குழாயடி சண்டையில் குறுக்கிட மாட்டாள் குடிக்க தண்ணீர் கேட்டால் குடம் நிறையத் தருவாள் குணசாலியான பெண்ணதால் குபேர வாழ்வுப் பெற்றாள் -அவள் யார்? விடை: ரெபெக்காள். ஆதி 24:16-67. ==================================== அங்கும் இங்கும் ஆடுவான் மேலும் கீழும் துள்ளுவான் அசையாமல் நிற்கும்போது கணக்கு சரி இல்லையானால் கர்த்தருக்கு அருவருப்பு -அது என்ன? விடை: கள்ளத்தராசு. நீதி 11:1. ==================================== பளிச்சென வெளிச்சம் திடீரென அடிக்க பம்பரமாய் சுழன்று படாரென்று விழுந்தான் பவ்யமாய் எழுந்து பரிகாரம் தேட பதில் ஒன்று கிடைக்க பரமனின் பணியினை பக்தியுடன் தொடர்ந்தான் -அவன் யார்? விடை: சவுல். அப் 9:1-6. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |