Friends Tamil Chat

வியாழன், 20 மார்ச், 2014

20th March 2014 - மறுரூபமான வாழ்வு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 20-ம் தேதி - வியாழக் கிழமை
மறுரூபமான வாழ்வு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். - (2 கொரிந்தியர் 3:18).

.
அழகிய வர்ணங்களில் பறந்த திரியும் வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும்போது, அதன் அழகில் நாம் மயங்குவது இயற்கை. அந்த அழகிய வண்ணத்துப்பூச்சி கிறிஸ்தவர்களை பிரதிபலிக்கிறது என்றால் ஆச்சரியம்தான்!

.

வண்ணத்துப்பூச்சி அதற்கு விருப்பமான இலையில் முட்டைகளையிடுகிறது. அந்த முட்டைகளைச் சுற்றிலும் பசை போன்ற ஒரு திரவத்தினால் அதை இலையுடன் ஒட்ட வைத்துவிடுகிறது. நாமும் நம் பாவத்தை மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்ளும் அன்பின் தெய்வம் இயேசுவை விரும்பி ஏற்றுக் கொண்டு, அவரோடு ஜெபத்தின் மூலம் நெருங்கி ஐக்கியம் கொண்டு வாழ வேண்டும்.

.

அடுத்து முட்டைகளை பொரிப்பதற்கு காத்திருக்க வேண்டும். காத்திருப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் அனுபவித்த வார்த்தையாக இருக்க வேண்டும். ஆம், நம் வாழ்க்கையில் எல்லாம் நாம் நினைப்பது போன்று நடந்து விடுவதில்லை. எல்லாவற்றிலும் கர்த்தரின் வேளைக்காக காத்திருக்க வேண்டும்.

.

பின் குறித்த காலத்தில் முட்டை பொரிந்து புழு வெளிவரும். அதன் முக்கிய வேலை சாப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். உணவாக சாப்பிடும் இலையைத் தேடிக் கொண்டே இருக்கும். நாமும் அன்றாடம் நம்முடைய ஆவிக்குரிய உணவை வேதத்தில், ஆவிக்குரிய புத்தகங்களில், ஐக்கியங்களில் தேடி அதில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

.

அப்படி வளர்ந்து வருகிற வேளையில்தான், முக்கியமான மாற்றம் உண்டாகிறது. முன்னிருந்த உருவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதபடி அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறி விடுகிறது.

.

கர்த்தரோடு ஜெபத்தில் இணைந்திருந்த நாம், வேதத்தின் வசனத்தை உணவாக உண்ட நாம், வளர்ந்த விசுவாசியாக, இப்போது, கர்த்தருக்காக உழைப்பவர்களாக மாறிவிடுகிறோம். அவருடைய சாயலை பிரதிபலிக்கிறவர்களாக, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். எத்தனை ஆச்சரியம்!

.

இப்படிப்பட்ட வாழ்க்கைக்கே ஒவ்வொருவரையும் கர்த்தர் அழைக்கிறார். நான் புழுவாகத்தான் இருப்பேன் என்று அந்த நிலையிலேயே இருப்பதினால் எந்த பிரயோஜனமும் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடித்து பறக்க வேண்டும். கர்த்தருக்கு பிரயோஜனமுள்ளவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக நம் வாழ்க்கை மாற வேண்டும். அதனால் கர்த்தர் மகிமைப்படுவார். அவருடைய வருகையில் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தில் அவருடனே நாமும் பறப்போம். ஆமென் அல்லேலூயா!

.

மறுரூபமாக்கிடும்

மகிமையின் மேகமே

முகங்கள் மாறணுமே

ஒளிமயமாகணுமே

.

மேகமே மகிமையின் மேகமே

இந்த நாளிலே இறங்கி வாருமே

மேகமே மகிமையின் மேகமே

வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, ஒவ்வொரு நாளும் நாங்கள் உம்முடைய சாயலாக மாற தேவ ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்வாராக. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்படி ஒவ்வொரு நிலையிலிருந்து முன்னேறி அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறதோ அதைப்போல நாங்களும் எங்கள் ஆதி நிலையிலிருந்து மறுரூபமாக்கப்பட்டு, மகிமையான சரீரத்தில் கிறிஸ்துவின் வருகையில் காணப்பட எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another


எங்கள் அன்பின் நேச தகப்பனே, இதுவரை நாங்கள் செய்து வருகிற எல்லா ஜெபத்தையும கேட்டு, அதனதின் நேரத்தில் நேர்த்தியாய் பதில் தரப் போகிற உம்முடைய மகத்தான கிருபைக்காக உம்மை துதிக்கிறோம்.

.

சகோதரன் ஆகாஸ் மிலானுக்காக ஜெபிக்கிறோம் தகப்பனே. வாலிப வயதில் துபாய்க்கு கொண்டு சென்று அங்கு ஒரு இஞ்சினியராக பணி புரிய கிருபை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான், உம்முடைய வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதினால் தானே என்று வசனம் சொல்லுகிறபடி, வசனத்தை தாகத்தோடு வாசித்து, அதன்படி தான் நடப்பதினால், தன் வழியை சுத்தமாய் காத்துக் கொள்ள கிருபை செய்யும். கர்த்தருக்கு பயப்படும் பயத்திலும், பாவத்திற்கு விலகி, கர்த்தருக்கு ஊழியம் செய்யவும் மகனை எடுத்து பயன்படுத்தும்படி ஜெபிக்கிறோம்.

.

சகோதரி அர்ச்சனாவிற்காகவும் அவர்களுடைய குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறோம். அவர்களுடைய தாயார் சீக்கிரமாய் ஞானஸ்நானத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்கவும், கர்த்தருடைய வழியில் அவர்கள் குடும்பமாய் நடந்து, ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் ஜெபிக்கிறோம். குடும்பத்தின் தேவைகளை சந்தித்து ஆசீர்வதிப்பீராக.

.

சகோதரன் சம்ப்சிங் அவர்களின் சகோதரனின் மனைவி உஷா ஐந்துமாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த சகோதரியின் கர்ப்பத்தில் வளரும் குழந்தை சரியான வளர்ச்சியில்லாததால் அதை அபார்ட் பண்ண வேண்டும் என்று வைத்தியர்கள் சொல்வதால் நாங்கள் உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே. கர்ப்பத்தை தருவதும், குழந்தைகளை தருவதும் நீர் தகப்பனே, இந்த கர்ப்பத்தையும் கர்த்தரிடத்தில் தருகிறோம். உம்முடைய சித்தத்தின்படி இந்த கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு செய்யும்படியாக ஜெபிக்கிறோம். எந்த ஊனமுமில்லாமல் குழந்தை பிறக்கத்தக்கதாக கிருபை செய்யும்.

.

சகோதரன் யோகபிள்ளை அவர்கள் அனுப்பியிருக்கும் விண்ணப்பத்தின்படி ஒரு சகோதரி (பெயர் எழுதவில்லை) ஒரு வருடம் மாத்திரம் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து, தற்போது, கணவன் அவர்களோடு வாழ விரும்பாததால், அந்த சகோதரியை உம்முடைய சமுகத்தில் கொண்டு வருகிறோம் தகப்பனே, கர்த்தருடைய அன்பை அவர்கள் முதலில் ருசிப்பார்க்கவும், அவர்கள் குடும்பத்தை தேவன் இணைத்து வைக்கவும் ஜெபிக்கிறோம். தனியாக ஒரு பெண் இந்த சமுதாயத்தில் வாழ்வத எத்தனை கஷ்டமானது என்பதை நீர் அறிவீர், தேவரீர் இந்த குடும்பம் இணைந்து வாழ கிருபை செய்வீராக.

.

சகோதரன் யோசுவாவிற்காக ஜெபிக்கிறோம் தகப்பனே. வாலிபனாயிருக்கிற அவர் சிருஷ்டிகராகிய உம்மை பற்றிக்கொள்ளவும், உமக்கு தன் வாழ்வைத் தந்து, உமக்காக வாழவும் கிருபை செய்யும். அவருடைய எதிர்காலத்தை ஆசீர்வதித்து, அவருடைய படிப்பையும், அதற்கேற்ற நல்ல வேலையையும் கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.