கிடைத்ததற்கரிய செல்வத்தை கையினில் வாங்கி எறிந்து போட்டான் -அவன் யார்? விடை: மோசே. யாத் 32:15-20. ==================================== சாவுக்கு பயந்து ஓடி ஊரை விட்டு வந்து செடியின் தஞ்சம் கொண்டு அயர்ந்த நித்திரை செய்த ஆண்டவரின் அடியான் -அவன் யார்? விடை: எலியா. 1 இராஜா 19:1-6. ==================================== வேண்டாம் என்று சொன்னதை வேண்டும் என்று கேட்கவே கிடைத்தது பணம் சாக்கிலே வந்தது நிறம் கதையிலே -அவன் யார்? விடை: கேயாசி. 2 இராஜா5:20-27. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |