தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா? விடை: தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23. What hath God wrought ? – Num 23:23. ==================================== அகல உழுகிறதை விட ஆழ உழணும் அகலவும் உழமாட்டான் ஆழவும் உழமாட்டான் – ஆனால் அருப்பில் வந்து பிச்சைக் கேட்பான் அழுது கொண்டே திரும்புவான் -அவன் யார்? விடை: சோம்பேறி – நீதி 20:4. ==================================== எங்கும் குறை எதிலும் குறை நிறைகளைத் தேடியே நித்தமும் ஓடினாலும் குறைவு ஏதும் இன்றியே குதூகலமாய் வாழுவார் -அவர்கள் யார்? விடை: கர்த்தரைத் தேடுகிறவர்கள் – சங் 34:10. ==================================== ஒரே கூட்டில் உலகத்தின் ஜோடிகள் ஒன்று சேர்ந்து விளையாடின -அது எங்கே? விடை: நோவா பேழை – ஆதி 7:1-9. ==================================== |