உண்ணா சொத்து மண்ணாய் போச்சு பிறர் சொத்தை கவர்ந்ததால் உயிரேப் போச்சு -அவன் யார்? விடை: ஆகாப் – 1 இரா 21:1-39. ==================================== மழையோ மழை கொட்டோ கொட்டென கொட்டும் மழை முடையில்லாத காரணத்தால் அரையைக் கட்டிக் கொண்டு ஓடினான் -அவன் யார்? விடை: எலியா – 1 இரா 18:45,46. ==================================== நஷ்டம் என்று விட்டு விட்டு குப்பை என்று தூக்கிப் போட்டு இயேசுவினால் பிடிக்கப்பட்டு இலக்கை நோக்கி ஓடினார் -அவர் யார்? விடை: பவுல் – பிலி 3:11-14. ==================================== வருடங்கள் மூன்று சுற்றி வந்து வருமானம் ஏதும் இல்லை என்று வருடம் ஒன்றைக் கூட்டிக் கொடுத்து வருவேன் என்று திரும்பி சென்றான் -அவன் யார்? விடை: தோட்டக்காரர் – லூக் 13:6-9. ==================================== அளந்து பார்க்க அளவுகளில்லை அறிந்துக் கொள்ள புத்தியுமில்லை – ஆனால் இயேசு உலகினில் வந்ததால் இதனை பார்க்க முடிந்தது -அது என்ன? விடை: அன்பு – எபே 3:18,19. ==================================== |