வயிற்றுப் பசி கண்ணை மறைக்க மண்ணை இழந்தான் மதிகேடன் - அவன் யார்? விடை: ஏசா ஆதி 25:29-34. ==================================== சிக்கன் வேண்டாம் மட்டன் வேண்டாம் சில்லி பீஃப் கொஞ்சமும் வேண்டாம் பருப்பு, கீரை, காய்கறி போதும் பலமாய் என்றும் வளருவோம் நாளும் -நாங்கள் யார்? விடை: தானியேல், அனனியா, மீஷாவேல் , அசரியா. தானி 1:1-20. ==================================== சுனாமி வந்தாலும் பயமில்லை சுருட்டி எடுத்தாலும் பயமில்லை எடுத்ததைக் கொடுத்தாலும் கொடுத்ததை எடுத்தாலும் சந்தோஷம் எனக்கு சந்தோஷமே -நான் யார்? விடை: ஆபகூக், ஆப 3:17,18. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |