உண்ட வீட்டில் இரண்டகம் உருவாக்கியவன் பிடிபட எண்ணினான் கம்பிகளை வருந்தினான் தவறுக்காய் திருந்தினான் மீண்டும் -அவன் யார்? விடை: ஒநேசிமு. பிலே 10-19. ==================================== ஒரே தட்டில் சாப்பிட்ட மச்சான் ஒன்றாக சுற்றி திரிந்த மச்சான் ஓங்கி உதைத்தான் உருண்டைத் தலையில் -அவன் யார்? விடை: பிராண சிநேகிதன். சங் 41:9. ==================================== சரிகமபதநி தரிகிட திரிகிட தோம் தாளம் போட்டு, கைகள் தட்டி கர்த்தரைத் துதிக்க சொல்லும் கீதம் சரியா சொல்லு? -அது என்ன? விடை: சங்கீதம் 150, சங்கீதம் 150:1-6. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |