தலை கால் புரியாமல் ஆடுவான் தலை மேல் ஏறி ஓடுவான் தலையே இல்லாமல் விழுவான் – ஆனால் அடக்கம் ஒடுக்கமாக வாழ்ந்து அரியாசனத்தில் அமருவான் -அவர்கள் யார்? விடை: ஆமான், மொர்தேகாய் – எஸ் 7:1-8:2. ==================================== ஆட்டின் பின்னே நடந்தவன் ஆண்டவரின் பணியை செய்தான் மீனைப் பிடிக்க சென்றவன் மீட்பரின் பணியைச் செய்தான் – ஆனால் மாட்டின் பின்னே நடந்தவன் மாட்டிக் கொண்டான் ஆண்டவரின் பணிக்கு -அவன் யார்? விடை: எலிசா – 1 இரா 19:15-21 ==================================== ஒவ்வொரு மனிதருக்குள்ளும் குட்டி உலகம் ஒன்று கும்மாளமிடுகின்றது -அது என்ன? விடை: நாவு – யாக் 3:6-8. ==================================== சும்மா சுத்தும் ஆசாமிக்கு சோறு போடக் கூடாதாம் – அவன் சோறும் சாப்பிடக் கூடாதாம் -அவன் யார்? விடை: வேலை செய்ய மனதில்லாதவன் – 2 தெச 3:10. ==================================== |