கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? வைத்தியமானதை பைத்தியம் என்று புத்தியீனர் சிலர் பிதற்றுகின்றனர் -அது என்ன? விடை: சிலுவையைப் பற்றிய உபதேசம் – 1 கொரி 1:18. ==================================== அண்ணன் தம்பி இரண்டு பேர் மூத்தவன் காட்டில் இருப்பான் இளையவன் வீட்டில் இருப்பான் பிந்தியவன் ஏமாற்ற முந்தியவன் ஏமாறுவான் -அவர்கள் யார்? விடை: ஏசா, யாக்கோபு – ஆதி 27:1-37. ==================================== ஏ.பி.சி.டி படிப்போரே ஏக்,தோ,தீன், படிப்போரே இதனை முதலில் படியுங்கள் இகத்தினை வாழச் செய்யுங்கள் -அது என்ன? விடை: நன்மை – ஏசா 1:17,18. ==================================== பிரதர் தினகரன் பாடினாரு ஃபாதர் பெர்க்மான்ஸ் ஆடினாரு நேச ரோஜா நகைக்க இஸ்ரவேல் ராஜா பாடியே ஆடினாரு -அவர் யார்? விடை: தாவீது ராஜா – 2 சாமு 6:16. ==================================== |