22,000 பேர் திரும்பி போக 10,000 பேர் மீதியாக இருக்க 300 பேர் மட்டும் நிலைத்திருக்க மீதியானியரை முறிய அடித்தான் -அவன் யார்? விடை: கிதியோன் – நியாய 7:3-7. ==================================== இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் -அது என்ன? யார்? விடை: சமாதானம் தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் – எரே 8:10,11. ==================================== ஆயுசு நூறு என்று ஆனந்தத்தால் வாயைத் திறந்து ஆர்ப்பரித்து கத்தினாலும் ஆண்டவர் தந்த ஆவியிலே ஆயுசுக்கு அளவு உண்டு -அது எவ்வளவு? விடை:120 வருடங்கள் – ஆதி 6:3. ==================================== பகல் நேரம் கடக்க பாடல் சத்தம் கேட்க பூமி மிகவும் அதிர கட்டுகள் எல்லாம் அவிழ சீடர்கள் அங்கே இருக்க -அவர்கள் யார்? விடை: பவுல், சீலா – அப் 16:25-28 ==================================== |