Friends Tamil Chat

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

நம்பிக்கையின் வைரம் - (Hope Diamond) - 2nd Sept., 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 02-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
நம்பிக்கையின் வைரம் - (Hope Diamond)
.........

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். - (1பேதுரு 2:5).

.

உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற விலையேறப்பெற்ற கல்லாக நம்பிக்கை வைரம் (Hope Diamond) இன்றளவும் விளங்குகிறது. இது முதலில் இந்தியாவில் இருந்து கிடைக்கப்பட்டதாகவும், அதை ஒரு பிரஞ்ச் வாணிபர் வாங்கி, Evalyn Walsh McLean என்பவருக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வைரத்தை உரியவர்களுக்கு அது சாபத்தையும், சாவையும் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அது அநேகருடைய கை மாறினாலும், அது சாபத்தை கொண்டு வந்ததால், அத உரியவர்கள் உடனே மற்றவர்களுக்கு விற்றனர். கடைசியில் இப்போது அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் (Smithsonian) என்னும் கூடத்தில் தானமாக கொடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

.

விலையுயர்ந்த கற்கள் எப்போதும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வைக்கப்படும். அதை அடைவதற்காக யுத்தங்களும் நடந்ததுண்டு. சிலர் தங்களுடைய மனைவிகளுக்கு வைரத்தால் செய்த மோதிரங்களை தங்களின் அன்பின் அடையாளங்களாக தருவதுண்டு. எப்போதும் அதனுடைய மதிப்பு போற்றதக்கதே!

.

தேவன் கிறிஸ்துவையும், நம்மையும் விலையேறப்பெற்ற ஜீவனுள்ள கல்லாகவே காண்கிறார். 'தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்' என்று வசனம் நமக்கு கூறுகிறது. உலகம் முழுதும் விலையேறப்பெற்ற கல் என்று போற்றப்பட்ட நம்பிக்கையின் வைரம் அதை உடையவர்களுக்கு நம்பிக்கையை சிறிதேனும் தரவில்லை. மாறாக, அது சாபத்தையும் சாவையும், மோசமான விளைவுகளையும் தந்தது. அதை வாங்கிய பணக்கார இவாலின் (Evalyn) தனக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது, ஏனெனில் தான் விசேஷித்தவள் என்று அதை வாங்கி, பெரிய பெரிய விருந்துகளில் அதை பகட்டாக அணிந்து வந்து அநேகரை வியப்பூட்டினாள். ஆனால், அந்த வைர கல்லை வைத்திருந்ததால், அவள் தன் மகனையும், மகளையும், தன் கணவரையும் இழக்க நேரிட்டது.

.

ஆனால் ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவினிடத்தில் வருகிற ஒருவரும் தங்கள் ஜீவனை இழக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஜீவனை தரவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவரை பற்றி கொண்ட நாமும் நாம் இருக்கும் இடங்களில் ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லாகவே விளங்குவோம். விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவை 'விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று' (வசனம் 7). நமக்கு விலையேறப்பெற்றதாயிருக்கிற அந்த கல்தானே, விசுவாசியாதவர்களுக்கு இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று என்று பார்க்கிறோம்.

.

ஆகவே விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவும், அவரை விசுவாசிக்கிற நாமும் அவரில் ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறோம்.

.

நம்பிக்கையின் வைரம் இதுவரை யாருக்கும் நம்பிக்கையை தரவில்லை. ஆனால் நமது நம்பிக்கையாகிய கிறிஸ்துவினால் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவனுள்ள கற்களாக ஜொலித்து, இந்த உலகில் நம்பிக்கையற்று வாழ்கிற ஒவ்வொருக்கும் நம்பிக்கையை கொடுக்கிறவர்களாக வாழ கர்த்தர் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

ஜீவ ஒளி வீசும் கற்களாக

சீயோன் நகர் தனிலே சேர்க்க

அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்

அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம்

குதூகலம நிறைந்த நன்னாள்

நடுவானில் மின்னிடுமே

இதுவரை இருந்த துன்பமில்லை

இனி என்றுமே ஆனந்தம்

.
ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தி வரும் நல்ல தகப்பனே, எங்கள் நம்பிக்கையும், எங்கள் புகலிடமும் நீர் தான் தகப்பனே. அநேகர் தங்கள் நம்பிக்கையை யார் யார் மேலேயோ வைத்திருக்கும்போது, ஜீவனுள்ள ஒளிவீசும் விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவின் மேல் நாங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கை எங்களை வெட்கப்படுத்தாதபடி எங்களை அதிசயமாய் வழிநடத்துகிறீரே உமக்கு ஸ்தோத்திரம். நாங்களும் ஜீவனுள்ள கற்களாக நம்பிக்கையற்ற உலகிற்கு கிறிஸ்துவின நம்பிக்கையை அவர்களும் பெற்று கொள்ளதக்கதாக அவர்களுக்கு ஒளி வீச கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.