கண் உண்டு, காது உண்டு, மூக்கு உண்டு, நாக்கு உண்டு – ஆனால் அது வெறும் வெத்து வேட்டு -அது என்ன? விடை: விக்கிரகம் – சங் 115:4-6. ==================================== முன்னே உடல் ஓட பின்னே தலை திரும்ப மேலே ஆவி பறக்க அங்கே தானே நிற்க - அவள் யார்? விடை: லோத்தின் மனைவி – ஆதி 19:26. ==================================== மலைகளின் மேல் உலாவரும் தங்கத் தேர் -அது என்ன? விடை: சுவிசேஷகனின் பாதங்கள் – ஏசா 38:9-16. ==================================== சுற்றி சுற்றி வந்து சத்தம் போட்டு கத்தி பொத்தென்று விழுந்ததால் சொந்தமாக்கி கொண்டனர் -அது என்ன? யாருக்கு? விடை: எரிகோ கோட்டை, இஸ்ரவேலர் – யோசு 6:1-21. ==================================== |