நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். - (1 கொரிந்தியர் 13:11). . இங்கிலாந்தை ஆண்ட விக்டோரியா மகாராணி சிறுமியாய் இருந்தபோது பொம்மைகள் மேல் அலாதி பிரியம் வைத்திருந்தார்கள். எப்போதும் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார். படிக்கும் வயதில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வயது அதிகமாகியும் பொறுப்புணர்ச்சி வரவில்லை. . ஒரு நாள் அவர்களது அம்மா, அவர்களை அரண்மனையிலுள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஒட்டியிருந்த இங்கிலாந்து நாட்டின் பெரிய வண்ணப்படத்தையும் சிம்மாசனத்தில் பொற் கிரீடம் சூடி அமர்ந்திக்கும் தன் தாயின் படத்தையும் காண்பித்து, 'நீயும் இப்படி வருங்காலத்தில் ராணியாகப் போகிறாயே, இப்படி பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருப்பது சரிதானா?' என்று அவர்களது பொறுப்பை விளக்கினார்கள். அன்றிலிருந்து விக்டோரியாவின் செயலில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஏற்றக்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் இளவரசியானார். . ஒரு மனிதன் இரட்சிப்பு அல்லது மறுபடியும் பிறத்தல் என்னும் மகிமையான அனுபவத்திற்குள் கடந்து செல்லும்போது அவன் இன்னும் ஒரு ஆவிக்குரிய பிள்ளையாகத்தான் இருக்கிறான். ஞானஸ்நானம், அபிஷேகம் இவையெல்லாம் துவக்கப்பள்ளி பாஸ் பண்ணுவதற்கு சமமானதாகும். ஆனால் இன்றைய சபைகள் இரட்சிப்பு, ஞான்ஸ்நானம், அபிஷேகம் பெறுதல் இவைகளோடு பூரணமாகி விட்டோம் என்று நம்புகின்றன. இவை அடிப்படையான ஆரம்ப நிலைகளே ஆகும். . பிரியமானவர்களே, இங்கிலாந்தை ஆள வேண்டிய பிள்ளை விளையாட்டு பருவம் தாண்டியும், பொம்மைகளுடன் விளையாடியாது தாயாரை துக்கப்படுத்தியது. அதுப் போலவே, நாட்கள் செல்ல செல்ல தமமுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய தரம் உயர வேண்டும் என்று நமது பரம தகப்பனும் எதிhப்பார்க்கிறார். நாம் இரட்சிப்பு, அபிஷேகத்தோடு நின்றுவிட்டால் இன்னும் குழந்தைகளாகவே இருக்கிறோம் என்பதே பொருள். அன்பு, தியாகம், சிலுவை சுமத்தல், தாழ்மை போன்ற எத்தனையோ காரியங்களை வசனத்திலிருந்து நாம் கற்றுக் கொண்டு வளரவேண்டுமே! . என்னிடம் எல்லா நற்குணங்களும் இருக்கிறது, நாம பூரணமாகி விட்டேன் என்ற எண்ணம் வராதபடி நம்மை காத்துக் கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் எத்தனையோ நிருபங்களை எழுதிய அப்போஸ்தலனாகிய பவுல் 'சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்துளூ அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்' (எபேசியர் 3:18-19) என்று சொல்கிறார். . இந்த புதிய வருடத்தில் பவுல் வேண்டிக்கொண்டதுப் போல நாம் அறிவுக்கெட்டாத கிறிஸ்துவின் அன்பை அறிந்துக் கொள்ளவும், சகல பரிபூரணத்தினாலும் நிறையப்படவும் சகல பரிசுத்தவான்களோடுங்கூட பிரயாசமெடுப்போமா? தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! . ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க . ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதின் ஆழம் அறியலாகுமோ இதற்கிணை யேதும் வேறில்லையே இணை எதும் வேறில்லையே . மாறிடா எம் மா நேசரே - ஆ மாறாதவர் அன்பெந் நாளுமே கல்வாரி சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே |