீரத்தை எரித்து விட்டார்கள். அவருடைய மனைவி ஆறுமாத்திற்கு முன் மரித்துவிட்டபடியால், மனைவியின் மூத்த சகோதரிக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் வந்து அவருடைய சாம்பலை எடுத்துக் கொண்டுபோய், அவருடைய மனைவியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்தார்.

.

வாச்மன் நீ அவர்கள் மரித்தபோது, 1952-ம் ஆண்டு, அநேக எதிர்ப்புகளின் மத்தியிலும், 400 சபைகள் சீனாவில் உருவாக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவ வாழ்க்கை சொகுசு வாழ்க்கையல்ல, அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார் என்று வேத வசனம் கூறுகிறது.

.

வாச்மேன்நீ இந்த பாடுகள் பட்டபடியினால்தானே இன்றைய நாளில் சீனா தேசத்திலுள்ள சபைகள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. இன்றைய நாட்களில், நம் நாட்டில், வேதனை இல்லாத பெருக்கம், பாடுகள் இல்லாத பரவச நிலை என்று சபைகள் இருப்பதால் அல்லவா சபைகளில் ஆத்தும பாரம் இல்லை! ஆத்துமாக்கள் பெருகவில்லை!

.

நம் இந்திய தேசம் இயேசுவின் தேசமாக மாற வேண்டும் என்று வாஞ்சிக்கிறோம். அதைக் குறித்து பேசுகிறோம், ஜெபிக்கிறோம். ஆனால் அதற்காக பாடுபடவும், தியாகம் செய்யவும் நாம் முன்வருவதில்லை. கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகளில் சோர்ந்து போய், இது எனக்கு வேண்டாம் என்று முடிவு செய்து விடுகிறோம்.

.

கிறிஸ்துவுக்காக பாடுகளை சகிக்கும்போது, ஒரு நாள் அதன் கனியை நாம் புசிக்கத்தான் போகிறோம். அவரோடுக்கூட ஆளுகை செய்யும் கிருபையை அவர் கொடுப்பார். ஆனால் நாம் அவரை மறுதலித்தால் அவரும் நம்மை மறுதலிப்பார்.

.

பாடுகளின் வழியாக சபை பெருகும்படியாக நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். என்ன நிந்தை வந்தாலும், பாடுகள் வந்தாலும் முறுமுறுக்காமல், கர்த்தருக்காக சகிப்போம். கர்த்தர் சபைகளை பெருகச் செய்வார். ஆமென் அல்லேலூயா!

.

கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்

உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்

அவமானம் நிந்தை சிலுவைதனை

அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்

.

உமக்காகத் தானே - ஐயா நான்

உயிர் வாழ்கிறேன் - ஐயா

இந்த உடலும் உள்ளமெல்லாம் - அன்பர்

உமக்காகத்தானே ஐயா

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பாடுகள், துன்பங்கள், நிந்தனைகள் கிறிஸ்துவின் நிமித்தமாக எங்களுக்கு வரும்போது, அவைகளை பொறுமையாக சகிக்கும் பக்குவத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தருவீராக. சோர்ந்து போகாதபடி, உமக்காக வைராக்கியமாய் ஜீவிக்க கிருபை தாரும். வாச்மன் நீ உமக்காகவே வாழ்ந்து, உமக்காகவே தன் ஜீவனையும் ஒப்புக்கொடுத்ததுப்போல நாங்கள் உமக்காக வாழவும், ஜீவிக்கவும் கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another


எங்கள் அன்பின் நேச தகப்பனே, இதுவரை நாங்கள் செய்து வருகிற எல்லா ஜெபத்தையும கேட்டு, அதனதின் நேரத்தில் நேர்த்தியாய் பதில் தரப் போகிற உம்முடைய மகத்தான கிருபைக்காக உம்மை துதிக்கிறோம்.

.

சகோதரன் சுந்தர் அவர்களின் அம்மாவிற்கு மார்பு புற்றுநோய் சுகம் பெற்று வரும் நிலையில் இப்போது வயிற்றுப்பகுதியில் தாக்கம் இருப்பதாக வைத்தியர் சொல்வதால், தேவன் தாமே சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவருடைய மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதால், அவருக்கு சுகப்பிரசவத்தை கொடுக்கவும், நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கவும் ஜெபிக்கிறோம். அவர்கள் நர்ஸாக இருப்பதால், அவர்களுடைய வேலை நிரந்தரமாகவும் ஜெபிக்கிறோம். அவர்களுடைய மகள் பிளஸியை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். குடும்பத்தின் மற்ற தேவைகளையும் தேவன் சந்திக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் ராஜேஷ் குடும்பத்திற்காக ஜெபிக்கிறோம். அவரும், ஜான்சன், சஞ்சீவி அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம். சமாதானத்தின் தேவன் அந்த குடும்பத்தில் சமாதானத்தை அருளி, ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரி காயத்திரியின் மகள் ஹரிணிக்காக நாங்கள் ஜெபித்த ஜெபத்தைக் கேட்டு, அந்த மகளுக்கு ஒரு மாத காலமாக சளி காய்ச்சல் பிடிக்காதபடி கர்த்தர் காத்துக் கொண்டபடியால் உமக்கு துதிகளை ஏறெடுக்கிறோம். அவர்களுடைய கணவர் உற்றார், நண்பர்களுக்கு ஏறக்குறைய 14 இலட்சம் கடன் கொடுத்துவிட்டு, ஒருவரும் அதை திருப்பி தராமல் இருப்பதால், அவர்கள் பேங்கில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருப்பதால், கடன் வாங்கியவர்கள், திரும்பவும் அந்த பணத்தை அவர்களுக்கு கொடுக்கும்படியாக அவர்களுடைய இருதயத்தில் கிரியை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய தேவைகளை சந்தித்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் சாம் ஆன்டனி அவர்களின் நண்பர் செல்லகுமார் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக எத்தியோப்பியாவில் நர்சிங் லெக்சரராக பணிபுரிந்து, தற்போது டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத ஒரு கிருமி தாக்கியிருப்பதால், சிஎம்சி மருத்துவமனை ஐசியு வில் இருப்பதால் அவருக்காக ஜெபிக்கிறோம். வைத்தியர்களுக்கு என்ன என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்க ஞானத்தை தருவீராக. சகோதரனை சுகப்படுத்துவீராக. அவர் கர்த்தர் கொடுத்திருக்கும் இந்த நாட்களில் இரட்சிக்கப்பட்டு, கர்த்தருக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.
.

சகோதரி ஆலிஸ் அவர்களின் அண்ணன் ஜெயப்பிரகாஷ் அவர்கள் ஸ்ரீலங்காவிற்கு ஐந்து நாட்கள் ஊழியத்திற்காக செல்லகிறபடியால், கர்த்தர் தாமே அவருடைய செய்தியை கேட்க வருகிற ஒவ்வொருவரையும் தொடும்படியாகவும், அற்புதங்கள் நடக்கும்படியாகவும், வியாதி, பிரச்சனைகளிலிருந்து மக்கள் கர்த்தருடைய வல்லமையால் விடுவிக்கப்படும்படியாகவும் ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் டார்வின் அவர்களுக்காக ஜெபிக்கிறோம் தகப்பனே, அநேக இடங்களில் வேலை தேடியும் அவருக்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் பாடுகளின் வழியாக செல்லும் அவருக்கு தேவன் கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். அவர் தன் விசுவாத்தை விட்டுவிட்டு வந்தால் வேலை தருவதாக கூறினாலும், விசுவாசத்தை மறுதலிக்காமல், கர்த்தருக்காக வைராக்கியமாய் இருக்கும் சகோதரனுக்கு நீரும் வைராக்கியம் பாராட்டி, ஒரு நல்ல வேலை கிடைக்கவும், தன்மனைவி,மூன்று பிள்ளைகளையும் நல்ல முறையில் காத்துக் கொள்ளவும், தேவன் கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டின தானியேலை தேசத்தின் அதிபதியாக மாற்றினீரே, சகோதரனையும் உயர்த்தும்படியாக ஜெபிக்கிறோம். தேவைகளை சந்திப்பீராக. உயர்த்துவீராக. ஆசீர்வதிப்பீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.