நீல நிறத் தண்ணீரில் உறங்கி எழுந்தான் புதிய மனிதன் -அது என்ன? விடை: ஞானஸ்நானம். கொலோ 2:12. ==================================== இன்னிசை குயில் ஒன்று இதய கீதம் இதமாய் பாடி சகோதரனை வம்புக்கு இழுத்தது இழுத்த வம்பால் கை வெமுத்துக் கொண்டது -அவள் யார்? விடை: மிரியாம். – எண் 12:1-10. ==================================== ஆஹா என்று ஆனந்தக் கூத்தாடி ஓஹோ என்று ஒய்யார மரம் செய்து ஐயோ என்று அலறிச் செத்தான் -அவன் யார்? விடை: ஆமான். எஸ்தர் 7:1-10. ==================================== |