Friends Tamil Chat

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

19th Sept 2014 - பத்து மடங்கு ஞானம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 19-ம் தேதி - வெள்ளிக்கிழமை
பத்து மடங்கு ஞானம்
..........

ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான். - (தானியேல் 1:20).

.

நமக்கு எல்லாருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களைப் பற்றி நன்றாக தெரியும். அவர் Modern day's Father of Physics என்றழைக்கப்படுகிறார். அவருடைய ஞானம் மிக சிறந்ததாக இருந்தது. சாதாரணமாக ஒருவர் I.Q. test செய்ய வேண்டுமென்றால், அவருடைய I.Q. வை வைத்தே கணக்கிடுவர். ஐன்ஸ்டினின் I.Q. 160 க்கும் மேல் இருந்தது. சாதாரணமாக ஒரு மனிதனின் I.Q. level 90 லிருந்து 100 வரை இருக்கும். 100லிருந்து 110 வரை இருப்பவருக்கு சாதாரண நிலையிலிருந்து சற்று அதிகம் என்று கூறுவர்.

.

ஒரு நண்பர் எப்போதும் தனக்கு அதிக I.Q. இருப்பதாக கூறி கொள்வார். அவர் யூத மக்களுக்கு எதிரான ஒரு நாட்டை சேர்ந்தவர். ஒரு முறை நான் கூறினேன், 'நீர் எப்போதாவது I.Q.test செய்திருக்கிறீரா?' என்று கேட்டதற்கு 'எனக்கு அதெல்லாம் தேவையில்லை, எனது மூளை மிகவும் பெரியது' என்று கூறினார். அப்போது நான், சரி என்னதான் இந்த I.Q.test- ல் இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்த போது, ஐன்ஸ்டினின் I.Q. level 160-க்கு மேல் இருப்பதை கண்டேன். ஐன்ஸ்டின் ஒரு ஜெர்மானிய யூதர். இதை நான் அந்த நண்பரிடம் சாட்சிகளுடன் சொன்னபோது, அவர் வாயடைத்து போனார்.

.

'நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்' (உபாகமம் 7:6) என்று இஸ்ரவேலரை தமக்கு சொந்தமாக தேவன் தெரிந்து கொண்ட போது, அவர்களுக்கு விசேஷித்த கிருபைகளையும் கொடுத்திருந்தார். அதனால்தான், தானியேல் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை குறித்து வாசிக்கும்போது, 'ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்' என பார்க்கிறோம்.

.

மட்டுமல்ல, இஸ்ரவேல் என்றழைக்கப்பட்ட யாக்கோபு தன் மாமனாகிய லாபானிடத்தில் ராகேலுக்காக வேலையில் இருந்தபோது, லாபான் யாக்கோபின் சம்பளத்தை மாற்றினான் (ஆதியாகமம் 31:41) என பார்க்கிறோம். ஆதியாகமம் 30ம் அதிகாரத்தில், 'நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான். அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்' என்று யாக்கோபு லாபானிடத்தில் கேட்பதாக காண்கிறோம். அதன்பின் யாக்கோபு மிகவும் புத்தியுள்ளவனாக, சாதுரியமுள்ளவனாக, 'பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்புநிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான். இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன' (ஆதியாகம் 30: 37-39, 42). எத்தனை ஞானமுள்ள செய்கை! ஆந்த காலத்தில் இருந்தே எத்தனை ஞானமாக காரியத்தை யாக்கோபு செய்திருந்தார்! ராஜாவாகிய சாலமோனின் ஞானம் நாம் அனைவரும் அறிந்ததே! இன்றைய நாளளவும், உலகத்தின் அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்கள் யூதர்களே!

.

சரி, யூதர்களுக்கு மட்டும்தானா அந்த ஞானமும் விவேகமும்? கர்த்தர் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கும் நிச்சயமாக அதை கொடுப்பார். 'உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்' (யாக்கோபு 1:5) என்று வாக்கு தத்தம் செய்தவர் நிச்சயமாகவே நம்மையும் அவ்வித விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப வல்லவராகவே இருக்கிறார். முற்பிதாக்களில் ஒருவராகிய 'ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று' (கலாத்தியர் 3:14). கிறிஸ்து இயேசுவின் மூலமாக நமக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்கும்படியாக தேவன் கிருபை செய்தார். அவர் வாக்கு பண்ணிவிட்டார். அதை கேட்டு பெற்று கொள்ளவேண்டியது நமது கடமை! நம்முடைய பிள்ளைகளில் யாராவது ஞானத்தில் குறைவுள்ளவர்களாயிருந்தால், அவரிடம் கேட்போம், 'ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா' (மத்தேயு 7:11) என்று நமக்கு எப்போதும் நன்மையானவைகளையே கொடுக்கும் நம் பரமபிதா நிச்சயமாகவே நாம் விரும்பும் ஞானத்தை நமக்கு கொடுப்பார். ஆமென் அல்லேலூயா!

.

கல்வாரி சிலுவையினால் - என்

சாபங்கள் உடைந்ததையா

ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் - இந்த

அடிமைக்கு கிடைத்ததையா

நன்றி நன்றி நன்றி

பாடுவோம் மகிழ்வோம்

கொண்டாடுவோம்

அப்பா சமுகத்தில் பாடி

மகிழ்ந்து கொண்டாடுவோம்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீரே எங்களை ஞானத்தினால் நிறைக்கிறவர். நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறீர் என்று வசனம் சொல்கிறபடி, கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவரையும் நீதிமான்களாக்கி, அவர்களுக்கென்று நீர் கொடுக்கிற ஞானத்திற்காக உமக்கு நன்றி. ஞானத்தில் குறைவுப்பட்டிருக்கிற யாராவது ஞானத்திற்காக உம்மிடத்தில் கேட்டால் கொடுப்பேன் என்று வாக்குதத்தம் பண்ணினவர், அப்படியே கொடுப்பீராக. எங்கள் பிள்ளைகளையும் ஞானத்தினால் நிரப்புவீராக. அவர்கள் மற்றவர்களை காட்டிலும் பத்து மடங்கு சமர்த்தராக இருக்கும்படியாக கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
குறிப்பு

pray1another

அன்பு வாசகர்களே, வேதாகம கேள்வி - பதில் போட்டி - இன்று கடைசி நாள், பதிலை அனுப்புங்கள்.தேவன் தாமே வானத்தின் பலகணிகளை திறந்து ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.