ஆபேலின் இரத்தம் ஆறாகப் பாய்ந்தோட உடன் வந்து இணைந்ததாம் இன்னொரு இரத்த ஆறு -அது என்ன? விடை: பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம் – மத் 23:35. ==================================== அடங்காத கிடாரி இவன் அப்பம் சுடும் அடுப்பு இவன் திருப்பிப் போடாத அப்பம் இவன் விரும்பப்படாத பாத்திரம் இவன் பேதையான புறாவாய், மோசம் போக்கும் வில்லாய் உலர்ந்து போன வேரானான் - அவன் யார்? விடை: எப்ராயீம் – ஓசியா 7:1-10. ==================================== கர்த்தரின் பெட்டிக்கு முன்னே தலை நிமிர நினைத்ததால் தலையில்லா முண்டமாய் தரையில் உருண்டு விழுந்தான் -அவன் யார்? விடை: தாகோன் – 1 சாமுவேல் 5:1-5. ==================================== |