Friends Tamil Chat

வெள்ளி, 14 மார்ச், 2014

14th March 2014 - அன்பின் விருந்து

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 14-ம் தேதி - வெள்ளிக் கிழமை
அன்பின் விருந்து
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். -

(1கொரிந்தியர்11:26-27).

.
கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் கைப்போட முடியாது. அதில் பங்கு பெறுகிற ஒவ்வொருவரும் தங்களுடைய பாவ நிலைமையை உணர்ந்து கர்த்தரோடு ஒப்புரவாகிப்பின்தான் பந்தியில் பங்கு பெற வேண்டும்.

.

அநேக சபைகளில் பந்தி பறிமாறுவதற்கு முன் போதகர்கள் எச்சரிக்கை செய்தியைக் கொடுப்பதில்லை. நேராக பந்திக்கு சபையாரை அழைத்து சென்று விடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். போதகர்கள் பறிமாறுமுன், சபையை எச்சரித்துப் பின்னரே பந்தியை பறிமாற வேண்டும்.

.

'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' (1 கொரிந்தியர் 11:28-30) என்று வேதம் எச்சரிக்கிறது.

.

பேட் நோவாக் என்னும் போதகர் ஒரு ஆஸ்பத்திரியில் உள்ள சிறு ஆலயத்தில் போதகராக இருந்தபோது, அங்கு வேலை செய்யும் நர்சுகள் அவரிடம் ஜான் என்பவரைப் பற்றி தெரிவித்தார்கள். ஜானுக்கு அநேக டெஸ்ட்டுகள் செய்தும், எல்லாமே நார்மலாக இருந்தது. ஆனால் மனிதர் மிகவும் மெலிந்து போய்க் கொண்டு இருந்தார். டாக்டர்களுக்கு என்ன வியாதி என்றே தெரியாமல் இருந்தது.

.

ஒரு நாள் அவர் ஜானிடம் போய் பேச ஆரம்பித்தார். அப்போது ஆவியானவர் அவருடைய உள்ளத்தில் கர்த்தருடைய பந்தி எடுக்க ஆயத்தமா என்று கேட்க சொன்னார். போதகர் அவரிடம் அப்படி கேட்;டபோது, உடனே அவர், 'இல்லை, என்னால் எடுக்க முடியாது, நான் பாவி, என் பாவங்கள் மன்னிக்கப்பட முடியாதவை' என்று கதற ஆரம்பித்தார்.

.

போதகர் பேட் அவரிடம், 'அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' என்று வசனத்தை சுட்டிக்காட்டி, கர்த்தரிடம் தன் பாவத்தை அறிக்கை செய்ய சொன்னார். அப்படியே அவர் தன் பாவத்தை அறிக்கை செய்தப்பின், பேட் அவரை அணைத்துக் கொண்டு, உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டது, கர்த்தர் எல்லாவற்றையும் மன்னித்து மறந்து விட்டார். இப்போது நீங்கள் பந்தியில் பங்கு பெற விருப்பமா? என்று கேட்டபோது, அவர் ஆம் என்று கூறினார்.

.

அதன்படி அவர் பந்தியை ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்து, மீண்டும் அந்த வசனங்களை ஞாபகப்படுத்தி, அவருக்கு கொடுத்தபோது, அவர் அதை வாங்கி புசித்தார். அநேக வாரங்களுக்குப்பின் அவர் அன்றுதான் அப்பத்தை முதன் முதலாக புசித்தார். பாத்திரத்தையும் வாங்கி, குடித்தபோது, அவர் விடுதலையாக்கப்பட்டார். பின் மூன்று தினங்களுக்குள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக்கப்பட்டார். இது உண்மையில் நடந்த சம்பவம் ஆகும்.

.

பிரியமானவர்களே, கர்த்தருடைய பந்தியில் இரண்டு காரியங்களும் இருக்கிறது. பாத்திரவான்களாக எடுப்பவர்களுக்கு அது ஆசீர்வாதமாகவும், அபாத்திரமாக எடுப்பவர்களுக்கு அது ஆக்கினை தீர்ப்பாகவும் மாறுகிறது. பாத்திரவான்களாக எடுப்பவர்களுக்கு அது நோயை தீர்க்கும் மருந்தாக மாறியது உண்டு, சாபங்கள் மாறியது உண்டு, பாவங்கள் மாறியது உண்டு. ஆசீர்வாதமாக மாறியது உண்டு.

.

ஆனால் அபாத்திரமாய் அதில் பங்கு பெறுபவர்களுக்கு, அது ஆக்கினை தீர்ப்பாக மாறுகிறது. அதனால் பலவீனர்களும், வியாதியுள்ளவர்களுமாய் மாறியிருக்கிறார்கள். சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

.

ஆகையால் இந்த பரிசுத்த பந்தியில் பங்கு பெறுவதற்கு முன் நம்மை நாமே ஆராய்ந்து, 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்' என்ற வசனத்தின்படி, நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளாக தீர்க்காதபட்சத்தில், கர்;த்தரோடு ஒப்புரவாகி, பின் பந்தியில் பங்கு பெற வேண்டும்.

.

அப்படி பாத்திரமாய் பங்கு பெறுபவர்களுக்கு இயேசுகிறிஸ்து 'என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்' என்று வாக்குதத்தம் செய்திருக்கிறார். பாத்திரமாய் பங்கு பெற்று நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!

.

தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின்

சீஷர் குறை தீரு.

பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன

பந்திதனில் சேரு.

சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்

தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே

.

கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா

கர்த்தரின் பந்தியில் வா

.

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின

காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கர்த்தருடைய பரிசுத்த பந்தியில் பரிசுத்தமாய், பாத்திரவான்களாய் பங்கு பெறும்படி எங்களை பாத்திரர்களாய் மாற்றும். பாத்திரவான்களாய் பங்கு பெற்று நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். அபாத்திரவானாய் பங்கு பெற்றால் பலவீனமும், வியாதியும், மரணமும் நேரிடலாம் என்பதை உணர்ந்து, பாத்திரவான்களாய் பங்கு பெற கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் நேச தகப்பனே, இதுவரை நாங்கள் செய்து வருகிற எல்லா ஜெபத்தையும கேட்டு, அதனதின் நேரத்தில் நேர்த்தியாய் பதில் தரப் போகிற உம்முடைய மகத்தான கிருபைக்காக உம்மை துதிக்கிறோம்.
.

சகோதரன் கனகராஜ் அவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பத்தின்படி, அசாமில் FMPB மிஷனெரி ஊழியராக பணியாற்றும் சகோதரி அகிலாசங்கர் அவர்களுக்கு கேன்சர் என்று கண்டுபிடிக்கபட்டு, ஒரு வருடமாக சி.எம்.சி வேலூரில் இருக்கிறபடியால், தேவன் தாமே சகோதரியை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். வாலிப நாட்களை உமக்காக கொடுத்து, ஊழியம் செய்ய வந்த சகோதரி இப்படி வியாதிப்படுக்கையில் விழுந்து கிடப்பது உமக்கு சித்தமல்லவே தகப்பனே, தயவாய் இரங்கும் ஐயா, சகோதரியை தொட்டு சுகப்படுத்தும் ஐயா. வைத்தியர்கள் என்ன சொன்னாலும், பரம வைத்தியராகிய நீர் அவர்களை சுகப்படுத்த முடியுமே, சுகப்படுத்தும். பரிபூரண விடுதலை பெற்று மீண்டும் புது பெலத்தோடு ஊழியம் செய்ய கிருபை தாரும்.

.

சகோதரி பெட்டி பாக்ஸ்டர் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பணப்பிரச்சனைகள் நீங்கவும், கடன் தொல்லைகள் மாறவும், சகோதரியின் படிப்பில் தேவனுடைய கரம் இருந்து நன்கு படித்து, நல்ல வேலை கிடைத்து, குடும்பத்தை தாங்கவும் கிருபை செய்யும். குடும்பத்தில் சமாதானத்தை கொடுத்து காத்துக் கொள்ளும்.

.

சகோதரன் சேகர் அவர்களின் பிள்ளைகள் வரும் 17ம் தேதி ஜீவா ஐந்தாவது பிறந்த நாளையும், ஜீனா முதலாவது பிறந்தநாளையும் கொண்டாடுகிறபடியால், பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வதிப்பீராக. பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் என்ற வசனத்தின்படி, உம்முடைய சுதந்தரத்தை தக்க முறையில் வளர்க்க பெற்றோருக்கு தேவன் நல்ல ஞானத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். பிள்ளைகள் சிறுவயது முதல் கர்த்தருக்கு பயப்படுகிற பயப்படுதலில் வளர கிருபை செய்யும். அவருடைய மனைவி வனிதா அவர்களுக்கு விசா பிரச்சனைகள் மாறி, அவர்கள் குடும்பமாக ஓமனில் வாழும்படியாக தேவன் கிருபை செய்வீராக. குடும்பமாக உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.

.

சகோதரி சார்லட் அமிர்தா அவர்கள் கலந்து கொள்ள இருந்த இன்டர்வியூ 14ம் தேதியிலிருந்து 18ம் தேதி மாற்றலாய் இருப்பதால், தேவன் சகோதரிக்கு ஏற்ற ஞானத்தை கொடுத்து, எல்லா பயத்தையும் நீக்கி, தெளிவான பதில்களை சொல்லவும், அவர்கள் வாஞ்சிக்கிற அந்த பள்ளியில் வேலை கிடைக்கவும் கிருபை செய்வீராக.

.

காஞ்சிபுரத்தில் இயேசுவின் ஜெபசேனை என்ற பெயரில் கிறிஸ்துவின் அன்பை அறிவித்து பாஸ்டர் சகரியா அவர்களுக்கு பிறநத் பெண் குழந்தைக்கு இருதயத்திற்கு எடுத்துச் செல்லும் நான்கு குழாய்களில் ஒன்று மாத்திரமே இருப்பதால், மூச்சு திணறலினால் அவதிப்படும் அந்த பச்சிளம் குழந்தையை தேவன் சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். இதேப் போல கஷ்டப்படும் சகோதரி லவீனாவின் குழந்தையையும் கர்த்தர் தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். இந்த இரண்டு பிள்ளைகளும் மூச்சு விட கஷ்டப்படுவதாலும், இரத்தத்தில் ஆக்சிஜன் மிகவும் குறைந்து காணப்படுவதாலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தேவன் விலக்கி காத்துக் கொள்ளும்படியாகவும், பரிபூரண சுகத்தை கொடுக்கும்படியாகவும் கெஞ்சுகிறோம்.எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.