விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். - (யாக்கோபு 2:17). . ஒரு வாலிபனுக்கு கால்பந்து என்றால் மிகவும் விருப்பம். எப்படியாவது தான் கால்பந்து விளையாட்டில் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதனால் அவன் ஒவ்வொரு நாளும் 'ஆண்டவரே, நான் நாட்டிற்காக விளையாடும் அளவு என்னை உருவாக்கி விடும்' என்று ஜெபித்து வந்தான். எதை செய்ய மறந்தாலும் இப்படி ஜெபிக்க மட்டும் மறக்க மாட்டான். . ஒரு நாள் அவன் ஜெபத்தில் 'ஆண்டவரே நான் எத்தனை ஆண்டுகளாக என்னை கால்பந்து வீரனாக மாற்றும் என்று ஜெபித்திருக்கிறேன், ஆனால் இதுவரை என்னை நீர் அப்படி மாற்றவில்லையே' என்று கேட்டான். அப்போது ஆண்டவர், 'எனக்கும் உன்னை இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக கால்பந்து கோப்பை விளையாட்டில் சேர்க்க ஆசைதான். ஆனால் நீ மைதானத்திற்கு சென்று விளையாடினால்தானே, உன்னை அப்படி செய்ய முடியும்! நீ வீட்டிலே உட்கார்ந்து டிவியை பார்த்துக் கொண்டு, அந்த விளையாட்டு வீரனைப் போல என்னை மாற்றும் என்று ஜெபித்தால் உன் விருப்பத்தை நான் எப்படி நிறைவேற்ற முடியும்?' என்று கூறினாராம். . பிரியமானவர்களே நம்மில் அநேகர் இப்படித்தான் இருக்கிறோம். பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் முயற்சி எடுத்துப் படிக்காமல், விளையாட்டுத்தனமாக இருந்து விட்டு பரிட்சை நேரத்தில் ஆண்டவரே உதவி செய்யும் என்று கடைசி நேரத்தில் விழுந்து விழுந்து ஜெபிப்பார்கள். ஆண்டவர் அவர்களுக்கு எதையாவது செய்ய முடியுமா? . வாலிப பருவத்தில் வாழ்க்கை வாழ்வதற்கே என்று ஜாலியாக நாட்களை கழித்து விட்டு, பரிட்சை நாட்கள் வந்தவுடன், ஊழியர்களுக்கும், சபைக்கும் எழுதி, எனக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக் கொள்வார்கள். ஏதாவது பிரயோஜனமுண்டா? . நம்மில் சிலர் வேதத்தை வாசிப்பதே கிடையாது. அத்தி பூத்தாற்போல வாசித்துவிட்டு. 'ஆண்டவரே வேதத்தின் மறைபொருளை எனக்கு காண்பியும். அந்தரங்கத்தில் இருக்கிற பொக்கிஷத்தை எனக்கு காட்டும், ஒரு வேத வல்லுனராக என்னை மாற்றும்' என்று ஜெபத்தால் ஆண்டவர் என்ன செய்வார்? அவர் சொல்வார், 'முதலாவது நீ வேதத்தை தினமும் கிரமமாய் ஜெபத்தோடும், வாஞ்சையோடும் வாசி. பின் நான் உனக்கு மறைபொருளை வெளிப்படுத்துவேன்' என்பார். . அநேக ஊழியர்கள் இன்றளவும் கர்த்தருக்காக பிரகாசிக்க காரணம், முழங்காலிலேயே நின்று மணிக்கணக்கில் அவர்கள் வேதத்தை வாசித்து, கண்ணீரோடு வேதாகம மனிதர்களோடு தங்களை இணைத்து, கர்;த்தரின் கிருபைளை தியானிப்பதால், கர்த்தர் அவர்களோடு இடைபடுகிறார். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அதை விட்டு விட்டு, ஏதோ கடமைக்காக வேதத்தை வாசித்து என்னை வேத பண்டிதனாக்கும் என்று ஜெபித்தால் கர்த்தர் எப்படி கிரியை செய்வார்? . பிரியமானவர்களே, நமது ஆவிக்குரிய வாழ்விலே வேதத்தை நமக்கு போதித்து உணர்த்தும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நிறைந்து, பரிசுத்தமாய் வாழ்ந்து, தேவனை மனக்கண்களினால் தரிசித்து, அவரது மெல்லிய சத்தத்தை கேட்கும் மெல்லிய உணர்வுகளை பெற்றிருக்க வேண்டும். அப்படி நம் கிரியைகள் இருந்தால், விசுவாசமும் கிரியையும் இணைந்து நம்மை கர்த்தருக்காக வல்லமையுள்ள ஊழியராக மாற்றும். போதக அபிஷேகத்தால் தேவன் நம்மை நிரப்ப முடியும். . கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததுப்போல, விசுவாசமில்லாத கிரியையும் செத்ததாயிருக்கும். விசுவாசத்தோடு கிரியையும் செய்வோம். கர்த்தர் மகிமைப்படுவார். நம்மை உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா! . அதிகாலையில் சீனாய் மலையினில் என் ஆண்டவரோடு உலாவுவேன் இந்நாளிலும் என் இயேசுவின் பாதம் விழுந்து நான் தொழுகுவேன் . கன்மலை உச்சியில் ஏறிடுவேன் கரங்களை உயர்த்தி நான் ஜெபித்திடுவேன மகிமையின் பிரசன்னம் என்னை மூடுமே முகமுகமாய் நான் பேசிடுவேன் |