வா என்று கூப்பிடும் வந்தால் அணைத்திடும் வாழ்க்கயில் உயர்ந்திட வழிகளைச் சொல்லிடும் -அது என்ன? விடை: ஞானம். நீதி 8; 9 அதி. ==================================== காய்க்காமல் பழுத்திடும் கசக்காமல் இனித்திடும் பலவண்ணப் பழங்களை பலருக்கும் தந்திடும் நித்திய வாழ்வை நீ அடைய நித்தமும் இது தேவை -அது என்ன? விடை: ஆவியின் கனிகள். கலா 5:22,23. ==================================== வேர் விட்டு பரவும் விதை இன்றி வளரும் வேதனை இதனால் பெருகும் விசுவாசம் அதனால் சரியும் -அது என்ன? விடை: பண ஆசை. 1 தீமோ 6:10 ==================================== |