அர்த்த ராத்திரி நேரத்தில் யாரும் இல்லா வேளையில் ஐயனைத் தேடி வந்தானாம் ஐயம் தீர்ந்து போனானாம் -அவன் யார்? விடை: நிக்கொதேமு. யோவா 3:1,21. ==================================== டமார் டுமீர் இடி வீட்டிற்குள் இடிக்க சரசரவென மழை கூரையில் பெய்ய சொட்டு சொட்டாய் தண்ணீர் ஓயாமல் ஒழுகியது -அது என்ன? விடை: மனைவியின் சண்டைகள். நீதி 19:13, 27:15. ==================================== குறட்டைவிட்டு தூங்கிய மனிதர் குதித்து எழுந்தனர் படுக்கையை விட்டு குழப்பம் பல மண்டையில் கண்டு குறிகாரரை நாடித் தேடிப் போயினர் -அவர்கள் யார்? விடை:பார்வோன். ஆதி 41:1-8, நேபுகாத்நேச்சார். தானி 2:1-3. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |