குருவி போல கூவி புரவைப் போல புலம்பி உயர உயரத் தேடி கண்கள் பூத்து போயி உயிரைத் திரும்ப பெற்றான் -அவன் யார்? விடை:எசேக்கியா ராஜா – ஏசா 38:9-16. ==================================== தண்ணீருக்குள் ஏழு தலை நிமிர்ந்தது வாழ்வு -அது யாருக்கு? விடை:நாகமான் – 2இரா 5:1-14. ==================================== எட்டி எட்டிப் பார்த்து பெட்டியைக் கட்டிப் பிடித்து எட்டா இடம் சென்றனர் ஐம்பதினாயிரத்து எழுபது பேர் -அவர்கள் யார்? விடை: பெத்சிமேஸின் மனுஷர் – 1 சாமு 6:19. ==================================== வேட்டையோ வேட்டை கொள்ளை வேட்டை சந்தனக் காட்டு வீரப்பன் அல்ல சண்டைப்போட்ட சதாம் அல்ல கர்த்தருக்கு முன்பு கம்பீரமாய் நின்ற பலத்த ஒரு வேட்டைக்காரன் -அவன் யார்? விடை: நிம்ரோத் – ஆதி 10:8,9 ==================================== |