இந்த வார கேள்விகள்: 17th August 2014: . 1) ஏசாவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெயரென்ன? அவனுக்கு அந்தப் பெயர் வரக்காரணமென்ன? . 2) எகிப்தைவிட்டு வெளிவந்த இஸ்ரவேல் மக்கள் எத்தனை பேர்? . 3) ஏலீம் என்பது யாது? . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . கடந்த இந்த வார கேள்விகள்: 10th August 2014: . 1) ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாமுக்கு எத்தனை வயது? . சரியான பதில்: நூறு வயதாயிருந்தான் - ஆதியாகமம் 21:5. . 2) ஊரீம், தும்மீம் என்றால் என்ன? அது எதற்காக உபயோகப்படுத்தப்பட்டது? . சரியான பதில்: a) நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும். - யாத்திராகமம் 28 :30. . b) கர்த்தருடைய மனதை (சித்தத்தை) அறியும்படி இது பயன்படுத்தப்பட்டது - எண்ணாகமம் 27 :21. . 3) ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கலத் தொட்டி எதற்க்காக வைக்கபட வேண்டும்.? . சரியான பதில்: ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும் முன்பதாக தங்கள் கால்களைக் கழுவுவதற்காக, வைக்கக்படவேண்டும். - யாத்திராகமம் 30:17. . ===================================================== சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1) Bro. Raghu Macancy ... 2) Sis. M.Vijayarani.... 3) Bro. Jebastus Shelton D. 4) Bro. Selvanesan selvanesan.N... 5) Bro. R.Tamilmani ... 6) Sis. Alwis Deva Kirupa......... 7) Sis. Stella, ... 8) Bro. Gertrude L Farnando ... 9) Bro. Chandralekha Martin 10) Sis. K. Selvi.... 11) Bro.L.Samuel George ... 12) Pastor.P.Peter Krishnan..... 13) Miss.Sharon Rachel Mahima ..14) Sis. Stella ... 15) Sis. A. Benita ......................16) Bro. Johnrose ........... 17) Bro. Jesus Kumar ... 18) Sis. Saraswathy Chinnadurai ........ 19) Sis.Hannah Ezekiel ... 20) Sis. Sobitha Lawrence ......................21) Mrs. Santhi Justin |