வெட்டி வேலை ஆபிஸரு பட்டி தொட்டி சுத்தினாரு சட்டிப் பானையை உருட்டினாரு தவிட்டையும் தேடியே ஓடினாரு பட்டினியால் உருண்டாரு -அவர் யார்? விடை: இளையகுமாரன் – லூக்கா 15:13-17. ==================================== அத்தேனே பட்டணத்தில் அர்த்தமுள்ள நீதிமன்றம் -அது என்ன? விடை: மார்ஸ் மேடை – அப் 17:19-23. ==================================== கைவீசம்மா கைவீசு கஷ்டம் வரும்போது கைவீசு வயது கூடினாலும் கைவீசு வால வயதாகும் கைவீசு - வாசிப்பது எங்கே? விடை: சங்கீதம் 103:5. ==================================== சுருக்கெழுத்துப் போட்டி போல் சுருங்கப் பேச வேண்டுமாம் -அது என்ன? விடை: தேவ சமூகம் – பிர 5:2. ==================================== |