நான் பாதி அவர் பாதி நாங்கள் இருவரும் பாதி பாதி நல்ல சேதி கெட்ட சேதி அறிந்து கொண்டோம் அன்று மீதி அதனால் இன்று நீங்கள் வீதி -நாங்கள் யார்? விடை: ஆதாம் – ஏவாள். ஆதி 3:1-24. ==================================== விடாமல் விரட்டி விடும் தொடாமல் துரத்தி விடும் வீட்டின் வாசற்படியில் நித்தமும் படுத்திருக்கும் -அது எது? விடை: பாவம். ஆதி 4:7. ==================================== அரைக்கிற ஆலை தனில் அடைப்பட்டுக் கிடப்பான் ஆயுள் சக்கரத்தை அரை நொடியில் எரிப்பான் அடக்கினால் வாழ்வு இல்லையெனில் அழிவு -அது என்ன? விடை: நாவு. யாக் 3:5-10. ==================================== |