Friends Tamil Chat

திங்கள், 1 செப்டம்பர், 2014

1st September 2014 - புஷ்டியுள்ள எலும்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 01-ம் தேதி - திங்கட் கிழமை
புஷ்டியுள்ள எலும்பு
...................

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறதுளூ நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. - (லேவியராகமம் 17:11).

.

நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகள் நன்றாக இருந்தால் நாம் நல்ல ஆரோக்கியமான சுகத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம். எலும்புகளில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அது மொத்த ஆரோக்கியத்திற்கே பிரச்சனையாகும். ஏனென்றால், எலும்புகளில் உள்ளே காணப்படும் Bone Marrow என்னும் இரத்தம் உற்பத்தியாகும் இடம் இந்த எலும்புகளிலே ஆகும். மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்று வேதம் நமக்கு போதிக்கின்றது. இந்த இரத்தமே ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்கிறதாகும். வேதத்தில் எலும்புகளை குறித்து எழுதப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தால், அநேக காரியங்கள் நம்முடைய எலும்பை பாதிக்கிறதையும் அதினிமித்தம் மொத்த ஆரோக்கியமே கெடுவதையும் குறித்தும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

.

1. கெட்ட செய்தி கேட்கும்போது, எலும்புகளில் உக்கல் (Rottenness) உண்டாகிறது. 'நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்'. - (ஆபகூக் 3:16).

.

2. இலச்சை (வெட்கம்) எலும்பை உருக செய்யும். குணசாலியான ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். - (நீதிமொழிகள் 12:4).

.

3. நிந்தனை எலும்புகளை பட்டயத்தால் உருவ குத்துவது போல இருக்கும். 'உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. - (சங்கீதம் 42:10).

.

4. சாபம் எலும்புகளில் சுடுகின்ற எண்ணை பாய்வது போல இருக்கும். சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். - (சங்கீதம் 109:18).

.

5. அறிக்கையிடாத பாவம் எலும்புகளை உலர பண்ணும். நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. - (சங்கீதம் 32:3).

.

6. பாவம் எலும்புகளை பெலவீனப்படுத்தும். 'உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை'. - (சங்கீதம் 38:3).

.

7. பொறாமை எலும்புகளை உருக வைக்கும். சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி. - (நீதிமொழிகள் 14:30).

.

8. முறிந்த ஆவி எலும்புகளை உலர பண்ணும். மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். - (நீதிமொழிகள் 17:22).

.

9. வேதனையின் நாட்கள் நெருப்பை போல எலும்புகளில் எரியும். என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. - (சங்கீதம் 102:3).

.

10. பயம் எலும்புகளை நடுங்க வைக்கும். 'திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது'. - (யோபு 4:14).

.

11. பாவம் எலும்புகளை நிறைத்து விடும். 'அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்'. - (யோபு 20:11).

.

12. தேவனுடைய தண்டனை எலும்புகளில் அதிக வேதனையை கொடுக்கிறது. அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான். - (யோபு 33:19).

.

13. ஆத்துமாவின் உபத்திரவம் எலும்புகளை துளைக்கிறது. இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. - (யோபு 30:17).

.

14. அக்கிரமங்கள் எலும்புகளின் மேல் இருக்கும். அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும். – (எசேக்கியேல். - 32:27).

.

15. சஞ்சலமும் அக்கிரமத்தினாலும் எலும்புகள் உலர்ந்து போகும். என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. - (சங்கீதம் 31:10).

.

16: பாவத்தின் சாபம் எலும்புகளை கட்டு விட செய்யும். 'தண்ணீரைப்போல் ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று'. - (சங்கீதம் 22:14).

.

ஆனால் சில காரியங்கள் எலும்பை பெலப்படுத்துகின்றன. அவை:

.

1. கர்த்தருக்கு பயப்படுதல் எலும்புக்கு ஊனாகும் (Bone Marrow). நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். - (நீதிமொழிகள் 3:7-8).

.

2. நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும். - (நீதிமொழிகள் 15:30).

.

3. இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும். - (நீதிமொழிகள் 16:24).

.

4. ஆரோக்கிய வாழ்வு எலும்புகளை புஷ்டியாக்குகிறது. 'அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளின் ஊன் புஷ்டியாயிருக்கிறது'. - (யோபு 21:24).

.

5. சுத்த மனசாட்சி எலும்புகளை களிகூர செய்யும். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். - (சங்கீதம் 51:8).

.

6. நம் தேவன் நம் எலும்புகளை காப்பாற்றுகிறார். 'அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார் அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை'. - (சங்கீதம் 34:20).

.

7. சமாதானமும் தேறுதலும் எலும்பை செழிக்க வைக்கும். 'நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்'. - (ஏசாயா 66:14).

.

8. பசியுள்ளவரையும், சிறுமையானவர்களையும் திருப்தியாக்கினால் எலும்புகள் நிணமுள்ளதாகும். பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஆமென் அல்லேலூயா!

.

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்

ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்

அசைவாடும் இன்று அசைவாடும் ஆவியான தேவா

.

ஜெபம்
எங்களது உடலில் 206 சிறிய பெரிய எலும்புகளை கொண்டு எங்கள் சரீரத்தை அதிசய விதமாக உருவாக்கிய எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். அந்த எலும்புகள் நன்கு இயங்க வேண்டிய காரியங்களையும், அந்த எலும்புகள் புஷ்டியில்லாதபடி போக கூடிய காரியங்களையும் உம்முடைய வார்த்தைகளின்படி நாங்கள் காண கிருபை செய்தீரே உமக்கு ஸ்தோத்திரம். இதில் எலும்புகள் புஷ்டியாகாதபடிக்கு எந்த காரியமாவது எங்களில் காணப்பட்டால், அவற்றை எங்களுக்கு உணர்த்தி, நாங்கள் அவற்றை விட்டு மனம் திருந்தி, அதினிமித்தம் எங்கள் எலும்புகளை புஷ்டியும் நிணமுமுள்ளதாக்குவீராக. எங்கள் எலும்புகளையெல்லாம் காப்பாற்றுவீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.