அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். - (பிரசங்கி 3:11). . தேவனின் படைப்பெல்லாம் மிகவும் விந்தையானது, ஆச்சரியமானது, மனித மூளைக்கு அப்பாற்பட்டது. வேதம் சொல்கிறது, 'தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக் கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்ததுளூ உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக் கூடியது என்ன? அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது' (யோபு 11:7-9). அப்படிப்பட்ட அனந்த ஞானத்தினால் தேவன் படைத்தவைகளை பார்க்கும்போது அவரை துதிக்காமல் இருக்க முடியாது. . ஒரு குருவி முட்டையை அடைக்காத்து குஞ்சு வெளிவர 14 நாட்கள் ஆகும். அதே ஒரு கோழி அடைக்காத்து வெளிவர 21 நாட்கள் ஆகும். அதுப்போல வாத்து அடைக்காத்து குஞ்சு வெளிவர 28 நாட்கள் ஆகும். ஒரு கிளியும், தீக்கோழியும் அடைக்காத்து குஞ்சு வெளிவர 42 நாட்கள் ஆகும். இவையெல்லாம் ஏழால் வகுப்படக்கூடியவை. . ஒரு யானையை பார்த்தால், அதனுடைய நான்கு கால்களும் முன்னோக்கி மடங்கும் விதத்தில் தேவன் படைத்திருக்கிறார். அவருக்கு தெரியும், இந்த மிருகம் இருப்பதிலேயே பெரிய மிருகம், இதற்கு கீழே இருந்து எழுந்தரிக்க இரண்டு கால்கள் பத்தாது என்று நான்கு கால்களையும் மடக்கி எழும்பும்படி படைத்திருக்கிறார். ஒரு குதிரை தன் முன்னங்கால்களை ஊன்றி எழுந்தரிக்கும். ஒரு மாடு, தன் பின்னங்கால்களை ஊன்றி எழுந்தரிக்கும். கர்த்தரின் ஞானம் தான் எவ்வளவு பெரியது!! . உணவு வகைகளை நோக்கும்போது, முலாம்பழத்தில் மேல் இருக்கும் தோலின் வரிகள் இரட்டை எண்ணிக்கையில் இருக்கும். ஒவ்வொரு ஆரஞ்சு பழத்தின் சுளைகளும் இரட்டை எண்ணிக்கையில்தான் இருக்கும். ஒரு சோளத்திலும் இருக்கும் மணிகளின் வரிசையும் இரட்டை எண்களாகத்தான் இருக்கும். . எல்லா உணவு தானியங்களும் கதிரில் இருக்கும்போது, இரட்டை எண்களாகத்தான் இருக்கின்றன. கர்த்தர் சொன்னதுப் போல முப்பது, அறுபது, நூறுமடங்காக அவை பெருக்கம் அடைகிறது. . சில மலர்கள் சந்திரனைப்பார்த்து மலர்கின்றன. சில சூரியனைப்பார்த்து மலர்கின்றன. எத்தனை எத்தனை நிறங்களில், எத்தனை எத்தனை விதங்களில் அப்பூக்கள் படைக்கப்பட்டிருக்கின்றன! மழை பெய்து முடித்தவுடன், அவை திரும்ப நிமிர்ந்து நிற்கிறதை பார்க்க அங்குள்ள அணில்களும், பறவைகளும் ஆயத்தமாயிருக்கின்றனவாம்! எத்தனை விந்தை! இப்படி சொல்லிக் கொண்டே போனால் எழுதி முடியாது! அத்தனை அற்புதம் அவருடைய கிரியைகள்! அல்லேலூயா! . இவை எல்லாவற்றையும் விட தேவன் மனிதனை படைத்ததுதான் விந்தையிலும் விந்தை! நம் உடலில் வைக்கப்பட்டுள்ள உறுப்புகள் தங்கள் வேலைகளை நாம் அறியாமலேயே பிறந்த நாளிலிருந்து, இறக்கும் நாள் வரையில் தொடர்ந்து செய்துக் கொண்டு இருக்கின்றன. . தேவன் நம்மை சிருஷ்டித்ததற்கு அநேக உயரிய நோக்கங்கள் உண்டு, அவைகளில் ஒன்று, 'ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்ளூ அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்' (எபேசியர் 2:10). ஆம், நற்கிரியைகளை செய்து அவருடைய மகிமைக்காக வாழ நாம் சிருஷ்டிக்கப்பட்டோம். . தேவன் படைத்த அற்புத சிருஷ்டிகளாகிய நாம் நம்மை கண்ணாடியில் பார்க்கும்போது, என்னை இப்படி படைத்ததற்காக நன்றி தகப்பனே, நீர் என்னை உருவாக்கினதன் நோக்கத்தை நிறைவேற்றும் என்று சொல்வோமா? உம்மை அதிகமாய் நேசிக்கிறேன் தகப்பனே என்று சொல்வோமா? . தேவனுடைய அனந்த ஞானத்தினால் சகலத்தையும் சிருஷ்டித்தவர் உங்களையும் என்னையும் கூட அவருடைய சித்தத்தின்படியும், திட்டத்தின்படியும் உருவாக்கியிருக்கிறார். அவர் சித்தம் நம்மில் நிறைவேற நம்மை ஒப்புக்கொடுப்போம். நம் வாழ்வை அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா! . சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே எங்கள் உள்ளத்தில் உம்மை போற்றுகிறோம் என்றென்றும் பணிந்து தொழுவோம் . ஆ ஆ ஆ அல்லேலூயா ஆ ஆ ஆ அல்லேலூயா . |