போட்டி இல்லை, பொறாமை இல்லை சண்டைச் சச்சரவு எதுவும் இல்லை கூடுதல் இல்லை, குறைவு இல்லை கூப்பாடு சத்தம் கேட்கவும் இல்லை மனதிலே ஒருமை நிறைந்திருக்க மகிழ்ச்சி அவர்களை சூழ்ந்திருக்க -அவர்கள் யார்? விடை: விசுவாசிகள் – அப் 2:44-47. ==================================== பழைய கஞ்சி குடித்தாலும் படுத்த உடனே தூங்குவான் – ஆனால் பொரித்த கோழி, அவித்த கோழி உரித்த கோழி தின்று விட்டு மெத்தையிலே புரண்டாலும் தூக்கமே வராதாம் -அவர்கள் யார்? விடை: வேலை செய்கிறவன் / செல்வன் – பிர 5:12. ==================================== மோசேயின் மனைவி பெயரின் முதல் எழுத்து தானியேலின் இருப்பிடத்தில் இரண்டாம் எழுத்து இயேசு சுகப்படுத்திய வியாதியின் கடை எழுத்து இவைகளை இணைத்தால் சிலுவை வரும் – அவை எவை? விடை: சிப்போராள், யாத் 18:2, கொலுமண்டபம், தானி 2:49, நீர்கோவை, லூக்கா 14:2-4 ==================================== |