கர்த்தரின் சுதந்திரம் கையினில் கிடைக்க கண்ட மட்டும் கதறி அழுதாள் தந்தால் உயிரோடு இல்லையேல் மண்ணோடு என சபதமிட்டாள் -அவள் யார்? விடை: ராகேல். ஆதி 30:1. ==================================== கடிப்பான் ஆனால் பல் இல்லை பேசுவான் ஆனால் வாய் இல்லை பார்ப்பான் ஆனால் கண்கள் இல்லை இறங்குவான் ஆனால் கால்கள் இல்லை மொத்தத்தில் சும்மா நச்சென இருப்பான் ஆனால் வேதனையின் ஆரம்பம் -அது என்ன? விடை: மதுபானம். நீதி 23:31,32 ==================================== நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது நாலு பேரு ஓடி நாலாபுறமும் செல்ல நாசமெல்லாம் பறந்தது நிம்மதியும் பிறந்தது -அது என்ன? விடை: சமாரியாவின் ஒலிமுக வாசல். 2 இராஜா 7:1-9. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |