யானைக்கு அடி சறுக்கும் இவனுக்கோ முடி சறுக்கும் -அவன் யார்? விடை: சிம்சோன். நியாய 16:16-21. ==================================== மூடன் என்று சொன்னான் முக்கியமானதைக் கேட்டான் படியைப் போட்டு மடியை நிரப்பி காத்துக்கொள்ள வேண்டிக் கொண்டான் -அவன் யார்? விடை: ஆகூர். நீதி 30:1-9. ==================================== சாத்தானின் வீட்டினிலே சாத்தானுக்கு டாட்டா காட்டி சாட்சியாய் வாழ்ந்து வந்த உண்மையுள்ள உத்தமன் -அவன் யார்? விடை: அந்திப்பா. வெளி 2:13. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |