அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாம் – ஆனால் உலக்கையால் குத்தினாலும் உரலிலே இருப்பானாம் - அவன் யார்? விடை: மூடன். நீதி 27:22. ==================================== ஏட்டிக்குப் போட்டி, ஏகப்பட்ட வாட்டி காளையை மாட்டி, கண்டமட்டும் வெட்டி ஆட்டமெல்லாம் ஆடி, பாட்டெல்லாம் பாடி எலும்பையெல்லாம் காட்டி, சத்தமெல்லாம் கூட்டி மாட்டி கொண்டனர் வெட்டிப்போட - அவர்கள் யார்? விடை: பாகால் தீர்க்கதரிசிகள். 1 இராஜா 18:22-40. ==================================== ஆண்டவரின் ஆலயத்தை அழ்குப்படுத்தி பார்ப்பான் அடியேன் கேட்பதாய் அமைதியாய் சொல்லுவான் அனைவருக்கும் மாதிரியான அன்பான நண்பன் அவன் -அவன் யார்? விடை: சாமுவேல். 1 சாமு 3-10. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |