சிங்காசனத்தில் அமர்ந்தவருக்கு அப்பா அம்மா இல்லையாம் ஆசாரியப் பணி செய்தவருக்கு ஆதியும் அந்தமும் இல்லையாம் -அது யாருக்கு? விடை: மெல்கிசேதேக்கு – எபி 7:1-3. ==================================== பிரதமரை பார்க்கணுமா பிரசிடண்டை பார்க்கணுமா முதல்வரை பார்க்கணுமா முக்கியமானோரை பார்க்கணுமா பாதையில்லா இடத்திலே பாதைகளை ஏற்படுத்தும் சூப்பரான ஆயுதம் -அது என்ன? விடை: வெகுமதி – நீதி 18:16. ==================================== கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை கண்ணுக்கு தெரிந்தது காலுக்கோ முடியவில்லை -அது என்ன? யாருக்கு? விடை: கானான்,மோசே – உபா 34:1-5. ==================================== கர்ப்பப் பையிலிருந்த கருவை கழுவி எடுத்தார் கர்த்தர் -அது யார்? விடை: எரேமியா 1:5. ==================================== |