விடாமல் விரட்டி விடும் தொடாமல் துரத்தி விடும் வீட்டின் வாசற்படியில் நித்தமும் படுத்திருக்கும் -அது எது? விடை: பாவம். ஆதி 4:7 ==================================== உயிர் உண்டு, உடல் இல்லை பாதை உண்டு, பள்ளம் இல்லை மார்க்கம் உண்டு, மரணம் இல்லை இவ்வழி சென்றால் எவ்வழியும் தேவை இல்லை -அது எவ்வழி? விடை: நீதியின் பாதை. நீதி 12:18. ==================================== அரைக்கிற ஆலை தனில் அடைப்பட்டுக் கிடப்பான் ஆயுள் சக்கரத்தை அரை நொடியில் எரிப்பான் அடக்கினால் வாழ்வு இல்லையெனில் அழிவு -அது என்ன? விடை: நாவு. யாக் 3:5-10. ==================================== |